PDA

View Full Version : பென்ஸ் அவர்களுக்கு



leomohan
14-07-2007, 08:10 AM
பரிசீலனைக்காக இந்த திரியை - பாகிஸ்தானில் வளரும் தீவிரவாதம் - இந்தியா என்ன செய்ய வேண்டும் - இதனை பூட்டியிருந்தீர்கள். பரிசீலனை முடிந்ததா என்று தெரிவித்தால் நாங்கள் தொடர வசதியாக இருக்கும்.

மிக்க நன்றி.

namsec
14-07-2007, 08:13 AM
தனிமடல் மூலம் தெரிவித்திருக்களாம் அல்லவா இதற்க்கு ஒரு திரியா?

lolluvathiyar
14-07-2007, 08:18 AM
சித்தர் சொன்னது போல் தனி மடல் மூலம் தெரிவித்திருக்கலாம் தனி திரி தேவை இல்லாமல் தளத்தை குப்பை அல்லவாக் ஆக்கும்.
நானும் திரியை திறக்க தனி மடல் அனுப்பு கேட்டு கொள்கிறேன்

இதயம்
14-07-2007, 08:28 AM
பரிசீலனையின் போதும், பரிசீலனைக்கு பிறகும் மதவாதத்தை தூண்டும், பிற மதங்களை தாக்கும், மற்ற மத கோட்பாடுகளை முழுதும் அறியாமல் அரைகுறை அறிவோடும், உள்நோக்கத்துடனும் இடப்படும் பதிவுகள் நம் மன்றத்திற்கு தேவையில்லை. காரணம், இது போன்ற திரிகள் நமக்குள் பிளவுகளை ஏற்படுத்தி மோசமான விளைவுகளையே கொடுக்கும். இதற்கு முடக்கி பூட்டப்பட்டுள்ள நிறைய திரிகளை உதாரணமாக சொல்லலாம். பூட்டப்பட்ட அந்த திரியில் இஸ்லாம் பற்றி முழுதும் அறியாமல், உள்நோக்கத்துடன் தீவிரவாதத்திற்கு குரானின் வசனங்கள் அடிப்படையானவை என்ற பிதற்றல்கள், இஸ்லாமிற்கு எதிரான கருத்துக்கள் என்று முஸ்லீம்களை புண்படுத்தும் வகையில் நிறைய உள்ளன. அப்படி முரண்பாடான, விஷமத்தனமான கருத்துக்கள் அனைத்தும் நீக்கப்பட்டால் அந்த திரியில் எழுதியவற்றில் எழுதியவரின் பெயர் மட்டுமே மிஞ்சும். எனவே அந்த திரியை முடக்குவதே சிறந்தது. இனி எதிர்காலத்தில் மதங்களை தாக்கி பதிக்கப்படும் பதிவுகள் பூட்டப்படுவது மட்டுமல்லாமல் அவற்றை நீக்கினால் மட்டுமே இது போன்ற தவறை இனியும் செய்ய தயங்குவார்கள் என் கருத்து. இதை நான் முஸ்லீம்கள் மற்றும் அனைத்து மதங்களைச்சேர்ந்தவர்களின் ஒற்றுமையில் அக்கறை கொண்ட நடுநிலையாளர்களின் பிரதிநிதியாக கூறும் கருத்து.

இந்த விஷயத்தில் மன்ற மேற்பார்வையாளர் மிக கவனமாக செயல்படவேண்டும் என்பது என் வேண்டுகோள் மட்டுமல்ல, எல்லா மதங்களையும் சேர்ந்த, மதவெறியற்ற நடுநிலையாளர்களின் விருப்பம்.

aren
14-07-2007, 08:34 AM
நண்பர்களே, இங்கே எந்த விவாதமாவது நம்முள் காழ்ப்புணர்ச்சியையும் பிரிவினையையும் ஏற்படுத்துமாயின் அந்த பதிவை முடக்குவதைத் தவிற வேறு வழியில்லை. ஆகையால் இங்கே ஆக்கப்பூர்வமான விவாதங்களையே செய்யுங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

