PDA

View Full Version : சமையல் குறிப்புகள்.. எடக்கு முடக்கு சிந்தனைகள்..



rambal
26-05-2003, 05:48 PM
சமையல் குறிப்புகள்.. எடக்கு முடக்கு சிந்தனைகள்..

மிளகாய் பஜ்ஜி.. (வேண்டாத விருந்தாளிகளுக்கு மட்டும்)

ஒரு சமயம் மாலை வீட்டில் இருந்தேன்.. தண்ணீர் அடிக்கவேண்டுமென்று நண்பர்கள் சிலர்
கையில் பாட்டிலுடன்.. எப்படி துரத்துவது என்று குழம்பினேன்.. இறுதியாக, சைட் டிஸ் ஆக
மிளகாய் பஜ்ஜி செய்கிறேன் என்று கூறிவிட்டு பின்வருவது போன்று மிளகாய் பஜ்ஜி செய்தேன்..
அதை சாப்பிட்டு விட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள்.

மிளகாய் பொடி - 4 கரண்டி
மிளகாய் நீண்ட வாக்கில் வெட்டியது - 10
கடலை மாவு -10 டீ ஸ்பூன்
உப்பு - 1 கரண்டி

முதலில், ஒரு பாத்திரத்தை எடுத்து மிளகாய் பொடியைக் கொட்டவும். பின் கடலை மாவை கலக்கவும்.
பின் உப்பைக் கொட்டவும். பின் தண்ணீர் விட்டு நன்றாக கொல கொலவென்று மாவாக்கவும்.
இப்போது இந்தக் கலவையில் மிளகாயை முக்கி எடுத்து வாணலியில் பொறித்து எடுத்தால்
மிளகாய் பஜ்ஜி ரெடி.
வேண்டுமானால், கொஞ்சம் எலுமிச்சை, வெள்ளரிக்காய் (2.5 செ.மீ விட்டத்தில் வட்டமாக வெட்டியது)
இவைகளை பிளேட்டின் கடிகாரத்தில் நிமிட முட்கள் இருப்பது போன்று வைத்துவிட்டால்
பார்ப்பதற்கு மிக அழகாய் இருக்கும்.

வந்த நண்பர்கள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விடுவார்கள்..
(வேண்டாத விருந்தாளிகளை ஓட வைக்க சிறந்த ஆயுதம்)

இளசு
26-05-2003, 10:36 PM
நல்ல பதிவு இது....
பாராட்டுகள் ராம்....

அதீத காரம் இரண்டு வகையில் தண்டிக்கும்..
அரசனைப் போல் அன்றே "கொல்வது" ...ஆ..ஊ...கண்ணில்..ஈரம் ..வாயில்
எ(ரி)ச்சல்....
தெய்வத்தைப்போல் நின்று "கொல்வது" "பின்னா(ளி)ல் தெரியும்....
இந்த அளவு காரம் சாப்பிட்டால் என் அவஸ்தைகள்
கையளவு வெந்தயம் சாப்பிடும் வரை தொடர்கதை...
வெந்தயம் வேலை செய்யும்வரை....

"கும் என்னும் குன்றேறி நின்றார் சினம்
கணமேனும் காத்தல் அரிது"[/color]

Dinesh
27-05-2003, 05:25 AM
தப்பிபதற்கு இப்படியெல்லாம் கூட வழி இருக்கிறதா?
நல்ல வேடிக்கை தான்..
வாழ்த்துக்கள்.. ராம்பால் அவர்களே!

தினேஷ்.

karikaalan
27-05-2003, 07:51 AM
மிளகாயை நீளவாக்கில் கீறிவிட்டு, அதனுள் மிளகாய்ப்பொடியை ஸ்ட·ப் செய்யவும். பிறகு முக்கிஎடுத்து பொரிக்கவும். கண்ணாலே என்னவெல்லாமோ வரும்!!

===கரிகாலன்

அறிஞர்
28-05-2003, 07:13 AM
என்ன ராம்... உங்கள்.. வீட்டிற்கு.. வருவதற்கு.. முன்னால்.. பலமுறை யோசிக்கனும் போல்....

இது மாதிரி... இன்னும் எத்தனை சரக்கு.. வைத்து இருக்கிறீர்கள்

suma
28-05-2003, 02:01 PM
பின்னால் கூட வரும்.........

gankrish
04-06-2003, 06:10 AM
உங்கள் மிளகாய் பஜ்ஜி செய்யும் விதத்தை படித்தவுடன் ஏறுது கா(ரா)ரம்