PDA

View Full Version : லண்டனில் ஒருநாள் - பகுதி 3

ஆதவா
14-07-2007, 06:05 PM
ஓவியாக்காவோட வீட்டைப் பார்த்ததுமே பிரமிச்சுப் போயிட்டேன். பின்னே? மலேசியாவிலிருந்து இங்கிலாந்து போன

மகராசி இப்படி ஒரு மாளிகையிலயா குடியிருக்கணும்?./. அக்கா இருந்தாலும் இது டூ மச். சுவத்தில ஒரு பொண்ணோட

படம் மாட்டியிருந்தது. அந்தப் பொண்ணூ பாக்கறதுக்க நல்ல லட்சணமா மூக்கும் முழியுமா இருந்தது. தலையில

கொண்டை, அதைச்சுத்தி மல்லிகைப் பூ, கண்ணைத் தாண்டுற மை, வரைஞ்சுவிட்ட புருவம், உதட்டுல எடுத்தடிக்கிற

சாயம், புடவையை கொஞ்சம் வித்தியாசமா கட்டிட்டு ஒருவித போஸில் அந்த பொண்ணூ இருந்தது. அக்காகிட்ட இது

யாருன்னு கேக்கலாம்னு நினைச்சேன். அப்பறம் நம்மள தப்பா நினைச்சுருவாங்களேன்னு கேக்கல. ஆனா அந்த

பொண்ணோட போட்ட மூலைக்கு மூலை கிடந்தது. எல்லாமே வித்தியாசமான போஸில.... நண்பர்களே! அந்த அம்மணி

யாருன்னு நீங்களாவது கேட்டு சொல்லுங்க,.. வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் நேரே போனது அக்காவோட சமையலறைக்கு..

எங்கவீட்ல சமையலறை எப்படி இருக்கும் தெரியுங்களா? அங்கங்கே புழுதியடிச்ச பாட்டில்களும் பழைய காம்ப்ளான்

டப்பாக்களும் அஞ்சறைப் பெட்டிகள் சிலதும் தொங்கவிடப்பட்டிருக்கும். அப்பறம் கீழே சிலிண்டர், அருவாமனை கத்தி

கடப்பாறை போன்ற இத்தியாதிகள். ஆனா நம்ம ஓவியாக்காவோட வீட்ல ரொம்பவே வித்தியாசம். எந்தப் பொருளை

எடுத்துகிட்டீங்கனாலும் அது நவீனமா இருந்தது. சுத்தமான தண்ணீ வரதுக்குன்னே ஏதோ ஒரு பெட்டியை சொறுகி

வச்சுருக்காங்க. அதுல இருந்து சொட்டு சொட்டா தண்ணி ஒழுகும்.. பாத்திரமெல்லாம் பளிச்சுனு சுத்தமா அடுக்கி

வச்சுருந்தாங்க... ரொம்ப சுத்தமான ஆள்தான் ஓவியாக்கா. சாப்பாடும் பருப்பும் செஞ்சி வச்சுருந்தாங்க. சரி கொடுங்க

உங்க டேஸ்ட பார்ப்போம்னு சொன்னேன்... அடடா,,,, வெள்ளிக் கிண்ணம் மாதிரி ஒரு தட்டத்தில பரிமாறிப் போட்டாங்க

பாருங்க..... அங்கிருக்கிற நவீன அழகுல மயங்கி விழுந்துட்டேன். சாப்பாடு நம்ம ஊர்மாதிரி பெரிசு பெரிசா இல்லிங்க,..

நல்ல நீள நீளமா பாசுமதி அரிசி மாதிரி இருந்துச்சி. நல்லா வயிறு முட்ட சாப்பிட்டு முடிச்சேன். அப்படியே மன்றம் பத்தி

பேசினோம். கொஞ்சம் வாழ்க்கை பத்தி பேசினோம். ரெண்டு பேரும் கண்ணுல தண்ணீ வர சிரிச்சு பேசியிருக்கோம். இது

கொஞ்சம் வித்தியாசம்... சிரிக்கலை...

கொஞ்சம் நேரத்தில வயிறு கடமுடா... சாப்பாடு பிரச்சனையோ?

