PDA

View Full Version : மருத்துவ டிப்ஸ்!அரசன்
16-07-2007, 02:00 PM
தர்பூசணி பழச்சாறு சாப்பிட உடல் வெப்பம் குறையும்.

சிறுநீரக சம்பந்தமான நோய்களுக்கு நெல்லிக்காய் அதிகமாக பயன்படுத்த வேண்டும்.

வெங்காயத்தைப் பச்சையாக மென்றுதின்ன நீர் எரிச்சல், நீர்க்கடுப்பு தீரும்.

பனை ஓலையை சுட்டு கரியாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டால் விக்கலும், வாந்தியும் நிற்கும்.

நன்றி: முத்தாரம்

அரசன்
16-07-2007, 02:14 PM
தினசரி உணவில் மிளகையும், பூண்டையும் சேர்த்துக் கொண்டால் இரத்தக்குழாய்களில் இரத்தம் உறைவதும், கட்டியாகி அடைத்துக் கொள்வதும் தடுக்கப்படுவதால் மாரடைப்பு ஏற்படாதாம்.

இனியவள்
16-07-2007, 02:15 PM
பனை ஓலையை சுட்டு கரியாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டால் விக்கலும், வாந்தியும் நிற்கும்.

நன்றி: முத்தாரம்

நல்ல தகவல்கள் மூர்த்தி

பனை மரம் அதிகமுள்ள இடம் என்றால் இங்கை வட கிழக்கு தான் யுத்தம் காரணமா அழிந்து கொண்டே போகுது வருங்கால சந்ததியினருக்கு படத்தில தான் காட்ட வேண்டி வரும் போல இருக்கு

aren
16-07-2007, 02:16 PM
நல்ல செய்தி மூர்த்தி. தினமும் பலர் மிளகையும் பூண்டையும் உணவில் சேர்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்களுக்கு தெரியாமலேயே. அப்படியென்றால் அவர்களுக்கு மாரடைப்பு வராது என்கிறீர்களா?

அரசன்
16-07-2007, 02:18 PM
நல்ல செய்தி மூர்த்தி. தினமும் பலர் மிளகையும் பூண்டையும் உணவில் சேர்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்களுக்கு தெரியாமலேயே. அப்படியென்றால் அவர்களுக்கு மாரடைப்பு வராது என்கிறீர்களா?

சிலர் அதிலுள்ள பூண்டையும், மிளகையும் ஒதுக்குவதை பார்த்திருப்போமே.

namsec
16-07-2007, 02:26 PM
மேலும் மேலும் டிப்ஸ் கொடுத்து அனைவரையும் அசத்துங்கள்

அரசன்
16-07-2007, 02:29 PM
முகத்துக்கு பூசும் டால்கம் பவுடரில் மெக்னீசியம் சிலிகேட் இருப்பதால் அதிக அளவில் பவுடர் பூசுகின்றவர்களுக்கு நுரையீரல் நோய் மற்றும் தோல் நோய்கள் ஏற்படுகின்றனவாம்.

இனியவள்
16-07-2007, 02:35 PM
முகத்துக்கு பூசும் டால்கம் பவுடரில் மெக்னீசியம் சிலிகேட் இருப்பதால் அதிக அளவில் பவுடர் பூசுகின்றவர்களுக்கு நுரையீரல் நோய் மற்றும் தோல் நோய்கள் ஏற்படுகின்றனவாம்.

நல்ல தகவல் மூர்த்தி பவுடரை செண்ட் மாதிரி முகத்துக்கு பூசுபவர்களே
உஷாராகிக்கோங்க...:angel-smiley-026:

நல்ல காலம் இதுக்கு தான் நான் பவுடரே பூசிரேலை தப்பிச்சுட்டன் :whistling:

அரசன்
16-07-2007, 02:45 PM
நெற்றி பொட்டில் கற்பூரவல்லி அல்லது வெற்றிலை இரண்டில் ஒன்றை இரு பக்கமும் கசக்கி ஒட்டி விட்டால் தலைவலி நீங்கும்.

உப்பையும், மிளகையும் வைத்து அரைத்து எடுத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும்.

சூடான தண்ணீரில் எலுமிச்சைப் பழத்தை பிழிந்து சிறிது உப்புப் போட்டு பருகினால் தலைவலி நீங்கிவிடும்.

குறிப்பு
இவற்றால் சரிபடவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

அரசன்
16-07-2007, 03:01 PM
அதிகாலையில் இருமல் இருந்தால் கொஞ்சம் கடுகை எடுத்து நன்றாக அரைத்து ஒரு சிட்டிகை தூளில் தேன் விட்டு கலந்து சாப்பிட்டால் தீரும்.

சீரகத்தை நாட்டுச் சர்க்கரையுடன் தினமும் தவறாமல் சாப்பிட்டு வர உதட்டுப்புண், உதடு வீக்கம் நீங்கும்.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் உலர்ந்த அத்திப்பழம் தேனில் பதம் செய்யப்பட்டவை. இதை உண்டு வந்தால், வெப்பத்தினால் ஏற்படும் வறட்டு இருமலை உடனே நிறுத்தும்.

அமரன்
16-07-2007, 03:36 PM
மருத்துவக் குறிப்புகளுக்கு நன்றி மூர்த்தி..

devendira
17-07-2007, 12:56 PM
நாவல் பழ கொட்டையை காய வைத்து பொடித்து சலித்து வைத்துக்கொண்டு தினமும் காலை வெறுவயிறில் நீரில் கலந்து குடியுங்கள்.பிறகு சர்க்கரை வியாதி சல்யூட் அடித்து ஓடிவிடும்.

அரசன்
17-07-2007, 01:11 PM
நாவல் பழ கொட்டையை காய வைத்து பொடித்து சலித்து வைத்துக்கொண்டு தினமும் காலை வெறுவயிறில் நீரில் கலந்து குடியுங்கள்.பிறகு சர்க்கரை வியாதி சல்யூட் அடித்து ஓடிவிடும்.

சர்க்கரை நோய் அன்பர்களே கவனியுங்கள் உங்களுக்குதான் இது.