PDA

View Full Version : மனிதம் கொள்



சிவா.ஜி
16-07-2007, 05:03 AM
சூது−தீது
குடி−கேடு
புகை−உயிருக்கு பகை
இவையாவும் தீயது,ஆயினும்
இவையாவிலும் தீயது..
மனிதம் கொன்ற மனது!
சூது−ஆடியவனுக்கு அழிவு
குடி−குடும்பத்துக்கு கேடு
புகை−பகிர்ந்தவருக்கும் பாடை
மனிதமில்லா மனது
அகிலத்துக்கே அழிவு!
ஆகவே மானிடா...
மனிதம் கொள்,மனிதம் கொள்
மனிதனைக் கொல்லாதே!
இதயத்தில்
இறைமை வளர், இறைமை வளர்
இம்மியேனும் பகையை
என்றும் வளர்க்காதே!

அமரன்
16-07-2007, 08:08 AM
சிவா...
மனிதம்
மனிதன் வாழும் உலகில்
தேடப் வேண்டியது.....
வேதனையான விடயம்

சிறப்பான கவிதை. ஒவ்வொன்றும் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் அழிக்க மனிதம் என்ற புனிதம் மறைந்து உலகையே அழிக்கின்றது.வாழ்த்துக்கள் சிவா. இன்றைய தினத்துக்கு மிகவும் பொருத்தமான கவிதை.

சிவா.ஜி
16-07-2007, 08:10 AM
மிக்க நன்றி அமரன். எங்கே என் கவிதையும் மனிதத்தைப்போலவே மறக்கப்பட்டுவிடுமோ என அஞ்சிவிட்டேன். மனிதம் வாழ்க.

இனியவள்
16-07-2007, 08:10 AM
சிவா கவிதை ரொம்ப நல்லா இருக்கு

இதயத்தில் இருக்கும் இறமை
உன்னைப் புடம் போடட்டும்
அதுவே வெறியாக மாறி
மற்றவர்களை அழிக்காமல்
பார்த்துக் கொள்...

சிவா.ஜி
16-07-2007, 08:13 AM
மிகச்சரியாகச் சொன்னீர்கள் இனியவள், எல்லாமே அதனதன் கட்டுக்குள் இருந்தால் எப்போதுமே நல்லது.மிக்க நன்றி.

அமரன்
16-07-2007, 08:13 AM
மனிதம் மறைவது எனக்கு உடன்பாடில்லாத விடயம் சிவா...அதுபோல எந்தக்கவிதையும் மறையக்கூடாது..

ஆதவா
17-07-2007, 03:52 AM
தத்துவக் கவிதை மாதிரி சென்று அப்படியே அறிவுரையாகிவிட்டது....
சிவாஜி அவர்களே! படிக்கும்போது கொஞ்சம் தடுமாறவேண்டியிருக்கிறது. முதலில் விளைவுகளை சுருக்கமாக சொல்லிவிட்டு பின்னர் விரிவாக்கியிருக்கிறீர்கள்.. அந்த பாணி சரியா என்பது எனக்குத் தெரியவில்லை என்றாலும் இன்னும் கொஞ்சம் வித்தியாசம் செய்திருக்கலாம்.

மனிதம் கொண்டவர்கள் எத்தனை பேர்?

புகை பகிர்ந்தவர்களுக்கும் பாடை... நல்ல வரிகள் சிவா,ஜி.... உணர்ந்து எழுதிய வரிகள்.. அந்த விஷயம் எத்தனை பேருக்குத் தெரிகிறது?/

aren
17-07-2007, 04:00 AM
மனிதம்
ஒவ்வொரு மனதனுக்குள்
இருக்கவேண்டிய குணம்

ஆழமான கவிதை வரிகள். பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

சிவா.ஜி
17-07-2007, 04:32 AM
நன்றி ஆதவா உங்கள் பின்னூட்டத்தை மிகவும் எதிர் பார்த்தேன். எதிர்பார்த்தது வீணாகவில்லை. உங்கள் கருத்தை கவனத்தில் கொள்கிறேன். மிக்க நன்றி.

சிவா.ஜி
17-07-2007, 04:33 AM
மிக்க நன்றி ஆரென்.

ஓவியன்
17-07-2007, 11:40 AM
சிவா.ஜி

தாமத பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்! - எப்படியோ தவறி விட்டது!.

ஒரு அறிவுரை போல் அற்புதமான கவி இது சிவா.ஜி.

ஒவ்வொரு இக்கால இளைஞனும் கவனத்திற் கொள்ள வேண்டிய வரிகள்.

மனிதம்(ன்) கொல்லும் காலமதில் மனிதம் கொள்ளென உரைத்தது அரும் சேவை - பாராட்டுக்கள் சிவா.ஜி!.

சிவா.ஜி
17-07-2007, 11:46 AM
நன்றி ஓவியன். உற்சாக டானிக்கில் ஒரு கோப்பை குறைந்தது போல் இருந்தது,இப்போது திருப்தி.