PDA

View Full Version : எங்கள் உயிர்!!!



aren
13-07-2007, 05:32 AM
வீட்டில்
அனைவரும்
இருக்கவேண்டும்

யாராவது
வெளியே சென்றால்
உடனே திரும்பி
வந்துவிட வேண்டும்

திரும்பி வரும்வரை
வழிமேல் விழிவைத்து
காத்திருக்கும்

திரும்பி வந்தவுடன்
வாலை ஆட்டிக்கொண்டு
சந்தோஷத்தில்
மிதக்கும்

அதற்கு சாப்பிடப்போட்டால்
நீ என்ன சாப்பிடுகிறாய்
என்று கண்களால்
கேள்வி கேட்கும்

நாம் சாப்பிடுவதை
அதற்குக் கொடுத்தால்தான்
சமாதானம் ஆகும்

நான் டிவி பார்த்துவிட்டு
எப்பொழுது தூங்கப்போவேன்
என்று எதிர்பார்த்து
காத்து கொண்டிருக்கும்

நான் படுக்கச் செல்லும்போது
அதுவும் கூடவே வந்து
என் அறைக்குள் ஓடி
வந்துவிடும்

நான் படுக்கும் படுக்கையில்
அதுவும் தலையணையில்
தலை வைத்து
படுக்கும்

நான் போர்வைக்குள்
படுத்தால்
அதுவும் போர்வைக்குள்
படுக்கும்

நான் பிரச்சனைகளுடன்
வீட்டிற்கு சென்றால்
அதுக்கு உடனே
புரிந்துவிடும்

என்னை குதூகூலப்படுத்தப்
பார்க்கும்
என்னுடன் விளையாடும்

அதனுடைய பந்தை
எடுத்துவந்து என்னிடம்
கொடுக்கும்

அதனுடன் விளையாட
அழைக்கும்

ஒரு சில நிமிடங்களில்
என் பிரச்சனை
பறந்துபோகும்

அதுவும் விளையாடுவதை
நிறுத்திவிடும்

என் மனைவி
சமயலறையில் இல்லாத
சமயத்தில்
மெதுவாக உள்ளே
போகும்

ஹாய் என்றவுடன்
எதுவும் நடவாததுபோல்
மெதுவாக வெளியே வரும்

காலையில் எழுந்தவுடன்
என் மனைவிமேல்
மிகவும் பரிவு காட்டும்
சாப்பாடு போடும் வரை

சாப்பிட்டவுடன்
என்னிடம்
வந்துவிடும்
விளையாடுவதற்கு

என் மனைவி
கோபமாக இருந்தால்
அந்த பக்கமே
தலைகாட்டாது

கோபம் தனிந்தவுடன்
வாலை ஆட்டிக்கொண்டு
வந்து என் மனைவியிடம்
குசலம் விசாரிக்கும்

நாம் இருக்கும் நிலையறிந்து
அதன்படி நடந்துகொள்ளும்
நாம் கடிந்துகொண்டால்
அது கொஞ்சம் விலகும்

நாம் சகஜமான நிலைக்கு
வந்தவுடன்
திரும்பிவரும்

நாங்கள் வெளியூர் சென்றால்
பேபிசிட்டரிம் விட்டுவிட்டு செல்வோம்
எங்களுடைய மனதையும் அங்கேயே
விட்டுவிட்டு செல்வோம்

அதன் நினைப்பிலேயே
எங்கள் வெளியூம் பயணம்
இருக்கும்

என் மகள் ஷில்பா
ஜாக்கி
என்ன செய்துகொண்டிருக்கும்
என்ற கேள்வியைக் கொடுத்து
எங்களையும் ஜாக்கியின்
நினைவில் அமுக்கிவிடுவார்.

திரும்பி வந்தவுடன்
உடனே ஜாக்கி
எங்கள் வீட்டிற்கு
வரவேண்டும்
என்று அடம் பிடிப்போம்

இதுதான் என்னுடைய
இரண்டாவது மகள்
ஜாக்கி

மூன்று வருடங்களாக
எங்கள் குடும்பத்தில்
ஒன்றாக ஆன
ஜாக் ரஸ்ஸல் வகை
மகள்
(நாய் என்று என்றும் நினைத்ததில்லை)
எங்கள் உயிர்!!!