இதயம்
14-07-2007, 08:40 AM
நண்பர்களே, இங்கே எந்த விவாதமாவது நம்முள் காழ்ப்புணர்ச்சியையும் பிரிவினையையும் ஏற்படுத்துமாயின் அந்த பதிவை முடக்குவதைத் தவிற வேறு வழியில்லை. ஆகையால் இங்கே ஆக்கப்பூர்வமான விவாதங்களையே செய்யுங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

நன்றி தங்களின் அறிவார்ந்த யோசனைக்கும், புரிதலுக்கும் ஆரென்.!!

lolluvathiyar
14-07-2007, 08:44 AM
மோகன் இதயம் கூறியதை போல நீங்கள் குரான் பற்றி சர்சைக்கு உன்டான* பதிவை நீக்கிவிடுவதாக தெரிவித்து திரியை திறக்க கோரலாம் என்பது என் கருத்து.
இதயம் அவர்களே இஸ்லாம் தீவிரவாதத்தை பற்றி பேசுவது தவறில்லை என்பது என் கருத்து. அதில் சில உன்மைகள் இருகிறது. குரானை இழுத்தது தான் தவறு. திரி நீக்கியவுடன் நாம் அனைவரும் அங்கு உள்ள தனி நபர் சாடல் கருத்துகளை நீக்கி விடுவோம்.
மீண்டும் குரானை இழுக்காமல் பார்த்து கொள்ளலாம்.

மோகன் அவர்களே நீங்கள் குரான் பற்றிய சந்தேகங்களை இதயம் அவர்கள் இஸ்லாம் மார்கம் பற்றிய திரியில் கேட்டு தெளிவு பெரலாமே என்பது தான் என் கருத்து.

அனைவரும் கருத்து பதிவு செய்வோம், எதையும் முன் முடிவு செய்யாமல்

leomohan
14-07-2007, 08:52 AM
இதயம் பல இடங்களில் இந்து மதத்தை நேரிடியாகவும் மறைமுகமாக சாடி வருகிறார்.

தன் மதம் சிறந்தது என்று யாரும் நினைக்கலாம். ஆனால் மற்ற மதங்கள் மட்டம் என்று பேசினால் மற்றவர்களின் உணர்வு பாதிக்கப்படும் என்பதை அவர் உணரவேண்டும்.

சிவசேவகன் மற்றும் நீங்கள் தொடங்கிய பல திரிகளில் பல முறை இந்து மத கோட்பாடுகளை தாக்கி வருகிறார். அதனை தொகுத்து வைத்திருக்கிறேன்.

கேட்க ஆள் இல்லாவிட்டால் பேசிக் கொண்டே போகிறார். அப்படி பிற மதங்களை பற்றி விமர்சனம் செய்பவர் தன் மதத்தில் உள்ள ஓட்டைகளையும் சந்திக்கும் மன பக்குவம் உள்ளவராக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும்.

நான் குரானின் வசனங்களை அப்படியே தளத்திலிருந்து எடுத்து இட்டிருக்கிறேன். இது என் சொந்த கருத்து அல்ல. குரானை எழுதியதும் நான் இல்லை. அதனால் அதனை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். ஒரு மத நூலில் வன்முறை தூண்டும் வசனங்கள் இருப்பதை அனைவரும் படித்து உணரவேண்டும்.

அவ்வாறு நீக்கும் பட்சத்தில் அவை குரானின் வசனங்கள் அல்ல என்று ஏற்றுக் கொண்டதாக கொள்வோம்.

lolluvathiyar
14-07-2007, 08:59 AM
நான் குரானின் வசனங்களை அப்படியே தளத்திலிருந்து எடுத்து இட்டிருக்கிறேன். இது என் சொந்த கருத்து அல்ல. குரானை எழுதியதும் நான் இல்லை. அதனால் அதனை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். ஒரு மத நூலில் வன்முறை தூண்டும் வசனங்கள் இருப்பதை அனைவரும் படித்து உணரவேண்டும்.


