PDA

View Full Version : தெரியவில்லை

இனியவள்
14-07-2007, 11:21 AM
அமைதியே உருப்பெற்ற
உன்னிடம் எப்படி வந்தது
இந்த அகங்காரம்...

பூமாதேவியே நீயென
பார்த்து பொறாமைப்
பட வைத்த உன் பொறுமை
எங்கே நேற்று வந்த
புயலில் அடித்த் செல்லப்
பட்டு விட்டதா...

அமைதியே வடிவான
உன் திருமுகம் இன்று
அமையற்ற கடல் போல்
ஆர்பாரித்துக் கொண்டு
இருக்கின்றதே....

எதை மறைக்க போடுகின்றாய்
இந்தக் கோபக்காரி வேஷம் − உன்
மனதையா இல்லை மனதை
வருத்தும் வலிகளையா

காரணம் சொல் பெண்ணே
எந்த சுனாமி வந்து உன்
இதயத்தை அடித்து
சென்று விட்டது

ஓவியன்
14-07-2007, 11:29 AM
அத்து மீறும் வரை,
பொறுமை ஒரு
அழகான எரிமலை!

அழகில் ஆபத்திருக்கும்
என்பதைப் போல்
அடிக்கடி தீ கக்கி
ஆரவரித்து ஆர்ப்பரிக்கும்
எரி மலைகள்!.
அவ்வாறே பொறுமையும்.............

எதுவும் எல்லைக்குள்
இருக்கும் வரையே
அழகு இல்லையெனின்
அத்து மீறல்...............

எல்லையைத் தீர்மானிப்பது
சூழல்களும் தன்மைகளுமே..........
சூழலால் அத்து மீறுவது
அத்து மீறுபவனின்
தப்பல்ல அப்படியே
இங்கே கோபப்பட்டவளும்...............................

வரிகளுக்குப் பாராட்டுக்கள் கவியரசியே!. :aktion033:

aren
14-07-2007, 05:03 PM
ஒரு அளவிற்குத்தான் ஒரு பெண் பொருமையுடன் இருப்பாள். அந்த கோட்டைத் தாண்டியவுடன் அவள் கோபத்தின் உச்சிக்குச் சென்று விடுவாள். இதுதான் பெண்.

ஒரு பெண்ணின் நிலமையை அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
14-07-2007, 06:35 PM
இனியவள். இது எனக்கு மிகவும் பிடித்தமான கவிதை. நீங்க இங்கே பெண்ணை வைத்து எழுதியுள்ளீர்கள். நான்கூட இப்படித்தான். சிரிப்பது குறைவு. எப்போது கோபமாக எனது முகத்தை வைத்திருப்பேன். காரணம். நான் தனிமை விரும்பி. மன்றத்தில் மட்டுமே ஓரளவு கலகலப்பாக இருகின்றேன். வலிகளை மறக்கவும் பழையதை நினைக்கவும் புதியதை திட்டமிடவும் தனிமை சிறப்பானது எனபது என் கருத்து. அப்படி அவளும் காதலன் எல்லைமீறல்களால் எதிர்காலத்தை சிந்தித்துக்கொண்டு இருகின்றாளோ.

இனியவள்,ஓவியனுடன் இனி கவிதைகளில் போட்டி போட முடியாது. கலக்குறீங்க. வாழ்த்துக்கள் இருவருக்கும்.

இனியவள்
14-07-2007, 06:37 PM
வரிகளுக்குப் பாராட்டுக்கள் கவியரசியே!. :aktion033:

நன்றி ஓவியன்

அடா இப்படி ஒரு
பதில் கவிதைகளுக்கே
எத்தனை கவிதையென்றாலும்
போடலாமே

இனியவள்
14-07-2007, 06:37 PM
ஒரு அளவிற்குத்தான் ஒரு பெண் பொருமையுடன் இருப்பாள். அந்த கோட்டைத் தாண்டியவுடன் அவள் கோபத்தின் உச்சிக்குச் சென்று விடுவாள். இதுதான் பெண்.
ஒரு பெண்ணின் நிலமையை அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
நன்றி வணக்கம்
ஆரென்

நன்றி ஆரென் அண்ணா

aren
14-07-2007, 06:38 PM
இனியவள். இது எனக்கு மிகவும் பிடித்தமான கவிதை. நீங்க இங்கே பெண்ணை வைத்து எழுதியுள்ளீர்கள். நான்கூட இப்படித்தான். சிரிப்பது குறைவு. எப்போது கோபமாக எனது முகத்தை வைத்திருப்பேன். காரணம். நான் தனிமை விரும்பி. மன்றத்தில் மட்டுமே ஓரளவு கலகலப்பாக இருகின்றேன். வலிகளை மறக்கவும் பழையதை நினைக்கவும் புதியதை திட்டமிடவும் தனிமை சிறப்பானது எனபது என் கருத்து. அப்படி அவளும் காதலன் எல்லைமீறல்களால் எதிர்காலத்தை சிந்தித்துக்கொண்டு இருகின்றாளோ.

இனியவள்,ஓவியனுடன் இனி கவிதைகளில் போட்டி போட முடியாது. கலக்குறீங்க. வாழ்த்துக்கள் இருவருக்கும்.

உங்க பின்னாடி பொன்னு சுத்தனும்னு சொல்றீங்க!! சரிதான் அப்படியே ஆகட்டும்.

நன்றி வணக்கம்
ஆரென்

இனியவள்
14-07-2007, 06:39 PM

ஹீ ஹீ அமர் நானும் அப்படித் தான் அதுதான் கவிதையா போட்டன்

நன்றி அமர்

ஓவியன்
14-07-2007, 06:40 PM
நன்றி ஓவியன்

அடா இப்படி ஒரு
பதில் கவிதைகளுக்கே
எத்தனை கவிதையென்றாலும்
போடலாமே

ஐயகோ உங்க கவிதைகளுக்கெல்லாம் பதில் கவிதைகளா?

முடியாதுடா சாமி!. :icon_wacko:

அமரன்
14-07-2007, 06:42 PM
உங்க பின்னாடி பொன்னு சுத்தனும்னு சொல்றீங்க!! சரிதான் அப்படியே ஆகட்டும்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஆஹா அண்ணா..அப்படி எல்லாம் இல்லைங்க. தனி"மை"யில் வரையும் ஓவியம் அழகானது என்பது என் பாலிசி.

இனியவள்
14-07-2007, 06:43 PM
ஐயகோ உங்க கவிதைகளுக்கெல்லாம் பதில் கவிதைகளா?

முடியாதுடா சாமி!. :icon_wacko:

:icon_wacko: :icon_wacko: :icon_wacko: என் கவிதையோடு எதாவது ஆவி வருதா இப்படி பயப்பிடிரிங்கள் :icon_wacko: :icon_wacko:

aren
14-07-2007, 06:46 PM
ஆஹா அண்ணா..அப்படி எல்லாம் இல்லைங்க. தனி"மை"யில் வரையும் ஓவியம் அழகானது என்பது என் பாலிசி.

ரொம்பவும் தனியா நின்று யோசித்து தானே பேசிக்கொள்ள வேண்டாம். ஓவியன் போன்றவர்கள் வேறுமாதிரி நினைத்துவிடுவார்கள்.

அமரன்
14-07-2007, 06:49 PM
ரொம்பவும் தனியா நின்று யோசித்து தானே பேசிக்கொள்ள வேண்டாம். ஓவியன் போன்றவர்கள் வேறுமாதிரி நினைத்துவிடுவார்கள்.

ஹி...ஹி.....பக்கதில அவர் கூட அப்படித்தான் இருக்காரு..