PDA

View Full Version : நான் நீ நிலா.



அமரன்
16-07-2007, 01:28 PM
அன்பே.....!

நிலவென்று விளித்து
காண விளைந்தால்
ஓடி ஒளியாதே...!

அனலும் சூரியனல்ல
சுழலும் பூமி நான்..!

அரசன்
16-07-2007, 01:31 PM
அன்பே.....!

நிலவென்று விளித்து
காண விளைந்தால்
ஓடி ஒளியாதே...!

அனலும் சூரியனல்ல
சுழலும் பூமி நான்..!
சுற்றி வா என்னை...!

உன்னை சுற்றுவது
பூமி மட்டுமல்ல!
நானும்தான்.

அமரன்
16-07-2007, 01:33 PM
உன்னை சுற்றுவது
பூமி மட்டுமல்ல!
நானும்தான்.

நிலாவைச் சுற்றிவந்தது
பூமி.
காதல்

சிவா.ஜி
16-07-2007, 01:33 PM
நீங்கள் அந்த நிலவை சுற்றி சுற்றி வந்து ஒருமாதிரியாய் எல்லாம் கூடிவரும் வேளையில் அந்த நிலவை உங்களைச் சுற்றி வரச் சொல்கிறீர்களா அமரன்.
பார்த்து நிலவு சூரியனாகிவிட்டால் உங்களுக்குத் திண்டாட்டம்தான். சிறிய அழகிய கவிதை. பாராட்டுக்கள் அமரன்.

அமரன்
16-07-2007, 01:36 PM
நீங்கள் அந்த நிலவை சுற்றி சுற்றி வந்து ஒருமாதிரியாய் எல்லாம் கூடிவரும் வேளையில் அந்த நிலவை உங்களைச் சுற்றி வரச் சொல்கிறீர்களா அமரன்.
பார்த்து நிலவு சூரியனாகிவிட்டால் உங்களுக்குத் திண்டாட்டம்தான். சிறிய அழகிய கவிதை. பாராட்டுக்கள் அமரன்.

ஹி...ஹி....அதுதான் "துணை" நிலாவாகி விட்டதே....என்னை சுற்றி வரவேண்டுமல்லவா....!

இனியவள்
16-07-2007, 01:37 PM
சூரியனாய் சுட்டெரிக்கும் உன்
விழி என் விழி நோக்கையில்
சந்திரனாய் குளிர்கின்றது...


அமர் :icon_08: இந்தாருங்க குளிர்ச்சியான ஒரு கவிதைக்கு பூ காதிலையும் வைச்சுக்கலாம் கையிலையும் வைச்சுக்கலாம் உங்க இஷ்டமுங்கோ :spudnikbackflip:

அமரன்
16-07-2007, 03:12 PM
அமர் :icon_08: இந்தாருங்க குளிர்ச்சியான ஒரு கவிதைக்கு பூ காதிலையும் வைச்சுக்கலாம் கையிலையும் வைச்சுக்கலாம் உங்க இஷ்டமுங்கோ :spudnikbackflip:

சுத்திச் சுத்தி வருகிறாயே
கனிந்ததா காதல்..
கேட்கிறன் நண்பன்.
எனக்குத்த் தேவை
பூ என்பது தெரியாமல்..

இனியவள்
16-07-2007, 03:14 PM
சுத்திச் சுத்தி வருகிறாயே
கனிந்ததா காதல்..
கேட்கிறன் நண்பன்.
எனக்குத்த் தேவை
பூ என்பது தெரியாமல்..

பூவில் இருந்து
உதிப்பது தானே கனி
அன்பு என்னும் பூவில்
இருந்து கனி என்னும் காதல்
உதித்ததா தோழா :sport-smiley-013:

அமரன்
16-07-2007, 03:23 PM
கனி என்பதாலா
சுவைத்து விட்டுப்
பறக்கின்றன

பூவென்றால்..
கனியும் வரை
காத்திருக்குமோ..
பறவைகள்..

