PDA

View Full Version : விஷமாய் மாறிய தேன்



இனியவள்
16-07-2007, 07:39 PM
பூக்களாய் பூத்து
பூவாசம் வீசுமென
நினைத்திருந்தேன் நம்
காதல்...

தேன் போன்று
இன்பாறு ஓடுமென
கனவுலகில் மிதந்தேன்
ஓடமாய்...

பூவாசத்திற்கு பதிலாய்
முட்களையும் − தேனிற்கு
பதிலாய் விஷத்தையும்
பரிசளித்துச் செல்வாய்
என நினைக்கவில்லை

அக்னி
16-07-2007, 07:42 PM
விஷச் செடியின் பூக்களின்
தேனும் இனிமையே...
ஆனால்,
வேச பாசத்தின் இனிமையும்
கொடுவிஷமே...

பாராட்டுக்கள்... இனியவளே...

அமரன்
16-07-2007, 08:01 PM
விசமப் பூவுடன்
ரோஜா கொடுத்தால்
வேறு என்ன செய்வதாம்.....

பாராட்டுக்கள் இனியவள்,அக்னி இருவருக்கும்

அக்னி
16-07-2007, 08:05 PM
ரோஜாவின் இதழிலும்
சிறு கசப்பின் சுவை...
ரோஜாவை கொடுப்பவர்...
விசமச் சிரிப்பூ
கண்டதுமே...
அந்தக் கசப்பின் உணர்த்துகை,
மறக்கடிக்கப்படுகின்றதே...

உங்களுக்கும் பாராட்டுக்கள் அமர்...

அன்புரசிகன்
16-07-2007, 08:06 PM
ஆமுதமும் விஷமாகும்
முள்ளும் ரோஜாவாகும்
காலம் கனிந்தால்
அனைத்தும் துலங்கும்.

பாராட்டுக்கள் இனியவளே மற்றும் அக்னி.
உண்மையில் என்மனம் கவர்ந்த வரிகள். உங்களுக்கு 100 இ−பணம்

அமரன்
16-07-2007, 08:07 PM
அந்தக் கசப்பின் உணர்த்துகை,
மறக்கடிக்கப்படுகின்றதே

மறக்கடிக்கப்படவில்லை
மழுங்கடிக்கப் படுகின்றது..
கடிகார முட்களினால்
கடும் கூராக்கட்டுகிறது.....

இனியவள்
16-07-2007, 08:08 PM
விஷச் செடியின் பூக்களின்
தேனும் இனிமையே...
ஆனால்,
வேச பாசத்தின் இனிமையும்
கொடுவிஷமே...
பாராட்டுக்கள்... இனியவளே...

நன்றி அக்னி

முள்ளின் விஷத்தைக்
கூட முறியடிது விடலாம்
விஷம் கொண்டன்பே...

நீ தந்து விட்டுச் சென்ற
விஷத்தை விரும்பியே
ஏற்கின்றேன் உன் பரிசாய்

இனியவள்
16-07-2007, 08:09 PM
விசமப் பூவுடன்
ரோஜா கொடுத்தால்
வேறு என்ன செய்வதாம்.....
பாராட்டுக்கள் இனியவள்,அக்னி இருவருக்கும்

நன்றி அமர்

தரும் போது ரோஜா
என நினைத்து சூடினேன்
சூடிய பின்னல்லாவா
தெரிந்தது அது ரோஜாவல்ல
நாகப்பூவென

அக்னி
16-07-2007, 08:10 PM
நன்றி அக்னி

முள்ளின் விஷத்தைக்
கூட முறியடிது விடலாம்
விஷம் கொண்டன்பே...

நீ தந்து விட்டுச் சென்ற
விஷத்தை விரும்பியே
ஏற்கின்றேன் உன் பரிசாய்

என் பரிசாய் உனக்குத தருவேன்...
விடமல்ல...
மனதில் இடம்...

