PDA

View Full Version : என்னை மாற்றிக்கொள்கிறேன்



aren
14-07-2007, 03:51 AM
என் பிரியமானவளே
நீ இன்றி
என் உயிரில்லை
நான் இன்றி
உன் உயிரில்லை

நான்
நீ என் காதலை
ஏற்றுக்கொள்
என்கிறேன்

நீ
உன் காதலை
ஏற்றுக்கொள்ள
முடியாது என்கிறாய்

ஏன்
நீ மேட்டுக்குடியில்
பிறந்த்தாலா

நான்
கீத்துக் குடிசையில்
பிறந்ததாலா

நீ
அதிகம் படித்துவிட்டாய்
என்பதாலா

நான்
அதிகம் படிக்கவில்லை
என்பதாலா

நீ
அழகுப்பதுமை
என்பதாலா

நான்
கரிபால்டி
என்பதாலா

காதல்
எதைப்பார்த்தும்
வருவதில்லையே

நீ
என்னவள் என்று
மனம் சொல்கிறது

நீ
எனக்காகவே பிறந்தவள்
என்று சொல்கிறது

நீ
உயிருள்ளவரை உன்னை
கண்களின் இமைபோல
பார்த்துக்கொள்கிறேன்

நான் என்ன செய்யவேண்டும்
உன் இரும்புபோல இருக்கும் மனதை
பஞ்சுபோல மாற்ற

என்னை
மாற்றிக்கொள்ள
வேண்டுமா

நான்
விட்ட படிப்பை
தொடர்கிறேன்

நான்
படித்து முடித்து
வேலையில் சேருகிறேன்

நான்
உன்னை வைத்து
காப்பாற்றுவேன்

நான்
என்னையே முழுவதுமாக்
மாற்றிக்கொள்கிறேன்

ஆனால்
உன்னை காதிலப்பதை
மட்டும்
மாற்றிக்கொள்ள
மாட்டேன்

திரும்பவும் வருகிறேன்
எனக்காக
அதுவரை காத்திருப்பாயா!!!!

வெற்றி
14-07-2007, 03:58 AM
ஆம் காதல் பெரிது தான்...அதை யாருக்காவும் மாற்றிக்கொள்ள தேவையில்லை...ஒரு சின்ன (மொக்கை) சந்தேகம்???? திரும்பி வரும்போது மட்டும் கரிபால்டி கலர் அரவிந்த சாமி.அப்பாஸ் மாதிரி ஆயிடுமா என்ன??..(கோபிக்கவேண்டாம் சும்மா டமாஸ்)

aren
14-07-2007, 04:01 AM
ஆம் காதல் பெரிது தான்...அதை யாருக்காவும் மாற்றிக்கொள்ள தேவையில்லை...ஒரு சின்ன (மொக்கை) சந்தேகம்???? திரும்பி வரும்போது மட்டும் கரிபால்டி கலர் அரவிந்த சாமி.அப்பாஸ் மாதிரி ஆயிடுமா என்ன??..(கோபிக்கவேண்டாம் சும்மா டமாஸ்)

காதல் துளிர்விடத் தொடங்கினால் என்னென்ன விஷயங்கள் அசிங்கமாகத் தோன்றியதோ அனைத்தும் அழகாகத் தோன்றும். கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு என்று பாடத்தோன்றும்.

வெற்றி
14-07-2007, 04:08 AM
காதல் துளிர்விடத் தொடங்கினால் என்னென்ன விஷயங்கள் அசிங்கமாகத் தோன்றியதோ அனைத்தும் அழகாகத் தோன்றும். கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு என்று பாடத்தோன்றும்.

அதென்னமோ சரி தங்க..ஆன திருமதி மொக்கை கல்யாணம் ஆன புதிதில் நான் தூங்கும் போது கூட பார்க்க அழகாய் இருக்கேன்னு சொல்லும் ஆனா இப்போ எல்லாம் திட்டுது (கொறட்டை)!!!

