PDA

View Full Version : யார் உயர்ந்தவர்?



அரசன்
16-07-2007, 06:21 PM
குருநானக் ஒருசமயம் தம்முடைய சீடர்களைச் சோதித்தார். அவருடைய இரண்டு புதல்வர்களும் அவரது சீடர்களைக் கண்டு பொறாமைப்பட்டனர். தங்களைவிட எந்தவிதத்தில் சீடர்கள் உயர்ந்தவர்கள் எனக் கேட்டனர். குருநாதனக், தனது சீடர்களிடத்தில் உயர்ந்த குணநலன்கள் இருக்கின்றது என்பதை தம் புதல்வர்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்பினார். அதன் பொருட்டு ஒரு சோதனை நிகழ்த்தினார்.

ஒரு டம்ளரை எடுத்து சாக்கடையில் வீசி எறிந்தார். தம் புதல்வர்களை நோக்கி அந்த டம்ளரை எடுக்கச் சொன்னார். புதல்வர்கள் அருவருப்புப்பட்டு ஒரு வேலைக்காரனை அழைத்து அந்த ட்மளரை எடுத்துவரச் சொன்னார்கள்.

குருநானக் மீண்டும் அந்த டம்ளரை சாக்கடையில் வீசி எறிந்துவிட்டு சீடர்களை நோக்கி அதை எடுத்துவரச் சொன்னார்.

அவரது சீடர்கள் தயங்காமல் உடனே அந்த டம்ளரை எடுத்தார்கள். நன்கு சுத்தம் செய்து அதை குருநாதரிடம் கொடுத்தார்கள். ஓர் உண்மையான சிடன் தன் குரநாதரிடத்தில் தீவிர பக்தி கொண்டிருந்ததோடு, குருநாதரின் கட்டளையை உற்சாகத்துடனும், சிரத்தையுடனும் நிறைவேற்றி வைப்பான் என்பதைப் புரிந்து கொண்டார்கள் குருநானக்கின் மகன்கள்.

அக்னி
17-07-2007, 08:38 PM
குருநானக் அவர்களின் கதைகள் நீண்ட காலத்திற்கு முன் படித்தது, நிழலாடுகின்றது...
இயலுமானால்,அவருடைய வாழ்க்கை வரலாறை, சிறு குறிப்பாகவேனும் தாருங்கள் மூர்த்தி...

நல்லறிவுக்கதைக்கு நன்றி...

aren
18-07-2007, 01:18 AM
நல்ல செய்தி. இந்த காலத்தின் ஆசானை யார் மதிக்கிறார்கள். இந்த மாதிரியான கதைகளைப் படித்தாவது மக்கள் கொஞ்சம் மாறட்டும்.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
18-07-2007, 08:27 AM
மூர்த்தி மாணவன் எப்படி இருக்கவேண்டுமென்று அழகாக சொன்ன கதை....பகிர்வுக்கு நன்றி.

இப்போது பலரை மாணவன் எனச் சொல்லமுடியாது..சின்ன நகைச்சுவை ஒன்று.

ஒருவர்:உங்களைப் பாத்ததும் ஓடி ஒழியுறனே அவன் உங்கள் மாணவனா?
ஆசிரியர்: ஆம். மானவன்.

lolluvathiyar
18-07-2007, 09:12 AM
குருனானக் கருத்து அருமையாக இருந்தது.

விகடன்
27-07-2007, 02:42 PM
அதனால்த்தானோ என்னவோ யாழ்ப்பாணத்தில் நாதஸ்வரவித்துவான்களும் நட்டுவாங்க வித்துவாங்களும் முன்னைய காலங்களில் தமது புதல்வர்களுக்கு தாம் கற்பிப்பதில்லை. மாறாக பிற வித்துவான்களிடமே அனுப்பு போதிக்கப்படுவர்.