PDA

View Full Version : அழகிய கவிதை



இனியவள்
15-07-2007, 03:56 PM
விழி என்னும் உளி கொண்டு
என்னை செதுக்குகின்றாய்
அழகிய சிற்பமாய்...

விரல் என்னும் தூரிகை கொண்டு
என்னை வரைகின்றாய்
அழகிய ஓவியமாய்...

ஆக மொத்தத்தில் என்னை
அழகிய கவிதையாக்கினாய்
அன்பு கொண்டு......

அமரன்
15-07-2007, 04:00 PM
விழி என்னும் உளி கொண்டு
என்னை செதுக்குகின்றாய்
அழகிய சிற்பமாய்...

பலே.....


விரல் என்னும் தூரிகை கொண்டு
என்னை வரைகின்றாய்
அழகிய ஓவியமாய்...ச்

ச்சீய்...ரகமா...அழகிய ராகமா...குழப்பமாக உள்ளது

ஆக மொத்தத்தில் என்னை
அழகிய கவிதையாக்கினாய்
அன்பு கொண்டு......

அன்புகொண்டாலும், அன்பைக்கொன்றாலும் கவிதை மட்டும் எப்படி அழகாகுகின்றது..


பாராட்டுக்கள் இனியவள்..இது ரொம்ப நல்லாக இருக்கு.

இனியவள்
15-07-2007, 04:11 PM
நன்றி அமர் கலக்கலான விமர்சனத்துக்கு

சீ அது கைதவறி பதிந்து போய் விட்டது
கவனிக்க தவறி விட்டேன் இப்பொழுது
அகற்றி விட்டேன்

மீனாகுமார்
15-07-2007, 04:35 PM
பிரம்மன்தான் ஒருவேளை இனியவள் ரூபத்தில் வந்து கவிதை கொட்டுகிறானோ... எதற்க்கும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் போலே...

இளசு
15-07-2007, 04:44 PM
மனம் களிமண்..
காதல் மாயக்குயவன்..
எதையும் வனையலாம்..
வனப்புள்ள இக்கவிதையையும்..

வாழ்த்துகள் இனியவள்..

இனியவள்
15-07-2007, 06:26 PM
பிரம்மன்தான் ஒருவேளை இனியவள் ரூபத்தில் வந்து கவிதை கொட்டுகிறானோ... எதற்க்கும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் போலே...

ஹீ ஹீ மீனாகுமார் இதைக் கேட்டால்
பிரம்மன் ஓடிடப் போறார்;)

இனியவள்
15-07-2007, 06:27 PM
மனம் களிமண்..
காதல் மாயக்குயவன்..
எதையும் வனையலாம்..
வனப்புள்ள இக்கவிதையையும்..
வாழ்த்துகள் இனியவள்..

நன்றி இளசு அண்ணா

ஓவியன்
15-07-2007, 06:37 PM
உளி தரும் வலிகளை
தன்னிலே ஏற்றாலே
சிற்பமாக உயிர்
கொள்ளும் கல்லு!

ஓவியனின் வியர்வையிலும்
வர்ணக் கலவையிலும்
ஒளி பெற்று உயிர்
கொள்ளும் ஓவியங்கள்!

அன்பிலே உருகி
தன்னிலை மறந்த
தியாகத்தில் ஒளிர்வது
தானே காதல்!


இனியவள் கவிதை அருமையாக இருக்கிறது − ரொம்பவே இரசித்தேன்!!

பாராட்டுக்கள்!.

இனியவள்
15-07-2007, 06:38 PM
உளி தரும் வலிகளை
தன்னிலே ஏற்றாலே
சிற்பமாக உயிர்
கொள்ளும் கல்லு!

ஓவியனின் வியர்வையிலும்
வர்ணக் கலவையிலும்
ஒளி பெற்று உயிர்
கொள்ளும் ஓவியங்கள்!

அன்பிலே உருகி
தன்னிலை மறந்த
தியாகத்தில் ஒளிர்வது
தானே காதல்!
இனியவள் கவிதை அருமையாக இருக்கிறது − ரொம்பவே இரசித்தேன்!!
பாராட்டுக்கள்!.

நன்றி ஓவியன்

பதில் கவிதை அருமை :icon_good:

அமரன்
15-07-2007, 07:42 PM
ஓவியன்.....

காதல் யாகத்துக்கு
தியாகம்தான் நெய்யா.....

அருமை...அருமை...

அக்னி
15-07-2007, 08:57 PM
சிற்பமான பின்,
உளி...
ஒதுங்கியதா..? ஒதுக்கப்பட்டதா..?

ஒவியமான பின்,
தூரிகை...
மறைந்ததா..? மறைக்கப்பட்டதா..?

காதலரான பின்,
அன்பு...
குறைந்ததா..? குறைக்கப்பட்டதா..?

இனியவளின் கவிதை,
அசத்தும் பின்னூட்டங்கள்,
அனைத்தும் அருமை...

இனியவள்
16-07-2007, 02:29 PM
சிற்பமான பின்,
உளி...
ஒதுங்கியதா..? ஒதுக்கப்பட்டதா..?
ஒவியமான பின்,
தூரிகை...
மறைந்ததா..? மறைக்கப்பட்டதா..?
காதலரான பின்,
அன்பு...
குறைந்ததா..? குறைக்கப்பட்டதா..?
இனியவளின் கவிதை,
அசத்தும் பின்னூட்டங்கள்,
அனைத்தும் அருமை...

உளி ஒதுங்க வில்லை
செதுக்கிக் கொண்டே இருக்கின்றது...

அன்பு வளர்ந்து கொண்டே
இருந்தது இயற்கை போல்...

நன்றி அக்னி ஒரு கவிதை
போட்டால் பல கவிதை
அழகாகவும் ரம்மியமாகவும்
உருப்பெறுகின்றது நண்பர்களால்
இதுக்காகவே ஆயிரமாயிரம் கவிதை
எழுதலாம் :icon_b: