PDA

View Full Version : எல்லாமே அழகு

சிவா.ஜி
14-07-2007, 07:09 AM
இடையழகு
நடையழகு
சடையழகு
உன் விழி உதிர்க்கும்
விடையழகு!

பேச்சழகு
மூச்சழகு−சாயப்
பூச்சழகு−பார்வை
வீச்சழகு!

சொல்லழகு
பல்லழகு
உள்லழகு−புருவ
வில்லழகு!

காலழகு
மேலழகு
தோளழகு−விழி
வாளழகு!

என்றும் மெய் அழகு,
இக்கவிதையின் பொய் அழகு!

aren
14-07-2007, 07:11 AM
இது ஒரு அழகுக்கவிதை. அருமையாக உள்ளது. பாராட்டுக்கள் சிவா. ஜி அவர்களே.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
14-07-2007, 07:14 AM
சிவா உங்களுக்கு குசும்பும் அதிகம்,தைரியமும் அதிகம்.
உங்களால்.எப்படி தைரியமாகச் சொல்ல முடிந்தது.மன்றம் கண்ணில் சிக்கலையோ..
நல்ல சொல்லாடல். ரசித்தேன் என்பதை விட லயித்தேன் என்பது பொருத்தமாக இருக்கும். பூச்சழகு...குசும்பு சஸ்திதான்..
பாராட்டுகள்.

சிவா.ஜி
14-07-2007, 07:15 AM
இது ஒரு அழகுக்கவிதை. அருமையாக உள்ளது. பாராட்டுக்கள் சிவா. ஜி அவர்களே.

நன்றி வணக்கம்
ஆரென்

மிக்க நன்றி ஆரென். ('அவர்களே' வேண்டாமே...அந்நியப்படுத்துகிறது)

சிவா.ஜி
14-07-2007, 07:19 AM
சிவா உங்களுக்கு குசும்பும் அதிகம்,தைரியமும் அதிகம்.
உங்களால்.எப்படி தைரியமாகச் சொல்ல முடிந்தது.மன்றம் கண்ணில் சிக்கலையோ..
நல்ல சொல்லாடல். ரசித்தேன் என்பதை விட லயித்தேன் என்பது பொருத்தமாக இருக்கும். பூச்சழகு...குசும்பு சஸ்திதான்..
பாராட்டுகள்.
நன்றி அமரன். அப்பா சுடச்சுட விமர்சனம். மன்ற உறவுகளின் அன்பு என்னை நெகிழ்த்துகிறது. ஆரெனின் ஆன் தி ஸ்ப்பாட் பின்னூட்டம்,உங்களின் அதிவேக பின்னூட்டம்....அசத்துறீங்க. மிக்க நன்றி.

இனியவள்
14-07-2007, 07:50 AM
கவிதை படித்ததும்
மூக்கு மேல் விரல் வைக்க
வத்த சொல்லாடல் அழகு

அழகு அழகு என்று சொல்லி
அழகை அழகாக்கிய வரிகள்
அழகு

ஆக மொத்தத்தில்
சிவா ஜீ தந்த
கவிதை அழகோ அழகு

வாழ்த்துக்கள் சிவா ஜீ

சிவா.ஜி
14-07-2007, 08:15 AM
கவிதாயிணி இனியவளின் பாராட்டு எனக்கு நூறு கோப்பை பூஸ்ட் குடித்தது போல உள்ளது. எனக்கு ஒரு சந்தேகம்... நீங்கள் என்னுவது எழுதுவது எல்லாமே கவிதைதானா...? மிக மிக நன்றிகள் இனியவள்.

leomohan
14-07-2007, 08:17 AM
என்றும் மெய் அழகு,
இக்கவிதையின் பொய் அழகு!

ஏத்திவுட்டு டப்புன்னு இறக்கிட்டீங்களே.

சிவா.ஜி
14-07-2007, 08:19 AM
ஏத்திவுட்டு டப்புன்னு இறக்கிட்டீங்களே.

ச்ச்சும்ம்மா ஒரு ட்விஸ்ட் வேணாமா மோகன் சார்...?

இனியவள்
14-07-2007, 08:22 AM
கவிதாயிணி இனியவளின் பாராட்டு எனக்கு நூறு கோப்பை பூஸ்ட் குடித்தது போல உள்ளது. எனக்கு ஒரு சந்தேகம்... நீங்கள் என்னுவது எழுதுவது எல்லாமே கவிதைதானா...? மிக மிக நன்றிகள் இனியவள்.

எண்ணுவதை கவிதையாக்க முயற்ச்சிக்கின்றேன் சிவா.ஜீ
எல்லாம் இங்கை வந்ததில இருந்து தான வருது

ஓவியன்
18-07-2007, 08:12 PM
ஆகா சிவா!

இதனைத்தான் நம்ப பசங்க பப்பா மரத்திலே ஏத்திட்டு தள்ளி விடுறது என்பார்கள்......

நன்றாகவே இரசித்தேன், உங்கள் வரிகளில் லயித்தேன் − மனதாரப் பாராட்டுகிறேன் சிவா.ஜி

theepa
18-07-2007, 11:03 PM
நன்பரே உங்கள் கவி றோம்ப அழகாக உள்ளது வாழ்த்துக்கள்

சிவா.ஜி
19-07-2007, 04:50 AM
மிக்க நன்றி ஓவியன், தீபா.