அன்புரசிகன்
16-07-2007, 08:11 PM
தெரிந்தது அது ரோஜாவல்ல
நாகப்பூவென

பெரிதாக பார்க்க
நாகப்பூ தான்
சிறிதாக எதிர்பாருங்கள்
வாழ்க்கை மகிழம்பூ

இனியவள்
16-07-2007, 08:11 PM
ரோஜாவின் இதழிலும்
சிறு கசப்பின் சுவை...
ரோஜாவை கொடுப்பவர்...
விசமச் சிரிப்பூ
கண்டதுமே...
அந்தக் கசப்பின் உணர்த்துகை,
மறக்கடிக்கப்படுகின்றதே...
உங்களுக்கும் பாராட்டுக்கள் அமர்...

இனிப்போடு கசப்பிருந்தால்
சுவை அருமை என்று
அடிக்கடி கூறுவாயே
காதலோடு பிரிவிருந்தால்
தான் காதலுக்கு பெருமை
என்று கூறுவதற்கு அடிதளமிடுகின்றாய்
என அறியாமல் ஆமாம் போட்ட
என் மடத்தனத்தை இன்று வெறுக்கின்றேன்...

அமரன்
16-07-2007, 08:11 PM
என் பரிசாய் உனக்குத தருவேன்...
விடமல்ல...
மனதில் இடம்...

மன'தில்' இடம்தருவாய்
வீட்டில்...,,?
தில் இருக்காதே.....

இனியவள்
16-07-2007, 08:13 PM
பெரிதாக பார்க்க
நாகப்பூ தான்
சிறிதாக எதிர்பாருங்கள்
வாழ்க்கை மகிழம்பூ

மகிரம்பூவாய் இருந்த
வாழ்வை கல்லிப்பூவாய்
ஆக்கிய கயவன் நீயல்லவா

அக்னி
16-07-2007, 08:13 PM
பெரிதாக பார்க்க
நாகப்பூ தான்
சிறிதாக எதிர்பாருங்கள்
வாழ்க்கை மகிழம்பூ

ரசிகருக்கு கவிதை வராது என்று எமக்குச் சுத்துமாத்துவிட்டே காலத்தை ஓட்டுகின்றார்...
பாராட்டுக்கள் ரசிகரே... வாழ்வின் தத்துவமொன்றைத் தத்ரூபமாகச் சொல்லியமைக்கு...

அமரன்
16-07-2007, 08:14 PM
நன்றி அமர்

தரும் போது ரோஜா
என நினைத்து சூடினேன்
சூடிய "பின்"னல்லாவா
தெரிந்தது அது ரோஜாவல்ல
நாகப்பூவென

பின்னால் குத்தினால்
வலித்து துள்ளியது ரோஜா...
நாகமா உன் ராஜா?

அக்னி
16-07-2007, 08:14 PM
மன'தில்' இடம்தருவாய்
வீட்டில்...,,?
தில் இருக்காதே.....

எழுதும்போதே அமரன் தில் லாலங்கடி கவிதை எழுதுவார் என்று மனதில் பட்டது...
பாராட்டுக்கள்...

இனியவள்
16-07-2007, 08:15 PM
மன'தில்' இடம்தருவாய்
வீட்டில்...,,?
தில் இருக்காதே.....

காதலிக்கும் போது
இருந்த தைரியம்
கைப்பிடிக்கும் போது
இரவில் மறைந்த சூரியனாய்
காணாமல் போனது
விந்தையிலும் விந்தையடா

அமரன்
16-07-2007, 08:15 PM
அக்னி..ரசிகரின் குசும்புகள் அதிகம்..இது அதில் ஒன்று...

அன்புரசிகன்
16-07-2007, 08:15 PM
மகிரம்பூவாய் இருந்த
வாழ்வை கல்லிப்பூவாய்
ஆக்கிய கயவன் நீயல்லவா

கயவன் இங்கே − களவாடிய
இராட்ச்ச(கி)சி அங்கே

அமரன்
16-07-2007, 08:16 PM
காணாமல் போனது
விந்தையிலும் விந்தையடா

விந்தை விந்தை
இரவில் சூரியன்
பகலில் நிலவு
இரண்டுமே விந்தை..
நீ...விண் தை..

