PDA

View Full Version : யாஹூ மெசஞ்சரில் தமிழ்?



Mano.G.
14-07-2007, 12:40 AM
முன்பு யாஹு மெசஞ்சரில் தமிழில்
அரட்டை அடிக்கலாம் (தட்டெழுத்து செய்யலாம்)
ஆனால் தற்பொழுது முடியவில்லையே
எழுத்துருக்களை மாற்றியும் பயனில்லை

யாரேனும் உதவ முடியுமா?


மனோ.ஜி

அன்புரசிகன்
14-07-2007, 03:06 PM
இரண்டு வேற்று முறைகளால் இயலும்.
அதாவது நீங்கள் Notepad ல் யுனிக்கோடாக எழுதி பின்னர் copy paste செய்யலாம்.

அல்லது இன்னொரு இலவச செயலியை பயன்படுத்தலாம்.
அதற்குப்பெயர் மிரண்டா...

இங்கே (http://kent.dl.sourceforge.net/sourceforge/miranda/miranda-im-v0.6.8-unicode.exe) பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.

தவிர இதில் yahoo msn gmail போன்றவற்றை ஒரே நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதை இன்டோல் பண்ணிய பின்னர் வருவதில் ஏதாவது உங்களுக்கு விரும்பிய பெயரை கொடுங்கள். பின்னர் வருபவற்றை cancel செய்யலாம். பின்னர் நீங்கள் செய்யவேண்டியவற்றை கீழே படங்கள் மூலம் காட்டியுள்ளேன்.

http://www.slcues.com/mantram/help/miranda//miranda1.jpg
--
http://www.slcues.com/mantram/help/miranda//miranda2.jpg
--
http://www.slcues.com/mantram/help/miranda//miranda3.jpg
--
http://www.slcues.com/mantram/help/miranda//miranda4.jpg
--
http://www.slcues.com/mantram/help/miranda//miranda5.jpg
--
http://www.slcues.com/mantram/help/miranda//miranda6.jpg


Jabber என்பதன் மூலம் நீங்கள் gmail ஐயும் இங்கே செயற்படுத்தலாம். அதற்கு உதவி வேண்டுமெனில் கேளுங்கள். என்னால் முடிந்தளவு கூறுகிறேன்...

மீனாகுமார்
19-07-2007, 05:38 PM
மிரண்ட பற்றி கேள்விப்பட்டதில்லை...

அருமையான தகவல்... இதோ நானும் முயற்ச்சிகிறேன்... மிக்க நன்றி அன்புரசிகன்....

வெற்றி
20-07-2007, 12:34 PM
அடேங்கப்பா மிரண்டா புதுசாத்தான் இருக்கு,....பதிவிறக்கி பார்த்து விடுகிறேன்...

அன்புரசிகன்
20-07-2007, 12:54 PM
மிரண்டா ஐ நீங்கள் google talk ஆகவும் பயன்படுத்தமுடியும். ஆனால் கதைக்கமுடியாது. இதை jabber எனும் பகுதி மூலம் நிறைவேற்றிக்கொள்ளலாம்.

அதற்கு முதலில் இந்த (http://www.slproweb.com/download/Win32OpenSSL-0_9_7m.exe) ஊக்க மென்பொருளை உங்கள் கணிணியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

பின்னர் கீழ்க்காட்டிய படத்தில் உள்ளவாறு தகவல்களை கொடுங்கள்.
http://mail.google.com/mail/help/images/screenshots/miranda/miranda_settings.gif
பின்னர் status இல் jabber என்பதை Online ல் விட்டுவிடுங்கள். மிரண்டா மூலமான google talk தயார்.

ஓவியன்
20-07-2007, 01:00 PM
நன்றி அனபு உங்கள் தகவலுக்கு, மிரண்டாவை மிரட்டிப் பார்த்திடுவோம்.

