PDA

View Full Version : காதலிக்க...எடக்கு முடக்கு சிந்தனைகள்..rambal
27-05-2003, 05:34 PM
காதலிக்க...எடக்கு முடக்கு சிந்தனைகள்..

ஆண்களுக்கு:

1. அடர்த்தியான குளிர் கண்ணாடி(கூலிங்கிளாஸ்) அணியுங்கள்.
(ஸே·ப்டியாக டாவடிக்க தோதானது. சில சமயம் நீங்கள் பார்க்கும் பிகரின் தோழி கூட சிக்கும்)

2. எப்போதும் சாந்தமாக குறுநகை பூத்தபடி இருங்கள்..
(அப்போதுதான் நீங்கள் வழிந்தால் கூட யாருக்கும் சந்தேகம் வராது)

3. ஜீன்ஸ் அணிந்த பெண்களை தைரியமாக பாருங்கள்.
(ஜீன்ஸ் அணிந்த பெண்கள் எல்லாம் ஹை-கிளாஸ் கிடையாது. அது சும்மா பம்மாத்து)

4. படிக்கட்டுகளில் தொத்தி பயணிக்கவும்.
(இன்றைய உலகத்தின் நாகரிகமான வீரச் செயல். ஆனால், யாராவது படிக்கட்டு பாதுகாப்பாளன் என்ற பட்டம் கொடுத்துவிடுவார்கள்.
ஜாக்கிரதை!)

5. சிகரெட் அடிக்கடி ஸ்டைலாக புகைத்தால் பட்சி மட்ட வாய்ப்புள்ளது.
(நீங்கள் சிகரெட் குடிப்பது மிகவும் பயனுள்ள செயலாகும். எவ்வாறெனில், அது பல கடைக்காரர்களை வாழவைப்பதால்)

6. தைரியமாக லெட்டரில் காதலை எழுதிக் கொடுங்கள்.
(பின் குறிப்பாக, உனக்கு பிடிக்கவில்லையென்றால்.. உன் தோழியிடம் கொடுக்கவும் என்று மறக்கமல் எழுதிவிடவும். மறுமுறை லெட்டர் எழுதும் காகிதச்செலவு, நேரம்.. ஆகியவை மிச்சம்)

7. லெட்டர் கண்டு பட்சி சிக்கினால், தமிழ் படங்களுக்கு மட்டும் கூட்டிப் போங்கள்.
(அங்குதான் கூட்டமே இல்லை)

8. சரியாக ஆறுமாதம் கழித்து பிகரை கழட்டி விடுங்கள்.
(அவளுக்கும் போர் அடிக்கும்.. உங்களுக்கும் போர் அடிக்கும்.. ஆகையால், அடுத்த பிகருக்கு தாவி விடவும்)


பெண்களுக்கு:

1. கூலிங்கிளாஸ் அணியும் ஆண்களை நம்ப வேண்டாம்.

2. சிரித்தபடி இருக்கும் ஆண்களை அசடு என்று ஒதுக்கிவிடுங்கள்

3. தாவணி, சுரிதார் என்பது பாந்தமாக இருக்கும். எதற்கும் மைக்ரொ மினி இரண்டு செட் எடுத்து அணிய ஆரம்பியுங்கள்.
(ஜீன்ஸ் எடுத்த சங்கருக்கே பிளாப். அதனால், ஜீன்ஸ்க்கு "பொடா")

4.படிக்கட்டில் தொத்தி பயணிக்கும் ஜந்துக்களை விட பஸ்ஸினுள் பயணிக்கும் அம்மாஞ்சிகளிடம் கொஞ்சம் ஜாக்கிரதை.
(லூசு மாதிரி இருந்து கொண்டு இதுகள் செய்யும் சில்மிசங்கள்.)

5. சிகரெட் நீங்களும் குடிப்பது போல் பாவ்லா காட்டுங்கள்.
(உங்களுக்கு சிகரெட் வாங்கி கட்டுப்படியாகாது என்பதால் பார்ட்டி ஜூட்.)

6. வரும் கடிதங்களை சேகரித்து வையுங்கள்.
(ஒரு ஐம்பது வயதிற்கு மேல் போரடிக்கும் போது பழையவைகளை அசை போட வேண்டுமே..)

7. படத்திற்கு போங்கள். இடைவேளையோடு திரும்பி விடுங்கள்.
(அதற்குப் பின்புதான் சில்மிசம் ஆரம்பிப்பார்கள்)

8. சரியாக ஆறுமாதம் கழித்து பார்ட்டியை கழட்டிவிடுங்கள்.
(அடுத்த இளிச்சவாயன் சிக்காமலா போயிடுவான்)

மேற்கூறியவைகளை கடைப்பிடித்தால் எளிதாக காதலிக்கலாம்..
வாழ்த்துக்கள்..

முத்து
27-05-2003, 05:39 PM
என்ன ராம்பால் கவிழ்த்துவிட்டீர்களே ....ஆனாலும் முதலிலுள்ளவை எடக்கு முடக்கு அல்ல..அவை யதார்த்தமானவை....

