PDA

View Full Version : தத்தளிக்கும் ஓடம்



இனியவள்
16-07-2007, 12:56 PM
முட்களாய் நீ என்னைக் குத்த
மலராய் உன் நினைவுகள்
என்னை வருடிச் செல்கின்றன....

நீ தந்த அழகிய உயிரற்ற
பரிசுப்பொருட்கள் அனைத்தும்
உயிர்பெற்றென்னை தள்ளுகின்றன
சோகக்கடலிலே.....

காதல் என்னும் வானத்தில்
நிலவாய் ஜொலிக்கும் உன்னை
மீண்டுமடைய காற்றை நூலாக்கி
விரைகின்றேன் உன் கரம் பிடிக்க
மின்னலாய் வந்து அறுத்தெறிந்து
செல்கின்றாய் என்னை....

மேகமாய் இருக்கும் என்
சோகத்தை காற்றாய் மாறி
கலைப்பாயென நானிருக்க
இயற்கையில் இருக்கும் பசுமை
போல் நிலைக்கச் செய்து விட்டாயே
சோகத்தை என்னுள்....

உன் பிரிவை மறக்க கவிதை
என்னும் விதையை என்னுள்
விதைத்தேன்.மரமாய் வளர்ந்தது
கவிதை மட்டுமல்ல உன்னால்
ஏற்பட்ட ரணங்களும் தான்...

நினைவை மறக்க நிழலை
என்னுள் திணித்தேன் − நிழலே
உன் உருவமாய் நிழலாட
என் உயிர் ஓடமாய் தத்தளிக்கின்றது
நடுக்கடலிலே....

அரசன்
16-07-2007, 01:01 PM
உன் பிரிவை மறக்க கவிதை
என்னும் விதையை என்னுள்
விதைத்தேன்.மரமாய் வளர்ந்தது
கவிதை மட்டுமல்ல உன்னால்
ஏற்பட்ட ரணங்களும் தான்...




கவிதை ஒரு இனிமையான, அமைதியான உலகம். அதில் ரசனைகள் தோன்றும் ரணங்கள் போதி மரங்களாகும்போது,

அரும்மையான கவிதை! வாழ்த்துக்கள் இனி.

அமரன்
16-07-2007, 01:21 PM
உயிரற்றவை எல்லாம்
உணர்வுகளை தூண்ட
உணர்வை திருடிச்சென்றான்.
உயிரானவன்..

திருடியது உணர்வானாலும்
உதித்தது கவிதை
தைக்கும் ரணங்களாய்...

பாராட்டுக்கள் இனியவள்...

இனியவள்
16-07-2007, 02:37 PM
கவிதை ஒரு இனிமையான, அமைதியான உலகம். அதில் ரசனைகள் தோன்றும் ரணங்கள் போதி மரங்களாகும்போது,
அரும்மையான கவிதை! வாழ்த்துக்கள் இனி.

நன்றி மூர்த்தி

அமைதியான உலகத்தில்
பறவை போல் சஞ்சரித்து
சிறக்கடித்துப் பறக்கின்றோம்
கவலைகளை மறந்து :whistling:

இனியவள்
16-07-2007, 02:39 PM
உயிரற்றவை எல்லாம்
உணர்வுகளை தூண்ட
உணர்வை திருடிச்சென்றான்.
உயிரானவன்..
திருடியது உணர்வானாலும்
உதித்தது கவிதை
தைக்கும் ரணங்களாய்...
பாராட்டுக்கள் இனியவள்...

நன்றி அமர்......

உதித்த உணர்வுகளை
கவிதையாக வடிவமைத்து
தைக்கும் ரணங்களை
புன்னகை என்னும்
மருந்து கொண்டு பூசி
மறைக்கின்றோம்....