இனியவள்
16-07-2007, 08:17 PM
கயவன் இங்கே − களவாடிய
இராட்ச்ச(கி)சி அங்கே

ஹீ ஹீ அன்பு

அழகான இரட்சசியாக
அன்று என்னை வர்ணித்த
நீ பணம் உன் கண்ணை
மறைத்ததும் துர்தேவதையாய்
நான் ஆன மர்மம் என்னவோ

அன்புரசிகன்
16-07-2007, 08:18 PM
அக்னி..ரசிகரின் குசும்புகள் அதிகம்..இது அதில் ஒன்று...

எதுவென்று கூறாது
அதுவென்று கூறும்
அமர குசும்பு
எங்குள்ளத இப்பாரில் {இப்(b)பாரில்}:lachen001:

அக்னி
16-07-2007, 08:18 PM
இனிப்போடு கசப்பிருந்தால்
சுவை அருமை என்று
அடிக்கடி கூறுவாயே
காதலோடு பிரிவிருந்தால்
தான் காதலுக்கு பெருமை
என்று கூறுவதற்கு அடிதளமிடுகின்றாய்
என அறியாமல் ஆமாம் போட்ட
என் மடத்தனத்தை இன்று வெறுக்கின்றேன்...

இனியவளே...
உண்மையில் மிக ஆழமான நோக்கு...

இருள் அகற்ற ஏற்றப்பட்ட
சுடரின் நடுவே...
பாதுகாக்கப்பட்டது இருள்...

வெளிவேடம் போட்டு, இனிக்கப் பேசிக் கவிழ்ப்போரின் உண்மைநிலையும்,
இந்தச் சுடர் போன்றதே...

இனியவள்
16-07-2007, 08:20 PM
விந்தை விந்தை
இரவில் சூரியன்
பகலில் நிலவு
இரண்டுமே விந்தை..
நீ...விண் தை..

பகலில் நிலவாய்
குளிர்விக்கும் உன்
முகம் இரவில்
சூரியனாய் சுடர்
விடுகின்றதே என்னைக்
காணாது

அன்புரசிகன்
16-07-2007, 08:20 PM
அழகான இரட்சசியாக
அன்று என்னை வர்ணித்த
நீ பணம் உன் கண்ணை
மறைத்ததும் துர்தேவதையாய்
நான் ஆன மர்மம் என்னவோ

துர்தேவதை நீயாக
சூத்திரம் நான் அல்ல
துவம்சம் செய்துவிடு
நீ இனியவளே... :082502now_prv: ???

அமரன்
16-07-2007, 08:22 PM
எதுவென்று கூறாது
அதுவென்று கூறும்
அமர குசும்பு
எங்குள்ளத இப்பாரில் {இப்(b)பாரில்}:lachen001:

"பாரி"ல் வள்ளலே
நான் தானோ...

அக்னி
16-07-2007, 08:23 PM
விந்தை விந்தை
இரவில் சூரியன்
பகலில் நிலவு
இரண்டுமே விந்தை..
நீ...விண் தை..


என் இதயத்தை
ரணமாக்கிய தை
நீயானாலும்..,
என்றும்,
என் இதய தை... நீயே...

அமரன்
16-07-2007, 08:25 PM
என் இதயத்தை
ரணமாக்கிய தை
நீயானாலும்..,
என்றும்,
என் இதய தை... நீயே...

உன் இதய தை நானாக
எண்ணிய தை யாரோ...
"ரா"ஸ்"கல்".


(சொல்லாடல் அருமை அக்னி பாராட்டுக்கள்)

இனியவள்
16-07-2007, 08:26 PM
துர்தேவதை நீயாக
சூத்திரம் நான் அல்ல
துவம்சம் செய்துவிடு
நீ இனியவளே... :082502now_prv: ???

