PDA

View Full Version : மெளனம்



இனியவள்
13-07-2007, 07:48 PM
காற்றோடு கலந்த தூசு
கண்களுக்குள் சென்று
உருத்துவது போல்

உனக்குள் கலந்த மெளனம்
என் இதயத்தை நெருஞ்சி
முள்ளாய் குத்துதடா

அக்னி
13-07-2007, 07:51 PM
ஒளியோடு சேர்ந்த பிரகாசம்,
என் பார்வையை கூசச்செய்தது...,
கறுப்புக்கண்ணாடியால்,
கட்டுப்படுத்தினேன்...
உனது வலிகளையும் கட்டுப்படுத்த,
இதயத்திற்கும் ஏதாவது உண்டா..?

பாராட்டுக்கள்...

ஓவியன்
14-07-2007, 10:38 AM
மெளனத்தால் கொல்லவும் முடியும், ஒன்றை வெல்லவும் முடியும்!

பாராட்டுக்கள் இனியவள்!.

இனியவள்
14-07-2007, 10:41 AM
ஒளியோடு சேர்ந்த பிரகாசம்,
என் பார்வையை கூசச்செய்தது...,
கறுப்புக்கண்ணாடியால்,
கட்டுப்படுத்தினேன்...
உனது வலிகளையும் கட்டுப்படுத்த,
இதயத்திற்கும் ஏதாவது உண்டா..?

பாராட்டுக்கள்...

இதயத்திற்கு பூட்டு
போடலாம் என்றால்
காற்றாய் மாறி துளையால்
உருடுவில் உள் சென்று
விடுகின்றதே பாழாய்ப்
போன காதல்

சரியா அக்னி நான் சொல்றது ஹீ ஹீ

பாராட்டுக்கு நன்றி அக்னி

இனியவள்
14-07-2007, 10:42 AM
மெளனத்தால் கொல்லவும் முடியும், ஒன்றை வெல்லவும் முடியும்!
பாராட்டுக்கள் இனியவள்!.

நன்றி ஓவியன்

ஆக்கவும் அழிக்கவும்
இறைவனால் படைக்கப்
பட்ட சக்திகளில்
இதுவும் ஓன்றோ :icon_wacko: :icon_wacko: :icon_wacko: :icon_wacko:

ஓவியன்
14-07-2007, 11:57 AM
மெளனித்திரு!
பின்
மெளனிக்க வைத்திடு
உன் மெளனத்தால்.................

அமரன்
14-07-2007, 09:33 PM
எங்கேயோ படித்தது ஒன்று நினைவில் வருகின்றது. மௌனம் சிறந்த ஆயுதம். அதை விட சிறந்த ஆயுதம் சிரிப்பு. அப்போது நான் நினைத்தேன் மௌனமான சிரிப்பு மிகப்பெரிய ஆயுதமோ? அந்த நினைவை மீட்டிய இனிய கவிதை தந்த இனியவளுக்கு எனது நன்றிகள்.