PDA

View Full Version : உயிர் தவிக்கின்றதுஇனியவள்
14-07-2007, 03:59 PM
கல்லுக்குள் இருக்கும் ஈரம் போல்
உனக்குள்ளும் பாசம் இருப்பதை
நானறிவேன் அன்பே.....

கோபத்தை வேலியாக்கி அன்பை
வெறுப்பாக மாற்றி கைதேர்ந்த
கலைஞரைப் போல் நடித்து
என்னை ஏமாற்றுகின்றாயே
உன்னால் மட்டும் எப்படி
முடிகின்றது இப்படி....

உன் கண்களில் தெறிக்கும் கோபம்
எனக்கு எனக்கு மட்டும் உன் மனதினை
படம் போட்டுக் காட்டுகின்றதெ வெட்ட
வெளி வானம் போல்....

உன் சுடு சொல்லால் கோபம்
வருவதற்கு பதில் ஏன் அன்பே இன்னும்
உன் மேலான காதலை அதிகரிக்கின்றதே....

அந்தி மாலை வேளையின் − உன்
நினைவோடு யன்னலோரம் நிற்கையில்
மின்னலாய் உன் விழிகள் என்னைத்
தீண்டிச் சென்றதைக் கண்டு என் மனம்
ஆகாயத்தில் துள்ளிக் குதித்த*தனை − நீ
அறிவாயா....

முன்பை விட இப்பொழுது கண்ணாடியில்
என்னை நான் அதிகம் பார்க்கின்றேன்
என்னுருவத்தில் உன்னுருவைக் காண்பதற்காய்....

ஆசையாய் பேணி வளர்த்த நிகவிரலை
வெட்டுகின்றேன் கரங்களை நீ தழுவும் போது
நிகம் கீறி உனக்கு வலிக்குமே என்றெண்ணி.....

உன் நினைவோடு சேர்ந்து − நான்
சிரிக்கையில் அதனைக் கண்ட தோழிகள்
உனக்கென்ன பயித்தியமா என கோபக்
குரலில் பேசுவது கூட என் காதில்
விழவில்லையே உன் குரலே காற்றாய்
என் காதில் விழுந்து கொண்டிருக்கின்றதே.....

உனக்கு பிடித்த ஆடைகளை வாங்கிச்
சேமிக்கின்றேன் யாருக்கும் தெரியாமல்
உனக்கு பிடிக்காதவைகளை நானும்
வெறுக்கின்றேன்
வெறுத்த உணவுகளை விரும்பி உண்ணுகின்றேன்
உனக்கு பிடிக்குமே என பிடித்த உணவுகளை
வெறுக்கின்றேன் உனக்கு பிடிக்காதே என...

இன்னும் எத்தனை நாட்களுக்கு − இந்த
இன்ப அவஸ்தை அன்பே வாய் திறந்து
கூறி விடு நான் உன்னைக் காதலிக்கின்றேன் என
உயிர் தவிக்கின்றதே உன் உயிரோடு கலக்க...

அன்புரசிகன்
14-07-2007, 04:39 PM
அழகான வரிகள் இனியவளே அனுபவித்து எழுதியுள்ளீர்கள்.இன்னும் எத்தனை நாட்களுக்கு − இந்த
இன்ப அவஸ்தை அன்பே வாய் திறந்து
கூறி விடு நான் உன்னைக் காதலிக்கின்றேன் என
உயிர் தவிக்கின்றாதே உன் உயிரோடு கலக்க...

மெளன மொழியில் உண்டு
ஆயிரம் காதல்
பதியேற விரும்புகிறாய்
என்னுள் பதியேற்றிய நாள்
நீயறியாயோ...
என்னுள் கலக்க
நாளேது உனக்கு
தினமும் பதி நான்கு
சாவு அணைக்கும் வரை

ஓவியன்
14-07-2007, 04:48 PM

உனக்கு பிடித்த ஆடைகளை வாங்கிச்
சேமிக்கின்றேன் யாருக்கும் தெரியாமல்
உனக்கு பிடிக்காதவைகளை நானும்
வெறுக்கின்றேன்
வெறுத்த உணவுகளை விரும்பி உண்ணுகின்றேன்
உனக்கு பிடிக்குமே என பிடித்த உணவுகளை
வெறுக்கின்றேன் உனக்கு பிடிக்காதே என..

காதலுக்காக, காதலுனுக்காக தன்னை மாற்ற வைப்பது தான் உண்மைக் காதலோ........?

பாராட்டுக்கள் இனியவள்!.

aren
14-07-2007, 05:37 PM
முதலில் இது ஒரு ஆண் அவன் காதலியை நினைத்து பேசுகிறாள் என்று நினைத்தேன். பின்னர்தான் தெரிந்தது இது ஒரு பெண் தன் காதலனை நினைத்து ஏங்குகிறாள் என்று.

