PDA

View Full Version : புதிய உதவியாளர்அறிஞர்
16-07-2007, 05:24 PM
மன்றத்தில் புதிய உதவியாளர் குழுவில் நண்பர் ஓவியனும் சேர்ந்துக்கொள்கிறார்...

அவரின் பணி இன்னும் மன்றத்தில் சிறக்க வாழ்த்துவோம்.

இனியவள்
16-07-2007, 05:26 PM
ஓவியரே வாழ்த்துக்கள்

மென்மேலும் சிறக்க என்
வாழ்த்துக்களோடு கூடிய*
பாரட்டுக்கள் :music-smiley-008:

அமரன்
16-07-2007, 05:26 PM
நண்பன் ஓவியனுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் ஓவியன். மன்றத்தில் உங்கள் ஈடுபாடு கண்டு மெய் சிலிர்த்த நாட்கள் எத்தனையோ...உங்களுடன் இணைந்து செயல்படுவதில் பெருமை அடைகின்றேன். நன்றி தலைவரே! நன்றி அறிஞரே!

ஷீ-நிசி
16-07-2007, 05:27 PM
வாழ்த்துக்கள் ஓவியரே! நல்லா உதவி பன்னுங்க...மன்றத்துக்கு.....

ஆதவா
16-07-2007, 05:28 PM
ஓவியரே! மிகுந்த வாழ்த்துக்கள்.... மன்றம் சிறக்க பல உதவிகள் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்குன்டு.... (அறிஞருக்கு நன்றி)

அரசன்
16-07-2007, 05:30 PM
வாழ்த்துக்கள் ஓவியரே. உங்கள் உதவி இம்மன்றத்திற்கு தேவை.

இளசு
16-07-2007, 06:10 PM
நன்றி அறிஞருக்கும் தலைவர் இராசகுமாரனுக்கும்..

அன்பு இளவல் ஓவியனுக்கு என் அன்பு...

பாரதி
16-07-2007, 06:17 PM
அன்பு ஓவியன்,

என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் பணி என்றும் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

அக்னி
16-07-2007, 06:43 PM
பாராட்டுக்கள் ஓவியரே...
மன்றில் மென்மேலும் உயர வாழ்த்துகின்றேன்...

அன்புரசிகன்
16-07-2007, 07:07 PM
வாழ்த்துக்கள் ஓவியரே... இன்னமும் உயர்ந்திட வாழ்த்துக்கள்.

மதி
17-07-2007, 04:02 AM
அட..வாழ்த்துக்கள் ஓவியரே..
உம் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.!

சிவா.ஜி
17-07-2007, 04:26 AM
வாழ்த்துக்கள் ஓவியன். இட்ட பணியை செவ்வனே செய்யும் திறன் உங்களுக்கு உண்டு. பாராட்டுக்கள்.

இதயம்
17-07-2007, 04:37 AM
என்ன நம்ம ஓவியர் மன்ற உதவியாளரா ஆயிட்டாரா..? சும்மாவே ரொம்ப ரவுசு பண்ணுவார். இனி இதுக்கு மேல பண்ணப்போற ரவுசையும் தாங்கணுமா..?!! ஆண்டவா எங்களை ஓவியன்கிட்டயிருந்து காப்பாத்துடா..!

வாழ்த்துக்கள் ஓவியன். உங்கள் அயரா உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இது..!!

mania
17-07-2007, 04:47 AM
வாழ்த்துகள் ஓவியன்.....:aktion033: :aktion033:
அன்புடன்
மணியா

இணைய நண்பன்
17-07-2007, 09:19 AM
ஓவியர் அவர்களே..வாழ்த்துக்கள்.உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள்

namsec
17-07-2007, 11:01 AM
ஒவியனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

ராஜா
17-07-2007, 11:14 AM
வாழ்த்துகள் ஓவியன்..!

aren
17-07-2007, 01:47 PM
வாழ்த்துக்கள் ஓவியன்.

மலர்
17-07-2007, 01:50 PM
ஓவியரே வாழ்த்துக்கள்...

ஓவியன்
17-07-2007, 02:47 PM
அன்பான தமிழ் மன்ற உறவுகளே!

இந்த மன்றம் இன்று என்னையும் ஒரு உதவியாளராக தன் நிர்வாகக் குழுவில் வரித்து எனக்கு பெருமையளித்து நிற்கும் இவ்வேளை என் முன்னேலே நிற்கும் பெரும் பணி இந்த மன்றம் என் மீது வைத்த நம்பிக்கையை எப்பாடு பட்டேனும் காத்து மன்றத்திற்காக உழைக்க வேண்டுமென்பதே!. அதற்கு மன்ற உறவுகளாகிய நீங்கள் அனைவரும் தோள் கொடுப்பீர்களென்ற நம்பிக்கை நிறையவே எனக்குண்டு!.

