PDA

View Full Version : காதல் மனம்!



அரசன்
13-07-2007, 12:58 PM
காத்திருந்த காலமெல்லாம்
எனக்காக நான் சேர்த்திருந்தால்
என் பாலைவனமும்
சோலைவனம் ஆகியிருக்கும்
பாழாய்போனது
என் காதல் மனம்!

அமரன்
13-07-2007, 01:09 PM
காத்திருந்த காலமெல்லாம்
எனக்காக நான் சேர்த்திருந்தால்
என் பாலைவனமும்
சோலைவனம் ஆகியிருக்கும்
பாலாய்போனது
என் காதல் மனம்!

மூர்த்தி இது உங்கள் எழுத்துப் பிழையோ அல்லது நான் நினைப்பதுபோல் நினைத்துத்தான் எழுதினீர்களோ தெரியாது..

பாலைப் போல் பொங்குகின்றது என் மனம் என்றும் கொள்ளலாம்..
வெள்ளைச் சேலை கட்டி விதவையாக ஆனது என்மனம் என்றும் கொள்ளலாம்...

கலக்கல் கவிதை..வாழ்த்துக்கள்.

அரசன்
13-07-2007, 01:12 PM
மூர்த்தி இது உங்கள் எழுத்துப் பிழையோ அல்லது நான் நினைப்பதுபோல் நினைத்துத்தான் எழுதினீர்களோ தெரியாது..

பாலைப் போல் பொங்குகின்றது என் மனம் என்றும் கொள்ளலாம்..
வெள்ளைச் சேலை கட்டி விதவையாக ஆனது என்மனம் என்றும் கொள்ளலாம்...

கலக்கல் கவிதை..வாழ்த்துக்கள்.


பிழையை சுட்டியமைக்கு நன்றி! அது கண்டிப்பாக எழுத்து பிழைதான். இப்போதே மாற்றிவிடுகிறேன்.

மதி
13-07-2007, 01:14 PM
நல்ல கவிதை மூர்த்தி..
வாழ்த்துக்கள்.!

அமரன்
13-07-2007, 01:14 PM
பிழையை சுட்டியமைக்கு நன்றி! அது கண்டிப்பாக எழுத்து பிழைதான். இப்போதே மாற்றிவிடுகிறேன்.

அடடா..முதல் எழுத்து பொருத்தமானதாக இருந்ததே......இதுகூட நல்லா இருக்கு...வாழ்த்துக்கள்.

இனியவள்
13-07-2007, 01:16 PM
காத்திருந்த காலமெல்லாம்
எனக்காக நான் சேர்த்திருந்தால்
என் பாலைவனமும்
சோலைவனம் ஆகியிருக்கும்
பாழாய்போனது
என் காதல் மனம்!

காதலுக்காய் காத்திருப்பது
சுகமானது தான் அன்பே
ஆனால் உனக்காக நான்
காத்திருக்கும் போது
இழந்தது பொன்னான
காலத்தையும் அந்திம
காலத்தில் பெற்றோருக்கு
செய்ய வேண்டிய புனிதமான
கடமையும் அல்லவா........

கலக்கலோ கலக்கல் கவிதை மூர்த்தி வாழ்த்துக்கள் :sport009:

அமரன்
13-07-2007, 01:20 PM
காதலுக்காய் காத்திருப்பது
சுகமானது தான் அன்பே
ஆனால் உனக்காக நான்
காத்திருக்கும் போது
இழந்தது பொன்னான
காலத்தையும் அந்திம
காலத்தில் பெற்றோருக்கு
செய்ய வேண்டிய புனிதமான
கடமையும் அல்லவா........

கலக்கலோ கலக்கல் கவிதை மூர்த்தி வாழ்த்துக்கள் :sport009:

நேரத்துக்கு வராத பஸ்..
காலத்துக்கு வராத
வேலைக்கான கடிதம்...
இதைவிட வா...
சுகமானதுதான்
காதல் காத்திருப்பு....
காதல் உனக்கு
பொழுதுபோக்குத்தானே....