வெற்றி
20-07-2007, 01:16 PM
அருமயாக இருக்கிறது,,,ஆனால் வழக்கம் போல ஒரு சந்தேகம்..?? மிரண்டாவில் இருந்து எப்படி நேரடியாக சாட் ரூமுக்கு போவது?? அதையும் படம் போட்டு (இல்லையின்னா என் மரமண்டைகு ஏறாது) காட்டினால் பரவில்லை...அல்லது எளிதாக சொன்னலும் சரி...(அட்ரஸ் புக்கில் உள்ள நபர்கள்களின் பெயர் மட்டும் தான் தெ\ரிகிறது)

அமரன்
20-07-2007, 02:58 PM
அன்பு அசத்தல் தகவல்..நன்றிங்க

மயூ
20-07-2007, 05:32 PM
நன்றி அன்புஇரசிகன் அவர்களே....
மீபோ.காம் மிலும் தமிழில் அரட்டையடிக்கலாம்... !!!

அன்புரசிகன்
20-07-2007, 05:38 PM
நன்றி அன்புஇரசிகன் அவர்களே....
மீபோ.காம் மிலும் தமிழில் அரட்டையடிக்கலாம்... !!!

அதை ஆங்கிலத்தில் அருமையாக தரலாமே... இப்படி மீபோ.காம் என கொடுத்தால் வேறு ஒன்றுதான் வருகிறது... :grin:

அன்புரசிகன்
20-07-2007, 05:40 PM
அருமயாக இருக்கிறது,,,ஆனால் வழக்கம் போல ஒரு சந்தேகம்..?? மிரண்டாவில் இருந்து எப்படி நேரடியாக சாட் ரூமுக்கு போவது?? அதையும் படம் போட்டு (இல்லையின்னா என் மரமண்டைகு ஏறாது) காட்டினால் பரவில்லை...அல்லது எளிதாக சொன்னலும் சரி...(அட்ரஸ் புக்கில் உள்ள நபர்கள்களின் பெயர் மட்டும் தான் தெ\ரிகிறது)

உங்கள் இந்தக்கேள்விக்கு எனக்கு உடனடியாக பதில் இல்லை. காரணம் அவ்வகையான வசதி மிரண்டாவில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. கண்டுபிடித்தால் கூறுகிறேன்.

saguni
21-07-2007, 05:44 AM
அன்பு ரசிகன் அவர்களே! நான் பதிவிறக்கிவிட்டேன். ஆனால் தட்டச்சு செய்கையில் ஆங்கிலமோ அல்லது எப்12 அழுத்திய பின் தட்டச்சு செய்தால் ஏதேதோ எழுத்துக்கள் வருகின்றன. இவற்றை நிவர்த்தி செய்வது எப்படி என விளக்கமுடியுமா அண்ணா?

வெற்றி
21-07-2007, 09:29 AM
உங்கள் இந்தக்கேள்விக்கு எனக்கு உடனடியாக பதில் இல்லை. காரணம் அவ்வகையான வசதி மிரண்டாவில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. கண்டுபிடித்தால் கூறுகிறேன்.

மிக்க ந*ன்றி திரு,அன்பு ர*சிக*ன் (இனி யாஹூவிலும் சாட் செய்வேன்.,உங்க*ள் த*ய*வால்)

அன்பு ரசிகன் அவர்களே! நான் பதிவிறக்கிவிட்டேன். ஆனால் தட்டச்சு செய்கையில் ஆங்கிலமோ அல்லது எப்12 அழுத்திய பின் தட்டச்சு செய்தால் ஏதேதோ எழுத்துக்கள் வருகின்றன. இவற்றை நிவர்த்தி செய்வது எப்படி என விளக்கமுடியுமா அண்ணா?
என*க்கும் வ*ருகிற*து...அது சீனா மொழி போல் உள்ள*து..அத*ன் சர்வ*ர் எண்ணில் நாடு சீனா என்று இருக்கிற*து அத*னால் தான் போலும்!!

அன்புரசிகன்
21-07-2007, 09:48 AM
அன்பு ரசிகன் அவர்களே! நான் பதிவிறக்கிவிட்டேன். ஆனால் தட்டச்சு செய்கையில் ஆங்கிலமோ அல்லது எப்12 அழுத்திய பின் தட்டச்சு செய்தால் ஏதேதோ எழுத்துக்கள் வருகின்றன. இவற்றை நிவர்த்தி செய்வது எப்படி என விளக்கமுடியுமா அண்ணா?

