PDA

View Full Version : பிறந்தநாள்



அமரன்
14-07-2007, 07:23 PM
கோயிலில் அர்ச்சனை
காப்பகத்தில் அன்னதானம்
நண்பர்கள் வாழ்த்து
தந்தையின் ஆசி

அனைவர் முகத்திலும்
மகிழ்ச்சி தேவதை
சுமந்தவள் முகத்தில்
சோக ரேகைகள்

அகவை அதிகரிக்க
காலம் குறைந்ததாம்
காலனின் வருகைக்கு

அக்னி
14-07-2007, 07:25 PM
புரியவில்லையே அமரன்...

அமரன்
14-07-2007, 07:28 PM
புரியவில்லையே அமரன்...

இப்போ பாருங்க..

இனியவள்
14-07-2007, 07:28 PM
புரியவில்லையே அமரன்...

ம்ம் அமர் எனக்கும் புரிய வில்லை

ஒரு வேலை மகன்
தாயை புரிந்து கொள்ளாமல்
வெறுக்கும் காரணமா ??

இனியவள்
14-07-2007, 07:30 PM
கோயிலில் அர்ச்சனை
காப்பகத்தில் அன்னதானம்
நண்பர்கள் வாழ்த்து
தந்தையின் ஆசி
அனைவர் முகத்திலும்
மகிழ்ச்சி தேவதை
சுமந்தவள் முகத்தில்
சோக ரேகைகள்
வயது அதிகரிக்க
காலம் குறைந்ததாம்
காலனின் வருகைக்கு

அடடே இப்படி ஒரு கவலையா

அன்னையே ஏன் இந்த கவலை
ஆண்டொன்று போனால் வயதொன்று
வரும் அது இயற்கை நியதியே

வாழும் வரை சந்தோஷமாய்
பிறரை துன்பத்தில் ஆழ்த்தாமல்
வாழ்ந்து விட்டுப் போவேமே..

கவலை வேண்டாம் அன்னையே
உன் மகன் உன்னை விட்டு
அவ்வளவு சீக்கிரம் போக
மாட்டான் நீ கொஞ்சி
விளையாட உன் மடி மேல்
போட்டு தாலாட்ட ஒர்
பேரம் வருவான் ... ஹீ ஹீ

அமரன்
15-07-2007, 01:03 PM
நன்றி இனியவள்....மகன் என எழுதியுள்ளீர்கள். அதை மகளாக நினைத்து..

பேரனைப் பெற*
பேரம் பேசுகிறார்கள்
திருமணச்சந்தையில்...

சிவா.ஜி
15-07-2007, 01:07 PM
தாயுள்ளம் என்பது அதுதான் அமரன். முதல் பத்தி படித்தபோது அங்கு தந்தை மட்டும் உள்ளாரே தாய் எங்கே என்று நினைத்தேன். முடிவைப்படித்ததும் அசந்துவிட்டேன். ஒரு தாய்க்கு தன் மகன் எப்போதும் குழந்தையாகவே இருக்கவேண்டுமென்ற பேராசை உண்டு. பாராட்டுக்கள்.

அமரன்
15-07-2007, 01:15 PM
ஆமாம் சிவா. எனது பிறந்தநாள், நண்பர்கள் பிறந்த நாள் வரும்போதெல்லாம் சாவை சந்தோசமாக வரவேற்கின்றார்களே என நினைத்து மகிழ்வேன். அதை ஒரு தாயின் நிலையில் இருந்து பார்த்தேன். இக்கவிதை பிறந்தது. நன்றி சிவா.

ஓவியன்
15-07-2007, 06:14 PM
அமரா எங்கே இருந்துதான் உங்களுக்கு இப்படி அருமையான கருக்கள் கிடைக்கிறதோ?

சின்ன ஒரு பொறி தான்.............

ஆனால் அதனைப் பாவித்த விதம் அருமை − பாராட்டுக்கள் அமர்!.

அமரன்
15-07-2007, 07:39 PM
நன்றி ஓவியன். முதலில் நான் கவிதை என்றால் வர்ணனை என நினைத்தேன். கவிதை எழுதுவது எப்படி என்ற திரியில் செல்வனண்ணாவின் பதிவு என்னை மாற்றியது. "சொற்களை வைத்துக்கொண்டு சுத்திப்பார்த்து கருவை பிடித்ததும் கவிதையாக்குவேன்"என்பது அவர் பதிப்பு. அதன் பாதிப்புத்தான் இது. என்னிடம் சொற்கள் குறைவு. சொற்களையும் தேடி கருக்களையும் தேடவேண்டி இருக்கு. இது ஏற்கனவே இருந்த விதை. இப்போது முளைத்தது.

