PDA

View Full Version : தீருமா யுத்தம்



இனியவள்
13-07-2007, 02:51 PM
வானத்தில் நட்சத்திரங்களை எண்ணிய − நாம்
இன்று யுத்தத்தின் கோரப் பிடியில் சிக்குண்டு
உயிர் மடிந்த பச்சிளம் குழந்தைகளினது
உடல்களை எண்ணுகையில் ஆயிரம் மலைகளை
மனதில் சுமப்பதாய் தாங்க முடியா பாரம்....

நேற்று வெண்ணிலாவைக் காட்டி சோறு ஊட்டிய
பையனை இன்று உயிரற்ற உடலைப் பார்த்து
துடி துடித்து கதறும் தாயின் துக்கத்தில் பங்கு
கொள்ளும் பொருட்டு இயற்கையும் மழையாய்
மாறி கண்ணீர் மழை பொழிந்தாள்....

பச்சைப் பசேலென்று கண்ணுக் கெட்டிய தூரம்
வரை தன் பசுமையால் கண்ணைக் கட்டிப்
போட்டு அழகு ராஜ்ஜியம் செய்து வந்த
மரங்கள் இன்று பறவை போல் இறக்கை
விரித்து வந்த விமானத்தின் மூலம் பொழியப்பட்ட
குண்டு மழையினால் பட்ட மரங்களாய்
காட்சியளித்து.......

விடியும் ஒவ்வொரு பொழுதும் எமனுக்கு
கொண்டாட்டம்..
பசிப்பிணியைப் போக்க மனித உயிரை
காவு கொண்டன ஆயுதங்கள்.....

ஆயுதங்களைப் தங்கமலைக் குவியலாய்
வாங்கி வாங்கி குவித்து பசியாலும்
யுத்தத்தாலும் கோரமாய் மரண தண்டனை
வழங்கியது அரசாங்கம்....

தீருமா இந்த யுத்தம்..
போக்குமா எம் அச்சத்தை...
துளிர்க்குமா பட்ட மரங்கள்..
நிலை நாட்டுமா வாழ்வில்
சந்தோஷத்தை இனிப் பிறக்கும்
சமுதாயமாவது யுத்த தாண்டவத்தைக்
காணாமல் பசுமையைக் காணட்டும்
வேண்டாம் இந்த யுத்தம்
வளர்ப்போம் சமத்துவத்தை......

அறிஞர்
13-07-2007, 03:01 PM
நேற்று வெண்ணிலாவைக் காட்டி சோறு ஊட்டிய
பையனை இன்று உயிரற்ற உடலைப் பார்த்து
துடி துடித்து கதறும் தாயின் துக்கத்தில் பங்கு
கொள்ளும் பொருட்டி இயற்கையும் மழையாய்
மாறி கண்ணீர் மழை பொழிந்தாள்....

.
க*ண்க*ளில் க*ண்ணீரை வ*ர*வ*ழைக்கும் வ*ரிக*ள்...

யுத்த*ம் ஓய*ட்டும்.. என்ப*தே எம் விருப்ப*ம்.

ஓவியன்
13-07-2007, 03:05 PM
தலை விரித்தாடும்
அராஜகம் ஒழியட்டும்!.
நிலை கொண்ட
மிலேச்சத்தனம் மறையட்டும்!.

நடு நிசிக்கள்வனாய்
வீடு புகுந்து வேட்டையாடும்
கயவர் கும்பல் அழியட்டும்!.

விசாரணை என்ற
பெயரில் ஆண் பெண்
பேதமின்றி துகிலுரித்து
மின்சாரம் பாய்ச்சும்
கொடுரம் எரியட்டும்!

பிள்ளைகள் புதைகுழி
தோண்டி பெற்றோரை தேடும்
அவலம் தொலைய*ட்டும்!.

எல்லோரும் ஓர் குலம்
எல்லோரும் ஒரினம்!
என்றொரு நிலை வரவேண்டும்!.

எங்கும் சமாதான தேவதை
மெல்லிசை பாடி வரவேண்டும்...................

கவி வரிகளுக்குப் பாராட்டுக்கள் இனியவள்!.

இனியவள்
14-07-2007, 08:26 AM
க*ண்க*ளில் க*ண்ணீரை வ*ர*வ*ழைக்கும் வ*ரிக*ள்...

யுத்த*ம் ஓய*ட்டும்.. என்ப*தே எம் விருப்ப*ம்.

ஆமாம் தோழரே

அக் காட்சியினை
நேரே பார்க்கும்
கற்கள் கூட உயிர்ப்
பெற்றுக் கண்ணீர்
விட்டுக் கதறும்

இனியவள்
14-07-2007, 08:29 AM
கவி வரிகளுக்குப் பாராட்டுக்கள் இனியவள்!.[/FONT][/COLOR]

கவிதையில் அழகோடு
சேர்ந்த ஒர் ஏக்கம்
ஏக்கத்தோடு சேர்ந்த
வலிகள் வலிகளோடு
சேர்ந்த ஒர் கோபம்
கலந்து ஒர் அழகிய
ஓவியமாய் காட்சியளிக்கின்றது
வாழ்த்துக்கள் ஓவியன்

நன்றி உங்கள் பாராட்டுக்கு

leomohan
14-07-2007, 08:29 AM
நிதர்சனம் சுடுகிறது. அரசாங்கம் செய்தாலும் தனி கூட்டங்கள் செய்தாலும் வன்முறை யாருக்கும் பயனளிக்காத ஒன்று. இதில் இருபுறமும் நஷ்டமே.

