PDA

View Full Version : தூதுக் கடிதம்



இனியவள்
15-07-2007, 01:19 PM
உன் முகம் பார்த்து
என் காதலை உன்னிடம்
பகிர்ந்த என்னால் பிரிவை
சொல்ல முடியவில்லை...

உன் முகத்தில் இருக்கும்
சாந்தம் என்னை கட்டிப்
போட்டு விடும் அன்பே...

உன் பூ முகத்தில்
மகிழ்ச்சி என்னும் தேனை
அருந்திவிட்டு பிரிவு
என்னும் விஷத்தை
பரிசளித்துச் செல்ல
வந்துள்ள வண்டு நான் என்று
கூற என் இதயத்தின்
ஓர் ஒரத்தில் கசிந்து
கொண்டிருக்கும் ஈரம்
இடம் கொடுக்க வில்லை.....

பிரித்து விடுவேன் எனதுயிரை
உடலை விட்டு பிரிவென்ற ஒர்
அரக்கம் நம்மிடையே புகுந்து
அரசு செய்யும் காலம் வந்தால்
எனக்கு கூறிய நானே இன்று
பிரிவென்ற அஸ்திரத்தைக் கையில்
எடுக்கின்றேன் என் குடும்பத்திற்காக.....

உன் கரத்தை விட்டுப் பிரியாத
என் கரத்தை பிரிக்கின்றேன் இன்று
முதல் வேறொருத்தி கரம் பிடிக்க...

என் நினைவுகளை உதறித் தள்ளி
விடு உன் உயிரில் சென்று ஆட்சி
செய்வதற்கிடையில்......

நிகழ்காலம் என்னும் அழிப்பான்
கொண்டு அழித்து விடு − நம்
காதல் என்னும் கடந்த காலத்தை....

உன் வலிகளை என்னுள்
உள்வாங்கி சந்தோஷத்தை
அள்ளித் தந்த நானே − இன்று
உனக்கு அழிவில்லா துன்பத்தை
தந்து விட்டு செல்வேன் என
கனவில் கூட நினைக்கவில்லையே....

காதலர்கள் என்னும் பட்டத்திலிருந்து
தம்பதிகள் என்னும் பந்தத்தை
உருவாக்கி கனவுலகில் மின்மீன்கள்
போல் மிதந்து கொண்டிருக்கின்றாய் − நீ
ஆனால் இன்று முதல் உன் முன்னாள்
காதலன்.....

மன்னிப்பு என்ற ஒர் வார்த்தைக்கு
அருகதையற்றவன் நான் ஆனாலும்
உன் கால் பணிந்து மன்னிப்பு என்னும்
வரம் கேட்கின்றேன் மன்னித்து விடு
பெண்ணே.......

உன் திருமண செய்தியே என்
மன்னிப்பு வரமாக வருமென
காத்துக்கொண்டிருப்பேன் .

உன் நல்வாழ்வை விரும்பும் அந்நாள் காதலன்
இந்நாள் நலன் விரும்பி.......


காதலனே உன் கடிதம் கண்டு
கொக்கலித்த என் மனம் உன்
செய்தி கண்டு செயலிழந்து
விட்டது....

உன் திருமண செய்தி தாங்கி
வந்த கடிதம் கண்டு கண்ணீர்
விட்ட கண்கள் இன்று ஒளி
வீசிக் கொண்டிருக்கின்றன
வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை
என்பதனை அறிந்து கொண்டதில்...

தோல்விகளை வெற்றியாக
பண்டமாற்று செய்ய சொல்லித்
தந்தவனே நீ தானே உன் பிரிவு
எனக்கு பெரும் துயர் அன்பே
அத் துயரைக் கூட இன்பமாய்
மாற்ற நீ கற்றுத் தந்த வித்தை
என்னிடம் நிறைய இருக்கின்றது...

நீ என்னை ஏமாற்றியதற்காக
இன்னொருவரை ஏமாற்ற நான்
ஒன்றும் கொடுரமானவள் அல்லவே
ஒரு நாளில் ஒரு நிமிடத்தில் உன்
நினைவு என்னை மேகம் போல்
சூழாமல் இருக்கும் பட்சத்தில்
என் மனதை பரிபூரணமாய்
கையளிப்பேன் என்னைப் புரிந்து
கொண்டவனிடம்....

இப்படிக்கு முன்னொரு காலத்தில்
உன் இதயத்தில் குடி கொண்டவள்

சிவா.ஜி
15-07-2007, 01:31 PM
ஒரு இனிய காதல் சோகக்கதையை கவிதையாய் அளித்த இனியவளுக்கு என் மன்மார்ந்த பாராட்டுக்கள்.

நிகழ்காலம் என்னும் அழிப்பான்
கொண்டு அழித்து விடு − நம்
காதல் என்னும் கடந்த காலத்தை....
அருமையான கற்பனை அழகான சொல்லாடல் இந்த வரிகள்.
உன் திருமண செய்தியே என்
மன்னிப்பு வரமாக வருமென
காத்துக்கொண்டிருப்பேன் .
சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிய நேர்ந்தாலும் அந்த பிரிவின் சோகம் நிலைக்கக்கூடாது என்று நினைக்கும் பரந்த உள்ளம் உள்ள காதலனை காட்டிய விதம் அருமை.