அந்த நம்பிக்கையின் பலத்தின் மீதும், ஒன்றுமறியா பாலகனாக வந்த என்னை இதுவரை உயர்த்தி விட்ட தமிழ் மன்றம் தொடர்ந்தும் உயர்த்தத் தவறாதென்ற நம்பிக்கையின் மீதும் இந்த எனது புதிய பொறுப்புக்களை ஏற்றுக் கொள்கிறேன்.

என் புதிய பதவிக்கு வழி சமைத்த நிர்வாகி இராசகுமாரன் அண்ணா, இணை நிர்வாகி அறிஞர் அண்ணா, மற்றும் எனை வாழ்த்தி மகிழ்ந்த என்றும் தன் அன்பாலே என்னை வழிப்படுத்தும் இளசு அண்ணா!, என்றும் எல்லோருக்கும் ஊக்கமளிக்கும் தலை மணியா அண்ணா மற்றும் பாரதி அண்ணா, என்னையும் ஒரு தம்பியாக வரித்து என்னுடன் உறவாடி மகிழும் ஆரென் அண்ணா, அன்பாலேயும் பழகும் பண்பாலும் எனை வசம் கொண்ட ராஜா அண்ணா, மன்றம் வந்த நாள்முதல் உற்ற நண்பனாக உறவாடி வரும் ஆதவன், ஆக்கத்திலும் ஊக்கத்திலும் எனக்கு உத்வேகமூட்டும் ஷீ மற்றும் மதி, இதுவரை என்னுடன் இந்த மன்றில் கூடி கும்மாளமிட்டு தொடர்ந்து சேர்ந்து பணிபுரிய இருக்கும் சக உதவியாளார்களான அமரன், அக்னி, அன்பு, என்னை அன்பான ரவுசுக் காரனாக ஏற்றுக் கொண்ட இதயம், என்றும் என் முன்னேற்றத்தில் துணை நிற்கும் மூர்த்தி, சிவா.ஜி, இளையவளாகினும் இனியவளாக பழகும் சகோதரி, அண்மையில் மன்றத்தைக் கலக்கி வரும் சித்தர், இக்ராம், மிக அண்மையில் மன்றம் வந்தாலும் தன் திறமையாலும் பண்பாலும் எல்லோரையும் வசீகரித்து வரும் மலர்! அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

aren
17-07-2007, 02:53 PM
ஓவியன் வாருங்கள், வந்து கலக்குங்க.

பார்த்திபன்
17-07-2007, 02:56 PM
ஓவியன் அண்ணா...

வாழ்த்துக்கள் உங்கள் பணி மேன்மேலும் சிறப்புற...

பார்த்திபன்......

ஓவியன்
17-07-2007, 03:18 PM
ஓவியன் வாருங்கள், வந்து கலக்குங்க.
சொல்லீட்டீங்க* இல்லே − க*ல*க்கிடுவோம்!. :thumbsup:

ஓவியன் அண்ணா...
வாழ்த்துக்கள் உங்கள் பணி மேன்மேலும் சிறப்புற...
பார்த்திபன்......

உங்கள் அன்பால் எல்லாமே சிறப்பாகும்....
மிக்க நன்றி பார்த்தீபன்!

பென்ஸ்
17-07-2007, 04:50 PM
என் அன்பின் ஓவியன்...

இது ஒரு துவக்கமே...

ஓவியன்
17-07-2007, 04:57 PM
என் அன்பின் ஓவியன்...

இது ஒரு துவக்கமே...

உண்மைதான் அண்ணா!

நிச்சயமாய் இந்த வாசகங்கள் என்றென்றும் என் மனதிலிருக்கும்...........

மிக்க நன்றிகள்!.

மனோஜ்
17-07-2007, 07:11 PM
வாழ்த்துக்கள் ஓவியரே!
தொடர்ந்து கலக்க

ஓவியன்
17-07-2007, 07:24 PM
வாழ்த்துக்கள் ஓவியரே!
தொடர்ந்து கலக்க
மிக்க நன்றி மனோஜ்!