இளசு
27-05-2003, 11:48 PM
ராமின் இந்த எடக்கு -மொடக்கு தொடர் படைப்புகள்
எல்லாம் அருமை...
பாராட்டுகள் ராம்...
வாய்விட்டு சிரிக்கவைக்கும் இந்த பாணி தொடரட்டும்....

prabha_friend
28-05-2003, 07:53 AM
சூப்பரா இருக்கு . தொடரவும் .

அறிஞர்
28-05-2003, 08:04 AM
நன்றாக உள்ளது நண்பா... உமக்கு... இவ்வளவு.. அனுபவமா... இப்போ இருப்பது.. காதலி எத்தனையாவது...???????

aren
28-05-2003, 02:04 PM
நீங்கள் இரண்டு பக்கமும் பேசுபவர் என்று இதுவரைத் தெரியாதே. குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுகிறீர்களே, இது நியாயமா?

suma
28-05-2003, 02:50 PM
ராம்பால்.... சில வருடத்துக்கு முன் இந்த யோசனை சொல்லக்கூடாதா???
உம்ம்ம்ம்ம்...........

முத்து
28-05-2003, 05:15 PM
ராம்பால்.... சில வருடத்துக்கு முன் இந்த யோசனை சொல்லக்கூடாதா???உம்ம்ம்ம்ம்...........
சுமா... சரி விடுங்க ...இனிமேல் என்ன பண்றது...

பாரதி
28-05-2003, 05:29 PM
அன்பு ராம்பால்..

எடக்குமுடக்கு சிந்தனைகளை விடுங்க. காதலிக்க நிஜமாக நீங்க என்ன செஞ்சீங்கன்னு சொல்லுங்களேன். (கவிதையா...?)

மன்மதன்
10-08-2004, 11:05 AM
ஆகா.. அருமையான யோசனையாக இருக்கிறதே..

அன்புடன்
மன்மதன்

இளந்தமிழ்ச்செல்வன்
10-08-2004, 11:29 AM
ராம்பால் யோசனைகள் முதல் பாதி சபாஷ் என்று கூறவைக்கிறது.

பின்பாதி: எத்தனை பேரை இப்படி சொல்லியே கவுத்தீங்க (நல்ல பிள்ளயாமில்ல நீங்க..)

சரி அறிஞரின் கேள்விக்கு பதில் கூறுங்கள்.

இளந்தமிழ்ச்செல்வன்
10-08-2004, 11:54 AM
ராம்பால்.... சில வருடத்துக்கு முன் இந்த யோசனை சொல்லக்கூடாதா???
உம்ம்ம்ம்ம்...........

8 வது பாயிண்ட் பார்க்கலீங்களா? இல்லை 6 மாசத்துக்கு மேல ஆயிடுச்சேன்னு வருத்தப்படுறீங்களா?

(அம்மணி கோவிச்சுக்காதீங்க. சு(ம்)மா தமாசுதானுங்கோ)

Mathu
10-08-2004, 02:44 PM
நண்றி ராம் 6 மாதத்துக்கு அப்புறமா எழுத முடிஞ்சா மிகுதி.... :wink: :P

thamarai
10-08-2004, 05:01 PM
காதலிக்க கூறிய எடக்கு முடக்கு சிந்தனைகள்... எல்லாம் சொந்த அனுபவங்களா..?

thempavani
11-08-2004, 11:24 AM
ஆகா.. அருமையான யோசனையாக இருக்கிறதே..


மன்மதா.. முயன்று பார்க்கத் திட்டம் ரெடி தானே... முயற்சி திருவினையாக்கும்.............

அறிஞர்
12-08-2004, 03:28 AM
ஆகா.. அருமையான யோசனையாக இருக்கிறதே..

மன்மதா.. முயன்று பார்க்கத் திட்டம் ரெடி தானே... முயற்சி திருவினையாக்கும்.............

உமக்கு மன்மதனை வம்பிழுக்காட்டி தூக்கம் வராதே.....

அது சரி... நீர் பாவடை தாவணியில் வலம் வரப்போகிறீரோ....

thempavani
12-08-2004, 08:19 AM
:evil: :evil: :evil: :evil: :evil:

பரஞ்சோதி
12-08-2004, 09:11 AM
ஆகா.. அருமையான யோசனையாக இருக்கிறதே..

மன்மதா.. முயன்று பார்க்கத் திட்டம் ரெடி தானே... முயற்சி திருவினையாக்கும்.............

உமக்கு மன்மதனை வம்பிழுக்காட்டி தூக்கம் வராதே.....

அது சரி... நீர் பாவடை தாவணியில் வலம் வரப்போகிறீரோ....

அட நம்ம அறிஞரா இது, இப்படி பேசுவது. தேம்பா, நீ பாவம்பா....

இளந்தமிழ்ச்செல்வன்
12-08-2004, 06:08 PM
நண்றி ராம் 6 மாதத்துக்கு அப்புறமா எழுத முடிஞ்சா மிகுதி.... :wink: :P

:D :D :D :!: :!: