PDA

View Full Version : மூடநம்பிக்கை -



மீனாகுமார்
14-07-2007, 11:29 AM
என்னுடைய பெங்களூர் அலுவலகத்திற்க்கு என்னுடைய பழைய அமெரிக்க மேலாளர் சென்ற வருடம் விஜயம் செய்திருந்தார். அப்போது அவர் எங்களுக்கெல்லாம் உரையாற்றும் வாய்ப்பு வந்த போது, அதை தொடங்குவதற்க்கு முன் அவர் முதலில் அமர்ந்திருந்த ஊழியரை அழைத்தார். சுமார் அறுபது பேர் கூடியிருந்த கூட்டம் அது. முதலில் இருந்தவரைத் தனியே அழைத்து கிசுகிசு என்று ஏதோ சொன்னார். பின்னர் எங்களிடம் -இந்த அறையின் மூலையில் இருவர் மெதுவாகப் பேசிக் கொண்டிருப்பர், அதைக் கண்டு கொள்ளாதீர்கள்- என்று கூறித் தனது பேச்சு உரையை ஆரம்பித்தார். முதலில் சென்றவர் இரண்டாமவரை அழைத்து தனியே சென்று ஏதோ சொன்னார். அடுத்து இரண்டாமவர் மூன்றாமவரை அழைத்து கிசுகிசுத்தார். இப்படியே தொடர்ந்து செயின்போல் 60 பேரும் கிசுகிசுத்து முடித்தனர். எனது முறை வந்த போது தான் எனக்குப் புரிந்தது என்னவென்று. என்னிடம் எனக்கு முந்தையவர் ஒரு ஆங்கில வாக்கியம் கூறினார். நான் அதை அப்படியே எனக்கு அடுத்தவரிடம் கூற வேண்டும். இதை தனியாக வேறு யாருக்கும் கேட்காத வண்ணம் கூற வேண்டும், அவ்வளவுதான். 60 பேரும் செயினாக சொல்லி முடித்த விட்ட அந்த நேரத்தில் அவரும் தன் பேச்சு உரையை எங்களுக்கு அளித்து முடித்திருந்தார்.

இப்போது அவர் எங்களிடம் கூறினார். இங்கு என்ன நடந்திருக்கும் என்று நீங்களே யூகித்திருப்பீர்கள். அதாவது அவர் ஒரு ஆங்கில வாக்கியத்தை முதலில் ஒருவரிடம் கூறி.. அது ஒருவர் வழியாக மற்றொருவரிடம் சென்ற பின் எப்படி இருக்கிறது என்பது தான் இந்த பரீட்சை. அவர் முதலாமவரிடம் கூறியது-

If I am in a meeting, and if I am waiting for some specific call, I should attend only that call and reject all the other calls.

60வது ஆள் எங்கள் மேலாளரிடம் கூறிய வாக்கியம் -

Don' make phone calls when you are in meeting.

வெறும் அரை மணி நேரத்தில் ஒருவர் கூறிய விசயம் மற்றொருவருக்குச் செல்லும் போது எப்படி சிதைகிறது என்பதை எடுத்துக்காட்டவே அவர் இதை சுவையாக செய்தார். அதுவும் அமெரிக்கர்கள் இந்தியர்களிடம் உரையாடும் போதும் செய்தி பரிமாற்றம் செய்யும் போதும் எப்படியெல்லாம் சிதைவுகளும் பிரச்சனைகளும் வரலாம் என்பதை மேலும் எடுத்துரைத்தார்.

மீனாகுமார்
14-07-2007, 11:29 AM
சரி. இதில் இருக்கும் செய்தி என்ன -

இது நமக்குப் புதியதோ இல்லை வியப்பை அளிக்கும் விசயமோ இல்லை. ஏனெனில் நாம் இதிலேயே ஊறிப்போய் இருக்கிறோம். ஆனாலும் சமயத்தில் மறந்தும் விடுகிறோம். எந்தவித ஊடகங்களும் இல்லாத இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒருவர் ஒரு ரகசியத்தை மற்றவருக்கு சொல்ல வேண்டுமென்றால் அதை வாய் வழியாகத்தான் கூறியிருந்திருக்க வேண்டும். இப்படித்தான் குடும்ப ரகசியங்களும் நாட்டில் நிறைந்திருந்த ரகசியங்களும் ஒருவர் மற்றவரிடம் கூற.. அவர் தன் பிள்ளைகளுக்குக் கூற.. அவர்கள் தம் சந்ததியினர்களுக்கு உரைக்க... செயினாக இப்படி காலம் காலமாக ஆயிர கணக்கான ஆண்டுகள் செய்திகள் மிதந்து வந்திருக்கும். இப்படி வரும் வழியில் அந்த செய்திகள் திரிக்கப்பட்டிருக்கும். சில விசயங்கள் வேண்டுமென்றே கூட திரிக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில் இன்று உள்ள செய்தி பாதுகாப்பும் தனிமையும் அன்று இருந்ததில்லை. அதனால் செய்திகளும் உண்மைகளும் திரிந்திருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக யூகிக்க முடியும். முதன்முதலில் யார் எதைக்கூறியிருந்தாலும் அதை அவரின் நன்மையின் பொருட்டே கூறியிருந்திருக்க வேண்டும். இந்திய கலாச்சாரத்தில் உள்ள ஒவ்வொரு நம்பிக்கைகளும், சடங்குகளும், சாஸ்திரங்களும் இப்படித்தான் கரடுமுரடான பாதைகளில் பயணம் செய்து வந்திருக்கின்றன.

இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் சிலர் இதை உணர்ந்து சிலபல நம்பிக்கைகளுக்கும் உரிய உண்மையான அர்த்தங்களையும் உண்மையான மரபுகளையும் தகுந்த ஆதாரங்களோடு சேகரித்து நூலாகவும் வெளியிட்டுள்ளனர். அவர்களின் முயற்சியும் தொண்டும் மிக அரியதாகும். நமக்கெல்லாம் மகுடம் சூட்டுவதாகவும் அமைகிறது.

உதாரணத்திற்க்கு திருமண சடங்குகளும் அதன் அர்த்தங்களும் சில புத்தகங்களில் அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது. ஏன் அம்மி மிதிக்கப்படுகிறது.. ஏன் அருந்ததி நட்சத்திரம் பார்க்கப்படுகிறது என்று... இன்று திருமணம் புரியும் எத்தனை பேருக்கு அதன் அர்த்தமும் மதிப்பும் தெரியும்.

ஆனால் அதே வேளையில் அந்த நம்பிக்கைகளை என்னவென்று புரிந்து கொள்ளாமலும், அதைப் புரிந்து கொள்ள எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாமலும் செவ்வனே பழிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் பின்னாளில் உணர்பவர்களும் உள்ளனர்.

ஓவியன்
14-07-2007, 11:34 AM
If I am in a meeting, and if I am waiting for some specific call, I should attend only that call and reject all the other calls.

60வது ஆள் எங்கள் மேலாளரிடம் கூறிய வாக்கியம் -

Don' make phone calls when you are in meeting..

நல்லதொரு ஆரம்பம் தொடருங்கள் காத்திருக்கிறேன்.

lolluvathiyar
14-07-2007, 11:37 AM
மீனாகுமார் மிக அழகாக விளக்கி இருகிறீர்கள்,
மூட நம்பிக்கைகளை காரனம் என்ன என்று புரிந்து வைத்து கொள்ள வேண்டும். புரியவில்லை என்றால் அதை விட்டு விட வேண்டும்.
மூடநம்பிக்கை என்ற வார்த்தையில் நம்பிக்கை என்ற வார்த்தையும் வருவதால் அதில் நிச்சயம் நல்ல விசயங்கள் மரைந்திருக்கும்.
ஆனால் கெட்ட சகுனம் ஏன் எப்படி யாரால் ஆரம்பிக்க பட்டது என்று தான் தெரியவில்லை. அது தேவையா

namsec
14-07-2007, 11:50 AM
அருமை அனைவரும் அறியவேண்டியது. நாமே அறியாமல் நாம் செய்த பிழைகளை சுட்டிக்காட்டுவது அனைத்தும் அருமை

இன்றைய சூழ்நிலையில் இதற்க்கு வாய்ப்புகள் குறைவு காரணம் தகவல் தொடர்பு (இன்பர்மேசன் டெக்னாலஜி) வளர்ச்சியே. அனைத்து தகவல்களும் ஆதரத்துடன் பரிமாறப்படுகிறது. சேமிக்க படுகிறது இது உங்களின் மேலாளரின் நோக்கமும் (கான்சப்ட்) அனைவருக்கும் விளங்கும் படி எடுத்துறைத்துள்ளார்

mgandhi
14-07-2007, 11:50 AM
''காலை காப்பி கிளப்பில் காப்பி சாப்பிட்டவன் காப்பி காப்பியாய வாந்தி எடுத்தான்'' என்ற செய்தி பலரை சுற்றி கடைசியாக இப்படி ஆனது

''காலையில் காந்திபார்க்கு அருகிள் ஓருவன் காக்கா காக்கா வாய் வாந்தி எடுத்தான்'' என்று செய்தியின் தன்மையே மாறிவிடும். எந்த செய்தியும் ஒரு இடத்தில் இருந்நு புறப்பட்ட இடத்திர்க்கு வரும் போது மாறி இருக்கும் என்பது உண்மை

எனது பதிவில்'' அர்த்தம் உள்ளவை'' என்ற தலைப்பில் நமது பழய சடங்குகளை விளக்கி எழுதி உள்ளேன்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7478