ஓடினேன் பாருங்க டாய்லெட்க்கு.... கொஞ்சம் வெளிப்படையா சொல்றேன். என்னடா இதைப் போய் சொல்றானேன்னு

தப்பா நினைக்காதீங்க.. நம்மூர்ல ரெண்டு வகை பார்த்திருப்போம். ஒண்ணு உள்ளூர் முறை, இன்னொன்னு பாம்பே முறை..

என்ன சொல்ல வரேன்னு புரியுதுங்களா? . அக்காவீட்ல இருந்தது இண்டர் நேசனல் முறை... கொஞ்சம் கஷ்டம் தான்..

சமாளிச்சுட்டேன்.

சாப்பாடு வெச்சு என்னை கொல்லப் பார்த்த ஓவியாக்காமேல எனக்குத் துளி கூட கோவமில்லை. ஏன்ன்னா அவங்க

என்னோட உடன் பிறவா சகோதரி (பிண்ணனி இசையெல்லாம் வேண்டாம்).. அப்படியே வீட்டை சுத்திப் பார்த்துட்டு

இருந்ததில நேரம் போனதே தெரியல... லண்டனை சுத்தாம ஓவியா வீட்டைச் சுத்தினா பொழப்பு எப்படி இருக்கும்?

பின்னே லண்டனை சுத்திப் பார்க்கும் போதுதானே இண்டர்நேசனல் பிகருங்க நம்மள கொஞ்சம் பார்ப்பாங்க...

ஓவியாக்காவை கிளப்பினேன். லண்டனை ஒரே நாள்ல சுத்திக் காமிக்கணும்.. இல்லாட்டி பெங்களூர் ஆட்டோ வரும்னு

எழுதி கையெழுத்து வாங்கிட்டுத்தான் வீட்டைவிட்டு கிளம்பினோம். நேரா இவங்க படிக்கற காலேஜுக்கு... ஹி ஹி.

அங்கதானே பொண்ணுங்க நிறையா இருக்கும்.... ( இதையெல்லாம் வெச்சு ஆதவன் ஜொள்ளுறானேனு தப்பா ஃபீல்

பண்ணாதீங்க... ஆதவனுக்கு மறுபக்கம் இருக்கு... அதுக்குப் பேரு முதுகுன்னு சொல்லி கிண்டல் பண்ணாதீங்க.. ஆமாம்

சொல்லிப்புட்டேன். )

ஓவியா கல்லூரியில் சோகம் : அடுத்த பாகத்தில்

அன்புரசிகன்
14-07-2007, 06:09 PM
ஆமா... டொயிலட்டுக்குள் என்ன நடந்தது? அது உடைந்துவிடவில்லையே??? :D :D

அமரன்
14-07-2007, 06:15 PM
ஆதவா..மூன்றாம் பாகம் சட்டென்னு முடிஞ்சிருச்சே....சோகம் நமக்கு வந்தால் பிடிக்காது..கதைகளில் அதைப்படிக்க ஆசையாக* இருக்கும்.

அன்பு என்னாதிது..

ஓவியன்
14-07-2007, 06:24 PM
சாப்பாடு வெச்சு என்னை கொல்லப் பார்த்த ஓவியாக்காமேல எனக்குத் துளி கூட கோவமில்லை. ஏன்ன்னா அவங்க

என்னோட உடன் பிறவா சகோதரி (பிண்ணனி இசையெல்லாம் வேண்டாம்).

:shutup: :shutup: :shutup: :shutup: :shutup: :shutup: :shutup: :shutup:

விமர்சிக்க வார்த்தை வருகுதில்லையே ஆதவா!.......................
:shutup: :shutup: :shutup: :shutup: :shutup: :shutup: :shutup: :shutup:

அக்னி
14-07-2007, 06:29 PM
ஆமா ஆதவரே... இடைவெளி விட்டு எழுதினால், பெரிதாகத் தோன்றும் என்ற தந்திரமா...
இதெல்லாம் சரிப்படாது... ஆதவரை மன்றத்தில் கட்டி வையுங்கள்...

