PDA

View Full Version : என்றென்றும் காதல்.....



poo
26-05-2003, 07:43 PM
என் இதயதேவதையைக்காண
காத்திருந்தேன்..
காந்தி பூங்காவின்
புல்வெளியில்..
ஒருமாதம் கழித்து வரும்
மானசீக தெய்வத்தின்
தரிசனத்திற்க்காக..
நகங்களை கொறித்தபடி
மரங்களை வெறித்துக் கொண்டிருந்தேன்..
அவளுக்காக காத்திருப்பதில்தான்
எத்தனை சுகம்...
முதல் சந்திப்பில்
முற்றும் இழந்தபின்
முழுதும் அவள்தானென
மூடிவிட்டேன்..
முகங்களைத் தேடும் முயற்சிகளை..
கூட்டம் கூட்டமாய் மக்கள்
சிறகுவிரித்திருந்தாலும்
என் வானதேவதையின்
வரவு மட்டுமே பெரிதாக..
அவள்தான் எனக்கு எல்லாம்..
இன்பம்.. துன்பம்..
அவள் மடிமட்டுமே சரணாலயம்..
தூங்காத இரவுகள்தான்
நிம்மதி தருகின்றன..
அவள் நினைவுகளால்..
என்னை அடிக்கடி தேடி
அலுத்துக்கொள்வேன்..
முழுவதுமாய் அவளே நிறைந்திருப்பதால்
என்னில் என்னைக்காணமல்
அலுத்துக் கொள்வேன்.. ஆனாலும்..
ஆனந்தம்.. அலுப்பின் முடிவில் ஆனந்தம்..
என் ஒவ்வொரு அசைவுக்கும்
அர்த்தம் அறிந்து
தனிஅகராதி போடும் அழகான ராட்சசி..
ஏற்றங்கள் வந்தபோது ஞானியாய்..
பள்ளங்கள் வந்தபோது ஏணியாய்..
எனக்கு எல்லாமுமாய்..
மின்னல் தாக்கிய உணர்வுகள்..
அதோ..
என் நிலா தவழ்ந்தபடி..
மடிமீது தலைவைத்து
படுத்தாள்..
கேசங்கள் கோதியபடி
ஒருமாதத்தின் நிகழ்வுகளை
மென்றுத் தின்றோம்..
நினைவுகளை அசைபோட்டோம்..
ஆறுமணி ஆகிவிட்டது..
இனி அடுத்த மாதம்தான்..
எழுகையில் தடுமாறிய
அவள் கரம்பற்றினேன்..
கலங்(க்)க(ம்) வேண்டாம்..
மரணம் மடிமேல்தானென
கண்ணீரைத் துடைத்தபடி
நடைபோட்டோம்...

சொத்துக்களோடு
எங்கள் காதலையும்
கூறுபோட்ட மகன் வீட்டிற்கு அவளும்..
மகள் வீட்டிற்கு நானும்..

முத்து
26-05-2003, 08:10 PM
பூ அசத்திட்டீங்க..... கடைசியில் இதை எதிர்பாக்கவேயில்லை............

Narathar
27-05-2003, 05:04 AM
மனசை தொட்டுட்டீங்க பூ!!!
பிரமாதம்....... வாழ்த்துக்கள்!!!

rambal
27-05-2003, 07:50 AM
சிறுகதைகளை கவிதையாக வடிக்கும் இந்த முயற்சி தொடரட்டும்..
பாராட்டுக்கள் பூ..

prabha_friend
27-05-2003, 08:03 AM
இது உண்மையான காதல் .

karikaalan
27-05-2003, 08:06 AM
"ரிவர்ஸ் டிவோர்ஸ்" --- என்னய்யா அநியாயம்... இப்படியுமா நடக்கிறது இவ்வுலகில்...

இதுபோன்று பிள்ளைகள் இருந்தென்ன, போயென்ன.

அழவைத்த கவிதை, பூ ஜி!

===கரிகாலன்

நிலா
28-05-2003, 09:38 PM
அருமையான கவிதை!பாராட்டுக்கள் நண்பரே1

gankrish
30-05-2003, 05:14 AM
[quote]
சொத்துக்களோடு
எங்கள் காதலையும்
கூறுபோட்ட மகன் வீட்டிற்கு அவளும்..
மகள் வீட்டிற்கு நானும்..

இந்த வரிகள் உண்மைகள் பலவற்றை சொல்லாமல் சொல்கிறது. அருமை பூ.

Pauline
31-05-2003, 01:15 PM
உங்கள் கவிதை மனதை வலிக்கச் செய்கிறது...பாராட்டுகள் பூ.

suma
31-05-2003, 08:46 PM
காதல் அழிவதில்லை..
யதார்த்தமான உண்மை.
சூப்பரப்பூ..

poo
02-06-2003, 08:11 AM
அனைத்து உள்ளங்களின் ஆதரவிற்கும் அன்பு நன்றிகள்!!!!!!!!

Nanban
02-06-2003, 09:40 AM
பெற்றோர் காதலையும் கூறு போட்டு விடும் நவ நாகரீக உலகில் நாம்......

puthusu
07-06-2003, 08:23 PM
தம்பி பூவின் கவிதை... சிறு காவியம்...

விகடன்
21-08-2008, 10:46 AM
சற்றேனும் எதிர்பார்த்திராத முடிவுடன் அழகான கவிதை.
பாராட்டுக்கள் பூ அண்ணா..

shibly591
21-09-2008, 01:22 AM
சொக்கிப்பேனேன்....

அருமையான சொல்லாடல்களுடன் கூடிய கவிதை

வாழத்துக்கள்

தீபன்
21-09-2008, 04:13 AM
நாப்பது வரிகளில் கனவுகாண வைத்து இறுதி நான்கு வரிகளில் நனவுக்கு கொண்டுவந்த க(வி)தை.

இளசு
21-09-2008, 09:33 AM
சிறுகதைகளை கவிதையாக வடிக்கும் இந்த முயற்சி தொடரட்டும்..
பாராட்டுக்கள் பூ..

தம்பி பூவின் உண்மை + உணர்ச்சி பெய்து வடித்த கவிதை..

இதைப் படிக்கவும், முத்து, நிலா, அண்ணல், நண்பன் என அந்நாளை
மனம் அசைபோடவும் வைத்த திரி..

மெலெழுப்பியமைக்கும் ஒருங்குறிக்கும் நன்றி விராடா!

தீபா
22-09-2008, 07:37 AM
இது நடக்கிறது...

காதல் மட்டுமல்ல. தாம்பத்தியமும் கூட..

திடீர் திருப்பத்தை எதிர்பாராமல்
தென்றல்...