நீங்கள் தமிழில் பதிக்க எந்த மென்பொருள் பயன்படுத்துகிறீர்கள்? இ−கலப்பை அல்லது வேறேதுமா?

saguni
21-07-2007, 10:44 AM
அண்ணா, நான் முரசு அஞ்சல் செய்லியைப் பயன்படுத்துகிறேன். நம் தளத்தில் பதிக்க இங்கே உடனடி பதில் என்ற இடத்தில் தட்டச்சு செய்து அனுப்பிவிடுவதால் இ−கலப்பையை பயன்படுத்துவதில்லை

அன்புரசிகன்
21-07-2007, 11:00 AM
மன்னிக்கவேண்டும் சகுனி. எனக்கு முரசு அஞ்சலின் செயன்முறை தெரியாது. எதற்கும் மிரண்டாவின் option ல் network>YAHOO எனுமிடத்தில் Expert ல் Disable UTF8 Encoding என்பது தெரிவுசெய்யப்பட்டிருந்தால் அதை நீக்கிவிடுங்கள். அது தெரிவுசெய்யப்பட்டிருக்காவிடில் உங்கள் மிரண்டா யுனிக்கோடிற்கு ஏதுவாகத்தான் உள்ளது என்று பொருள். எதற்கும் ஒருமுறை இ-கலப்பையை பாவித்துப்பாருங்கள். அதற்கான செய்முறைவிளக்கம் இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4865)விபரமாக உள்ளது.

மயூ
21-07-2007, 12:41 PM
அதாவது meebo.com என்பதே அந்த முகவரி.... மன்னிச்சுக்்ங்க !!!! :) இங்கே தமிழ் இடைமுகமும் தெரிகின்றது!!!!!

அன்புரசிகன்
21-07-2007, 01:19 PM
மீபோ நன்றாக உள்ளது மயூ.. நன்றி...

saguni
21-07-2007, 06:24 PM
அன்பு ரசிகன் அவர்களே! தாங்கள் கூறியபடி தங்கலீஸ் சுட்டியில் இ−கலப்பையை இறக்கி எழுத்துறுவையும் நிறுவி அதை தேர்ந்தெடுத்து தட்டச்சு செய்கையில் சில எழுத்துக்கள் மட்டும் தனித்தனியாய் உதாரணத்திற்கு தன்0த.னஇ என வருகிறது ஆனால் ஒட்டியபின்னர் சரியாக தெரிகிறது. என்ன பிரச்சனை எனத்தெரியவில்லை.

அன்புரசிகன்
22-07-2007, 10:57 AM
சகுனியவர்களே.. உண்மையில் உங்கள் பிரச்சனை என்னவென்று புரியவில்லை. நான் பயன்படுத்துவது இ−கலப்பை தான். ஆனால் பாமினி எழுத்துரு வடிவ இ−கலப்பை. எதற்கும் Note pad ல் TSCu_Paranar என்ற எழுத்துருவை தெரிந்து Alt + 2 ஐ அழுத்தி தமிழில் பதித்துப்பாருங்கள். ஒருவேளை இந்த எழுத்துரு உங்களிடம் இல்லாவிட்டால் கூறுங்கள். தருகிறேன்.

saguni
22-07-2007, 03:13 PM
நோட் பேடில்தான் இந்தபிரச்சனை என்று வேர்ட்டிலும் ப்ரணர் எழுத்துறுவை நிறுவியபின் அடித்துப்பார்த்துவிட்டேன் ஆனால் நிலைமையில் முன்னேற்றமில்லை. என்னவோ தெரியாமல் தவிக்கிறேன்.

srisha
16-03-2008, 08:04 AM
நானும் முயற்ச்சிகிறேன்...

இன்டோல் பண்ணிய பின்னர் வருவதில் ஏதாவது உங்களுக்கு விரும்பிய பெயரை கொடுங்கள். பின்னர் வருபவற்றை cancel செய்யலாம். பின்னர் நீங்கள் செய்யவேண்டியவற்றை கீழே படங்கள் மூலம் காட்டியுள்ளேன்.படங்கள் சரியாக தெரியவில்லை