ஷீ-நிசி
14-07-2007, 04:09 AM
இத்தனை வீரியமான காதல் கண்டிப்பாக ஈடேறும்..

இரும்பு மனதை கரும்பு மனதாய் மாற்றும்...

வாழ்த்துக்கள் ஆரென்!

aren
14-07-2007, 05:07 AM
நன்றி ஷீ−நிசி அவ*ர்க*ளே.

இரும்பு
க*ரும்பு

நோட் செய்துகொன்டேன். அடுத்த* முறை த*வ*றாம*ல் உப*யோகிக்கிறேன். புதிய* மாண*வ*ன். கொஞ்ச*ம் த*டுமாற்ற*ம். ப*ழ*கினால் கொஞ்ச*ம் எளிதாகும் என்று நினைக்கிறேன்.

ந*ன்றி வ*ண*க்க*ம்
ஆரென்

சிவா.ஜி
14-07-2007, 05:07 AM
காதலுக்காக எதைவேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் ஆனால் காதலிக்கும் உணர்வுகளை மட்டும் மாற்றக்கூடாது. காதல் என்னவெல்லாம் செய்யும் என்பதை ஆரென் மிக அழகாக சொல்லியிருக்கிறார். எத்தனை உறுதி மொழிகள்.... அத்தனையும் அவள் அங்கீகாரத்தைப்பெறத்தான் என்று நினைக்கும்போது..இந்த காதல் எத்தனை சக்திவாய்ந்தது என்று தெரிகிறது. பாராட்டுக்கள் ஆரென்.

aren
14-07-2007, 05:27 AM
காதலுக்காக எதைவேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் ஆனால் காதலிக்கும் உணர்வுகளை மட்டும் மாற்றக்கூடாது. காதல் என்னவெல்லாம் செய்யும் என்பதை ஆரென் மிக அழகாக சொல்லியிருக்கிறார். எத்தனை உறுதி மொழிகள்.... அத்தனையும் அவள் அங்கீகாரத்தைப்பெறத்தான் என்று நினைக்கும்போது..இந்த காதல் எத்தனை சக்திவாய்ந்தது என்று தெரிகிறது. பாராட்டுக்கள் ஆரென்.

நன்றி சிவா.ஜி அவர்களே.

காதலுக்காக பலர் தங்களையே மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதன் தாக்கம்தான் நான் எழுதியது. எனக்கு எழுதத்தெரியாது, இப்பொழுதுதான் பழகுகிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஷீ-நிசி
14-07-2007, 05:53 AM
நன்றி ஷீ−நிசி அவ*ர்க*ளே.

இரும்பு
க*ரும்பு

நோட் செய்துகொன்டேன். அடுத்த* முறை த*வ*றாம*ல் உப*யோகிக்கிறேன். புதிய* மாண*வ*ன். கொஞ்ச*ம் த*டுமாற்ற*ம். ப*ழ*கினால் கொஞ்ச*ம் எளிதாகும் என்று நினைக்கிறேன்.

ந*ன்றி வ*ண*க்க*ம்
ஆரென்

ஹா ஹா.. செம ஷார்ப்ங்க நீங்க:music-smiley-010:

aren
14-07-2007, 06:09 AM
ஹா ஹா.. செம ஷார்ப்ங்க நீங்க:music-smiley-010:

எல்லாம் நீங்க*ள் க*ற்றுக்கொடுத்த*துதான்.

