PDA

View Full Version : சிறகுகள்...



rambal
26-05-2003, 06:18 PM
சிறகுகள்...
****************

பயங்கர ஆயுதங்களுடன் இருந்தும்
முனீஷ்வரருக்கு மட்டும் போடவில்லை
"பொடா"

****************

மாநகராட்சி அனுமதியில்லை
என்று பிரிக்கப்படுகிறது
"தூக்கணாங்குருவிக் கூடு"

***************

ஜாதி வெறி!
மத வெறி!
இன வெறி!
மொழி வெறி!
நிற வெறி!
(உள்ளூர் வெறிகள் தனி!)

****************

கோடுகள் மட்டும் இல்லையென்றால்
எப்படி 110 கோடி இந்தியனுக்கும்
பட்டை போடுவது?

****************

பாரதி
26-05-2003, 06:29 PM
நடைமுறையில் நாம் காணும் வாழ்க்கையை கண் முன்னே கொண்டுவரும் அருமையான கவிதைகள். நன்றி+பாராட்டுக்கள் ராம்பால்.

Nanban
26-05-2003, 06:34 PM
சின்னச் சின்ன குத்தூசிகள்.........

பாராட்டுகள்......

முத்து
26-05-2003, 06:58 PM
நல்ல கவிதைகள்..பாராட்டுக்கள்...

poo
26-05-2003, 07:15 PM
முளைக்கத் தொடங்கிவிட்ட சிறகுகளை இனி மூடிவைக்காதே ராம்..

பாராட்டுக்கள்!!!

prabha_friend
27-05-2003, 08:19 AM
நல்லா இருக்கு

karikaalan
27-05-2003, 08:22 AM
என்ன செய்யலாம்..... ஈஸ்வரோ ரக்ஷது!

நிலா
28-05-2003, 09:37 PM
ஈஸ்வரோ ரக்ஷது!


நண்பரே என்ன அர்த்தம் இதற்கு?