நான் நீக்க சொல்லவில்லை மோகன் அவர்களே, அதை மாற்றி பதியுங்கள் என்று தான் கூறுகிறேன்.
தனி நபர் சாடல்களை மரைமுகமாகவும் வேண்டாம் என்பது தான் என் கருத்து. குரானை பற்றி நீங்கள் இதயம் அவர்களின் இஸ்லாம் மார்கம் என்ற திரியில் பதித்து அவர் விளக்கம் கூறிய பின் நீங்கள் அங்கு விவாதிக்கலாமே. தீவிரவாதத்தை பற்றிய திரியில் நான் இஸ்லாம் மதத்தவரை சம்மந்த படுத்துவதை வேண்டாம் என்று கூறவில்லை. அது விவாதம். ஆனால் எடுத்தவுடன் குரானை பற்றி இழுப்பது அவ்வளவு சிறப்பானது ஆகாது என்பது என் கருத்து, அது சாடல் ஆகிவிடும் அல்லவா.

இளசு
14-07-2007, 09:03 AM
நண்பர்களே..

எந்தப் பிரச்சினையைப் பற்றியும் பேச நமக்கு உரிமை இருக்கிறதாய் எண்ணிக்கொள்கிறோம்..

எந்தப் பிரசினையைப் பற்றியும் நமக்குத் தெரிந்த, நமக்குப் பிடித்த, நமக்கு பரிச்சயமான பார்வையில் − பேச நமக்கு உரிமை இருப்பதாய் எண்ணிக்கொள்கிறோம்..

எந்தப் பிரசினையைப் பற்றியும் எங்கும் பேசலாம் என எண்ணிக்கொள்கிறோம்..



எண்ணியபடி செய்யுங்கள்.. ஆனால் மன்றத்தில்

இன்னொரு மதத்தை திட்டி எழுதாதீர்கள்.. இன்னொரு மதத்தைச் சாடாமல் இம்மன்றத்தில் எழுத வேறு களங்களே இல்லையா?

இன்னொரு சகமனிதனை சாடாதீர்கள்.

யார் தொடங்குகிறீர்கள்.. யார் தொடர்கிறீர்கள்... என்பது பிரசினை அல்ல இப்போது..

எல்லா நண்பர்களும் மதப்பூசல் பிரச்னையை விட்டு வெளியே வாருங்கள்.. உடனே.. உறுதியாக..

அந்த வகை விவாதங்களுக்கு இம்மன்றம் இடமல்ல..

புரிந்துகொள்ளுங்கள்...

உங்கள் இவ்வகை கருத்தாடல்களுக்கு இம்மன்றம் இடமளிக்காமைக்கு

வருந்துகிறேன்... ஆனால் நிச்சயம் இடமளிக்க முடியாது..

இதயம்
14-07-2007, 09:06 AM
குரான் பற்றிய கேள்வியை மோகன் என்னிடம் வைத்தபோது அதைக்கேட்க தகுதியாக என் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டும் என்ற என் நிபந்தனைக்கு ஓடியவர்தான் இன்று சர்வதேச தீவிரவாதத்தை தடுக்கும் அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். ஆனால், அடுத்தவர்களை பாதிக்காமல் இருக்கவேண்டியது அவசியம். மதம் என்பது விமர்சனத்தின் பெயரில் பிரச்சினையாக்கப்படும் போது அந்த விவாதத்தையே தடுப்பது தான் தீர்வாக இருக்கும். நான் மதத்தாக்குதல் செய்ததாக சொல்லும் இவர் அந்த நேரத்தில் அதை சொல்லாமல் இப்போது வந்து சொல்வதன் உள்நோக்கம் என்ன..? ஆதரவு திரட்டும் யுக்தியோ..? நான் எழுதும் திரியில் எந்த ஒரு நண்பரும் நான் ஆட்சேபணைக்குரிய விஷயத்தை எழுதியதாக இதுவரை கண்டனம் சொன்னதில்லை. அப்படி சொல்லியிருந்தால் தெளிவு படுத்தியிருப்பேன் அல்லது வருத்தம் தெரிவித்திருப்பேன்.

