PDA

View Full Version : கற்பு



அமரன்
17-07-2007, 12:58 PM
பூ அவர்களின் உணர்ச்சிக் கவிதைகளைப் படித்துக்கொண்டிருந்தபோது தோன்றிய ஒரு பொறி கவிதையாக....

ஆனதும் ஆணாலே
அழிவதும் ஆணாலே
கற்பு

அரசன்
17-07-2007, 01:13 PM
பூ அவர்களின் உணர்ச்சிக் கவிதைகளைப் படித்துக்கொண்டிருந்தபோது தோன்றிய ஒரு பொறி கவிதையாக....

ஆனதும் ஆணாலே
அழிவதும் ஆணாலே
கற்பு


நல்ல ஹைக்கூ அமர்.

ஆனதும் ஆணாலே
அழிவதும் ஆணாலே
ஆவி போகுது இந்த பெண்ணாலே!

இனியவள்
17-07-2007, 01:25 PM
நல்ல ஹைக்கூ அமர் வாழ்த்துக்கள்

சிவா.ஜி
17-07-2007, 01:32 PM
முத்தான மூன்று வரிகள், சத்தான கருத்துடன் அமரன் அளித்த அருமைக் கவிதை. நன்று. பாராட்டுக்கள்.

அமரன்
17-07-2007, 02:20 PM
நன்றி மூர்த்தி..இனியவள்...சிவா.


ஆனதும் ஆணாலே
அழிவதும் ஆணாலே
ஆவி போகுது இந்த பெண்ணாலே


பெண்ணென்றால் பேயும் இரங்கும்
பெண்ணுக்குள்ளும் பேய் இறங்கும்
கண்டுகொண்டேன் மனைவியால்.

இனியவள்
17-07-2007, 02:22 PM
நன்றி மூர்த்தி..இனியவள்...சிவா.

பெண்ணென்றால் பேயும் இரங்கும்
பெண்ணுக்குள்ளும் பேய் இறங்கும்
கண்டுகொண்டேன் மனைவியால்.

அமர் இந்த கவிதையை உங்கள் மனைவிக்கு காட்டிடாதையுங்க பிறகு நீங்கள் :lachen001: :lachen001: :lachen001:

கணவன் ரூபத்தில்
ஒர் உயிரை எதிர்
பார்த்தேன் எதிர்
பார்த்தது கனவாகவே
போக கண்ணீரில்
வாழ்கின்றேன்

அமரன்
17-07-2007, 02:27 PM
என் அம்மா அன்றும் இன்றும் சொன்னது..கவிதையாக...

சாவியாக நினைத்தேன்
ஆவியாக அலைகிறான்
ஒரு பாவியாலே...!

இனியவள்
17-07-2007, 02:30 PM
என் அம்மா அன்றும் இன்றும் சொன்னது..கவிதையாக...

சாவியாக நினைத்தேன்
ஆவியாக அலைகிறான்
ஒரு பாவியாலே...!

சாவித்திரியாக மாறி
ஆவியாய் அலைபவனைக்
கூட மனிதனாய் மாற்றி
விடுவாள் பத்தினி

aren
17-07-2007, 02:33 PM
அருமை அமரன். அழகான ஹைக்கூ!!!!

பாராட்டுக்கள்.

இதற்கு வந்த பின்னூட்டங்களும் அருமையான ஹைக்கூக்களே!!!

அமரன்
17-07-2007, 02:34 PM
நன்றி ஆரென் அண்ணா..

ஓவியன்
17-07-2007, 03:49 PM
ஆனதும் ஆணாலே
அழிவதும் ஆணாலே
கற்பு

முத்தான வரிகளைத் தந்தமைக்கு என் அன்பு முத்தங்கள் அமர்!. :thumbsup:

அமரன்
17-07-2007, 03:50 PM
நன்றி ஓவியன்..
இது பூவின் கடலில் மூழ்கி எடுத்த முத்து.

ஓவியன்
17-07-2007, 03:54 PM
நன்றி ஓவியன்..
இது பூவின் கடலில் மூழ்கி எடுத்த முத்து.

அந்தக் கடலை எனக்கும் ரொம்ப பிடிக்கும்.....

இப்போது மன்றம் வராமல் நிற்பதில் சரியான கோபம் வேற......:mad:
வரட்டும் என்று காத்திருக்கிறேன்!!! :whistling:

ஆதவா
17-07-2007, 06:32 PM
பூ அவர்கள் எனது குரு... அவரது எல்லா கவிதைகளும் மிக அருமையாகவும் உணர்ச்சி மிகுந்தும் இருக்கும்..

