PDA

View Full Version : முஷ்ரபுடன் ஒரு கற்பனை பேட்டி



leomohan
16-07-2007, 10:57 AM
லியோ - வணக்கம்

முஷ்ரப் - துப்பாக்கியை எடுத்து மேலே சுடுகிறார் ஒரு முறை. வணக்கம்.

லியோ - Line of Control (LoC) என்பதை Line of Peace (LoP) என்று மாற்ற வேண்டும் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறாரே.

முஷ்ரப் - அவர் சொல்வது சரிதான். அது Line of Pieces தான்.

லியோ - இல்லை லைன் ஆஃப் பீஸ், அமைதி என்று சொல்லியிருந்தார்

முஷ்ரப் - அப்படியா. அவர் இத்தாலியில் கடிதம் எழுதியிருந்ததால் எனக்கு புரியவில்லை.

லியோ - என்ன இத்தாலி மொழியில் எழுதியிருந்தாரா

முஷ்ரப் - ஆமா. அவர் கொடுக்கற அறிக்கை எல்லாம் அந்த அம்மா சோனியா காந்தி எழுதனுதுன்னு எங்களுக்கு மட்டும் தெரியாதா.

லியோ - சரி அதைவிடுங்க. சமீபத்தில் நடந்த தீவிரவாத பிரச்சனையை அழகாக சமாளித்துவிட்டீர்களே

முஷரப் - ஆமாம். யார்கிட்டேயும் சொல்லாத லியோ. அமெரிக்கா ரொம்ப சந்தோஷப்பட்டு 20 கோடி ரூபாய் என் ஸ்விஸ் வங்கிக்கு போட்டுட்டாங்க.

லியோ - ஓ அப்படி போவுதா. என்ன டார்கெட்.

முஷரப் - எப்படியாவது 1000 கோடி பண்ணிடனும். சொல்லிவிட்டு உதட்டை கடித்துக் கொள்கிறார். சே உன் கிட்டே போய் சொல்லிட்டேனே.

லியோ - ஐயோ. எப்பவும் அந்த நினைவிலே இருக்கீங்க. நான் கேட்டது தேர்தல் நடத்த எப்ப டார்கெட் வச்சிருக்கீங்க.

முஷரப் - தேர்தல்ன்னா

லியோ - அதாங்க மக்கள் ஓட்டு போட்டு அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கறதுங்க. உங்க மக்களுக்கு ஓட்டு போடறதே மறந்திருக்குமே.

முஷரப் - நான் உயிரோட இருக்கற வரையில் நான் தான் நிரந்த அதிபர்

லியோ - அப்ப நான் ஏற்பாடு பண்றேன்.

முஷரப் - என்ன? என்னை கொல்றதுக்கா

லியோ - அட நீங்க வேற. இந்த பேட்ட பத்திரிக்கையில் வெளியாகறதுக்கு தான். நன்றி.

அக்னி
16-07-2007, 11:00 AM
உலகப் பிரபலங்களிடம் மூக்கை நுளைக்கும்... ச்சே... பேட்டி எடுக்கும் லியோ மாட்டினால்...
பாதுகாப்புடன் பேட்டி எடுக்கச் செல்லுங்கள் லியோமோகன்...
பாராட்டுக்கள்...
தொடரட்டும் உங்கள் பேட்டிகள்..

leomohan
16-07-2007, 11:01 AM
நன்றி அக்னி.

அரசன்
16-07-2007, 11:04 AM
பேட்டிகள் நகைச்சுவையாக இருக்கிறது. தொடரட்டும் பார்த்துக் கொள்கிறேன்.

அன்புரசிகன்
16-07-2007, 11:04 AM
நன்றாக உள்ளது. ஒரு முறை அக்னியையும் பேட்டி எடுத்துவிடுங்கள் மோகன்.

leomohan
16-07-2007, 11:07 AM
நன்றி மூர்த்தி, நன்றி அன்புரசிகன்.

அக்னியையா - முயற்சி பண்ணி பார்த்துட வேண்டியது தான்.

அக்னி
16-07-2007, 11:09 AM
ஐயோ... அக்னியை அணைத்து விடாதீர்கள்....
கொஞ்சமா எரியுது... பார்த்து பெருந்தகைகளே....

leomohan
16-07-2007, 11:10 AM
ஐயோ... அக்னியை அணைத்து விடாதீர்கள்....
கொஞ்சமா எரியுது... பார்த்து பெருந்தகைகளே....

ஹி ஹி. பேட்டியின் மூலம் ஏற்றிவிடுவது தான் நம் வழக்கம். நீங்கள் பிரபலமாகிவிடுவீர்கள். :violent-smiley-034:

lolluvathiyar
16-07-2007, 11:10 AM
பேட்டியை இன்னும் சற்று பெரியதாக எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்.
வித்தியசமான கற்பனை, பாராட்டுகள்

அமரன்
16-07-2007, 12:07 PM
ஹி.....ஹி......முசாரஃப் பேட்டி சூப்பர்..அடுத்து அக்னியா...பலே..பலே...

அக்னி
16-07-2007, 12:11 PM
:violent-smiley-034:
ஹி.....ஹி......முசாரஃப் பேட்டி சூப்பர்..அடுத்து அக்னியா...பலே..பலே...
:violent-smiley-034: :violent-smiley-034: :violent-smiley-034: :violent-smiley-034: :violent-smiley-034: :violent-smiley-034: :violent-smiley-034: :violent-smiley-034: :violent-smiley-034:

விகடன்
31-07-2007, 04:32 AM
ஏன் லியோமோகன்.
முஷ்ரப்பிற்கு தமிழ் வாசிக்கத்தெரியாது போல...

இவ்வளவு வெளிப்படையா சொல்லியிருக்கிறீங்க பல விஷயத்தை!!!

leomohan
31-07-2007, 10:29 AM
தமிழ் வாசிக்க தெரிஞ்சவங்களை மட்டும் எங்கு விட்டு வைத்தது நம் பத்திரிக்கை சுதந்திரம் :-)

அனைவருக்கும் நன்றி

அன்புரசிகன்
31-07-2007, 10:41 AM
அப்போ ஏன் இன்னும் தாமதம்? ஏன் அக்னியை பேட்டி காணவில்லை? அவருக்கு தமிழ் பேச தெரியாது எங்கிறீங்களா? :D

leomohan
31-07-2007, 10:45 AM
அப்போ ஏன் இன்னும் தாமதம்? ஏன் அக்னியை பேட்டி காணவில்லை? அவருக்கு தமிழ் பேச தெரியாது எங்கிறீங்களா? :D

ஹி ஹீ. நல்ல தெரிஞ்சவங்களை தான் ஓட்ட முடியும்

அன்புரசிகன்
31-07-2007, 10:48 AM
ஹி ஹீ. நல்ல தெரிஞ்சவங்களை தான் ஓட்ட முடியும்

அப்போ அக்னி என்ன கறுப்பா? இருட்டுல உருவமே தெரியலயா?

யாரப்பாத்து இந்தக்கேள்வி.... நம்ம சுப்பர் ஸ்டாருகூடத்தான் கறுப்பு.... அதுக்காக.................

(ஏதோ நம்மளால முடிஞ்சது)

விகடன்
31-07-2007, 10:49 AM
ஹி ஹீ. நல்ல தெரிஞ்சவங்களை தான் ஓட்ட முடியும்

அப்படியென்றால் அடுத்த குறி அன்புரசிகன்.
வாழ்த்துக்கள் லியோ