PDA

View Full Version : அண்ணா பல்கலையில் அப்துல் கலாம்!



அரசன்
17-07-2007, 06:19 AM
ஜனாதிபதி அப்துல்கலாம் பதவி காலம் வருகிற 24-ந்தேதி முடிவடைகிறது.

விஞ்ஞானியான அப்துல் கலாம் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர். ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற தும் மீண்டும் ஆசிரியர் பணிக்கு திரும்பப் போவதாக அவரே கூறியிருந்தார்.

சென்னையில் உள்ள "மெட்ராஸ் தொழில் நுட்ப நிலையத்தில்'' அவர் கவுரவ பேராசிரியராக பணியாற்றப் போகிறார். இந்த தகவலை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இந்த தொழில் நுட்பக்கல்வி நிலையம் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்டது.

ஜனாதிபதி ஆவதற்கு முன் அப்துல்கலாம்(Abdul Kalam) இந்த பல்கலைக்கழகத்தில் 2001-ம் ஆண்டு நவம்பர் முதல் தொழில்நுட்ப பேராசிரியராக வேலை பார்த்துள்ளார். இப்போது அவர் ஏரோ நாட்டிக்கல்(Aeronautical Engineering), விண்வெளி என்ஜினீயரிங்(Aerospace Engineering) மற்றும் நானோ டெக்னாலஜி(Nanotechnology) ஆகியவை பற்றி மாணவர்களுக்குபாடம் சொல்லிக் கொடுப்பார். இதே கல்வி நிலையத்தில் தான் அப்துல்கலாம் ஏரோ நாட்டிக்கல் என்ஜினீயரிங்பட்டம் பெற்றார்.

துணைவேந்தர் விஸ்வநாதன் மேலும் கூறியதாவது:-

அப்துல்கலாம் கவுரவ பேராசிரியராக பணியாற்ற இங்கு வரும்போது அவர் இங்குள்ள விருந்தினர் விடுதியிலிலேயே தங்க ஏற்பாடு செய்யப்படும். ஏற்கனவே அவர் தன் பணிகளுக்கு இடையே பல்கலைக்கழக பி.எச்.4 மாணவர்களுக்கு வழி காட்டியாக இருக்கிறார்.

பல்வேறு பல்கலைக்கழகங்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் அண்ணா பல்கலை கழகத்தில்(Anna University) பணியாற்ற அவர் முன் வந்திருப்பது இங்குள்ள மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

நன்றி: தினமலர்

அமரன்
17-07-2007, 08:36 AM
கலாம் மீண்டும் ஒருமுறை மிளிர்கின்றார். தகவல் பகிர்வுக்கு நன்றி மூர்த்தி.