பி.கு − ஓவியனே என்று அழைக்கலாமே?, ஓவியர் என்பது நமக்கிடை ஏதோ ஒரு இடைவெளியைத் தோற்றுவிப்பதாக உணர்கிறேன் நண்பா!.

namsec
18-07-2007, 03:30 PM
உதவியாளர் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார் சற்று விளக்கினால் அனைவருக்கும் ஏதுவாக இருக்கும்

தாமரை
19-07-2007, 02:10 AM
வாருங்கள் ஓவியன்! உங்க தூரிகைக்கு வண்ணம் கிடைக்கட்டும்
வாழ்த்துக்கள் .

ஓவியன்
19-07-2007, 02:17 AM
வாருங்கள் ஓவியன்! உங்க தூரிகைக்கு வண்ணம் கிடைக்கட்டும்
வாழ்த்துக்கள் .
ஆகா செல்வன் அண்ணா!

உங்கள் வாழ்த்தைக் காணவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்தேன், கண்டதும் இனம் புரியா ஒரு சந்தோசம்.

மிக்க நன்றிகள் அண்ணா!.

இன்பா
20-07-2007, 10:46 AM
ஓவியருக்கு வாழ்த்துக்கள்

ஓவியன்
20-07-2007, 01:02 PM
நன்றி வரிப்புலி!.

அறிஞர்
20-07-2007, 03:23 PM
உதவியாளர் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார் சற்று விளக்கினால் அனைவருக்கும் ஏதுவாக இருக்கும்

மன்றத்தில் திஸ்கி பதிப்புக்களை யுனிகோடிற்கு மாற்ற உதவி தேவைப்பட்டது அந்த நேரத்தில் சிலர் விருப்பம் தெரிவித்தனர். அவர்கள் உதவியாளராக நியமிக்கப்பட்டனர்.

தற்போது... பல மேற்பார்வையாளர்களுக்கு சொந்த வேலை இருப்பதால், மன்றத்தில் பங்களிப்பு குறைந்துள்ளது.... மன்றத்தில் இருக்கும் பதிவுகளை கண்காணிக்க பொறுப்பானவரை தேடி பரிசீலித்தோம்...

இன்னும் பகுதிகள் வேண்டும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8958)
என்ற தலைப்பில் எழுந்த கருத்தில்... மன்றத்தில் உதவி செய்ய தயாராக இருப்பதாக.. ஓவியன் தெரிவித்தார்.

சமீபத்தில் மன்றத்தில் ஈடுபாடோடு பங்களித்த... அவரை உதவியாளராக நியமிக்க நிர்வாக குழு... விருப்பம் தெரிவித்தது.

அதன் அடிப்படையில் தான் அவர் உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கு பதிவு... ஈடுப்பாட்டின் அடிப்படையில் அனைவரும் நிர்வாக குழுவில் இடம் பெறுகிறார்கள்... சில காலத்திற்கு பின் பணியிலிருந்து விடுவிக்கப்படுவர்..

பின் புதியவர் வருவர்.. தாங்களும் நிர்வாக குழுவில் இடம் பெற வாய்ப்புண்டு.

namsec
20-07-2007, 03:31 PM
தாங்களும் நிர்வாக குழுவில் இடம் பெற வாய்ப்புண்டு.

விளக்கியமைக்கு நன்றி

என்னை உதவியாளராக நியமிக்க வில்லை என்ற ஆதங்கத்தில் இந்த வினாவை எழுப்பவில்லை அனைவருக்கும் தெரியவேண்டும் என்ற நோக்குதான் என்னுடையது

மேலும் நானும் நிர்வாக குழுவில் இடம் பெற வாய்ப்புண்டு என்று கூறியமைக்கும் நன்றி

அறிஞர்
20-07-2007, 03:35 PM
விளக்கியமைக்கு நன்றி

என்னை உதவியாளராக நியமிக்க வில்லை என்ற ஆதங்கத்தில் இந்த வினாவை எழுப்பவில்லை அனைவருக்கும் தெரியவேண்டும் என்ற நோக்குதான் என்னுடையது

மேலும் நானும் நிர்வாக குழுவில் இடம் பெற வாய்ப்புண்டு என்று கூறியமைக்கும் நன்றி
மன்றம் ஒரு குழுவாக தான் செயல்படுகிறது... மன்றத்தில் உதவி தேவைப்படும் பொழுது.. உதவ தயாராக இருக்கும் ஒவ்வொருவரும் கருத்தில் கொள்ளப்படுவர்...

இன்னும் சில வருடங்களில்... வேறு நிர்வாகி வரலாம், மேற்பார்வையாளர்கள் மாறுவர்..

எதுவும் நிரந்தரமல்ல...

sarcharan
20-07-2007, 03:37 PM
வாழ்த்துக்கள் ஓவியரே உங்க*ளுக்கு எனது பாரட்டுக்கள்

ஓவியன்
20-07-2007, 06:51 PM
மிக்க நன்றிகள் சரண் அண்ணா!