ந*ன்றி வ*ண*க்க*ம்
ஆரென்

அமரன்
14-07-2007, 06:32 AM
அண்ணா ஒருநாளைக்கு ஒரு கவிதை என்னும் ரீதியில் கலக்குகின்றீர்கள். ஆழமான காதலை அழகாகச் சொல்லியுள்ளீர்கள். உண்மை காதலென்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வேறு உணர்த்துகின்றது கவிதை. அநேக இடங்களில் முந்தைய கவிதையில் ஷீ சொன்ன எதுகை மோனை வந்துள்ளது. தொடருங்கள். வாழ்த்துச்சொல்ல வயதில்லை. மகிழ்ச்சியில் ஆழ்த்தியமைக்கு நன்றிகள் அண்ணா.

lolluvathiyar
14-07-2007, 06:39 AM
கவிதை அருமையாக இருகிறது,
ஆனால் வேண்டாம் என்ற பென்னை வற்புருத்தல்
போல ஒரு ஒரு தோற்றம் தருகிறதே.
படித்து முடித்து வரும் வரை ஒரு பெண்
தன் இளமையை வீண் செய்து காத்திருக்க வேண்டுமா

இனியவள்
14-07-2007, 08:10 AM
ஆரென் அண்ணா

கவிதை கலக்கல் அண்ணா :aktion033:

வாழ்த்துக்கள்

aren
14-07-2007, 08:12 AM
அண்ணா ஒருநாளைக்கு ஒரு கவிதை என்னும் ரீதியில் கலகின்றீர்கள். ஆழமான காதலை அழகாகச் சொல்லியுள்ளீர்கள். உண்மை காதலென்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வேறு உணர்த்துகின்றது கவிதை. அநேக இடங்களில் முந்தைய கவிதையில் ஷீ சொன்ன எதுகை மோனை வந்துள்ளது. தொடருங்கள். வாழ்த்துச்சொல்ல வயதில்லை. மகிழ்ச்சியில் ஆழ்த்தியமைக்கு நன்றிகள் அண்ணா.


ந*ன்றி அம*ர*ன் அவ*ர்க*ளே. நீங்க*ளெல்லாம் சொல்லிக்கொடுத்ததுதான் அது.

ந*ன்றி வ*ண*க்க*ம்
ஆரென்

aren
14-07-2007, 08:15 AM
கவிதை அருமையாக இருகிறது,
ஆனால் வேண்டாம் என்ற பென்னை வற்புருத்தல்
போல ஒரு ஒரு தோற்றம் தருகிறதே.
படித்து முடித்து வரும் வரை ஒரு பெண்
தன் இளமையை வீண் செய்து காத்திருக்க வேண்டுமா

தேவையானது கேட்டால்தான் கிடைக்கும். நமக்கு பிடித்தது நம்மால் நிச்சயமாக வைத்து காப்பாற்ற முடியும் என்ற நிலையில் இருந்தால் முயற்சி செய்வதுதானே முறை. அதற்காக தன்னை கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டுமானால் அதையும் செய்வதுதானே சரி. விட்டுக்கொடுத்து வாழ்வதுதானே வாழ்க்கை. அவளும் விட்டுக்கொடுப்பாள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

காத்திருப்பதில்தானே வாழ்க்கையின் அர்த்தமே இருக்கிறது.

நன்றி வணக்கம்
ஆரென்

leomohan
14-07-2007, 08:16 AM
நான்
கரிபால்டி
என்பதாலா


ஹா ஹா. நல்ல கவிதை. கரிபால்டி என்றால் என்ன

aren
14-07-2007, 08:16 AM
ஆரென் அண்ணா

கவிதை கலக்கல் அண்ணா :aktion033:

வாழ்த்துக்கள்


நன்றி இனியவள் அவர்களே.

நீங்கள் எழுதியதையெல்லாம் பார்க்கும்பொழுது நாமெல்லாம் எதற்கு எழுதுகிறோம் என்றே தோன்றுகிறது.

நன்றி வணக்கம்
ஆரென்

இளசு
15-07-2007, 03:51 PM
கவிதை மாணவர்கள்
கற்றுத் தேறுவதே
காதல் பள்ளியில்தானே..