அடடா அன்பு குசும்பு ஜாஸ்தி ஆகிட்டே போகின்றது

மாயக் கண்ணன்
வேடம் போட்டு
மாயமாகி விட்டாயே
என் கண்ணில் திரும்ப
பட்டு விடாதே அன்பு
சொன்ன படி துவம்சம்
பண்ணிவிடுவேன் விழி
என்னும் சூலாயுதம் கொண்டு

அன்பு இது எப்படி :sport-smiley-013:

அமரன்
16-07-2007, 08:28 PM
விழி சூழ் ஆயுதமா
அன்பை வீழ்த்துவது
அன்பிலல்லவா வீழ்த்துவது..

(இது எப்படி;என்கட்சிக்காரருக்கு ஆதரவு)

இனியவள்
16-07-2007, 08:31 PM
விழி சூழ் ஆயுதமா
அன்பை வீழ்த்துவது
அன்பிலல்லவா வீழ்த்துவது..
(இது எப்படி;என்கட்சிக்காரருக்கு ஆதரவு)

அன்பெனும் ஒளியை
வீசிய கண்களை இன்று
சுட்டெரிக்கும் தனலாய்
மாற்றியது உன் தூரோகம்
அல்லவா

அன்புரசிகன்
16-07-2007, 08:31 PM
பண்ணிவிடுவேன் விழி
என்னும் சூழாயுதம் கொண்டு

:innocent0002:
உனது சம்ஹாரம்
செல்லாது இங்கு
சூரன் அல்ல
அன்பு ராஜ்ஜியமிங்கு.

அமரன்
16-07-2007, 08:32 PM
:innocent0002:
உனது சம்ஹாரம்
செல்லாது இங்கு
சூரன் அல்ல
அன்பு ராஜ்ஜியமிங்கு.

சம் காரம் செல்லாது.
பல காரம் செல்லுமோ
அன்பு ராஜாவுக்கு.

(சும்மா தமாசு)

இனியவள்
16-07-2007, 08:33 PM
:innocent0002:
உனது சம்ஹாரம்
செல்லாது இங்கு
சூரன் அல்ல
அன்பு ராஜ்ஜியமிங்கு.

அன்பு ராஜ்ஜியமான
காலத்தை பொறாமை
என்னும் சுனாமி
அடித்துக் கொண்டு
போய் வெகுகாலமாயிற்று
நண்பா இன்னும் கனவுலகத்தில்
சஞ்சரித்து உன் பிரக்காசமான
வாழ்வை இருட்டாக்காதே

அன்புரசிகன்
16-07-2007, 08:37 PM
அன்பெனும் ஒளியை
வீசிய கண்களை இன்று
சுட்டெரிக்கும் தனலாய்
மாற்றியது உன் தூரோகம்
அல்லவா

அரக்கன் என்றாய்
முதலாம் பிறையானேன்
துரோகி என்றாய்
முதலே போனது
என்-வாழ்வில்

இனியவள்
16-07-2007, 08:38 PM
அரக்கன் என்றாய்
முதலாம் பிறையானேன்
துரோகி என்றாய்
முதலே போனது
என்-வாழ்வில்

போட்ட முதல்
போனது உன்
வாழ்வில் − என்
வாழ்வே போய்
விட்டதே உன்னால்

அன்புரசிகன்
16-07-2007, 08:40 PM
பல காரம் செல்லுமோ
அன்பு ராஜாவுக்கு.

(சும்மா தமாசு)

பல−காரம் சென்றாலும்
பணி−ஆரம் ஆகுமோ

அன்புரசிகன்
16-07-2007, 08:42 PM
போட்ட முதல்
போனது உன்
வாழ்வில் − என்
வாழ்வே போய்
விட்டதே உன்னால்

முதலாளி இங்கே
உன்முதல் போனதெங்கே?
மூலதனம் என் காதல் − உன்
தரிசனம் எங்கே...

