PDA

View Full Version : காத*ல் ப*திப்பு....!



வசீகரன்
16-07-2007, 05:28 AM
மரக்கிளைகள் தோரணம் கட்டி
தார்சாலை எங்கும் நீர்சாலையாக
மாற்றியிருந்த அழகான
மழைக்கால காலைநேரம்

மனிதர்கள் நடமாட மறந்த
தார்சாலையில் மரக்கிளைகள்
சேமித்த நீர்த்துளிகள்
இலைகளிடையே
சொட்டிக்கொண்டிருக்கின்றன
எனக்குள் சிந்திக்கொண்டிருக்கும்
உன் நினைவுகள் போல

யாருமில்லாத அந்தப் பாதையில்
யாரும் சேராது நான் சென்று
ஊரில் யாரும் மிதிக்கும் முன்னே
உதிர்ந்த பூக்களையெல்லாம்
பாவை உன்னைத் தொடுவதுபோல்
பட்டும் படாமல் சேகரித்தேன்
பூவை தாங்கும் பூவைக்காக

போதும் போதும் என்று நீ
சொல்லவேண்டுமென்பதற்காக
உன் பூக்கூடையை விட
பெரியதாகச் செய்ய சொன்ன
பூக்கூடையை தூக்கிக்கொண்டு
பொழுது புலரும் நேரத்தில்-உன்
வாசல் தேடி நான் வர
குழைசாய்ந்த வாழைமரம் போல்
தலைசாய்ந்து நீ
வெட்கமும் புன்னகையும் கலந்து
வாசலில் நின்றிருந்தாய்
கீழ்வானச் சூரியன் போல்

பட்டுக்கொள்ளுமோ
தொட்டுக்கொள்ளுமோ என்று
அறியாது வேகத்தில்
சட்டென்று கூடை இடமாற்றி
சிட்டொன்று பறப்பதுபோல்
பட்டென்று நீ ஓடிவிடுவாய்
பற்றியெரியும் என் இதயத்தையும்
சேர்த்து எடுத்துக்கொண்டு

நீர்சாலையையும்
தார்சாலயையும் காலைநேர
பூச்சாலையாய் ரசிக்க வைத்தது
தலையில் நீ சூடும் பூக்காடுதானே

தலைமுடியின் நிறத்தை உன்
தேகமெங்கும் நீ தாங்கினாலும்
தகனமிட்ட தங்கம் கூட
உன் முகலட்சணத்தின் முன்னே
கொஞ்சம் ஒளி குறையத்தான் செய்கிறது

உண்மையை சொல்ல வேண்டுமானால்
ஒவ்வொரு பெண்ணின் முகமும்
எப்படி அமைய வேண்டுமென்று
உன் முகம் காட்டும் உதாரணம்

எத்தனை பெண்கள் எதிரெதிரே
வந்த பொழுதும் எடுத்து
இடம் மாற்ற மனம் வராத
ஒரு முகம் உன் முகம்

உன்னை பேரழகி என்று
நான் சொல்லமாட்டேன்
உண்மையில்
நீதான் ஓர் அழகி

இனியவள்
16-07-2007, 02:45 PM
காதல் உன்னில்
வந்து விழுந்தது
பூமிப் பந்தாய்
அடடா உன்னில்
ஏற்பட்ட மாற்றங்கள்
தான் எத்தனை எத்தனை

நெருப்பை கூந்தலில்
சூடும் பூ என்கின்றாய்
பூவை நெருப்பெங்கின்றாய்...

இடிக்கும் இடியை
இசை என்கின்றாய்
இசையை இடிக்கும்
இடி என்கின்றாய்..

வாழ்த்துக்கள் வசி

அரசன்
16-07-2007, 02:51 PM
இந்த கவி கூறும் நங்கை யார்?
கண்டிப்பாக பார்க்க வேண்டும் இந்த பெண்ணை.
இப்போதெல்லாம் காணமுடிவதில்லையே அதான்.

கவிதையில் அந்த மழைக்கால காலை நேரம், என் பழைய அந்த இனிமையான நினைவுகளை ஞாபகபடுத்துகின்றன்.
இனிமையான கவிதை. வாழ்த்துக்கள் இனி!