இளசு
15-07-2007, 10:06 PM
அமரன்..

அசந்துவிட்டேன்..

இட்லிக்கணக்கில் தப்பு செய்யும் தாய்..
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10747

இங்கேயும் அகவை கூடியதில் மகிழாமல்
மொத்தக்கணக்கில் ஒன்று குறைந்தது கண்டு கவலையில்..

புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறையும்
எண்ணெய்க்குளியல் இல்லையென்றால் தேகம் தீயும்
வெயிலில் அலைந்தால் மேனி கருக்கும்
இரவில் விழித்தால் அமிலம் உருக்கும்..

உடலில் சுமந்ததோ ஒன்பது மாதம்..
உள்ளத்தில் சுமப்பதோ அவள் மறையுமட்டும்..

இறைவன் எங்கும் இருக்கமுடியாதாம்..
எனவே தாய்களைப் படைத்தானாம்..
அன்றே புனிதநூல் சொன்னது..
அமரன் கவிதையால் அமரத்துவம் ஆனது..

அமரன்
15-07-2007, 10:09 PM
அண்ணா அழகான பின்னூட்டம். பின்னூட்டத்திலேயே.தாயின் பெருமையைச் சொல்லி விட்டீர்கள். நன்றி அண்ணா.

ஓவியன்
16-07-2007, 03:46 AM
உடலில் சுமந்ததோ ஒன்பது மாதம்..
உள்ளத்தில் சுமப்பதோ அவள் மறையுமட்டும்....

அழகாகச் சொன்னீர்கள் அண்ணா! − அம்மாவைப்பற்றி!.

aren
16-07-2007, 03:57 AM
கவிதை நன்றாக உள்ளது அமரன்.

எப்பொழுது காலன் வருவான் என்று தெரியாத நிலையில் அண்னை ஏன் கவலைப்படவேண்டும். கொஞ்சம் புரியவில்லை உங்கள் கவிதை வரிகள்.

கொஞ்சம் விளக்கினால் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

நமக்கு இந்த பக்கம் நான்கு நாட்களாகத்தான் பழக்கம், ஆகையால் இந்த மாணவனுக்கு கொஞ்சம் புரியும்படி விளக்குங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
16-07-2007, 07:23 AM
ஆரென் அண்ணா! நமக்கு ஒவ்வொரு வருடம் ஒவ்வொரு வயது அதிகரிகின்றதல்லவா..அப்போது நாம் இறக்கும் காலம் நெருங்குமல்லவா. அதைசொன்னேன்.

உதாரணத்துக்கு நான் 60 ஆண்டு வாழ்வேன் என்று வைத்தால் எனக்கு 20 வயது இருக்கும்போது இன்னும் 40 ஆண்டுகளில் இறப்பேன் என அம்மா நினைப்பார். 20 வயது முடிந்ததும் இன்னும் 39 ஆண்டுதானா எனக் கவலைப்படுவார். இதையே காலன் வரும் காலம் நெருங்கியது என எழுதினேன்.

நன்றி அண்ணா...

ஆதவா
17-07-2007, 03:56 AM
இந்த மாதிரி கவலைப் படுபவர்கள் இருக்கிறார்களா என்றால் என்னைக் கேட்டால் இல்லை என்றுதான் சொல்லுவேன்..

என்றாவது ஒருநாள் காலனுக்கு நாம் பலியாடுகள். அது வயதை வைத்து வருவதில்லையே? ஒருவனுக்கு இந்த வயதில்தான் உயிர்போகும் என்று காலன் சட்டம் இல்லை. நாளை என்பது நம் கையில் இல்லை. இதுவே உண்மை. நாம் கையில் எடுத்துக் கொள்ள இன்று" மட்டுமே உள்ளது..

கவிதையின் சாராம் சரி.. காரம் குறைவு.

அமரன்
17-07-2007, 08:07 AM
நன்றி ஆதவா...குறைகளைச் சுட்டும்போது எனக்கு ஆனந்தம் அதிகரிகின்றது....மீண்டும் நன்றி...