PDA

View Full Version : சாதனை வீரர்!



அரசன்
16-07-2007, 05:15 PM
http://i158.photobucket.com/albums/t117/murthykmd/murali.jpg

இலங்கையின் சாதனை வீரர் முத்தையா முரளிதரன் பங்களதேச டெஸ்ட் தொடரில் 700வது விக்கெட்டை கைப்பற்றி, 700 விக்கெட்களை எடுத்தவர்களில் 2வது வீரர் முத்தையா. முதல் வீரர் ஆஸ்திரேலியாவின் வார்ன்.

இந்த சாதனையைத் தொடர்ந்து பல சாதனைகளை படைக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷே முத்தையாவுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிக்கிறார்.

அமரன்
16-07-2007, 05:19 PM
இவ்வருட இறுதியில் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போடியில் அதிக இலக்குகளை எடுத்தவர் என்ற பெருமையை எட்டிப்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது..மிகவும் மென்மையான மனிதர் இவர்.இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்.

பாரதி
16-07-2007, 06:54 PM
குறையை நிறையாக்கியவர்..!

ஒற்றை ஆளாய் நின்று
நெற்றிப்புருவம் உயருமளவு சாதனை படைத்தவர்..படைப்பவர்..படைக்கப்போகிறவர்.

மனமார்ந்த பாராட்டுக்கள் முரளி.

ஓவியன்
16-07-2007, 06:58 PM
முரளி!

இலங்கையின் கிறிக்கற் சகாப்தம்...........

ஒதுக்க ஒதுக்க வீறுகொண்டெழுந்த வீரர்!.........

அவர் வாழ்வில எல்லாமே வெற்றியாகட்டும்.

அன்புரசிகன்
16-07-2007, 07:01 PM
அவர் கையில் பந்து விளையாடும் அழகே தனி. இம்முறை வோர்ன் இன் சாதனையை அவுஸ்திரேலியாவிலேயே முறியடிக்கவேண்டும். இறைவனை பிரார்த்திப்போம். அருக்கு பல தேவையற்ற குற்றச்சாட்டுக்களை போட்டு முட்டுக்கட்டைகளை போட்ட ஒரு நாடு என்ற பெருமையும் அவுஸ்திரேலியாவிற்கு உண்டு.