அமரன்
14-07-2007, 08:40 AM
அடடா நேற்றுப்பார்த்த கவிதை. பின்னூட்டமிட மறந்துவிட்டேன்.


விதைத்தவன் வானம்பார்க்க
விதைத்தன விமானங்கள்.
அறுவடை காணமுன்னே
அறுத்தனர் தாலிகளை.

கொடியில் பூத்தமலர்
மடியில் இருக்கையிலே
வாடி வதங்கியது..
ஆர்மியில் செல்களால்.

எத்தனை பெண்ணிலவுகள்
ஆகின வெண்ணிலவுகள்.
ஆர்மியின் சன்னங்களால்.

படிக்கச் சென்றவன்
விடிவு தருவானென காத்திருக்க
விடிந்த பின்னும் வரவில்லை.
அப்பொதுதான் புரிந்தது.
வடிவமே தொலைந்தது..


வேலைதேடிப் போனவனை
வெள்ளைவான் கவர்ந்திட
அவனைத்தேடுவதே
வேலையாகிப் போனது..

பூக்களைப் பறித்தனர்-பல
பூக்களின் வாசங்களைப் பறித்தனர்.
பாக்கள் பாடியோர்
சங்கையும் அறுத்தனர்.

எத்தனை மரணங்கள்
எத்தனை மா ரணங்கள்
எமக்கு அவை சா ரணம்
அவைக்கு நாம் சாதாரணம்.

ஓவியன்
14-07-2007, 09:52 AM
கவிதையில் அழகோடு
சேர்ந்த ஒர் ஏக்கம்
ஏக்கத்தோடு சேர்ந்த
வலிகள் வலிகளோடு
சேர்ந்த ஒர் கோபம்
கலந்து ஒர் அழகிய
ஓவியமாய் காட்சியளிக்கின்றது
வாழ்த்துக்கள் ஓவியன்

அட ஒரு என்னே அழகான வாழ்த்து!

நன்றிகள் இனியவள்!.

aren
14-07-2007, 09:58 AM
யுத்தத்தின் இழப்பினை அருமையாக கவிதையாக சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

சிவா.ஜி
14-07-2007, 11:01 AM
சொல்லக்கேட்டும்,தொலைக்காட்சியில் பார்த்துமட்டும் தெரிந்துகொண்ட எங்களுக்கே மனசு வலிக்கிறதே அனுபவிப்பவர்களின் நிலையை என்னவென்று சொல்ல. வேதனைகளை பகிர்ந்துகொள்ளும் போது வலி குறையுமென்பார்கள். நம் அனைவரின் பிரார்த்தனையும் அதை நிறைவேற்றட்டும். வலி மிகுந்த வரிகளென்றாலும் வெளிப்பட்டுத்திய விதம் உலுக்கிவிட்டது. வாழ்த்துக்கள் இனியவள்.

இனியவள்
14-07-2007, 11:07 AM
யுத்தத்தின் இழப்பினை அருமையாக கவிதையாக சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

நன்றி ஆரென் அண்ணா


சொல்லக்கேட்டும்,தொலைக்காட்சியில் பார்த்துமட்டும் தெரிந்துகொண்ட எங்களுக்கே மனசு வலிக்கிறதே அனுபவிப்பவர்களின் நிலையை என்னவென்று சொல்ல. வேதனைகளை பகிர்ந்துகொள்ளும் போது வலி குறையுமென்பார்கள். நம் அனைவரின் பிரார்த்தனையும் அதை நிறைவேற்றட்டும். வலி மிகுந்த வரிகளென்றாலும் வெளிப்பட்டுத்திய விதம் உலுக்கிவிட்டது. வாழ்த்துக்கள் இனியவள்.

நன்றி சிவா.ஜி

இனியவள்
14-07-2007, 11:43 AM
ம்ம் ஆமாம் அமர்

ஏவுபவன் ஏசியில் இருந்து
மூக்கு முட்ட சாப்பிடுகின்றான்
சம்பளத்துக்கு யுத்தம் செய்யப்
போகின்றவன் தன் உயிரையும்
அழித்து பல உயிர்களையும்
அழிக்கின்றான்...

இவர்கள் ஒரு உயிரின் மதிப்பை
எப்போது உணர்வார்களோ அன்று
தான் யுத்தமும் தீரும் இந்த அவலங்களும்
தீரும் விடியல் கூட பயப்படுகின்றது
விடிவதற்கு பாழாய்ப் போன யுத்தத்தை
கண்டு

ஆதவா
14-07-2007, 03:50 PM
இனியவள் :

இலங்கை.... இங்கிருந்து வரும் கவிதைகள் எல்லாமே உணர்ச்சிபூர்வமாக

இருக்கிறது.. உங்கள் கவிதைகளில் அதைக் காண்கிறேன் இனியவள்.

