PDA

View Full Version : நிலவென்ன டயட்டில் இருக்கிறதோ!ஷீ-நிசி
16-07-2007, 10:05 AM
நிலவென்ன டயட்டில் இருக்கிறதோ!

"தேய்பிறை"

அக்னி
16-07-2007, 10:07 AM
நிலவென்னை டயட்டில் வைக்கிறதோ...
காதலி...

அருமை ஷீ−நிசி...
தொடர்ந்தும் எதிர்பார்ப்புக்களை தருகிறது, இருவரிகள் கூட....

அமரன்
16-07-2007, 10:08 AM
ஷீ கலக்கல்.

பூரிப்பில் இருகிறதோ நிலவு
வளர் பிறை.

ஷீ-நிசி
16-07-2007, 10:12 AM
அவள் அழுதாள்.....
நான் சிரித்தேன்.......

நான் அழுவது உங்களுக்கு
சிரிப்பாக இருக்கிறதா என்றாள்?

வானம் அழுதால் யார்தான்,
சிரிக்காமல் இருப்பார்களடி பெண்ணே!

gayathri.jagannathan
16-07-2007, 10:12 AM
நிலவென்ன டயட்டில் இருக்கிறதோ!

"தேய்பிறை"
இது அசத்தல்.. நச்சுனு ரெண்டே வரியில அசத்திட்டீங்க ஷீ...


நிலவென்னை டயட்டில் வைக்கிறதோ...
காதலி...


யப்பா படிக்கும்போதே கண்ணு முழி பிதுங்குது.....
இது டாப் டக்கர்...அக்னிக்கு உடம்பெல்லாம் கிட்னி.... சாரி மூளை... :natur008: :natur008: :p

அக்னி
16-07-2007, 10:20 AM
அவள் அழுதாள்.....
நான் சிரித்தேன்.......

நான் அழுவது உங்களுக்கு
சிரிப்பாக இருக்கிறதா என்றாள்?

வானம் அழுதால் யார்தான்,
சிரிக்காமல் இருப்பார்களடி பெண்ணே!

அழுத வானம் உனது கண்ணீரின் ஈரத்தை,
என்னிடம் மறைத்துவிட்டதே...
நீ அழுவதை இனங்காண கண்ணீரே அடையாளம்...
அன்றேல்,
என்றும் உனது முகம் எனக்கு மலர்ந்த செந்தாமரையே...
தவறு என்மீதல்ல...
வானமழுத போதழுத உன்மீது...

அக்னி
16-07-2007, 10:20 AM
யப்பா படிக்கும்போதே கண்ணு முழி பிதுங்குது.....
இது டாப் டக்கர்...அக்னிக்கு உடம்பெல்லாம் கிட்னி.... சாரி மூளை... :natur008: :natur008: :p

சாரி யால் வந்த மூளை... :spudnikbackflip:

gayathri.jagannathan
16-07-2007, 10:24 AM
சாரி யால் வந்த மூளை... :spudnikbackflip:

சாரி (saree/புடவை)வாழ்க்கையில வந்துடுச்சுன்னாக்கா இந்த மூளை தான் இருக்கறோம்ங்கற விஷயத்தையே மறந்துடும்... வாழ்க்கையோட ஃபுல் கண்ட்ரோல் ஹார்ட் கிட்ட மாறிடும்...இல்லையா?

அக்னி
16-07-2007, 10:30 AM
சாரி வாழ்க்கையில வந்துடுச்சுன்னாக்கா இந்த மூளை தான் இருக்கறோம்ங்கற விஷயத்தையே மறந்துடும்... வாழ்க்கையோட ஃபுல் கண்ட்ரோல் ஹார்ட் கிட்ட மாறிடும்...இல்லையா?

வாழ்க்கையோட ஃபுல் கண்ட்ரோல் ஹார்ட் கிட்ட
மாறுதோ இல்லையோ,
ஹார்ட் டோட ஃபுல் கண்ட்ரோல்
வருங்கால வாழ்க்கைகிட்ட முழுசா தாவிடுது...
:icon_dance:

ஷீ-நிசி
16-07-2007, 10:31 AM
அமரன் அக்னி காயத்ரி நன்றிகள்....

gayathri.jagannathan
16-07-2007, 10:32 AM
அதைத் தாம்பா இப்படி வளைச்சு வளைச்சு சொன்னேன்... ஹி..ஹி...
இருக்கற மூளையும் செயலிழந்து போயிடுது.. ஹார்ட்டும் அடுத்தவங்க(வருங்கால வாழ்க்கை) கிட்ட போயிடுது.... மனுஷன் என்ன தான் பண்ணுவான் பாவம்?!!!

