PDA

View Full Version : ஜாதியியல்..



rambal
26-05-2003, 04:24 PM
ஜாதியியல்..
பிறந்த பொழுது
பரீச்சயமில்லை
எதுவும்..

தவழ்ந்த பொழுதும்
அறிமுகமில்லை..

நடை வண்டி
பழகியபோதும்
உறவு இல்லை..

பின் எப்போது?

வண்ணத்துப் பூச்சிகள்
கண்டு
மகிழ்ந்த பின்புதான்..

ஆம்,
வண்ணத்துப் பூச்சிகள்
வாத்தியாராய் இருந்து
வண்ணங்களின் பிரிவு மூலம்
சொல்லிக்கொடுத்தது
ஜாதியியல்..

Nanban
26-05-2003, 05:15 PM
காண்பதை
உணர்வதை
படைப்புடன்
நிறுத்தியிருந்தால் -
ஜாதியியல்
இயற்கையாக
நின்று போயிருக்கும்.

காண்பதும்
உணர்வதும்
என் கூட்டத்தாரின்
சிந்தனையால்.

தனித்திருக்கும் பொழுது
மனிதனாக நான் -
கூட்டமாக இணைந்த
பொழுது
என் அறிவு
என்னிடத்தும் இல்லை,
எங்களிடத்தும் இல்லை.

அந்த நிமிட மாயாஜாலம் -
மந்திர தந்திரமின்றி
கூடு விட்டு கூடு பாய்ந்தோம் -
மானுடம் உதறினோம்
ஓரறிவு குறைத்தோம்.

karikaalan
27-05-2003, 08:02 AM
எந்த சாதிக்காரனை நிறுத்தினால் எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்று எடை போடுகிற மாக்கள் இருக்கிறவரை, சாதிகள் ஒழியாது.

===கரிகாலன்

முத்து
27-05-2003, 04:16 PM
ஜாதிகள்.. இருக்கும்...
அரசாங்கத்தில்..அவை..அதிகாரப்பூர்வமாக உள்ளவரை..
பள்ளிக்குள் நுழையும் பிஞ்சிடம் முதற்கேள்வியே இதுதானே....
பின் எப்படி எதிர்பார்க்கிறோம் ? .....மறையுமென.