PDA

View Full Version : விசிறி...!அமரன்
15-07-2007, 12:56 PM
அன்பே...!

நீ என் விசிறி என்றாய்
காதல் விசிறியாக்கினாய்.

சுகந்தமான சுவாசத்தை
விஷமாக்கியது வாழ்க்கை.

காற்றில்லாமல் சுவாசிக்க முடியுமா?
காசில்லாமல் வசிக்க முடியுமா?

நீதான் கேட்டாய்..!
நியாயமாகக் கேட்டாய்.!

பணத்தின் வீரியத்தால்
பிணமாகி விட்டாயே...!

சிவமாக இருந்த வாழ்வை
சவமாக்கி விட்டாயே...!

இப்போது(ம்) புரிந்தது
விசிறிதான் நீ......!


(தாமதமான கவிதைக்கு அக்னி, இனியவள் இருவரும் மன்னியுங்கள். காதலுடன் இணைத்து எழுதுவதற்கு இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொண்டது. காதல் கவிதைகளுக்கும் எனக்கும் தூரம் அப்படி)

சிவா.ஜி
15-07-2007, 01:01 PM
எதார்த்த வாழ்வுக்கு பணம் முக்கியம் என்று நினைத்தவள் எதனால் சவமானாள் அமரன்? சவமானவள் எப்படி விசிறி ஆனாள்?(மின் விசிறியில் தூக்குபோட்டுக்கொண்டாளா) தயவுசெய்து விளக்குவீர்களா அமர்.

அமரன்
15-07-2007, 01:12 PM
சிவா...... இபடியான கேள்விகள் வரும்போது உற்சாகம் பீறிடுகின்றது நன்றி.அழ்ந்து படிப்பதாலேயே இப்படியான கேள்வி வரும்..


பணத்தின் வீரியத்தால்
பிணமாகி விட்டாயே...!

வாழ்க்கைக்கு பணம் முக்கியம் என அறிந்து உணர்ச்சிகளை கொன்று ஜடமாகிவிட்டதைச் சொன்னேன்..

சிவமாக இருந்த வாழ்வை
சவமாக்கி விட்டாயே...!

மங்களமாக இருந்த வாழ்வை அமங்களமாக்கியதை சொன்னேன்.

இப்போதும் புரிந்தது
விசிறிதான் நீ......!

சிவம்− சவமானது விசிறியால் தானே...
சிவம்−சவமானது அவளால் அல்லவா?
அப்போ அவள் என் விசிறிதானே..?

தப்பாயிருந்தால் சொல்லுங்க சிவா. மாற்றி அமைகின்றேன்.

சிவா.ஜி
15-07-2007, 01:22 PM
உணர்வுகள் இற(ழ)ந்தாலே அது சவம் தான்.அருமையான வார்த்தைகள் எனக்குத்தான் புரியவில்லை(மரமண்டை)
மங்களமான வாழ்வுக்கு நீங்கள் பயன்படுத்தியிருந்த சிவம் என்ற வார்த்தை நன்றாக உள்ளது. ஆனால் இப்போதும் தெரியாதது சிவம்−சவமானது விசிறியால் என்பது என்ன என்றுதான். மன்னிக்கவேண்டும் அமரன்.தெளிவாகத் தெரிந்தபின் மீண்டும் ஒருமுறை படித்து ஆனந்திக்கலாமே என்றுதான் கேட்கிறேன்.

அமரன்
15-07-2007, 01:24 PM
"ச" எழுத்துக்கு விசிறி போட்டால் "சி" ஆகிவிடுமே.....!

சிவா.ஜி
15-07-2007, 01:36 PM
அதுதான் அப்போதே சொன்னேனே மரமண்டையென்று... நன்றி அமரன்.

இப்போதும் புரிந்தது
விசிறிதான் நீ......!
இது
இப்போதும் நீ
விசிறிதான்....
இப்படி இருந்தால் எப்படியிருக்கும். விளக்கங்களுக்கு நன்றி அமரன்.

இனியவள்
15-07-2007, 01:43 PM
எதிர் பார்த்துக் கொண்டிருந்த கவிதை
வந்ததில் மிகவும் மகிழ்ச்சி அமர்
வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுக்கள்

அமரன்
15-07-2007, 01:44 PM
நன்றி சிவா....இது இன்னமும் அழகாக இருக்கும்.

