PDA

View Full Version : எஞ்சின் டிரைவராக வீர்சிங்



mania
27-05-2003, 10:07 AM
(பிஜிகே அவர்களிடம் இருந்து வீர்சிங் பெயரை கொஞ்சம் கடன் வாங்கிகொள்கிறேன்)

ஒரு இஞ்சின் டிரைவராக வேலை பார்த்து வந்தார் நம்ம வீர்சிங். ஒரு நாள் சுமார் 600 பேர்களுடன்
சென்று கொண்டிருந்த டிரெயினை திடீரென்று தடம் விட்டு இறக்கி விட்டார். நல்ல வேளையாக
ஒருவருக்கும் பெரிய அடி இல்லாமல் தப்பித்தனர். மேல் அதிகாரிகள் உடனே வீர்சிங்கை சஸ்பெண்ட்
செய்து உடனடி விசாரணைக்கும் உத்தரவு இட்டனர்.
விசாரணையின் போது வீர்சிங் கூறினார்,'' நான் வேகமாக வண்டியை ஒட்டிக்கொண்டிருந்தபோது,
திடீரென்று ஒரு ஆசாமி தண்டவாளத்தில் ஒடிக்கொண்டிருந்தான்.எவ்வளவோ சைரன் கொடுத்தும்
அவன் தடத்தை விட்டு இரஙகவே இல்லை............ அதனால்.........''என்று இழுத்தார்.
அதிகாரிகளுக்கு வந்த கோபத்துக்கு அலவே இல்லை,''என்னையா பைத்தியம் மாதிரி பேசற, வண்டியில்
இருக்கிற 600 பேர் உசிரைப்பார்ப்பியா, இல்லை அந்த ஒரு ஆளுக்காக பார்ப்பியா? அப்பிடியே அவன் மேலே
ஏத்திட்டு போயிண்டே இருக்கவேண்டியது தானே/ அதை விட்டு இப்படியா வண்டியை கீழே இறக்குவது?''என்றனர்.
வீர்சிங்கோ மிகவும் பணிவாக,'' சார், நீங்கள் சொன்ன முடிவுக்கு நான் உடனே வந்துவிட்டேன்'' என்றார்.
ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.'' அப்புரம் வண்டி எப்பிடிய்யா லைனை விட்டு இறங்கியது"" என்று கேட்டார்கள்.
அதற்க்கு வீர்சிங்,'' சார் அவன் மேலே வண்டியை ஏத்தனும் என்று தான் பார்த்தேன். ஆனால் அவன் திடீரென்று
லைனை விட்டு தரையில் ஓட ஆரம்பித்தான் சார்.....அதனால் தான்.............''

aren
27-05-2003, 12:46 PM
நல்ல ஜோக். அருமையாக உள்ளது நண்பரே. தொடருங்கள்.

இளசு
27-05-2003, 12:49 PM
நல்ல சிரிப்பு நண்பர் மணியா அவர்களே...பாராட்டுகள்....

poo
27-05-2003, 02:45 PM
ஹாஹாஹா..... குலுங்கவைக்கும் மணியா... நன்றிகள்!!!

தஞ்சை தமிழன்
27-05-2003, 03:08 PM
நீங்களாவது வீர்சிங்கை பற்றி நல்லா எழுதுவீங்க என்று நினைத்தேன்.
அருமையான ஜோக்.

pgk53
27-05-2003, 04:45 PM
ஜோக் நன்றாக இருந்தது நண்பரே...
வீர்சிங் அதிர்ஷ்டக்காரன்தான்...

முத்து
27-05-2003, 04:49 PM
நல்ல ஜோக் மணியா ... மீண்டும் தொடருங்கள்....

அறிஞர்
28-05-2003, 07:00 AM
மணியான ஜோக்.. வாழ்த்துக்கள்.. அன்பரே... ஆரம்பத்திலேயே கலக்குகிறீர்கள்.. தொடர வாழ்த்துக்கள்...

prabha_friend
28-05-2003, 07:11 AM
வீர்சிங் என்றுமே "முன்வைத்த காலை பின்வைத்ததில்லை" என்பதை நிறுபித்துவிட்டான் .

விகடன்
11-08-2007, 07:55 AM
கதையை இவ்வளவு நேரமும் கவனிச்சுக் கொண்டிருந்தவங்களுக்கு ஜிவ் என்று ஏறியிருக்காது.
சூப்பர் மணியா அண்ணா.

அமரன்
16-08-2007, 07:41 AM
ஹஹ்ஹ்ஹ்ஹா.....நினைத்ததை முடிப்பவன்.

namsec
16-08-2007, 07:50 AM
சரியான சிரிப்பு பதித்தமைக்கு வாழ்த்துக்கள் இது போன்று மேலும் தொடருங்கள்

சிவா.ஜி
16-08-2007, 07:53 AM
எங்கோ ஒளிந்து கிடந்த இந்த சிரிப்பு முத்தினை வெளிக்கொணர்ந்து,எங்களையும் இன்பத்திலாழ்த்திய விராடனுக்கு முதல் நன்றி.மணியா அண்ணனுக்கு ஒரு ஜே...!!!

மன்மதன்
16-08-2007, 11:42 AM
நிறைய இடங்களில் ஆக்ஸிடண்ட் நடப்பதே இந்த முறையில்தான்.. :D