முதல் பாடம் − முழுமையாக..
வாழ்த்துகள் அன்பின் ஆரென்!
இது முடிவல்ல..ஆரம்பம்!

aren
15-07-2007, 04:03 PM
நான்
கரிபால்டி
என்பதாலா


ஹா ஹா. நல்ல கவிதை. கரிபால்டி என்றால் என்ன

நன்றி மோகன். உண்மையில் கரிபால்டி என்பவன் இத்தாலியின் மாவீரன். ஆனால் இங்கே குறிப்பிட்டது கருப்பானவன் என்ற அர்த்தத்தில். நான் பள்ளியில் படிக்கும் காலங்களில் என் கூட படிக்கும் மாணவர்களில் சிலர் என்னை கரிபால்டி என்றே கூப்பிடுவார்கள் (நான் அவர்களை அன்பால் வென்று பின்னர் அந்த வார்த்தையை அவர்கள் என்மேல் உபயோகிக்கவில்லை என்பது வேறு விஷயம்). அதனால் கருப்பாக இருப்பவனைக் குறிக்க கரிபால்டி என்ற சொல்லை உபயோகித்தேன் இங்கே.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
15-07-2007, 04:04 PM
அடடா.."கரிபால்டி"க்குள் இவ்வளவு இருக்கா...

aren
15-07-2007, 04:05 PM
கவிதை மாணவர்கள்
கற்றுத் தேறுவதே
காதல் பள்ளியில்தானே..

முதல் பாடம் − முழுமையாக..
வாழ்த்துகள் அன்பின் ஆரென்!
இது முடிவல்ல..ஆரம்பம்!


நன்றி இளசு அவர்களே.

ஏதோ நம் மன்ற மக்கள் கொடுத்த ஊக்கத்தில் கொஞ்சம் கிறுக்கியிருக்கிறேன். போகப் போக கொஞ்சம் நன்றாக வரலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கு அதிகம் எழுதி பழகவேண்டும். நேரம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

மனோஜ்
15-07-2007, 04:18 PM
கலக்கல் எதிர்பார்ப்பு கவிதை
கரி பால் டி என்று நினைத்தேன்
கரி கருப்பு
பால் வென்மை
டி பிரவுன் எனவே மாநிரம் என்று நினைத்தேன் ஆனால் சுத்த கருப்பா நீஙகள் குறிப்பிட்டது
எப்படியே கவிதை அருமை

aren
15-07-2007, 04:19 PM
அடடா.."கரிபால்டி"க்குள் இவ்வளவு இருக்கா...

ஏன் உங்களை யாரும் கூப்பிட்டதேயில்லையா?

அமரன்
15-07-2007, 04:20 PM
ஏன் உங்களை யாரும் கூப்பிட்டதேயில்லையா?

இல்லீங்க....எனக்கு பாடியே தேடிப்பிடிக்கனும்ங்கிற நிலமை..

aren
15-07-2007, 04:21 PM
கலக்கல் எதிர்பார்ப்பு கவிதை
கரி பால் டி என்று நினைத்தேன்
கரி கருப்பு
பால் வென்மை
டி பிரவுன் எனவே மாநிரம் என்று நினைத்தேன் ஆனால் சுத்த கருப்பா நீஙகள் குறிப்பிட்டது
எப்படியே கவிதை அருமை

நன்றி மனோஜ் அவர்களே.

இல்லை, நான் சொன்னது சுத்தமான அக்மார்க் கருப்புதான்.

இனியவள்
15-07-2007, 04:21 PM
இல்லீங்க....எனக்கு பாடியே தேடிப்பிடிக்கனும்ங்கிற நிலமை..

அய்யோ அமர் அப்ப ஆவியா
அலையிறீங்கள் நீங்கள் :icon_wacko::icon_wacko::icon_wacko::icon_wacko:

aren
15-07-2007, 04:23 PM
அய்யோ அமர் அப்ப ஆவியா
அலையிறீங்கள் நீங்கள் :icon_wacko::icon_wacko::icon_wacko::icon_wacko:


அப்ப உண்மையில் ஓவியன் வீட்டுக்கதவை தட்டியது யாரென்று தெரிகிறது.