உங்கள் அன்பு என்றும் எனக்குத் தேவை.:nature-smiley-008:

சூரியன்
22-07-2007, 05:26 AM
வாழ்த்துக்கள் ஓவியரே.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

ஓவியன்
22-07-2007, 05:29 AM
மிக்க நன்றிங்க சூரியன்!.

சூரியன்
22-07-2007, 05:33 AM
இன்னும் திஸ்கி மன்ற பணிகள் முடியவில்லையா? ஏன் இவ்வளவு தாமதம்.

விகடன்
28-07-2007, 02:30 PM
வாழ்த்துக்கள் ஓவியன்.
சில காலங்கள் சந்தர்ப்ப சூழ்னிலையால் மன்றத்தில் உலாவ முடியவில்லை. வந்தபோது திடீரென்று ஓவியன் உதவியாளன் என்ற பதவியில் உலாவியதை கண்டேன். மகிழ்ந்தேன்.
அவருக்கு திறமை இருப்பதை அருகிலிருந்து பார்த்தவனில் நானும் ஒருவன். மன்றத்தின் மணம் வீச கட்டாயம் பாடுபடுவார் என்பது திண்ணம்.

வாழ்த்துக்களடாப்பா ஓவியன்.

ஓவியன்
28-07-2007, 02:50 PM
மிக்க நன்றிகள் விராடா!

மயூ
02-08-2007, 03:18 PM
அட.. அட... ஒவியரே வாழ்த்துக்கள்!

ஓவியன்
02-08-2007, 06:30 PM
அட.. அட... ஒவியரே வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி மயூரேசா!

நான் மன்றம் வந்த ஆரம்பக் காலங்களில், மன்றம் மீதான எனது பிடிப்பை அதிகரிக்க வைத்தவர்களில் நீங்களும் ஒருவர் − அதற்கு என் விசேட நன்றிகள்!. :nature-smiley-008:

மீனாகுமார்
02-08-2007, 08:09 PM
ஓவியரே உங்கள் புதுப்பணி சிறக்க வாழ்த்துக்கள்......

இத்தருணத்தில் தமிழ் மன்ற நிர்வாகிகளுக்கும் இயக்குனர்களுக்கும், உதவி புரிபவர்களுக்கும், ஆலோசகர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்..... வளர்க உங்கள் பணி....

ஓவியன்
02-08-2007, 08:24 PM
ஓவியரே உங்கள் புதுப்பணி சிறக்க வாழ்த்துக்கள்......
இத்தருணத்தில் தமிழ் மன்ற நிர்வாகிகளுக்கும் இயக்குனர்களுக்கும், உதவி புரிபவர்களுக்கும், ஆலோசகர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்..... வளர்க உங்கள் பணி....
மிக்க நன்றிகள் மீனா குமார் அவர்களே!

நாங்கள் நாடுகளால் வேண்டுமானால் சிதறி இருக்கலாம் ஆனால் மனதால் தமிழால் ஒருமிக்க வைத்த இந்த மன்றமும் இதன் சேவைகளும் பல்லாண்டு வாழவேண்டும்!

எல்லோரும் சேர்ந்தே பயணிப்போம், சேர்ந்தே சாதிப்போம்....!.

pradeepkt
03-08-2007, 09:29 AM
ஓவியன்,
உன் புதுப்பணி பொலிவுடன் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.
அன்புடன்,
பிரதீப்

ஓவியன்
03-08-2007, 09:41 AM
ஆகா பிரதீப் அண்ணா!

புது வேகம் தந்த உங்கள் வாழ்த்துக்கு நன்றி அண்ணா!.

அன்புடன்
ஓவியன்

மாதவர்
04-08-2007, 04:51 PM
வாழ்த்துக்கள் அண்ணா ஒவியரே!!

ஓவியன்
04-08-2007, 04:54 PM
நன்றி மாதவரே!

என்ன அண்ணாவென்றெல்லாம் மரியாதை கூடுது − நான் ரொம்ம சின்னப் பையனுங்கோ...............! :sport-smiley-013:

ஓவியா
05-08-2007, 06:42 AM
ஒவியனுக்கு அக்காவின் வாழ்த்துக்கள்..

என்றோ ஒருநாள் இம்மன்றத்தை சிறப்பாக வழி நடத்த இன்று (இப்பொழுது) முதல் படியில் கால் ஊண்றுகிறாய். வெற்றிக்காண வேண்டும். வாழ்துக்களுடன் பாராட்டுக்களும்.