தீவிரவாதம் என்ற சர்வதேச அளவில் நடப்பதாக சொல்லி குறிப்பிட்ட மதத்தை தொடர்பு படுத்தி நமக்குள் பிளவு ஏற்படுத்தும் இது போன்ற பதிவுகள் மூலம் உலக குப்பைகளை களைந்து உலகத்தை சுத்தமாக்கப்போவதாக சொல்வதற்கு பதிலாக நம் நாட்டிலேயே நம்மைச்சுற்றி தீவிரவாதம், மதவாதம், இனவாதம், வறுமை, கல்வியின்மை, மூடநம்பிக்கை என்று பல குப்பைகள் உள்ளன. அவற்றை சுத்தம் செய்து விட்டு பிறகு நாம் சர்வதேச அளவில் போனால் என்ன..? இந்த திரியின் அடிப்படையான தீவிரவாதம் கூட இங்கு நம் நாட்டில் எல்லா மதத்தவர்களாலும் நடத்தப்படுகிறது. அதைப்பற்றி பேசுவோம். அதற்கு தீர்வு காண முயற்சி செய்வோம்.

உலக வல்லரசான அமெரிக்காவே தீவிரவாதத்தை அதிகாரம் கையில் கொண்டு செய்யும் போது கைகட்டி நாம் கையாலாகாதவர்களாக இருக்கும் போது, சர்வதேச தீவிரவாதத்தை பற்றி பேசவும், அதற்கான தீர்வை அறியவும் நமக்கு சக்தி, அதிகாரம் எனும் தகுதிகள் இல்லாமல் இருக்கும் போது வெறும் வாய்ச்சவடால் விட்டு பேசுவதில் என்ன ஆகப்போகிறது..? நம் மன்றத்தில் பெரும்பாலானவர்கள் படித்தவர்கள், அறிவில் சிறந்த சான்றோர்கள். இணையத்தின் துணை கொண்டு சொல்லப்படும் கருத்துக்கள் கேட்க நன்றாக இருக்கும். ஆனால், அதில் நடைமுறைச்சாத்தியமென்பது இல்லை. உலகநாடுகளே விழி பிதுங்கி நிற்கும் சர்வதேச தீவிரவாதத்தை இங்கு எழுதப்படும் திரி ஒன்றும் செய்துவிடப்போவதில்லை, நமக்குள் பிரிவினையைத்தவிர. அதனால், முதலில் நம் வீட்டை சுத்தப்படுத்துவதில் நம் கவனத்தை செலுத்துவதே சிறப்பு என்பது என் கருத்து.

lolluvathiyar
14-07-2007, 09:29 AM
பொருமை, இதயம் அவர்களே, அந்த திரியை பூட்டும் அளவுக்கு கொண்டு சென்றதில் நான், நீங்கள் மோகன் ஆகிய மூவருக்கும் பங்கு உண்டு. ஆட்சேபகரமான கருத்துகளை நீக்கிவிட்டு அந்த திறக்கலாம் அல்லவா? பயன் உள்ளதா என்று பார்த்தால் நாம் எந்த விவாதமும் அவசியமற்றதே.
ஹிந்து மதத்தை பற்றி பல இடங்களில் தரகுரைவாக தாக்கபட்டிருப்பதை நீங்கள் அறிந்ததே, ஆனால் நான் அந்த திரிகளை முடக்க கோரவில்லை. என்னால் முடிந்த அளவுக்கு விளக்கம் தர முயன்றேன்.

மதத்தை பற்றி பேசும் போது நீங்களும் இளசு அவர்களும் மன்றத்தில் பிளவுகள் வரும் என்று கூறுகிறீர்கள். நான் மன்றத்துக்கு புதியனானாலும், வயதில் மூத்தவன் என்ற அடிபடையில் ஒன்று மனதிலொ உள்ளவற்றை வெளியே தந்து நாம் விவாதம் பன்னும் போது தான் உன்மையில் உறவு வலுக்கிறது
பொதுவாக வரம்பு மீரிய பதிவுகளை நீக்க சொல்லுவோம், திரியை முடக்க சொல்லவேண்டாம் என்பது கருத்து.

ஓவியன்
14-07-2007, 09:44 AM
எண்ணியபடி செய்யுங்கள்.. ஆனால் மன்றத்தில்

இன்னொரு மதத்தை திட்டி எழுதாதீர்கள்.. இன்னொரு மதத்தைச் சாடாமல் இம்மன்றத்தில் எழுத வேறு களங்களே இல்லையா?

இன்னொரு சகமனிதனை சாடாதீர்கள்.

யார் தொடங்குகிறீர்கள்.. யார் தொடர்கிறீர்கள்... என்பது பிரசினை அல்ல இப்போது..

எல்லா நண்பர்களும் மதப்பூசல் பிரச்னையை விட்டு வெளியே வாருங்கள்.. உடனே.. உறுதியாக..

அந்த வகை விவாதங்களுக்கு இம்மன்றம் இடமல்ல..

புரிந்துகொள்ளுங்கள்...

உங்கள் இவ்வகை கருத்தாடல்களுக்கு இம்மன்றம் இடமளிக்காமைக்கு

வருந்துகிறேன்... ஆனால் நிச்சயம் இடமளிக்க முடியாது..

அழுத்தமான யதார்த்தமான கருத்துக்கள், தலை வணங்குகிறேன் அண்ணா!

எல்லோரும் இதனைக் கருத்தில் கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்...........

இதயம்
14-07-2007, 09:47 AM
நான் உணர்ச்சி வசப்பட்டு என் சுய அறிவை இழக்கவில்லை. மிக, மிக தெளிவாக இருக்கிறேன், சிந்திக்கிறேன். நண்பர் இளசு அவர்களின் கருத்தை முழுதும் வரவேற்கிறேன். பிற மதம் குறித்து தரக்குறைவான தாக்குதல்கள் இருப்பதாக தெரிவித்திருக்கிறீர்கள். எங்கு யார் எழுதியதில் என்பதை நீங்கள் சொல்லவில்லை. நீங்கள் குறிப்பிட்டது என் திரி தான் என்றால், அதில் உண்மை இருக்கிறது என்று நடுநிலையாளர்கள் சொல்லும் பட்சத்தில் நண்பர்கள் குறிப்பிடும் பகுதிகளை நான் நீக்க சம்மதிக்கிறேன். என் பதிவில் முரண் இருந்தால் நீங்கள் நீக்கச்சொல்ல வேண்டியதில்லை, குறிப்பிட்டால் போதும். நானே நீக்கிவிடுகிறேன்.

மதவெறி பிடித்து மனித மனங்களை காயப்படுத்தும் மிருகம் அல்ல நான். அது மட்டுமல்லாமல், என் பதிவுகள் மற்ற மத நண்பர்களை புண்படுத்தும் விதத்தில் இருந்தால் ஆன்மீகப்பகுதியில் இருக்கும் என் திரியை மேலும் தொடராமல் நிறுத்திவிடுகிறேன். மன்ற அமைதிக்கு என்னால் இன்னும் செய்ய முடியும்.? எனவே, வாத்தியார் கண்டனத்திற்குரிய பகுதியாக தெரிவித்த பகுதியையும், மேற்பார்வையாளர்கள் மன்ற ஒற்றுமைக்கு நான் செய்ய வேண்டியதையும் பரிந்துரைக்க விரும்புகிறேன்.

ஆனால், மன்றத்தில் விஷம் விதைக்கும் குறிப்பிட்ட திரி உயிர் பெறுவதில் எனக்கு உடன்பாடில்லை. நியாயம் என் பக்கம் இருக்கிறது என்று நான் உறுதியாக நம்புவதால் என் கருத்தில் மாற்றம் எதுவுமில்லை என்பதை மேற்பார்வையாளர்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். விமர்சனத்திற்குரிய தீவிரவாத திரி, நீங்கள் குறிப்பிட்ட என் திரி குறித்து மற்ற நண்பர்களும் தன் கருத்தை தெரிவித்தால் நியாயம் பிறக்க ஏதுவாக இருக்கும்.

aren
14-07-2007, 09:49 AM
இந்த திரியை இத்தோடு நிறுத்திக்கொள்ளலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

கண்காணிப்பாளர்களே இதை மூடிவிடவும்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஆதவா
14-07-2007, 10:01 AM
நண்பர்களே!

உணர்ச்சிகள் மிகுந்த களங்கள் சில. அவற்றுள் மதம் சாதி போன்றவைகள் அடங்கும். நாம் எப்படிப்பட்ட புத்திசாலியாக இருப்பினும் நாம் அறியாமல் மதத்தில் தவறிழைத்திருப்போம். அல்லது விவாதத்தில் தவறி பயன்படுத்தியிருப்போம். அவை அடுத்தமதத்தை. மோகன் அவர்கள் இந்தியாவின் பங்கைப் பற்றி பேசிக் கொண்டே குரானை இழுக்க அவசியமில்லை. அத்தோடு இதயம் அவர்களும் லொள்ளு வாத்தியார் அவர்களும் திரி பூட்டியதில் பங்குண்டு என்பதை ஒத்திருக்கிறார்கள். உணர்வுகளைக் கட்டுப்படுத்தாவிடில் உள்ளம் உறங்காது. தயவு செய்து இந்த மத விவாதங்களைத் தவிரும்படி கேட்டுக் கொள்கிறோம். அந்த திரியின் தொடர்ச்சியாக இந்த திரி செல்வது சரியல்ல. ஆரோக்கியமானதல்ல.

மோகன் மற்றும் இதயம் ஆகியோர் வேற்று மதத்தினர் ஆகையால் ஒருவருக்கொருவர் குற்றம் சொல்லக் கண்டேன். முடிந்தால் எந்த இடத்தில் எந்த மதத்தைப் பற்றி இழிவாக பேசியிருக்கிறார்கள் என்பதைப் பற்றிய விபரங்கள் கொடுக்கமுடியுமானால் தயவு செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறோம். எந்த மதத்தையும் இழிவு படுத்தும் வாக்கியங்கள் நம் மன்றத்தில் இருத்தலாகாது.

அதோடு வீண்விவாதங்கள் தொடாரமல் இருக்கும் காரணத்தினால் திரி பூட்டப்படுகிறது.

leomohan
14-07-2007, 10:07 AM
மன்னிக்க வேண்டும் ஆரென். ஒரே ஒரு கருத்து


இவர் தன் மதத்தின் மீது வெறியோடு இருந்தால் அது மத பற்று
இதுவே நாம் நம் மதத்தின் மீது பற்று கொண்டால் மத வெறி. பலே நல்ல நடுநிலையான பார்வை

அயிரை மீன் குழம்பு வைத்தால் இந்தியாவின் எல்லா பிரச்சனைகள் தீர்ந்துவிடும். ஆனால் தீவிரவாதம் தடுப்பதை பற்றி பேசினால் பயனற்ற திரி. நாடு ஏழை நாடாக மாறிவிடும். தமாஷ் பா தமாஷ்.

இதயம்
14-07-2007, 10:13 AM
இடம் பொருள் ஏவல் மோகனுக்கு தெரியாததால் வந்த வினை தான் இவ்வளவும். சமையல்கலை பகுதியில் அயிரைமீன் குழம்பு பற்றி தான் எழுத முடியும், உங்களுடைய தீவிரவாதம் பகுதியை அங்கு எழுதினால் உங்களை வேறு மாதிரியாக கருதி விடுவார்கள். நீங்கள் உடனடியாக அமெரிக்க அதிபர் புஷ்ஷை தொடர்பு கொள்வது நல்லது. காரணம், உலக தீவிரவாதத்திற்கு உங்களிடம் மட்டுமே தீர்வு இருக்கிறது. நீங்கள் எழுதும் தீர்வுகள் இறுதியில் பூட்டப்படுகின்றன என்பது மட்டும் தான் உங்கள் சாதனை. வாழ்த்துக்கள்..!!

எனக்கு மதம் என்று எதுவும் இல்லாத போது வெறி வருவதற்கு வாய்ப்பில்லை. காரணம், நான் மதம் சொல்லும் நற்கருத்துக்களை மட்டுமே பின்பற்றுகிறேன். ஐயா..! இந்த திரியை உடனடியாக பூட்டுங்கள். இல்லாவிட்டால் வாயில் வந்ததை எழுதி, எழுதி மேலும் குப்பை மேடாக ஆகிவிடும்.