பின்னூட்டங்களை நான் எப்படி எடுத்துக்கொள்வேன் தெரியுமா?
பாராட்டும் பின்னூட்டங்களில் நான் ஒரு அடிவளர்ந்தால் தவறுகளை சுட்டி திருத்தங்கள் சொல்லி சந்தேகம் கேட்டால் பல அடிவளர்கின்றேன்..உங்கள் திருத்தம் அழகாக இருப்பினும் சிலேடை கருதி தவிர்க்கின்றேன் சிவா.

அமரன்
15-07-2007, 03:28 PM
எதிபார்த்தது வந்தது சரி...எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா..இனியவள்..

aren
15-07-2007, 03:48 PM
முதலில் புரியாமல் இருந்த கவிதை பின்னூட்டங்களைப் படித்தபின் நன்றாக் புரிகிறது. பாராட்டுக்கள் அமரன்.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
15-07-2007, 03:56 PM
நன்றி ஆரென் அண்ணா....

இனியவள்
15-07-2007, 03:59 PM
எதிபார்த்தது வந்தது சரி...எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா..இனியவள்..

ம்ம் ஆமாம் அமர்
எதிர் பார்ப்புக்களை
எதிர்பார்த்ததை விட
மிகவும் அருமையாகவே
பூர்த்தி செய்தது

இளசு
15-07-2007, 04:08 PM
எது எப்படியோ
அமரனின் இக்கவிதைக்கு
நான் விசிறியாகிவிட்டேன்..

வாழ்த்துகள் அமரன்!

யதார்த்தத்துக்கும் காதலுக்கும் இடைவெளி அதிகம்..
காதல் காவியங்கள் கல்யாணக்காட்சியுடன் முடிவது அதனால்தான்..

அமரன்
15-07-2007, 04:33 PM
நன்றி அண்ணா...ஆம்..இக்கவியின் தாமதத்துக்குக் காரணம் புரிந்தது..

ஓவியன்
17-07-2007, 05:20 PM
அடடே அமர் ஒரு விசிறியை வைத்து எப்படிக் கவிதையால் விளையாடி இருக்கிறீர் − மனதாரப் பாராட்டுகிறேன் நண்பா!.

அமரன்
17-07-2007, 05:31 PM
ஓவியரே
என் விசிறியின் காற்றுக்கு
வீரியம் பத்தாதோ...

நன்றி கலந்த
குழப்பத்துடன்
அமரன்

ஆதவா
18-07-2007, 07:31 AM
அருமை அமரன்...

காத்தில்லாமல் - காற்றில்லாமல் என்று மாற்றிக் கொள்ளலாமே?

இன்றைக்கு பணமும் ஒரு தேவைதான்... பணமே தேவையல்ல...

பெரும்பாலும் மேல்மட்ட காதல் பணம் என்ற தடியோடுதான் நடமாடுகின்றன. அதைக் கண்கூடாக கண்டதுண்டு.. (சும்மா ரெண்டு பேரு சண்டைபோட்டுக் கிட்டாங்க..)

உணர்வுகள் இறந்தால் அது சவம் (நன்றி சிவா.) உணர்வுகள் இருந்தால் அது சிவம் (நன்றி:அமரன்)

நல்ல கவிதை சற்றே தொடை வார்த்தைகளை வைத்து... வாழ்த்துக்கள்...

ஷீ-நிசி
18-07-2007, 07:45 AM
நல்ல வித்தியாசமாய் சற்றே விசிறியை வைத்து விசிறியாக்கிவிட்டார் எங்களை இக்கவிக்கு அமரன்...

வாழ்த்துக்கள்!

அமரன்
18-07-2007, 09:04 AM
நன்றி ஆதவன்..ஷீ...

எனக்கு தட்டிய பொறி விசிறி...அதை கவிதையாக்க காதலை துணையாக்கினால்..வரமாட்டேன்னு அடம்பிடிச்சுது(இருவருக்கும் இடையில் ரிலேசன்ஸ்ஷிப் அப்டி)...ஒருமாதிரி இழுத்து வைச்சு முடிச்சேன்...உங்கள் பின்னூட்டங்களிப் பார்க்கும்போது ஓரளவு வெற்றி பெற்றேன் என நினைகின்றேன்...


ஆதவா தொடை நிரை என பல இடங்களில் படித்திருகின்றேன். அதெல்லாம் என்ன சொல்ல முடியுமா...