அமரன்
15-07-2007, 04:25 PM
அப்ப உண்மையில் ஓவியன் வீட்டுக்கதவை தட்டியது யாரென்று தெரிகிறது.

அடடா...தெரிஞ்சு போச்சா...:icon_wacko: :icon_wacko: :icon_wacko:

ஆதவா
17-07-2007, 03:25 AM
காதலுக்காக தன்னை மாற்றிக் கொள்வது........

அத்தோடு காதலும் மாறிவிட்டால்?

விருப்பமற்ற ஒருத்தியிடம் காதல் எடுபட வைப்பது புலியை புல் திங்க வைப்பதுபோல..... ஆனால் சில புலிகள் தின்றுவிடுகின்றன சாமர்த்தியமாக (புல்வைத்தவனை?)

படிப்பைத் தொடர்ந்து வேலையில் சேர்ந்து எல்லாம் முடிப்பதற்கே குறைந்தது ஐந்தாறு வருடங்கள் ஆகும்.. அதற்குள் அவளுக்குத் திருமணம் ஆகாமல் இருக்கவேண்டுமே??

கண்களின் மோதல் இனக்கவர்ச்சி ; அறிவோடு கண்மோதினால் அது காதல்.. அறிவென்பது படிப்பால் அல்ல..

நல்ல கவிதை ஆரென் அண்ணா. கூடுமானவரையில் நீளம் தவிர்த்திடுங்கள்.. இந்த கவிதை அதிநீளம் இல்லை என்றாலும் உங்களுக்குள் ஒரு எல்லை வகுத்துக் கொள்ளுங்கள். அப்போது நீளம் தாண்டிப் போவதை சில வார்த்தைகளுக்குள் அடக்க நமக்கு வார்த்தைகள் கிடைக்கும்..

மொக்கண்ணாவின் கேள்விக்கு உங்கள் பதில் மிகுந்த அழகு..

aren
17-07-2007, 03:51 AM
நன்றி ஆதவன் அவர்களே. நீங்கள் சொன்ன அறிவுரைகளின்படி நடக்கிறேன். இப்பொழுதுதான் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு வருகிறேன். கூடிய விரைவில் ஒரு கவிதையை எழுதுகிறேன். இதுவரை எதையோ கிருக்குகியிருக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

பாரதி
18-07-2007, 05:19 AM
அரிச்சுவடி கவிதை அமர்களகமாக அரங்கேறி இருக்கிறது ஆரென். வாழ்த்துக்கள். கவிஞர்கள் கூட்டணியில் கலக்குவதற்கு மேலும் ஒருவர். தொடரட்டும் கொண்டாட்டம்.

aren
18-07-2007, 06:07 PM
அரிச்சுவடி கவிதை அமர்களகமாக அரங்கேறி இருக்கிறது ஆரென். வாழ்த்துக்கள். கவிஞர்கள் கூட்டணியில் கலக்குவதற்கு மேலும் ஒருவர். தொடரட்டும் கொண்டாட்டம்.

என் கிருக்கல்களைப் படித்துவிட்டு விமரசனம் எழுதியதற்கு நன்றி பாரதி அவர்களே. இப்பொழுதுதான் கத்துக்கொண்டிருக்கிறேன். கூடியவிரைவில் ஒரு நல்ல கவிதையை எழுதுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. பார்க்கலாம்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஓவியன்
18-07-2007, 06:16 PM
திரும்பவும் வருகிறேன்
எனக்காக
அதுவரை காத்திருப்பாயா!!!!

பலருடைய காதல் இப்படிக் காத்திருப்பாகவே முடிகிறதே!:icon_shok:
அருமையாக உணர்வினை கவி வரிகளாகச் செதுக்கி இருந்தீர்கள் அண்ணா!.

நன்றிகள் ஒரு அழகான காதல் கவியில் நனைய வைத்தமைக்கு....