இந்த கவிதையில் இன்னும் சொற்களைச் சுருக்கி கவிதை

படைத்த்டிருக்கலாம். இது என் கருத்து மட்டுமே.

வான் தாய் இந்த மான் தாயைப் பார்த்து அழுவது.. கண்களில் நீர்

வரவில்லையம்மா. காட்சியை நினைக்கும் போது இதயம் அழுகிறது.

பொழுது ஆதவனோ இரத்தத்தையும் உருஞ்சி விடிவது... இன்னும் என்னால்

சரியான பதம் இதற்குத் தரமுடியவில்லை.

யுத்தம் நான் கண்டதில்லை.. கேள்விப்பட்டதுண்டு. அதனால்தான்

உணர்ச்சிகள் மிகுந்த கவிதைகளைத் தரமுடியாமல் திணருகிறேனோ

என்னவோ?

கவிதை அருமை. பாராட்டுக்கள்/

---------------------
ஓவியரே உமக்கு என்னாயிற்று?. ஏன் இப்படி உணர்ச்சிப் பிழம்பாய் கண் கலங்குகிறீர்கள்?

விசாரணை என்ற
பெயரில் ஆண் பெண்
பேதமின்றி துகிலுரித்து
மின்சாரம் பாய்ச்சும்
கோடுரம் எரியட்டும்!

நினைத்துப் பார்க்கக் கொடுமை... கவிதை இனிமை என்று சொல்லவும் தயங்கும் வரிகள்..... இனிமை என்று சொல்லி காட்சியை வேதனன படுத்தவா? கொடுமை என்று சொல்லி உம்மை வேதனை படுத்தவா?

அசத்திவிட்டீர்கள் ஓவியன்.. பாராட்டுக்கள்..... நல்ல ஆதரவுக் கவிதை..
-----------------------------------------

விதைத்தவன் வானம்பார்க்க
விதைத்தன விமானங்கள்.
அறுவடை காணமுன்னே
அறுத்தனர் தாலிகளை.

அமரன்..... நீர் கவிதையில் புதியவர் என்று சொல்ல மனம் மறுக்கிறது. உங்கள் தரமிக்க கவிதையினில் கண்களைத் தொலைத்துவிட்டு தேடியலைகிறேன்.

எப்படித்தான் இந்த வரிகளை நீங்கள் விரல்நுனியில் கொண்டுவந்தீர்கள்?

ஒவ்வொரு வரிகளும் அட்சரம். வாழ்த்துக்கள் அமரன்..

அமரன்
14-07-2007, 06:58 PM
எல்லாப் பெருமையும் தமிழ்மன்றத்துக்கே..நன்றி ஆதவன்.

ஓவியன்
14-07-2007, 07:00 PM
உண்மைதான் அமர்!

நன்றி ஆதவா!

இனியவள்
14-07-2007, 07:04 PM
எல்லாப் பெருமையும் தமிழ்மன்றத்துக்கே..நன்றி ஆதவன்.

நன்றி ஆதவா அமர் சொல்ற மாதிரி எல்லாப் பெருமையும் தமிழ் மன்றதுக்கே

ஓவியனின் கை வந்த கழுகுகள் பார்த்து இதே போல் ஒன்று எழுதலாமே என்று வந்த யோசனை எழுதிவிட்டேன்....

ஓவியன்
14-07-2007, 07:05 PM
நன்றி ஆதவா அமர் சொல்ற மாதிரி எல்லாப் பெருமையும் தமிழ் மன்றதுக்கே

ஓவியனின் கை வந்த கழுகுகள் பார்த்து இதே போல் ஒன்று எழுதலாமே என்று வந்த யோசனை எழுதிவிட்டேன்....

ஆகா!

கை வந்த கழுகுகள் இரண்டு கவிதைகளை எழுத வைத்தமை எனக்கு பெருமையே!

முதலாவது இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9284) பண்பட்டவர் பகுதியில் உள்ளது!.

அக்னி
14-07-2007, 07:13 PM
யுத்தத்தின் சதிராட்டம்...
நித்தமும் அரங்கேற்றம்...

ஆர்ப்பரித்து வரவேற்கவில்லை...
ஓலமிட வேரறுக்கப்படுகின்றோம்...

பாராட்டுக்கள் அனைத்துக் கவிகளுக்கும்...

இணைய நண்பன்
14-07-2007, 09:16 PM
இனியவளே..யுத்த அரக்கனின் கொடூரத்தை நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.ஆதவன் அவர்களின் அறிவஉரையும் வரவேற்கத்தக்கது

இனியவள்
15-07-2007, 10:34 AM
இனியவளே..யுத்த அரக்கனின் கொடூரத்தை நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.ஆதவன் அவர்களின் அறிவஉரையும் வரவேற்கத்தக்கது

நன்றி இக்ராம்