உங்கள் கவிதை வடிவம் சரி ; கவிதை அழகுதான் ; ஆனால் கரு ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை... தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.

கற்பு என்பது எது என்று சரியாக வரையறுக்க முடியுமா அமரன்?

அமரன்
17-07-2007, 06:37 PM
பூ அவர்கள் எனது குரு... அவரது எல்லா கவிதைகளும் மிக அருமையாகவும் உணர்ச்சி மிகுந்தும் இருக்கும்..

உங்கள் கவிதை வடிவம் சரி ; கவிதை அழகுதான் ; ஆனால் கரு ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை... தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.

கற்பு என்பது எது என்று சரியாக வரையறுக்க முடியுமா அமரன்?

இல்லை ஆதவா..இதுதான் கர்பு என வரையறுத்தது ஆண்வர்க்கம்...அவர்கள் எதை நினைத்து பிரசவித்தார்களோ அது அவர்களாலேயே அழிக்கப்படுகிறது என்பதையே கவிதையாக எழுதினேன்.

ஓவியன்
17-07-2007, 06:38 PM
கற்பு என்பது எது என்று சரியாக வரையறுக்க முடியுமா அமரன்?

என்னைப் பொறுத்தவரை மனம் தான் கற்பு!
அது கெட்டால் கற்பு கெட்டதாகக் கூறலாம் − இது ஆண், பெண் இரு பாலருக்கும் பொருந்தும்.

உடல் சம்மந்த பட்ட ஒன்றல்ல கற்பு............!

இது என் கருத்து மட்டுமே..........!

அமரன்
17-07-2007, 06:40 PM
என்னைப் பொறுத்தவரை மனம் தான் கற்பு!
அது கெட்டால் கற்பு கெட்டதாகக் கூறலாம் − இது ஆண், பெண் இரு பாலருக்கும் பொருந்தும்.
உடல் சம்மந்த பட்ட ஒன்றல்ல கற்பு............!
இது என் கருத்து மட்டுமே..........!

இதுதான் உண்மை...

ஏதோ ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வார் "கற்பு என்ன காதிலா தூங்குது" அப்படின்னு. சிரிக்கச் சொன்னாலும் சிந்திக்க வைத்தது..

சுகந்தப்ரீதன்
23-07-2007, 08:03 AM
பூ அவர்களின் உணர்ச்சிக் கவிதைகளைப் படித்துக்கொண்டிருந்தபோது தோன்றிய ஒரு பொறி கவிதையாக....

ஆனதும் ஆணாலே
அழிவதும் ஆணாலே
கற்பு

ஆனதும் ஆணாலே
அழிவதும் ஆணாலே
பின் பெண் அழுவது எதனாலே?

மிக கூர்மையான வரிகள்! வாழ்த்துக்கள் அமரன் அவர்களே!

அமரன்
23-07-2007, 08:08 AM
ஆனதும் ஆணாலே
அழிவதும் ஆணாலே
பின் பெண் அழுவது எதனாலே?
மிக கூர்மையான வரிகள்! வாழ்த்துக்கள் அமரன் அவர்களே!

அழும் காலம் அழிகிறது சுகந்தா..
வருங்காலத்தில் அழிக்கவு செய்யலாம்..
அற்பப் பதர்களை..

நன்றி. அமரன் போதும். அவர்கள் வேண்டாம்.

ஷீ-நிசி
23-07-2007, 09:33 AM
அழகான ஹைக்கூ அமர்...

இளசு
23-07-2007, 10:03 PM
பாலைச் சுண்டச் சுண்டக்காய்ச்சினால்
ஒரு திரட்டு வருமே....
அப்படி ஒரு கவிதை இது..

கருத்துகளை வார்த்தைச் சுருக்க நெருப்பில் வாட்டி வாட்டி
பின் இறுக்கி வடிவமைத்தது..

கற்பு என நெறி சமைத்ததும்
அதை வசதிக்கேற்ப நெறித்து முறிப்பதுமான*
ஆண் மன குரங்காட்டத்துக்கு

அமரன் அடித்த (ய்)ஆப்புக்கவிதை! அருமை!!

அக்னி
23-07-2007, 10:10 PM
கற்கள் கசக்கிய பூக்கள்...
கற்பு...
கற்கள் காக்கும் பூக்கள்...
கற்பு..

அமரனின் கவிதையும், பின்னூட்டக் கவிதைகளும், மற்றைய பின்னூட்டங்களும், அருமையோ அருமை...
பாராட்டுக்கள்...

அமரன்
24-07-2007, 05:40 PM
நன்றி ஷீ...இளசு அண்ணா...அக்னி...

கற்பு என்றால் இதுதான் என வரையறுத்து அதை அவர்களே மீறுவதும்...தட்டிப்பறிப்பதும் மாறவேண்டும்.

manibhuvanmani
26-07-2007, 11:54 AM
ஆவது ஆண்டவன் அருளாலே
அழிவது அரக்கர் செயலாலே
ஆண்டவன் அம்சத்தில் அவதரித்த*வர்கள் ஆண்கள்
நாங்கள்அதை ஏற்று உயர்த்த வந்தவர்கள்.

____________________________________________________________

அற்ப சுக*த்திற்காகா ஆத்ம* சுக*த்தை இழக*கும் ஜாதி அல்ல* நாங்க*ள்...

ஓவியன்
26-07-2007, 11:57 AM
நண்பரே உங்களை வரவேற்கிறேன் − அப்படியே உங்களைப் பற்றிப் புதியவர் பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளலாமே!.

உங்களை அற்றிமுகம் செய்ய இங்கே சுட்டுங்கள்........

உங்களை அறிமுகம் செய்து கொள்ள (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38)

விகடன்
02-08-2007, 06:27 AM
ஆனதும் ஆணாலே
அழிவதும் ஆணாலே
கற்பு

கைக்கூ ...
முரண் வாதத்திலும் தரமாக

பாராட்டுக்கள்

அமரன்
02-08-2007, 08:42 AM
நன்றி விராடா...

ஓவியா
09-08-2007, 02:21 AM
பூ அவர்களின் உணர்ச்சிக் கவிதைகளைப் படித்துக்கொண்டிருந்தபோது தோன்றிய ஒரு பொறி கவிதையாக....

ஆனதும் ஆணாலே
அழிவதும் ஆணாலே
கற்பு

அதே அதே சபாபதி, உண்மைய கண்டு பிடித்தாகிவிட்டதே!!!


அட்டகாசமான நெத்தியடி ஹைக்க்க்க்க்க்க்க்க்கூஊஊஊஊஉ. நன்றி

அமரன்
09-08-2007, 08:59 AM
உற்சாகமான பாராட்டு. உறாசாகத்தை தூண்டுகின்றது. நன்றி அக்கா.

இலக்கியன்
09-08-2007, 02:15 PM
ஆனதும் ஆணாலே
அழிவதும் ஆணாலே
கற்பு

கலக்குகிறீர்கள் அமலன்

அமரன்
10-08-2007, 07:20 AM
நன்றி இலக்கியன்.

சாராகுமார்
10-09-2007, 05:03 PM
ஆக்கும் அமரன்
காக்கும் தமிழ் மன்றம்...
கவிதையை.
அருமை அமரன் அவர்களே.

அமரன்
11-09-2007, 06:22 PM
நன்றி சாரா..

பூமகள்
22-09-2007, 06:08 AM
கற்பு ஆனது எப்படி ஆணால் என்று விளங்கவில்லையே... அமர் அண்ணா??:confused:
அவர் அவர் மனத்தில் தானே இருக்கிறது கற்பு.
நல்ல கவி. பாராட்டுக்கள்.

அமரன்
22-09-2007, 07:13 AM
கற்பு ஆனது எப்படி ஆணால் என்று விளங்கவில்லையே... அமர் அண்ணா??:confused:
அவர் அவர் மனத்தில் தானே இருக்கிறது கற்பு.
நல்ல கவி. பாராட்டுக்கள்.
தங்கையே...!அவரவர் மனதில் இருப்பதுதான் கற்பு என்ற பின்னும் புரியவில்லையா...:sport-smiley-019::sport-smiley-019:ஆணாதிக்க சமூகத்தில் "நடைமுறை" கற்பு யாரால் உருவாக்கப்பட்டிருக்கும்????

பூமகள்
22-09-2007, 07:32 AM
உண்மையே...!
ஆணாதிக்க சமூகத்தில் அப்படித்தான் வரையறுக்கப்பட்டிருக்கும்..
புரிகிறது அமர் அண்ணா.
நன்றிகள்.

சூரியன்
22-09-2007, 10:45 AM
நல்ல ஹைக்கூ அமர்.

ஆனதும் ஆணாலே
அழிவதும் ஆணாலே
ஆவி போகுது இந்த பெண்ணாலே!



அருமை நண்பரே...