ஆதவா
17-07-2007, 03:18 AM
அக்னி கருத்தை இங்கே வைக்கிறேன்..

இன்பாறு ஓடுமிடத்தே நாமறியாமல் துன்பாறாக்கினால்?...
பூவாசத்தை நிர்மூலமாக்கத் தெரிந்த தேனிக்களுக்கு
நறுமணச் சுவை தெரியாதல்லவா?
முட்களின் பயன் நமக்குண்டு... பல சொற்களின் பயனல்லாததுபோலல்ல

கவிதை அழகு இனியவள். தேன் கொடுக்கா தேளுக்குத் தக்க போன் செய்திடுங்கள் போலீசுக்கு..

அரசன்
17-07-2007, 06:42 AM
விசமும் தேவைதான் இது போன்ற விசமிகளை அளிக்க.

பாராட்டுக்கள் இனி!

இனியவள்
17-07-2007, 09:02 AM
அக்னி கருத்தை இங்கே வைக்கிறேன்..
இன்பாறு ஓடுமிடத்தே நாமறியாமல் துன்பாறாக்கினால்?...
பூவாசத்தை நிர்மூலமாக்கத் தெரிந்த தேனிக்களுக்கு
நறுமணச் சுவை தெரியாதல்லவா?
முட்களின் பயன் நமக்குண்டு... பல சொற்களின் பயனல்லாததுபோலல்ல
கவிதை அழகு இனியவள். தேன் கொடுக்கா தேளுக்குத் தக்க போன் செய்திடுங்கள் போலீசுக்கு..

நன்றி ஆதவா

அடடா இதுக்கு எல்லாம் பொலிசுக்கு போனால் பிறகு
பொலிஸ் நிலையம் கூடிடும் உலகத்தில

இனியவள்
17-07-2007, 09:03 AM
விசமும் தேவைதான் இது போன்ற விசமிகளை அளிக்க.
பாராட்டுக்கள் இனி!

நன்றி மூர்த்தி

இனியவள்
17-07-2007, 09:04 AM
முதலாளி இங்கே
உன்முதல் போனதெங்கே?
மூலதனம் என் காதல் − உன்
தரிசனம் எங்கே...

அன்பு உங்களை கவிச்சமருக்கு இழுத்திட்டுப் போக வேணும் சீக்கிரம் :icon_rollout:

உன் முதல் என் அன்பா
இல்லை எனது பணமா
புரியாது தவித்தேன் பல
நாள் தூக்கம் கெடுத்து
கடைசியில் தெரிந்து
கொண்டேன் உன் முதல்
என் அன்பல்ல என் பணமென்று

ஓவியன்
17-07-2007, 05:37 PM
ஒரு நாளில் இத்தனை பக்கங்கள், இந்தனை கவிதைகளா?

ஒவ்வொன்றும் தைக்கின்றன பலமாகவே.......!
அனைவருக்கும் பாராட்டுக்கள்!.

இனியவள்
17-07-2007, 06:00 PM
ஒரு நாளில் இத்தனை பக்கங்கள், இந்தனை கவிதைகளா?
ஒவ்வொன்றும் தைக்கின்றன பலமாகவே.......!
அனைவருக்கும் பாராட்டுக்கள்!.

ஹீ ஹீ ஓவியன்

தூக்கத்தை கற்பனையாக்கி
கவிதை வடிக்கும் நவியுக
நாயகர்கள் நாங்கள் :angel-smiley-026:

அமரன்
17-07-2007, 06:15 PM
ஹீ ஹீ ஓவியன்

தூக்கத்தை கற்பனையாக்கி
கவிதை வடிக்கும் நவியுக
நாயகர்கள் நாங்கள் :angel-smiley-026:

உம்தூக்கத்தைக் கெடுத்து
கவிதைகள் கொடுத்து
எம்மையும் கெடுக்கும்
அம்மையாரல்லவா நீர்?

