PDA

View Full Version : கேள்வியும் பதிலும் (பாடல்களில்)



mania
27-05-2003, 07:48 AM
1)நான் பாடும் மெளன ராகம் கேட்க்கவில்லையா
மெளன ராகம் எப்படிடா கேக்கும் புண்ணாக்கு?

2) ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
அடேங்கப்பா அவ்வளவு பெரிய கோப்பையா?

3) வானைத்தை பார்த்தேன், பூமியை பார்த்தேன்
முதல்ல ரோடைப்பாத்து போடா டேய் , போயி சேர்ந்திரப்போற ?

4) கங்கை யமுனை இஙுகுதான் சஙகமம்......
அது சரி, என் டீக்கடை முன்னாடி பாடுற பாட்டாடா இது ?

5) இது இரவா பகலா, நீ நிலவா கதிரா........
கன்னாடியை எடுத்து போடுடா முதல்லே
..
6) மழை வருது , மழை வருது குடை கொண்டு வா.........
டேய் யார்ரா அது, வானிலை அறிவிப்பாளரை ஹீரோவா ப் போட்டது?

karikaalan
27-05-2003, 08:53 AM
4-ம் நம்பர் குபீரென சிரிப்பு வரவழைத்தது. நன்றிகள், மணியாஜி!

===கரிகாலன்

இளசு
27-05-2003, 01:51 PM
அசத்தல் அருமை அட்டகாசம்
தொடர்ந்து பாட்டு போட்டு பட்டை கிளப்புங்க மணியா....

poo
27-05-2003, 03:43 PM
மணியா... சிரிக்கவைக்கும் பணியா..
தொடரட்டும்.., வாழ்த்துக்கள்.!!!.....

முத்து
27-05-2003, 05:30 PM
இரண்டாம் போஸ்டிலேயே இவ்வளவு கலக்கலா...? பாராட்டுக்கள் மணியா..

அறிஞர்
28-05-2003, 08:09 AM
கலக்கல்.. மணி... வாழ்த்துக்கள்.. உம் பணி தொடரட்டும்....

indian_usa
31-05-2003, 03:50 AM
சிரித்து சிரித்து வயிறு வலித்தது..4 6 அருமை..

பாரதி
31-05-2003, 07:59 AM
நல்லா இருக்கு.

gankrish
04-06-2003, 07:02 AM
மேனியா வாய் விட்டு சிரித்தேன். அற்புதம்...

மேனியா உங்க பாணியிலே...
நான் ஒரு முட்டாளுங்கோ..
(அதான் பார்த்தாலே தெரியுதே...)

விகடன்
11-08-2007, 09:17 AM
நீங்கள் சொல்லும்போதுதான் எனக்கும் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது...."ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்...." அந்த பாடலில் ஏதோ மற்றவர்களுக்கெல்லாம் கேட்பதற்கென்று வேறேதோ அவயமிருப்பது போலவும் தான் பெரிய கண்டு பிடிப்பு கண்டுபிடித்ததாகவுமாக அல்லவா அலட்டிக்கொள்கிரார்....

அமரன்
16-08-2007, 01:44 PM
அசத்தல் அருமை அட்டகாசம்
தொடர்ந்து பாட்டு போட்டு பட்டை கிளப்புங்க மணியா....

ஆமாம்...மாத்திப்போட்டு இன்னும் கலக்குங்க தல ...நன்றி

சிவா.ஜி
16-08-2007, 01:48 PM
மீண்டும் வருமா அந்த "மணியா"க் காலம்.......

ஏக்கத்துடன்.......

மன்மதன்
16-08-2007, 02:10 PM
என் பங்குக்கு..:wuerg019:

தாவணி போட்ட தீபாவளி வந்ததிங்கு வீட்டுக்கு..

'ம்ம்ம்.. மச்சினிச்சிய பாத்து பாடுறீங்க.. கண்டிப்பா வீட்ல வெடி வெடிக்க போவுது'

என்னம்மா தேவி ஜக்கம்மா உலகம் தலைகீழா சுழலுது பாரம்மா

காலையிலே போட்டுகிட்டாண்டா..


மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல இருளுதே...

மப்பு ஏறுதுன்னு அர்த்தம்... ஊட்டுக்கு போயி தூங்கு ....

சிவா.ஜி
16-08-2007, 02:17 PM
அசத்தல் மன்மதன்.கலக்குறீங்க....இன்னும் தொடருங்கள்.வாழ்த்துக்கள்.

lolluvathiyar
16-08-2007, 02:19 PM
வாவ் சூப்பர நன்றி விராடன் 4 வருசத்து புதையல்களை தோண்டி தந்ததுக்கு