அருமை இனியவள் அவர்களே. எப்படித்தான் உங்களுக்கு நேரம் கிடைக்கிறதோ இந்த மாதிரி அழகான கவிதைகளை எழுதுவதற்கு. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
14-07-2007, 06:22 PM
இனியவள் காதல் ஏக்கத்தை அழகாக சொல்லியுள்ளீர்கள். கண்ணாடி முன் பல*மணித்துளிகள் நிற்பதுக்கான காரணம் இப்போது புரிந்தது. பாராட்டுக்கள்.


உனக்கு பிடிக்காதவைகளை நானும்
வெறுக்கின்றேன்

உன்னை எனக்குப் பிடிக்கவில்லை
உன்னையே வெறுப்பாயோ....

ஆதவா
14-07-2007, 06:31 PM
பாராட்டுக்கள் இனியவள்.. காதல் செய்யும் ஏக்கத்தைக் கண்டுகொண்டேன்...

இதைச் சொல்ல எனக்குத் தகுதி இருக்கிறதா தெரியாது..
---------------

வார்த்தைகள் அதிகம் இருக்கின்றன இனியவள்... அதைக் குறையுங்கள்

வர்ணனைகளை கூடுமானவரை காதல் கவிதையில் அள்ளீ வீசுங்கள்.

புதுப்புது சிந்தனைகளைப் புகுத்துங்கள்...

இன்று நிலவாய் ஜொலிக்கும் உங்கள் கவிதை நாளை சூரியனாய் ஒளிதரும்..

வாழ்த்துக்கள்..

இனியவள்
15-07-2007, 09:16 AM
அழகான வரிகள் இனியவளே அனுபவித்து எழுதியுள்ளீர்கள்.


நன்றி அன்பு

இனியவள்
15-07-2007, 09:18 AM
முதலில் இது ஒரு ஆண் அவன் காதலியை நினைத்து பேசுகிறாள் என்று நினைத்தேன். பின்னர்தான் தெரிந்தது இது ஒரு பெண் தன் காதலனை நினைத்து ஏங்குகிறாள் என்று.
அருமை இனியவள் அவர்களே. எப்படித்தான் உங்களுக்கு நேரம் கிடைக்கிறதோ இந்த மாதிரி அழகான கவிதைகளை எழுதுவதற்கு. பாராட்டுக்கள்.
நன்றி வணக்கம்
ஆரென்

நன்றி ஆரென் அண்ணா உங்கள் பாராட்டுக்கு

நேரத்தை நாமாக எடுத்து
கொள்ள வேண்டும்
இல்லா விடின் நேரம்
எம்மை எடுத்து விடும்

இனியவள்
15-07-2007, 09:20 AM
காதலுக்காக, காதலுனுக்காக தன்னை மாற்ற வைப்பது தான் உண்மைக் காதலோ........?
பாராட்டுக்கள் இனியவள்!.

நன்றி ஓவியன்

ம்ம் ஆமாம் என்று தான் நினைக்கிறன் ஓவியன்..

விகடன்
15-07-2007, 09:20 AM
அப்படியே காதல் வயப்பட்டவன் (எனக்குத்தெரிந்த பக்கம் அதுதான்) என்ன செய்வானோ அதை எழுதியிருக்கிறீர்கள்.

கவிதைக்கு பாராட்டுக்கள்.

இதயம்
15-07-2007, 09:20 AM
நன்றி ஆரென் அண்ணா உங்கள் பாராட்டுக்கு

நேரத்தை நாமாக எடுத்து
கொள்ள வேண்டும்
இல்லா விடின் நேரம்
எம்மை எடுத்து விடும்

நீங்க பிறக்கும் போது கத்தினீங்களா.. கவிதை சொன்னீங்களா..?!!

இனியவள்
15-07-2007, 09:21 AM
இனியவள் காதல் ஏக்கத்தை அழகாக சொல்லியுள்ளீர்கள். கண்ணாடி முன் பல*மணித்துளிகள் நிற்பதுக்கான காரணம் இப்போது புரிந்தது. பாராட்டுக்கள்.
உன்னை எனக்குப் பிடிக்கவில்லை
உன்னையே வெறுப்பாயோ....

நன்றி அமர்

உன்னை நான் வெறுக்க
முடியவில்லை அதனாலே
என்னை நான் வெறுக்கின்றேன்

அமரன்
15-07-2007, 09:21 AM
நீங்க பிறக்கும் போது கத்தினீங்களா.. கவிதை சொன்னீங்களா..?!!

கவிதையாக "கத்தி" இருப்பாங்க...

இதயம்
15-07-2007, 09:23 AM
கவிதையாக "கத்தி" இருப்பாங்க...

நீங்கள் இவ்வளவு பெரிய கத்தியா இருப்பீங்கன்னு நான் கத்தவே ... சாரி.. நினைக்கவேயில்லை அமரன்..!!

