PDA

View Full Version : சில காதல் கவிதைகள் - 10



ப்ரியன்
16-07-2007, 08:05 AM
#

நீ வாசல் கடக்கையில்
கவர்ந்த வாசனையை
பூசிக் கொண்டு மலர்கிறது
கொல்லைபுற மல்லி!

#

உயிரற்ற செல்களலாக்கப்பட்ட
உரோமங்கள்
உயிர் பெற்று
குத்தாட்டம் போடுகின்றன;
உன் தாவணி ஸ்பரிசத்தில்!

#

தென்றலை ஒத்த
நடைபயின்று கடந்துச் செல்கிறாய்;
ஆயிரம் சூறாவளிகளை
என்னுள் உருவாக்கிவிட்டு!

#

என்னுடன் ஓடிவருவதானால் -
வீட்டையும் தூக்கிக் கொண்டு வா!
உன்னோடு இருபது வருடம்
வாழ்ந்த அதனோடு
இருபது நாட்களாவது
வாழ வேண்டும் எனக்கு!

#

தலை சூட
நீ மல்லி சேகரிப்பதுப் போல;
என் உயிர் சூட
உன் புன்னகை சேர்க்கிறேன்
நான்!

#

− ப்ரிய*ன்.

அமரன்
16-07-2007, 08:25 AM
ஒவ்வொன்றும் அழகான கவிதைகள் ப்ரியன்.
அல்லி மலர்வது,வீட்டுடன் வாழ்வது,தாவணி ஸ்பரிசம்,புன்னகை சேர்ப்பது நான்கு மிகவும் அழகு. எனக்கு புதிதா இருகின்றது. நன்றி ப்ரியன்.

ஓவியன்
16-07-2007, 08:35 AM
அன்பான ப்ரியன்!

அழகான வரிகள்!, காதலுக்கும் அழகு சேர்க்கின்றன......

அனுபவித்து, அதனை அனுபவித்து எழுத்தில் வரித்து எங்களையும் அனுபவிக்க வைத்தமைக்கு மிக்க நன்றிகள்......

பி.கு - நீங்கள் சற்று பிசியாக இருப்பது அறிந்ததே, இருந்தாலும் நேரம் கிடைக்கும் போது இப்படி சில வரிகளை எங்களுக்குத் தந்தால் எங்களுக்கும் மிக்க சந்தோசமாக இருக்குமே....

இனியவள்
16-07-2007, 08:55 AM
தலை சூட
நீ மல்லி சேகரிப்பதுப் போல;
என் உயிர் சூட
உன் புன்னகை சேர்க்கிறேன்
நான்!
− ப்ரிய*ன்.

பிரியன் என்னைக் கவர்ந்த வரிகள் மிகவும் லயித்தேன் இந்த வரிகளில் வாழ்த்துக்கள் பிரியன்....

உன் புன்னகையை
சேமிக்கின்றேன் சிறுக சிறுக
என் உயிரில் பூவாய்ச் சூடுவதற்கு

அருமை பிரியன் வாழ்த்துக்கள் :icon_08:

மனோஜ்
16-07-2007, 09:01 AM
அருமையான கவிதைகள் காதலை அழகு படுத்தும் கவிதைகளாய் அமைந்தது சிறப்பு

ப்ரியன்
17-07-2007, 07:22 AM
நன்றி அமரன் , ஓவியன் , இனியவள் & மனோஜ்

சிவா.ஜி
17-07-2007, 01:44 PM
ப்ரியன் உண்மையாக சொல்லவேண்டுமென்றால் என்னை நீங்கள் மன்னிக்கவேண்டும். இந்த கவிதைகளைப் படித்துவிட்டு பிரபலமான ஒருவர் எழுதிய கவிதையை பிரதி எடுத்து போடப்பட்டுள்ளது,இதற்கு ஏன் நம் பின்னூட்டம் என்று நினைத்தேன். பின் உங்கள் மற்ற கவிதைகளைப் படித்துவிட்டு அயர்ந்து ஒரு நிமிடம் அப்படியே அமர்ந்துவிட்டேன்.
இந்த திரியில் பதிந்திருக்கும் முத்துக்களும் அந்த ரகம்தான். காதலின் பல பரிமாணங்களை அழகாகக்கோர்த்து மாலையாகத் தந்திருக்கிறீர்கள்.
மலர்கள் வாசனையை கவந்ததாகட்டும்,தென்றல் சூறாவளியை உண்டாக்கியதாகட்டும்,வாழ்ந்த வீட்டை கொண்டுவரும்படி கூறியதாகட்டும், புன்னகையை சேர்ப்பதாகட்டும் அழகுற அமைந்த கற்பனைகள். என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் ப்ரியன்.

ப்ரியன்
20-07-2007, 03:39 AM
நன்றி சிவா.ஜி