PDA

View Full Version : பதிவாளர்களுக்கு ஓர் வேண்டுகோள்.சக்திவேல்
14-07-2007, 11:03 AM
பாகிஸ்தான் தீவிரவாதம் பற்றிய திரி சூடு குறைவதற்குள் அதுபற்றிய விவாதத்திரி ஆரம்பிக்கப்பட்டு நான் பங்குகொள்ளும் முன்பே பூட்டப்பட்டுவிட்டது. (மன்ற ஆலோசனை பகுதியில் பூட்டப்பட்ட ஒரே திரி என்ற பெருமை கொன்டுள்ளது).

விவாத தளங்கள், மற்றும் வலைப்பூக்கள் மலிந்து கிடக்கும் இந்நாளில், அங்கு சென்று உங்கள் திட்டுதல்கள், ஏசல்கள், வசைகள், கன்டனங்கள் அதிகாரங்களை கான்பிக்கவேன்டியதுதானே, ஏன் தமிழ்மன்றத்த்தில் கொட்டுகிறீர்கள்? இங்கு நடுநிலையாளர்கள் நிறையபேர் இருக்கின்றார்கள் அவர்கள் கவனத்தை கவரலாம் என்ற முனைப்பினால்தானே? இப்படி எல்லோரும் இறங்கிவிட்டால் தமிழ்மன்றத்திலும் நடுநிலையாளர்கள் இல்லாமல் போவர். பிறகு வேறு விவாததளத்துக்கு போவீர்களா?
(பல காலமாக நடுநிலமையாளர்களாக இருந்து நன்மதிப்பு பெற்றவர்கள்கூட இத்தகைய திரிகளில் பங்குபெறும்போது எல்லோருக்கும் அதிர்ச்சிதான் ஏற்ப்படுகிறது).

மன்றத்தில் சமீபகாலமாக திரிகளை பூட்டுதல் சகஜமாகிவிட்டது இதற்க்கு காரணம் அனைவரும் அறிந்ததே.எவ்விஷயத்தையும் சச்சரவில்லாமல் விவாதிக்கமுடியும் என்று எல்லோரும் அறிந்திருக்கின்றோம், ஆனால் உணர்ச்சிவேகத்தில் அதை மறந்துவிடுகிறோம். சச்சரவை தவிர்க்க எனக்கு தெரிந்த வழிகளை இங்கே இட்டு இருக்கின்றேன்.


1). மதங்களை மற்றும் கடவுளை பற்றிய பதிவுகளை ஆன்மீக பகுதியில் மட்டும் இடுங்கள்.

2). மதகோட்பாடுகளை, மத தலைவர்களை, கடவுள்களை, பகுத்தறிவு கொள்கைகளை, பகுத்தறிவாளர்களை திட்டாதீர்கள். உடன்பாடில்லாத கொள்கைகளுக்கு சம்பத்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டுப்பெறுங்கள்.

3). மன்றத்தில் உள்ள அனைவரும் தமிழ் சகோதரர்களே, அவர்களை ஒரு சார்பாளராக சித்தரிக்காதீர்கள் நீங்களும் சார்பு நிலையை முடிந்தவரை வெளிக்காட்டாதீர்கள்.

4). மன்ற உறுப்பினர்களை குறிபிட்டு குறை சொல்லாதீர்கள், குறைகளிருப்பின் தனி மடலில் சொல்லுங்கள்.

இளசு
14-07-2007, 11:56 AM
மிக நல்ல பதிவு..

நன்றி வெங்கட் அவர்களே

இம்மன்றத்தின் வீச்சும் பயனளவும் சிறிது. அதற்குத்தக்க ஆக்கபூர்வ பதிவுகளில் மட்டும் சக்தியைச் செலவிட்டு முன்னேறலாம்.


குறிப்பாய் மதப்பதிவுகளில் நல்லவற்றை மட்டுமே பதிக்கட்டும்..
அம்மதம் பற்றி குறை சொல்லி ஒருவர் தொடங்கினால் ..
அக்கணமே அங்கே பிரசினை ஆரம்பம் என்று அர்த்தம்..

அறிவு மழுங்கி உணர்வு மேலோங்கும் களம் மதம்..
இதை மறுப்பவர்கள் − உணர மறுப்பவர்கள்!

நான் அறிவார்ந்து ஒரு மதம் போற்றுகிறேன் − என்பதே ஒரு பொய்!
உணர்வு சார்ந்த ஆழ்ந்த நம்பிக்கையே மதம்..

அதை உரசும்போதெல்லாம் பற்றிக்கொள்ளும்..

அவ்வகை விவாதங்கள் இனி எங்கு எழும்பினாலும் முடக்கப்பட்டும்..

எச்சரிக்கை மீறி மன்ற விதிக்குப் புறம்பான இவ்வகைப் பதிவுகள் தருபவர்கள் நீக்கப்படுவார்கள்..

விதிகளை மதிக்காதவர்களுக்கு இங்கே என்ன வேலை???

ஓவியன்
14-07-2007, 11:59 AM
நல்ல பயன் மிகு திரியைத் தொடக்கிய அன்பருக்குப் பாராட்டுக்கள்...........

அண்ணாவின் கூற்றுப்படி மன்ற விதிகளுக்கு அமைய இனிப் பதிவுகள் வரட்டும்........

இதயம்
14-07-2007, 12:05 PM
சூழ்நிலைக்கேற்ற பதிவு. நண்பர்கள் இளசு, வெங்கட் ஆகியோரின் ஆலோசனைகளை நானும் பரிந்துரைத்து, அதன் படி நடக்கவும் முயற்சி செய்வேன்.

பாராட்டுக்கள் வெங்கட்டிற்கு..!

இணைய நண்பன்
14-07-2007, 12:16 PM
தமிழ் என்ற மூச்சில் நேர்மையுடன் வீருநடை போடும் மன்றத்தில் வீணான கலங்கம் தேவையில்லை.பதிவுகள் பதிப்போர் மன்ற விதிமுறைகளை வாசித்து ஆக்கங்களை வழங்கினால் நன்றாக இருக்கும்.மன்றத்தில் ஒருவர் பதிவு செய்ததும் அவருக்கு தனிமடலில் மன்றவிதிமுறைகள் பற்றி ஒரு மடல் அனுப்பி வைத்தால் நன்றாக இருக்கும்

lolluvathiyar
14-07-2007, 12:35 PM
ஆழ சிந்தித்து தந்திருக்கும் பதிப்பு வென்கட்,
உங்களை மனமார பாராட்டுகிறேன்.1). மதங்களை மற்றும் கடவுளை பற்றிய பதிவுகளை ஆன்மீக பகுதியில் மட்டும் இடுங்கள்.

சரியான கருத்து, பெரும்பாலும் திரி பூட்டும் நிலமைக்கு போக காரனம் அது தவறான பகுதிய பதிய பட்ட காரனத்தினால்தான்2). மதகோட்பாடுகளை, மத தலைவர்களை, கடவுள்களை, பகுத்தறிவு கொள்கைகளை, பகுத்தறிவாளர்களை திட்டாதீர்கள்.
இந்த பட்டியலில் அரசியல் தலைவர்களையும் சேர்த்து கொள்ளலாம்.
விவாதிக்கலாம், விமர்சிக்கலாம், ஆதாரம் இல்லாமல் குற்றம் சுமத்தலாம் அதில் தவறில்லை, ஆனால் கீபோர்டுக்கு வந்தபடி திட்ட வேண்டாம், குறிப்பாக எமோசன் ஆகி திட்ட வேண்டாம். இது போன்ற தவறையும் நானும் செய்திருகிறேன்.3).நீங்களும் சார்பு நிலையை முடிந்தவரை வெளிக்காட்டாதீர்கள்.

சார்ப் நிலையை வெளிகாட்டுவதில் தவறில்லை, வென்கட். அது மற்றவரை பாதிக்காமல் இருக்க வேண்டும் அவ்வளவுதான்.4). மன்ற உறுப்பினர்களை குறிபிட்டு குறை சொல்லாதீர்கள்

பிரச்சனையே இங்கு தான் ஆரம்பிக்கிறது என்று கருதுகிறேன். மாற்று கொள்கையை ஒருவர் கடைபிடிக்கிறார் என்பதற்க்காக அவர் நமக்கு எதிரி அல்லவே.குறைகளிருப்பின் தனி மடலில் சொல்லுங்கள்.
அருமையான யோசனை வென்கட், இந்த கருத்தை கூறிய உங்களுக்கு 50 இபணம் தருகிறேன்.

நன்பர்கள் அதையும் மீரி நீங்கள் உனர்ச்சி வசபட்டு ஆர்வகோளாரில் தரகுரைவான பதிவை பதித்து கூச்சமில்லாமல் மன்னிப்பு கேட்டு விடுங்கள், முடிந்தால் பதிவை திருத்தி விடுங்கள்.
அதற்க்காக மன்னிப்பையே பதிப்பாக்கிவிடாதீர்கள்

அன்புரசிகன்
14-07-2007, 01:03 PM
வெங்கட் அவர்களே நன்றி...

உண்மையில் மதம் இனம் அரசியல் பற்றி கதைப்பது கத்தி விளிம்பில் நடப்பது போன்று. மிக அவதானமாக இருத்தல் நன்று. அவ்வகையான விவாதங்களின் போது மிகவும் கண்ணியமக நடத்தல் அவசியம்.

எனக்கு மோகன் அவர்களுடன் இந்திய இலங்கை அரசியல் சம்பந்தமாக விவாதித்த சந்தர்ப்பமும் உண்டு. அந்தச்சமயத்தல் யாரும் கண்ணியம் தவறவில்லை. ஒரு கட்டத்தில் சூடாகிவிடுவோமோ என்று எண்ணி நாமே அந்த விவாதங்களை முடிவுக்கு கொண்டுவந்தோம். தமது தரப்பு நியாயங்களை கணியம் தவறாது மற்றவர்களின் அவதானத்திற்கு கொண்டுவருவது தவறில்லை.

வாத்தியாருடயும் இதயத்துடனும் இனம் மதம் மொழி சம்பந்தமாக அலசி விவாதித்த சந்தர்ப்பமும் உண்டு. அந்தச்சமயத்தில் அது விவாதித்ததிலும் எமது சந்தேகங்களை தீர்த்துக்கொண்டோம். அவ்வகையான அலசல்கள் உண்மையில் வரவேற்க்கத்தக்கது.

சில சமயம் சில கோட்ப்பாடுகள் ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தல் தவறாகத்தெரியும். அதுவே சரியாக அலசி ஆராய்ந்தால் சரியாகப்புலப்படும். இதற்கு பல உதாரணங்கள் உண்டு.

ஆகவே ஒரு வரியில் கூறினால் எந்த விவாதத்தையும் கண்ணியம் தவறாது விவாதித்தால் பிசகாது.

நமது விவாதத்தினால் நமது விவாதத்திறனை வளர்ப்பதிலும் நமக்கு ஏற்படும் சந்தேகங்களை சம்பந்தப்பட்ட நண்பருடன்/நண்பர்களுடன் தீர்த்துக்கொள்வது நன்மை பயக்கும்.

அமரன்
14-07-2007, 07:05 PM
வெங்கட்,இளசு அண்ணா,அன்புரசிகன் மூவரின் கருத்துகளும் வரவேற்கத்தக்கன. நன்றிகள் பலகோடி.

சூரியன்
15-07-2007, 05:32 AM
நல்ல கருத்து

aren
15-07-2007, 08:31 AM
நல்ல சமயத்தில் ஆரம்பிக்கப்பட்ட திரி இது. நாம் இங்கே இளைப்பாற வருகிறோம். இங்கே அனைவரும் சமம். ஆகையால் பகைமை வேண்டாம் என்பது என் தாழ்மையான இருத்து.

பாராட்டுக்கள் வெங்கட்.

நன்றி வணக்கம்
ஆரென்

leomohan
15-07-2007, 05:32 PM
அறிவு மழுங்கி உணர்வு மேலோங்கும் களம் மதம்..
இதை மறுப்பவர்கள் − உணர மறுப்பவர்கள்!

நான் அறிவார்ந்து ஒரு மதம் போற்றுகிறேன் − என்பதே ஒரு பொய்!
உணர்வு சார்ந்த ஆழ்ந்த நம்பிக்கையே மதம்..பொன்னான வார்த்தைகள்.

மதநல்லிணக்கம்
இருவரும் ஒருவர் ஒருவருடைய மதத்தை அதில் உள்ள குறை நிறைகளோட ஏற்று பரஸ்பரம் மதித்து நடத்தல். தான் சார்ந்த மதத்தை தூற்றும் போது வாளாயிருப்பது மத நல்லிணக்கம் அல்ல.

மத சார்பற்று நடப்பது
நமக்கு கீழ் வேலை பார்ப்பவர் எந்த மதத்தை சார்ந்தவர் என்று பார்த்து அவருடைய பதவி உயர்வு பரிந்துரை செய்யாதிருத்தல்,
ஆசிரியர் தம் அனைத்து மாணவர்களை மதம் பார்க்காமல் ஒரு சமநிலையுடன் நடத்துதல்
வேலைக்கு எடுப்பவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்று பார்த்து வேலைக்கு எடுக்காமல் இருத்தல்
கடைதெருவில் இந்த மதத்தவரின் கடையில் தான் வாங்குவேன் என்று நிலை கொள்ளாதிருத்தல்.
மருத்துவர் நோயாளியின் மதம் பார்க்காமல் நோய் தீர்த்தல்

வேறு மதங்களின் ஆக்கரமிப்பை பார்த்து வாளாயிருத்தல் மத சார்பற்று நடப்பதாகாது.

நன்றி

இளசு
15-07-2007, 09:46 PM
. தான் சார்ந்த மதத்தை தூற்றும் போது வாளாயிருப்பது மத நல்லிணக்கம் அல்ல.


நன்றி

நன்றி மோகன்..

என் விருப்பம், வேண்டுகோள் எல்லாம் −

எவரும் எம்மதத்தையும் சாடையாகக் கூட சாடாதிருந்துவிட்டால்
மன்றத்தில் வாளாயிருப்பது என்ற நிலையே வாராதல்லவா..

சாதி,மதத் தூற்றல், சாடல் கூடவே கூடாதென்பது மன்ற விதி..

இனி அப்படி எப்படி பதிவிருந்தாலும் நண்பர்கள் எவரும் நிர்வாகக்குழுவுக்கு தனிமடலில் சுட்டுங்கள்..

கண்டிப்பான தணிக்கைக்கு அவை ஆளாகும்..

அங்கே மற்றவர் சென்று வாதம் புரிய ஆரம்பித்தால் − அது என் அனுபவத்தில் மனக்கசப்பில் மட்டுமே முடிகிறது − தொடக்கத்தில் நிதானம் குறையாத பதிவுகள் இருந்தால் கூட..

காரணம் − வாதப்பொருள் கந்தகமயமானது..

நம் நண்பர்கள் அனைவரும் இந்த மன்றக்கட்டுப்பாட்டுக்கு நிச்சயம் ஒத்துழைக்கவேண்டும் என முடிக்கிறேன்..

(வருபவை நல்லவை என எண்ணி இதை இத்தோடு முடித்துக்கொள்ளலாம்..

இனி இத்திரியில் பதிவுகள் இல்லாமல் இருந்தால் எனக்கு மகிழ்ச்சியே..)