இனியவள்
17-07-2007, 06:17 PM
உம்தூக்கத்தைக் கெடுத்து
கவிதைகள் கொடுத்து
எம்மையும் கெடுக்கும்
அம்மையாரல்லவா நீர்?

தூக்கத்தை கெடுப்பதற்கு
தூக்கம் என்னை வரவேற்க்கவில்லையே
தூக்கம் என்னை வரவேற்கும் வரை
கவிதயை வரவேற்கின்றேன்...

ஹீ ஹீ

ஓவியன்
17-07-2007, 06:19 PM
தூக்கம் கெடுத்து
கவி வரைய எனக்கும்
இல்லையா ஆசை?

துக்கத்தைக் கொடுத்து
பணியைப் பிணியாக்கும்
மேலதிகாரிக்குப் புரிந்தால் தானே?

அன்புரசிகன்
17-07-2007, 06:32 PM
அன்பு உங்களை கவிச்சமருக்கு இழுத்திட்டுப் போக வேணும் சீக்கிரம் :icon_rollout:

:icon_nono: :icon_nono: :icon_nono: :icon_nono: :icon_nono: :shutup: :shutup: :shutup:



உன் முதல் என் அன்பா
இல்லை எனது பணமா
புரியாது தவித்தேன் பல
நாள் தூக்கம் கெடுத்து
கடைசியில் தெரிந்து
கொண்டேன் உன் முதல்
என் அன்பல்ல என் பணமென்று

என் அன்பை
சல்லியாக்கிய தவறு
எனது அல்ல :food-smiley-002:

இனியவள்
17-07-2007, 06:35 PM
என் அன்பை
சல்லியாக்கிய தவறு
எனது அல்ல :food-smiley-002:

எனதல்ல உனது
என்று பழியனைத்தையும்
என் மீது சுமத்தி குற்றவாளிக்
கூண்டில் நிற்பாட்டி தப்பிக்க
நினைக்கும் கயவன் நீ

அன்புரசிகன்
17-07-2007, 06:37 PM
கயவன் நீ

:auto003: :auto003: :auto003:

இனியவள்
17-07-2007, 06:39 PM
:auto003: :auto003: :auto003:

அட கவிதைய சொன்னன் உங்களை
இல்லை சின்ன பிள்ளைத் தனமாவே
இருக்கே :icon_rollout: :icon_rollout: :icon_rollout: :icon_rollout: :icon_rollout:

அன்புரசிகன்
17-07-2007, 06:40 PM
அட கவிதைய சொன்னன் உங்களை
இல்லை சின்ன பிள்ளைத் தனமாவே
இருக்கே :icon_rollout: :icon_rollout: :icon_rollout: :icon_rollout: :icon_rollout:

நான் ஓடுவது அதற்காக அல்ல. இதுக்கு மேல என்னால தாக்குப்பிடிக்க முடியாது. அக்னி அமர் வந்து தொடர்வார்கள். :thumbsup:

அக்னி
17-07-2007, 06:42 PM
எனதல்ல உனது
என்று பழியனைத்தையும்
என் மீது சுமத்தி குற்றவாளிக்
கூண்டில் நிற்பாட்டி தப்பிக்க
நினைக்கும் கயவன் நீ

கயவன் அல்ல நான்...
காதலை வனையும் குயவன்...
களிமண்ணாய்... இருக்கும்
நீ...
உருமாறி போகப்போவது,
வேறிடம் என்று தெரிந்திருந்தும்..,
அலங்காரம் செய்து ரசிக்கும்...
நான் கயவனா உனக்கு..?

(அன்புரசிகரையா கயவன் என்றீர்கள்...??? அதுதான் நீங்கள் களிமண்...)
அமரன்:− காதல்குயவன் அன்புரசிகர்...
அக்னி & ஓவியன்:− வனைக... ச்சே... வாழ்க...