இனியவள்
16-07-2007, 03:50 PM
கனி என்பதாலா
சுவைத்து விட்டுப்
பறக்கின்றன
பூவென்றால்..
கனியும் வரை
காத்திருக்குமோ..
பறவைகள்..

கனியும் வரை
காத்திருப்பது தானே
காதல்.. :icon_good:

அமரன்
16-07-2007, 04:01 PM
கனியும் வரை
காத்திருப்பது தானே
காதல் கனிந்த.. :icon_good:
ஏனுங்க என்னங்க சொல்றீங்க...
காதலே அரைகுறையில் முடியும் எங்கிறீங்களோ...

இனியவள்
16-07-2007, 04:05 PM
ஏனுங்க என்னங்க சொல்றீங்க...
காதலே அரைகுறையில் முடியும் எங்கிறீங்களோ...

அமரு என்ன இப்படி கேட்டுப் போட்டீங்கள்

அரை குறையில் முடியும் காதலும் உண்டு
உயிர்களை மாய்த்துக்கொள்ளும் காதலும் உண்டு
கடைசி வரை ஒன்றாய் இருந்து மரணிக்கும் வரை
மரணிக்காத காதலும் உண்டுங்கோ இதை நான்
சொல்லேலை எல்லாரும் சொன்னங்களே அதை
இங்கே போட்டுடமில்லோ :sport-smiley-013:

அமரன்
16-07-2007, 04:08 PM
காதலில் வீழ்ந்தவன் "போடு"வது நிச்சம்முன்னு சொல்றீங்களோ.:fragend005: :fragend005:

இனியவள்
16-07-2007, 04:12 PM
காதலில் வீழ்ந்தவன் "போடு"வது நிச்சம்முன்னு சொல்றீங்களோ.:fragend005: :fragend005:

அடடா அமர் எப்ப இருந்து இப்படி சொல்லவேய் இல்லை
சுத்தமா ஒன்றுமே விளங்கேலை :frown:

அமரன்
16-07-2007, 04:17 PM
அமரு என்ன இப்படி கேட்டுப் போட்டீங்கள்

அரை குறையில் முடியும் காதலும் உண்டு
உயிர்களை மாய்த்துக்கொள்ளும் காதலும் உண்டு
கடைசி வரை ஒன்றாய் இருந்து மரணிக்கும் வரை
மரணிக்காத காதலும் உண்டுங்கோ இதை நான்
சொல்லேலை எல்லாரும் சொன்னங்களே அதை
இங்கே "போட்டு"டமில்லோ :sport-smiley-013:

காதல் உங்களுக்கு "தண்ணி"பட்டபாடு...

ஷீ-நிசி
16-07-2007, 05:05 PM
அன்பே.....!

நிலவென்று விளித்து
காண விளைந்தால்
ஓடி ஒளியாதே...!

அனலும் சூரியனல்ல
சுழலும் பூமி நான்..!

பூமியே......
உனக்கேன் அவ்வளவு கோபம் ?!
8 அடியாட்களோடு
சுற்றி சுற்றி வருகிறாயே
சூரியனை...........

இனியவள்
16-07-2007, 05:07 PM
பூமியே......
உனக்கேன் அவ்வளவு கோபம் ?!
8 அடியாட்களோடு
சுற்றி சுற்றி வருகிறாயே
சூரியனை...........

சூரியனும் மனிதர்கள்
போல் ஏமாற்றி சென்று
விடுவார்கள் என்று
பூமி பயந்திட்டு போல*

அமரன்
16-07-2007, 06:52 PM
அடடே ஷீ. அருமை...
என்"கவுண்டர்" ஸ்பெசலிஸ்ட் இல்லையோ...
நாளுக்கு நாள் அடியாட்கள் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றதே...!

ஓவியன்
19-07-2007, 09:25 PM
அங்கு நிலவு சுற்றுகிறது
பூமியை − இங்கேயோ
நிலவைச் சுற்றி
மோட்சம் பெற
ஆயிரக்கணக்கானோர்
வரிசையில்...........