aren
14-07-2007, 06:35 PM
அப்படின்னா ஓவியாக்கா வீட்டில் சாப்பிடக்கூடாது என்கிறீர்களா? நல்ல வர்ணனை. தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஆதவா
14-07-2007, 06:40 PM
அன்பு.. உதையெல்லாம் எழுதினா அப்பறம் குப்பையில போட்டிருவாங்க.... ஜாடை மாடையா சொல்றேன் புரிஞ்சுக்கோங்க..... ஒரே சத்தமா இருந்தது..
-----------------------------
அமரரே! பின்னூட்டங்களில் கதையை முடிச்சுடலாமோன்னு ஒரு யோசனை இருக்கு... கவலை வேண்டாம் ....
---------------------------------------------
ஓவியரே! உண்மை சுடுதோ?
-------------------------
அக்னியாரே! ஏற்கனவே உம்மைப் பிடிக்கமுடியாது... நெருப்பாகிவிட்டீர்... இப்போது ஆவியாக அலைகிறீர்!! என்ன செய்ய?

ஆதவா
14-07-2007, 06:42 PM
அப்படின்னா ஓவியாக்கா வீட்டில் சாப்பிடக்கூடாது என்கிறீர்களா? நல்ல வர்ணனை. தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

அண்ணா உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா?

பின்லேடனோட விஷத் துப்பாக்கிகளுக்கு மெட்டீரியலை சரியாக உபயோகிக்க டெமோ காட்டியது யாரு என்று நினைக்கிறீர்கள்?, நம்ம ஓவியா தான்...

போகும்போதே ரெண்டு செட் தோசை வாங்கிக் கொண்டு போகணும்.... இல்லாட்டி நாம பெட் ஆகிடுவோம்.....

ஓவியன்
14-07-2007, 06:44 PM

ஹீ!

ஓவியா அக்கா வந்ததும் அதே துப்பாக்கியோட தான் வருவா!

உம்மைப் பொசுக்க...........:violent-smiley-034:

அன்புரசிகன்
14-07-2007, 06:45 PM
அன்பு.. உதையெல்லாம் எழுதினா அப்பறம் குப்பையில போட்டிருவாங்க.... ஜாடை மாடையா சொல்றேன் புரிஞ்சுக்கோங்க..... ஒரே சத்தமா இருந்தது..

நான் கேட்டது உங்க வயித்துக்குள்ள இருந்து வந்த கடமுடா இல்ல...

நானும் வெளிப்படையாவே கேட்க்கிறேன். அந்த கொமட் இல் நீங்கள் ஏறி இருந்து உடைத்துவிட்டீர்களாமே... உண்மையா,?? :music-smiley-009:

aren
14-07-2007, 06:49 PM
நான் கேட்டது உங்க வயித்துக்குள்ள இருந்து வந்த கடமுடா இல்ல...

நானும் வெளிப்படையாவே கேட்க்கிறேன். அந்த கொமட் இல் நீங்கள் ஏறி இருந்து உடைத்துவிட்டீர்களாமே... உண்மையா,?? :music-smiley-009:

ஆதவன் அவ்வளவு வெயிட்டான பார்டியா.

ஓவியாதான் வெயிட்டான பார்டி என்று மணியா அவர்கள் சொன்னார்கள்.

அன்புரசிகன்
14-07-2007, 06:53 PM
ஆதவன் அவ்வளவு வெயிட்டான பார்டியா.

ஓவியாதான் வெயிட்டான பார்டி என்று மணியா அவர்கள் சொன்னார்கள்.

அதில் சாதாரணமாக இருந்தால் உடையாது. பழக்கதோசத்தில் வில்லங்கமாக ஏறினால் உடையாதா? :D :D :D

ஆதவா
14-07-2007, 06:54 PM
நான் கேட்டது உங்க வயித்துக்குள்ள இருந்து வந்த கடமுடா இல்ல...