காதலனின் நினைவாகவே வாழ முடிவெடுத்த காதலி,காதலியை வாழவைக்க நினைக்கும் காதலன் நல்ல பாத்திரப்படைப்பு. பாராட்டுக்கள்.

அன்புரசிகன்
15-07-2007, 01:34 PM
மனதை உருக்கும்
தொண்டையை நெருடும்
உணர்வை சுருட்டும்
வரிகள்
பாராட்டுக்கள்.

அமரன்
15-07-2007, 01:37 PM
சிவாவுக்குப் பிடித்த அதே வரிகள்..எனக்கும் பிடித்தவை..
அருமையான கவிதை..நீளமாக இருப்பதால் வாசிப்பதில் கொஞ்சம் சிக்கல். குறைவான வார்த்தைகளால் நிறைவாக எழுதினால் இன்னும் ரசிக்கலாம்.

நிகழ்காலம் என்னும் அழிப்பான்
கொண்டு அழித்து விடு − நம்
காதல் என்னும் கடந்த காலத்தை....


இதேபோன்று எல்லா வசனங்களும் கூர்மையாக் இருந்தால் கவிதை இன்னும் சிறப்பாக இருக்கும். பாராட்டுக்கள் இனியவள்..

இனியவள்
15-07-2007, 01:45 PM
ஒரு இனிய காதல் சோகக்கதையை கவிதையாய் அளித்த இனியவளுக்கு என் மன்மார்ந்த பாராட்டுக்கள்.
நிகழ்காலம் என்னும் அழிப்பான்
கொண்டு அழித்து விடு − நம்
காதல் என்னும் கடந்த காலத்தை....
அருமையான கற்பனை அழகான சொல்லாடல் இந்த வரிகள்.
உன் திருமண செய்தியே என்
மன்னிப்பு வரமாக வருமென
காத்துக்கொண்டிருப்பேன் .
சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிய நேர்ந்தாலும் அந்த பிரிவின் சோகம் நிலைக்கக்கூடாது என்று நினைக்கும் பரந்த உள்ளம் உள்ள காதலனை காட்டிய விதம் அருமை.
காதலனின் நினைவாகவே வாழ முடிவெடுத்த காதலி,காதலியை வாழவைக்க நினைக்கும் காதலன் நல்ல பாத்திரப்படைப்பு. பாராட்டுக்கள்.

நன்றி சிவா.ஜி
நீங்கள் குறிப்பிட்ட
அந்த வரிகள் எனக்கும் பிடித்தது

இனியவள்
15-07-2007, 01:46 PM
மனதை உருக்கும்
தொண்டையை நெருடும்
உணர்வை சுருட்டும்
வரிகள்
பாராட்டுக்கள்.

நன்றி அன்பு

இனியவள்
15-07-2007, 01:47 PM
சிவாவுக்குப் பிடித்த அதே வரிகள்..எனக்கும் பிடித்தவை..
அருமையான கவிதை..நீளமாக இருப்பதால் வாசிப்பதில் கொஞ்சம் சிக்கல். குறைவான வார்த்தைகளால் நிறைவாக எழுதினால் இன்னும் ரசிக்கலாம்.
நிகழ்காலம் என்னும் அழிப்பான்
கொண்டு அழித்து விடு − நம்
காதல் என்னும் கடந்த காலத்தை....
இதேபோன்று எல்லா வசனங்களும் கூர்மையாக் இருந்தால் கவிதை இன்னும் சிறப்பாக இருக்கும். பாராட்டுக்கள் இனியவள்..

நன்றி அமர்

எழுதும் போது சிறியதாக
வரும் கவிதை இங்கு
பதிக்கும் போது வளர்ந்து
கொண்டு போகின்றது மரம்
போல் ம்ம் முயற்சிக்கின்றேன் அமர்
அது போல் கூர்மையான வசனங்கள்
தருவதற்கு

இளசு
15-07-2007, 04:54 PM
எத்தனை உயரமோ
அத்தனை வீழ்தல்..

எத்தனை மகிழ்ச்சியோ
அத்தனை சோகம்..

காதல் பரமபத விதி இது..


பிரிவுகள் வலி தருபவை..
தீர்க்கமாகவும், நிரந்தரமாகவும், விரைவாகவும், முழுமையாகவும்..
அறுவை சிகிச்சைபோல் செய்ய்யப்படவேண்டியவை..

விட்டதும்..தொட்டதும் மனதில் ஒட்டிக்கொண்டிருந்தால்
மனம் புண்ணாகும் ..சீழாகும்
ஆறினாலும் மாறாத் தழும்பாகும்..


அறுபடுவது உறுதி என்னும்போதெல்லாம்
என் ஆசிகள் :

அறுவை சிகிச்சை வெற்றிகரமாய் முடிய வாழ்த்துகள்..


இனியவள் கவிதைக்கு பாராட்டுகள்!

இனியவள்
15-07-2007, 06:29 PM
நன்றி இளசு அண்ணா

ஆனால் கத்தி கொண்டு
அகற்றி விட காதல்
பொருளா என தெரியவில்லை