மீனாகுமார்
14-07-2007, 07:12 PM
மீனாகுமார் மிக அழகாக விளக்கி இருகிறீர்கள்,
மூட நம்பிக்கைகளை காரனம் என்ன என்று புரிந்து வைத்து கொள்ள வேண்டும். புரியவில்லை என்றால் அதை விட்டு விட வேண்டும்.
மூடநம்பிக்கை என்ற வார்த்தையில் நம்பிக்கை என்ற வார்த்தையும் வருவதால் அதில் நிச்சயம் நல்ல விசயங்கள் மரைந்திருக்கும்.
ஆனால் கெட்ட சகுனம் ஏன் எப்படி யாரால் ஆரம்பிக்க பட்டது என்று தான் தெரியவில்லை. அது தேவையா

சரிதான்... அதே போல்.. சில நம்பிக்கைகள் தற்காலத்திற்க்குப் பொருந்தாததாக இருக்கும். அவைகளையும் கைவிடல் வேண்டும்..

கெட்ட சகுனம் - கடினமான கேள்விதான்... நான் யோசித்ததில்லை இது பற்றி..

மீனாகுமார்
14-07-2007, 07:14 PM
எனது பதிவில்'' அர்த்தம் உள்ளவை'' என்ற தலைப்பில் நமது பழய சடங்குகளை விளக்கி எழுதி உள்ளேன்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7478


பலே காந்தி.. அருமையான செய்திகள்...

அமரன்
14-07-2007, 09:23 PM
மீனாகுமார். உங்கள் பதிவுகளை தவறாது படிப்பவன் நான். அனுபவக்குறள் மிகவும் பிடித்தது. இப்போ இது. இவை எனக்குப் புதியன. அதனால் கருத்துச் சொல்ல முடிவதில்லை. தொடருங்கள்..வாழ்த்துக்கள்..நன்றிகள்..எனச் சொல்லிவிட்டு படித்துப் பயன்பெறுகின்றேன்.

இளசு
15-07-2007, 04:00 PM
அழகான செய்முறை ஒன்றைக் கூறி.. திரிபு பற்றிய நல்ல கட்டுரை..
நன்றி மீனாகுமார் அவர்களே..

பூசையின்போது பூனை ஒன்றைக் கட்டாயம் தூணில் கட்டும் கதை எனக்கு நினைவுக்கு வருகிறது..

செவிவழிக் கதைகள் மட்டுமல்ல..
தொன்ம மொழிகளில் எழுதப்பட்ட நூல்கள்..
ஒருவரின் சார்பான பார்வையில் எழுதப்பட்ட வரலாற்று ஏடுகள்..

இவையும் இக்காலத்தினரின் புத்திக்கூர்மை, சாய்மானத்துக்கேற்ப
வாக்குவாதம் செய்யும் பக்கத்திற்கேற்ப
திரித்து, இதுதான் நிஜம் என்று கச்சைக் கட்டுவோருக்கும்
இந்த கட்டுரை பயனளிக்கக்கூடும்!

மெய்ப்பொருள் காண்பதறிவு..
ஆனால் சிற்றற்வுக்கெட்டியதெல்லாம் மெய்ப்பொருளா?????
தாம் அறியாதவை, அறிய இயலாதவை எவை என அறிவதே முதல் அறிவு!
அரைகுறையாய் ஆராய்ந்து அவசரமுடிவுகளை அள்ளித்தெளிப்போருக்கு
சபைப்பேச்சு பற்றிய உங்கள் அனுபவக்குறளும் உதவக்கூடும்..

அன்புரசிகன்
15-07-2007, 07:36 PM
என்னமாதிரி திரிபடைகிறது.... நன்றி மீனாகுமாருக்கு.

அக்னி
17-07-2007, 08:46 PM
மீனாகுமார் அவர்களே, உங்கள் செய்தி தெரிவிக்கும் முறை, விளங்கிக்கொள்ள எளிதாகவும்,
அதேசமயம் ஆர்வத்தையும் தூண்டுவதாகவும் உள்ளது...
எமது பாடசாலைப் பருவத்தில், சில ஆசிரியர்கள் பாடங்களை விளக்கிக்கொல்ல முற்பட்டது, இன்னும் நினைவிலுள்ளது. அவர்களை உங்களிடம் அனுப்ப வேண்டும் எவ்வாறு கற்பிக்கவேண்டும் என்று கற்கவைப்பதற்கு...

பாராட்டுக்கள்...

விகடன்
27-07-2007, 02:48 PM
உண்மைதான் மீனாக்குமார். வசனங்கள் காவப்படும்போது திரிபடையத்தான் செய்கிறது. ஏனெனில் எல்லோரும் சம அளவில் கிரகிக்கும் இயல்பும் கல்வியறிவும் கொண்டிருப்பதில்லைத்தானே.