நானும் வெளிப்படையாவே கேட்க்கிறேன். அந்த கொமட் இல் நீங்கள் ஏறி இருந்து உடைத்துவிட்டீர்களாமே... உண்மையா,?? :music-smiley-009:

அப்படி ஒரு சாப்பாடு சாப்பிட்டதற்கு அந்த வீட்டையே உடைத்திருக்கவேண்டும்... விட்டுவிட்டேன்............
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−

ஓவியரே! ஓவியாவிற்கு துப்பாக்கியால் சுடத்தெர்ரியாது... அதுசரி.. அவர்கள் ஒழுங்காக தோசைகூட சுடமாட்டார்கள்... ஹி ஹி

aren
14-07-2007, 06:56 PM

அவங்க வீட்டிலேயே எதுக்கு தோசையை சுடனும். தோசையை அவர்கள் வேறு இடத்தில் சுட்டுவிடுவார்கள்.

அன்புரசிகன்
14-07-2007, 06:57 PM
அப்படி ஒரு சாப்பாடு சாப்பிட்டதற்கு அந்த வீட்டையே உடைத்திருக்கவேண்டும்... விட்டுவிட்டேன்............

உப்பிட்டவரை மறக்கக்கூடாது. அவர் பருப்பு தந்திருக்கார். நீங்கள் உடைக்க நினைக்கிறீர்களே...

ஆதவா
14-07-2007, 06:57 PM
அதில் சாதாரணமாக இருந்தால் உடையாது. பழக்கதோசத்தில் வில்லங்கமாக ஏறினால் உடையாதா? :D :D :D

ரசிகரே! சிரித்தேவிட்டேன்.... பலமான சிரிப்பு... அப்படியும் முயற்சித்தேன்.... இடித்தது.. விட்டுவிட்டேன்... ஹி ஹி

ஆதவன் அவ்வளவு வெயிட்டான பார்டியா.

ஓவியாதான் வெயிட்டான பார்டி என்று மணியா அவர்கள் சொன்னார்கள்.

அண்ணா... என்னதான் உண்மையாக இருந்தாலும் இப்படியா போட்டுடைப்பது? இதை அக்கா, அதிலும் என் உ.பி.ச, என் ரத்தத்தின் ரத்தம், பாசமலர், இதைப் பார்த்தால்......... நெஞ்சு வெடிக்கிறது,. கண்கள் பிளிருகிறது... அய்யகோ இதென்ன கொடுமை என்று ஓலமிடமாட்டார்களா?

ஓவியன்
14-07-2007, 06:57 PM
அவங்க வீட்டிலேயே எதுக்கு தோசையை சுடனும். தோசையை அவர்கள் வேறு இடத்தில் சுட்டுவிடுவார்கள்.

எப்படி இப்படியா? :food-smiley-002:

ஆதவா
14-07-2007, 06:59 PM
அவங்க வீட்டிலேயே எதுக்கு தோசையை சுடனும். தோசையை அவர்கள் வேறு இடத்தில் சுட்டுவிடுவார்கள்.

இது அதைவிட பயங்கரமான ஜோக்..... ஒருவேளை..... கடவுளே!! இப்படியும் இருக்குமோ? நான் சாப்பிட்ட சாப்பாடு??

உப்பிட்டவரை மறக்கக்கூடாது. அவர் பருப்பு தந்திருக்கார். நீங்கள் உடைக்க நினைக்கிறீர்களே...

உப்பு அவர் தரவே இல்லை.... :food-smiley-002:

aren
14-07-2007, 07:00 PM
எப்படி இப்படியா? :food-smiley-002:

அது இல்லைப்பா!! சுடர்து என்றால் அடிச்சுக்கின்னு போவது. அப்பா உங்களுக்கு மதராஸ் தமிழே தெரியாதா? கஷ்டம்பா!!!

அக்னி
14-07-2007, 07:00 PM
அண்ணா... என்னதான் உண்மையாக இருந்தாலும் இப்படியா போட்டுடைப்பது? இதை அக்கா, அதிலும் என் உ.பி.ச, என் ரத்தத்தின் ரத்தம், பாசமலர், இதைப் பார்த்தால்......... நெஞ்சு வெடிக்கிறது,. கண்கள் பிளிருகிறது... அய்யகோ இதென்ன கொடுமை என்று ஓலமிடமாட்டார்களா?

உபிச
என்றால்,
உத்தர பிரதேச சர்வதிகாரியா...???

ஓவியன்
14-07-2007, 07:01 PM
அது இல்லைப்பா!! சுடர்து என்றால் அடிச்சுக்கின்னு போவது. அப்பா உங்களுக்கு மதராஸ் தமிழே தெரியாதா? கஷ்டம்பா!!!