அரசன்
13-07-2007, 01:22 PM
காதலுக்காய் காத்திருப்பது
சுகமானது தான் அன்பே
ஆனால் உனக்காக நான்
காத்திருக்கும் போது
இழந்தது பொன்னான
காலத்தையும் அந்திம
காலத்தில் பெற்றோருக்கு
செய்ய வேண்டிய புனிதமான
கடமையும் அல்லவா........

கலக்கலோ கலக்கல் கவிதை மூர்த்தி வாழ்த்துக்கள் :sport009:

காதலினால் கடமையை மறந்தேன் அல்லவா. அதன் விளைவு தான்!
நன்றி இனி.

இனியவள்
13-07-2007, 01:24 PM
நேரத்துக்கு வராத பஸ்..
காலத்துக்கு வராத
வேலைக்கான கடிதம்...
இதைவிட வா...
சுகமானதுதான்
காதல் காத்திருப்பு....
காதல் உனக்கு
பொழுதுபோக்குத்தானே....

நேரத்துக்கு வராத
பஸ்சால் நான் மிஸ்
பண்ணியது எனது
பரீட்சையை அல்லவா

காலத்துக்கு வராத கடிதத்தால்
நான் இழந்தது என்
வருமானத்தை அல்லவா

இன்று பரீட்சை எழுதா விட்டால்
வேறு ஒரு நாள் எழுதலாம்
ஒரு வேலை கிடைக்காவிட்டால்
வேறு வேலை தேடிக்கொள்ளலாம்

ஆனால் அன்பே உனக்காக நான்
உன் மெளங்கள் கருக்கிய என்
பொன்னான காலத்தை உன்னால்
திருப்பித் தர முடியுமா

இனியவள்
13-07-2007, 01:26 PM
காதலினால் கடமையை மறந்தேன் அல்லவா. அதன் விளைவு தான்!
நன்றி இனி.

கடமையை செய்து கொண்டே
காதலையும் செய்ய வேண்டும்
காதலிப்பது தவறில்லை காதலே
வாழ்க்கை என்று நினைத்து
மற்றதை உதறித் தள்ளுவது
தான் தவறு

வாழ்த்துக்கள் மூர்த்தி

அமரன்
13-07-2007, 01:39 PM
நிழலாக வருவேன் என்பார்.
இருட்டைக் கண்டால்.
ஒழிந்துகொள்வர்...

நிலவே என்பர்.
ஒளியை எடுத்து
இருட்டை தருவர்..
பாதிநாட்கள்...

காதலே வாழ்க்கையா...

இனியவள்
13-07-2007, 01:47 PM
நிழலாக வருவேன் என்பார்.
இருட்டைக் கண்டால்.
ஒழிந்துகொள்வர்...

நிலவே என்பர்.
ஒளியை எடுத்து
இருட்டை தருவர்..
பாதிநாட்கள்...
காதலே வாழ்க்கையா...

நிழலை நம்பி நிஜத்தை
ஓதுக்கினாய்..

நிலவை நம்பி சூரியனை
வெறுத்தாய்..

உனக்காக ஒர் உயிர்
துடிக்க நீ ஒர் உயிருக்காய்
துடித்தாய்..

நீ அவளைப் பார்த்து
கேட்கிறாய் உனக்கு
இதயமில்லையா என
நான் உன்னைப் பார்த்து
கேட்கிறேன் உனக்கு
இதயமில்லையா

aren
13-07-2007, 01:54 PM
அருமை மூர்த்தி.

காலம் பொன்னானது
அதை காதலுக்காக*
வீணடிக்காதே
என்று அழகாக*
சொல்லியிருக்கிறீர்கள்.

பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

அரசன்
13-07-2007, 02:01 PM
அருமை மூர்த்தி.

காலம் பொன்னானது
அதை காதலுக்காக*
வீணடிக்காதே
என்று அழகாக*
சொல்லியிருக்கிறீர்கள்.

பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

உங்கள் பாராட்டுக்கு நன்றி ஆரென்.