இனியவள்
15-07-2007, 09:23 AM
பாராட்டுக்கள் இனியவள்.. காதல் செய்யும் ஏக்கத்தைக் கண்டுகொண்டேன்...
இதைச் சொல்ல எனக்குத் தகுதி இருக்கிறதா தெரியாது..
---------------
வார்த்தைகள் அதிகம் இருக்கின்றன இனியவள்... அதைக் குறையுங்கள்
வர்ணனைகளை கூடுமானவரை காதல் கவிதையில் அள்ளீ வீசுங்கள்.
புதுப்புது சிந்தனைகளைப் புகுத்துங்கள்...
இன்று நிலவாய் ஜொலிக்கும் உங்கள் கவிதை நாளை சூரியனாய் ஒளிதரும்..
வாழ்த்துக்கள்..

நன்றி ஆதவா

உங்கள் அறிவுரை என்னை செம்மைப்படுத்தும் ஆதவா உங்கள் ஆலோசனைப் படியே அடுத்த கவிதை எழுத முயற்சிக்கின்றேன் இல்லை எழுதுகின்றேன் நன்றி தோழரே:icon_good:

அமரன்
15-07-2007, 09:23 AM
நன்றி அமர்

உன்னை நான் வெறுக்க
முடியவில்லை அதனாலே
என்னை நான் வெறுக்கின்றேன்

ஊனை வெறுத்த எனக்கு
உன்னை வெறுக்கமுடியவில்லை.
ஃபிரியா பிரியாணி கிடைக்காதே....

இனியவள்
15-07-2007, 09:24 AM
அப்படியே காதல் வயப்பட்டவன் (எனக்குத்தெரிந்த பக்கம் அதுதான்) என்ன செய்வானோ அதை எழுதியிருக்கிறீர்கள்.
கவிதைக்கு பாராட்டுக்கள்.

நன்றி விராடன்

இனியவள்
15-07-2007, 09:25 AM
நீங்க பிறக்கும் போது கத்தினீங்களா.. கவிதை சொன்னீங்களா..?!!

இதை நான் என் அம்மாவிடம் தான் கேட்க வேணும் :icon_hmm:

சூரியன்
15-07-2007, 09:25 AM
அருமையான படைப்பு

இனியவள்
15-07-2007, 09:26 AM
ஊனை வெறுத்த எனக்கு
உன்னை வெறுக்கமுடியவில்லை.
ஃபிரியா பிரியாணி கிடைக்காதே....

ஃபிரியா பிரியாணி கேட்பதற்கு
நான் ஒன்றும் உணவுச்சாலை
நடத்தவில்லையே என் இதயம்
என்ன உனக்கு உண்ணும்
உணவா இதயத்தை உணவாக
சமைத்துத் தருவதற்கு

இனியவள்
15-07-2007, 09:27 AM
அருமையான படைப்பு

நன்றீங்க சூரியன்

இனியவள்
15-07-2007, 09:28 AM
மெளன மொழியில் உண்டு
ஆயிரம் காதல்
பதியேற விரும்புகிறாய்
என்னுள் பதியேற்றிய நாள்
நீயறியாயோ...
என்னுள் கலக்க
நாளேது உனக்கு
தினமும் பதி நான்கு
சாவு அணைக்கும் வரை

பதிவேற்றிய நாளை எனக்கு
சொல்லாமல் உனக்குள் வைத்து
என்னை மெளனத்தால் கொன்று
விட்டு இப்பொழுது சொல்கின்றாயே
என்றோ உன்னை பதிவேற்றி விட்டேன்
என இன்னொருவனோடு நிச்சயமான பின்

அமரன்
15-07-2007, 09:33 AM
ஃபிரியா பிரியாணி கேட்பதற்கு
நான் ஒன்றும் உணவுச்சாலை
நடத்தவில்லையே என் இதயம்
என்ன உனக்கு உண்ணும்
உணவா இதயத்தை உணவாக
சமைத்துத் தருவதற்கு

ரத்தம் இருக்குமிடத்தில்
என்னை அடைத்து விட்டு
வெறி கொள்ளாதே என்கிறாய்....
வெரி சாரி...
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்....

இனியவள்
15-07-2007, 09:59 AM
ரத்தம் இருக்குமிடத்தில்
என்னை அடைத்து விட்டு
வெறி கொள்ளாதே என்கிறாய்....
வெரி சாரி...
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்....

ரத்தம் இருக்குமிடத்தில்
உன்னை அடைத்து வைத்தேன்
உன் பொறுமையின் அளவு
எவ்வளவு என்று பரிசோதிக்க
பொறுமையே இல்லாத உன்னால்
எப்படி காதல் கைகூடும் வரை
பொறுமையாய் இருக்க முடியும்