ஓ அப்படியா நான் ரொம்ப :icon_rollout: அதான்!.

மனோஜ்
15-07-2007, 10:17 AM
ஆதவா 3 னவது கதையும் சூப்பரப்பு ஒரு நாள் இப்படி ஓயாத நாளாய் இருப்பது அருமை நண்பா

மயூ
15-07-2007, 01:47 PM
என்னவோ இந்தப் பய சொல்றதயெல்லாம் நாம கேக்கணும் என்று டஇருக்கு... எல்லாம் முடிந்து கடைசியில் நான் லண்டன்போகவில்லை என்று சொன்னால்... அப்புறம் நடக்கிறதே வேற!!!

ஓவியன்
15-07-2007, 02:18 PM
என்னவோ இந்தப் பய சொல்றதயெல்லாம் நாம கேக்கணும் என்று டஇருக்கு... எல்லாம் முடிந்து கடைசியில் நான் லண்டன்போகவில்லை என்று சொன்னால்... அப்புறம் நடக்கிறதே வேற!!!

ஹீ!

இந்த சின்னப் பயலுக்கு :icon_rollout: பண்பட்டவர் பதவியெல்லாம் யார் கொடுத்தது?

aren
15-07-2007, 02:21 PM
என்னவோ இந்தப் பய சொல்றதயெல்லாம் நாம கேக்கணும் என்று டஇருக்கு... எல்லாம் முடிந்து கடைசியில் நான் லண்டன்போகவில்லை என்று சொன்னால்... அப்புறம் நடக்கிறதே வேற!!!

போனார்னு அவர் சொன்னாரா. நீங்களா நினைச்சுக்கிட்டீங்கன்ன அவர் என்ன செய்வார்.

மயூ
15-07-2007, 02:28 PM
போனார்னு அவர் சொன்னாரா. நீங்களா நினைச்சுக்கிட்டீங்கன்ன அவர் என்ன செய்வார்.

இந்த வாதம் நல்லாத்தான் இருக்கு!!! :angel-smiley-010:

அன்புரசிகன்
15-07-2007, 02:38 PM
போனார்னு அவர் சொன்னாரா. நீங்களா நினைச்சுக்கிட்டீங்கன்ன அவர் என்ன செய்வார்.

இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு...

ஓவியன்
16-07-2007, 03:44 AM
இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு...

இப்போ என்ன சொல்ல வாறீங்க?:icon_wacko:

aren
16-07-2007, 04:05 AM
இப்போ என்ன சொல்ல வாறீங்க?:icon_wacko:

சரணடைச்சிட்டார்னு அர்த்தம்.

ஓவியன்
16-07-2007, 04:25 AM
சரணடைச்சிட்டார்னு அர்த்தம்.

ஹீ!

பாவமா இருக்கு விட்டுடுவோம்.....:sport-smiley-018:

aren
16-07-2007, 04:49 AM
சரி விட்டுவிடுவோம். இனிமேலாவது நம்ப வம்புக்கு வரவேண்டாம் என்று ஸ்டிர்க்டா சொல்லிப்புடுங்க.

விகடன்
26-07-2007, 03:58 AM
பொதுவாக விஞ்ஞானிகள் முதன் முதலில் ஏதாவது மருந்து கண்டுபிடித்தால் அவற்றை முயலுக்கோ அல்லது எலிக்கோதான் வைப்பார்கள். அதேபோல்த்தான் ஆதவனிற்கு அளிக்கப்பட்ட சமயலுமாக்கும். ஓவியாக்கா ஆதவனில் சமயலை பரீட்சித்துப் பார்த்திருக்கிறார்கள்.

ஆதவா
26-07-2007, 07:24 PM
நண்பரே1 ஜாவா, நீங்கள் சொல்வது முற்றீலும் உண்மைதான். என்ன செய்ய.. அந்த நேரத்தில் நான் பட்ட கஷ்டங்களை சொல்லு மாளாது...

பிகு: இன்னும் இந்த திரியை சம்பந்தப்பட்டவர் பார்வையிடவில்லை...