மதி
16-07-2007, 01:40 PM
ஷீ−நிசி..
அருமையான வரிகள்..!

ஷீ-நிசி
16-07-2007, 04:49 PM
ஷீ−நிசி..
அருமையான வரிகள்..!

நன்றி மதி....

இனியவள்
16-07-2007, 04:55 PM
ஷீ ஒரு வரிக்கவிதை என்றாலும் பல வரிகளை சொல்லிவிட்டுப் போய் விட்டது அருமை வாழ்த்துக்கள் ஷீ


அது சரி யாரப்பா அது நிலவை பட்டினி போட்டது டயட் என்ற பெயரில்

ஷீ-நிசி
16-07-2007, 05:00 PM
ஷீ ஒரு வரிக்கவிதை என்றாலும் பல வரிகளை சொல்லிவிட்டுப் போய் விட்டது அருமை வாழ்த்துக்கள் ஷீ


அது சரி யாரப்பா அது நிலவை பட்டினி போட்டது டயட் என்ற பெயரில்

டயட் என்றால் தானே பட்டினியிட்டுக்கொள்வது.... யாரும் பட்டினியும் போடல... சோறும் போடல...... :icon_03:

ஆதவா
17-07-2007, 03:31 AM
இருவரிகளில் கவிதை.... படிப்பதற்கு எளிதாகவும் சுவையாகவும்......

காதல் கவிதைகளில் உங்கள் பாணீ தனி ஷீ-நிசி அவர்களே! இம்மாதிரி ஒற்றைவரிக் கவிதைகளை நான் கண்டதில்லை.

கவிதைத் தலைப்பை வேறேதாவது வைத்திருக்கலாம். கவிதையில் முக்கால் சதம் தலைப்பில் இருப்பதாகத் தெரிகிறது.

அதெல்லாம் சரிதான். வளர்பிறைக்கு என்ன சொல்வீர்கள்???

-----------------------------------------

அவள் அழுதாள்.....
நான் சிரித்தேன்.......

நான் அழுவது உங்களுக்கு
சிரிப்பாக இருக்கிறதா என்றாள்?

வானம் அழுதால் யார்தான்,
சிரிக்காமல் இருப்பார்களடி பெண்ணே!-
இது மிக அருமை.. சிலர் யதார்த்தமாகக்கூட இந்த மாதிரி கவிதைகளை துளிர்ப்பதுண்டு..

ஓவியன்
17-07-2007, 03:44 AM
நிலவென்ன டயட்டில் இருக்கிறதோ!

"தேய்பிறை"

நிலவென்ன டயட்டில் இல்லையோ? − வளர்பிறை!.
சில வரிகளில் அழகாக ஒரு குறுங்கவிதை - பாராட்டுக்கள் ஷீ!.

aren
17-07-2007, 03:56 AM
நச்சென்ற வரிகள் ஷீ−நிசி. அதற்கு வந்த பின்னூட்டங்களும் அருமை.

நிறைய தெரிந்துகொள்கிறேன் மற்றவர்களின் படைப்புகளிலிருந்து. தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஷீ-நிசி
17-07-2007, 04:07 AM
நன்றி ஆதவா.. பொதுவாக நான் குறுங்கவிகளில் அவ்வளவாய் கவனம் கொள்வதில்லை.... நான் சாட் செய்யும்போது வந்து விழுந்தன இந்த இரண்டு கவிகளும்.. அதனால் அப்படியே இங்கே இட்டேன்.. நீங்க சொல்வது சரிதான்..


சிலர் யதார்த்தமாகக்கூட இந்த மாதிரி கவிதைகளை துளிர்ப்பதுண்டு..


நன்றி ஓவியன். வளர்பிறை கவிதை அப்படியே மாத்தியாச்சா.. ஹா ஹா..


நன்றி ஆரென் அவர்களே!

ஓவியன்
17-07-2007, 04:26 AM
நன்றி ஓவியன். வளர்பிறை கவிதை அப்படியே மாத்தியாச்சா.. ஹா ஹா!

உண்மைதான் ஷீ! - ஒன்றிரண்டு வார்த்தைகளை மார்றினால் தமிழில் எப்படியெல்லாம் அர்த்தம் மாறிவிடுகிறது, செல்வன் அண்ணா கற்றுத் தந்த பாடமிது!.