வசீகரன்
17-07-2007, 05:28 AM
காதல் உன்னில்
வந்து விழுந்தது
பூமிப் பந்தாய்
அடடா உன்னில்
ஏற்பட்ட மாற்றங்கள்
தான் எத்தனை எத்தனை

நெருப்பை கூந்தலில்
சூடும் பூ என்கின்றாய்
பூவை நெருப்பெங்கின்றாய்...

இடிக்கும் இடியை
இசை என்கின்றாய்
இசையை இடிக்கும்
இடி என்கின்றாய்..

வாழ்த்துக்கள் வசி
இனியவளே நன்றி.... தொடர்ந்து உங்கள் ஊக்கம்

சிவா.ஜி
17-07-2007, 06:21 AM
அழகான கவிதை வசீகரன். உங்கள் பேரழகி அதிர்ஷ்டம் மிக்கவள். பளபளப்பையும், வெள்ளைத்தோலையும் மட்டும் விரும்பி வரும் எத்தனையோ காதல் உண்டு. அதெல்லாம் காதல் என்று சொல்ல தகுதியில்லாதவை. எவ்வளவு அழகான காலை நேர விவரிப்பு. அவள் பூக்கூடையை விட பெரிதாக கூடை செய்து,பூக்களை நிரப்பி அந்த பூவுக்கு கொடுத்த உங்கள் கவிதை நாயகன் நிஜக்காதலன். தார்ச்சாலையை பூச்சாலையாக ஆக்கிய இந்த காதலர்கள் காதலிக்கப்படவேண்டியவர்கள். பாராட்டுக்கள் வசீகரன்.

அமரன்
17-07-2007, 08:34 AM
அழகான வர்ணனை.
ஆழமான காதல்..
வசீகரனின் வசீகரிக்கும் வரிகளில்.
பாராட்டுக்கள்..

ஆதவா
18-07-2007, 08:46 AM
நல்ல கவிதை.. சிறப்பான கற்பனை... வர்ணனை..

மாற்றியிருந்த அழகான... என்ற வரிகளுக்குப் பதிலாக "மாறியிருந்த அழகான" என்று மாற்றியிருக்கலாம்..

சில இடங்களில் சிலாகித்தேன்.

நினைவுகளாய் சொட்டிக் கொண்டிருக்கும் நீர்த்துளிகள்
பூவைத் தாங்கும் பாவை
அவளைவிட பெரிய பூக்கூடை
குழைசாய்ந்த வாழையாய் அவள் சாய்ந்த வெட்கம்
பற்றியெரியும் இதயம்
தகனமிட்டம் தங்கத்தின் ஜொலிப்பு குறைதல்

இப்படி பல.

நடையில் அழகாக பதித்திருக்கிறீர்கள்... எளிமையும் கூட. காதல் கவிதைகள் எத்தனை வந்தாலும் கற்பனையான/ வர்ணனைகள் கவிதைகளை மேலும் படிக்கத் தூண்டும்...

அவள் பேரழகி என்று பொய் சொல்வதைவிட அவளும் ஓரழகி என்று சொல்லலாம்.... அவள் எப்படியிருந்தாலும்.. இல்லையா வசீகரன்....

இந்த அருமையான கவிதைக்கு ஐந்து பின்னூட்டங்கள் தானா?

ஷீ-நிசி
18-07-2007, 09:23 AM
வசீகரன்... பெயருக்கேற்றபடி உம் கவிதை வசீகரித்தது...

கவிதையின் வார்த்தைகள் மாலை நேர தென்றலாய் வருடின....


தலைமுடியின் நிறத்தை உன்
தேகமெங்கும் நீ தாங்கினாலும்
தகனமிட்ட தங்கம் கூட
உன் முகலட்சணத்தின் முன்னே
கொஞ்சம் ஒளி குறையத்தான் செய்கிறது

மிக மிக ரசித்தேன்.. நண்பரே..

தொடர்ந்து எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!

ஓவியன்
19-07-2007, 09:35 PM
அடடே அருமையான வர்ணனைகளுடன்.............

அழகாக இரசித்தேன் வசீ உங்கள் கவிதையையும் அந்தக் கவி சொன்ன தையையும்...................

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் வசீகரா!.

வசீகரன்
21-07-2007, 08:02 AM
வாழ்த்திய அனைத்து நண்பர்களையும் மனம் நிறைந்து நன்றி நவில்கிறேன்....!

வசீகரன்