இனியவள்
17-07-2007, 06:46 PM
கயவன் அல்ல நான்...
காதலை வனையும் குயவன்...
களிமண்ணாய்... இருக்கும்
நீ...
உருமாறி போகப்போவது,
வேறிடம் என்று தெரிந்திருந்தும்..,
அலங்காரம் செய்து ரசிக்கும்...
நான் கயவனா உனக்கு..?

(அன்புரசிகரையா கயவன் என்றீர்கள்...??? அதுதான் நீங்கள் களிமண்...)
அமரன்:− காதல்குயவன் அன்புரசிகர்...
அக்னி & ஓவியன்:− வனைக... ச்சே... வாழ்க...

அலங்காரம் செய்தென்னை
நீ உன் வீட்டில் அலங்கரிப்பாய்
என நான் இருக்க என் ஆசைகளில்
மண்ணைத் தூவி வேறிடமல்லவா
விற்கின்றாய் மண்ணோடு மண்ணாய்ப்
போகப்போகும் பணத்திற்காய்...

(அடடா அக்னி நான் அன்பைச் சொல்லவில்லை கவிதையோட்டம் அப்படி வந்து விட்டது :shutup: )

அமரன்
17-07-2007, 06:48 PM
கயவன் அல்ல நான்...
காதலை வனையும் குயவன்...
களிமண்ணாய்... இருக்கும்
நீ...

அழகிய உருவமாய்
என்னை வனைந்த காதல்
உன்னை வனயவில்லை
ஒட்டாத மண்ணா நீ.

இனியவள்
17-07-2007, 06:51 PM
அழகிய உருவமாய்
என்னை வனைந்த காதல்
உன்னை வனயவில்லை
ஒட்டாத மண்ணா நீ.

அன்பென்னும் நீர்
ஊற்றி என்னை
நீ வனையவில்லை
பிறகெப்படி என்னால்
ஓட்ட முடியும்....

அன்புரசிகன்
17-07-2007, 07:01 PM
ஒட்டி உள்ளது
எனதன்பு
எதற்காக ஊற்ற
எனதன்பை

அமரன்
17-07-2007, 07:04 PM
அன்பென்னும் நீர்
ஊற்றி என்னை
நீ வனையவில்லை
பிறகெப்படி என்னால்
ஓட்ட முடியும்....

ஊற்ற ஊற்ற உருஞ்சியும்
ஊற மறுக்கிறதே
ஒட்டாத மண்தான் நீ

அக்னி
17-07-2007, 07:04 PM
ஒட்டி உள்ளது
எனதன்பு
எதற்காக ஊற்ற
எனதன்பை

ஒட்டிய உனதன்பு...
பிசினா...
ஒட்டாத என் இதயம்
மெசினா...
அன்பை ஊற்றும் நீ
என்ன அசினா..?

சும்மா சும்மா....

அன்புரசிகன்
17-07-2007, 07:11 PM
ஒட்டிய உனதன்பு...
பிசினா...
ஒட்டாத என் இதயம்
மெசினா...
அன்பை ஊற்றும் நீ
என்ன அசினா..?

சும்மா சும்மா....

பிசினா மெசினா அசினா
இதை விளக்க
நான் என்ன உமது
கசினா?

சும்மா டெஸடு பண்ணி பார்த்தேன்... :thumbsup:

அக்னி
17-07-2007, 07:12 PM
பிசினா மெசினா அசினா
இதை விளக்க
நான் என்ன உமது
கசினா?

சும்மா டெஸடு பண்ணி பார்த்தேன்... :thumbsup:

கையைக்கொடுங்கள் அன்பு... பின்னுகின்றீர்கள்...

அன்புரசிகன்
17-07-2007, 07:15 PM
கைகொடுக்க ஏங்குது
எனது நெஞ்சம்
இருந்தாலும் தயங்குது
காரணம் எனது
முன்னனுபவம். :D :D :D