PDA

View Full Version : துளிகள்



சுகந்தப்ரீதன்
16-07-2007, 09:13 AM
இமையெனும் முள்பட்டு
கண்ணெனும் ரோஜா
கலங்கியதோ?
என்னவள் கன்னத்தில்
பன்னீர் துளிகளாய்
சில கண்ணீர் துளிகள்!

அமரன்
16-07-2007, 09:16 AM
அட...அழுகைக்கு அழகான கவிதையா...பாராட்டுகள் சுகந்தா..
பன்னீர்−கண்ணீர் கலக்கல். இமை முள், ரோஜா கண் சிறப்பு.
வாழ்த்துக்கள் சுகந்தப்ரீதன்.

அன்புரசிகன்
16-07-2007, 09:18 AM
மிகவும் மென்மையாக இருக்கிறது உங்கள் கவி. வாழ்த்துக்கள்.

இனியவள்
16-07-2007, 09:22 AM
சுகந் :icon_08:

கண்ணீர் பன்னீர் அருமை

சிவா.ஜி
16-07-2007, 09:38 AM
கண்னெனும் ரோஜா கலங்கியதைக் காணமுடியாமல் இந்த ராஜா வடித்தக் கவிதையோ....நல்ல கவிதை பாராட்டுக்கள் சுகந்தப்ரீதன்.

ஷீ-நிசி
16-07-2007, 10:01 AM
மிக அழகிய கற்பனை.. இமைகள் என்னும் முட்கள்..... அவை மூடும்பொழுது உன் இமைகளை குத்தியதோ! அழுகிறாயடி பெண்ணே!

நீ அழுவதால் அவைகள் பன்னீர் துளிகளடி என் கண்மணியே.....

வாழ்த்துக்கள் சுகந்தரே!

அக்னி
16-07-2007, 10:16 AM
விழியே...
எனது முட்கள் வெளிப்புறமே...
அது உன்னைக் குத்தவரும்,
விம்பங்களைத் தடுக்கும் கூராயுதம்...
மேலும், கீழுமாய், மென்மையாய்,
இருவரிகளில் அணிவகுத்த போர்வீரர்கள்... நாம்.
எமது இணைவில்,
பாதுகாப்புக் கவசமிட்டு உன்னைப் பாதுகாக்கும்,
இமைவீரர்கள் நாம்...
முற்றுகையிடப்பட்ட நிலை என
புரியாமல் கலங்கி,
நாசியோரமாய்,
கன்னம் நோக்கி உதவிகேட்டு,
இனியும் தூதனுப்பாதே,
கண்ணீரை...

கலக்கல் கவிதை சுகந்தப்பிரீதன்...

gayathri.jagannathan
16-07-2007, 10:18 AM
கவிதை ப்ரமாதம் சுகந்தப்ரீதன்...

யப்பா இந்த காதல் தான் மனுஷங்களைப் போட்டு என்ன பாடு படுத்துது?
"பில்லி, சூனியம், ஏவல், வெளவால், ஓவல், இது எல்லாத்தையும் விட மோசமானது இந்தக் காதல்"

ஐய்யையோ அடிக்க வர்றாய்ங்கப்பா....

சுகந்தப்ரீதன்
19-07-2007, 04:26 AM
மன்னிக்கவும்....
உங்களுக்கு உடனுக்குடன் என்னால் நன்றி சொல்லமுடியவில்லை!
வாழ்த்திய உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை எனக்கில்லை!

ஓவியன்
19-07-2007, 09:32 PM
சுகந்தா!
அழகாக தேர்ந்தெடுத்த வார்த்தைகளோடு அருமையாக அமைந்த கவிதை − பாராட்டுக்கள்!.

சுகந்தப்ரீதன்
23-07-2007, 12:41 PM
சுகந்தா!
அழகாக தேர்ந்தெடுத்த வார்த்தைகளோடு அருமையாக அமைந்த கவிதை − பாராட்டுக்கள்!.

நன்றி ஒவியரே! இருந்தும் உங்கள் அளவுக்கு என்னால் எழுதமுடியுமா என்ன?