பென்ஸ்
13-07-2007, 06:14 AM
ஆரென்...
என் ரூபியின் நினைவை மீண்டும் என்னில் வர வைத்து விட்டீர்கள்...

lolluvathiyar
13-07-2007, 06:22 AM
இந்த பிரானி குடும்பத்தில் ஒரு உருப்பிராகவே வளரும் என்பதை அழகாக கவிதை மூலம் காட்டி இருகிறீர்கள். என்ன ஒரே வருத்தம் தாய் த ந்தையருக்கு தான் மகன் மன்னு தள்ளுவான். ஆனால் இந்த விலங்கை வளர்க்கும் நமக்கு மகனு/மகளுக்கு மன்னு தள்ளும் துர்பாக்கிய நிலை அடிகடி ஏற்படும்

அமரன்
13-07-2007, 07:33 AM
எங்க வீட்டு நாய்கூட அப்படித்தான். நான் இரண்டு வருடம் கழித்துப் போனாலும் வாலை ஆட்டி ஆட்டி என்னைச் சுத்திவரும். பாய்ந்து ஏறி விளையாடும். அந்த நினைவுகளை மீட்ட உதவியது உங்கள் கவிதை. நன்றி அண்ணா.

aren
13-07-2007, 10:04 AM
ஆரென்...
என் ரூபியின் நினைவை மீண்டும் என்னில் வர வைத்து விட்டீர்கள்...


எங்கே உங்கள் ரூபி பென்ஸ்.

aren
13-07-2007, 10:10 AM
இந்த பிரானி குடும்பத்தில் ஒரு உருப்பிராகவே வளரும் என்பதை அழகாக கவிதை மூலம் காட்டி இருகிறீர்கள். என்ன ஒரே வருத்தம் தாய் த ந்தையருக்கு தான் மகன் மன்னு தள்ளுவான். ஆனால் இந்த விலங்கை வளர்க்கும் நமக்கு மகனு/மகளுக்கு மன்னு தள்ளும் துர்பாக்கிய நிலை அடிகடி ஏற்படும்

உண்மைதான் வாத்தியார். என்ன செய்வது. இதனாலேயே இத்தனை வருடங்கள் இழுத்து பிடித்துக்கொண்டிருந்தோம். அதன்பிறகு முடிவெடுத்தோம். இன்று எங்கள் வாழ்க்கையில் ஜாக்கி.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
13-07-2007, 10:12 AM
எங்க வீட்டு நாய்கூட அப்படித்தான். நான் இரண்டு வருடம் கழித்துப் போனாலும் வாலை ஆட்டி ஆட்டி என்னைச் சுத்திவரும். பாய்ந்து ஏறி விளையாடும். அந்த நினைவுகளை மீட்ட உதவியது உங்கள் கவிதை. நன்றி அண்ணா.


அதனால்தான் அதை நன்றியுள்ளது என்று கூறுகிறோம். எதையும் எதிர்பார்க்காமல் அன்பு ஒன்றையே அனைவருக்கும் கொடுக்கும் ஒரு பிறவி.

நன்றி வணக்கம்
ஆரென்

ஷீ-நிசி
13-07-2007, 10:47 AM
மொத்தத்தில் உங்களை கவலையின்றி வைத்திருக்கும் ஜீவன்... அருமை ஆரென்....

அக்னி
13-07-2007, 11:16 AM
நன்றியுள்ள நாய்கள்...
எனது மனதிலும் அழுந்தி பதிந்த ஒரு நிகழ்வு...

எங்கள் வீட்டின் காவலன்...
எனது தந்தைக்கோ, அதீத பிரியம்...
அதன் வயிற்றில் பெரியதொரு காயம்... வந்தசமயம்...
காயத்தினின்றும் சீழ் வடியும், துர்நாற்றம் வீசும்...
கால்நடை மருத்துவரும் கைகழுவிவிட்டார்...
தந்தை தினமும் அதன் காயத்தை சுத்தமாக்கி, மருந்திட்டார்...
நீண்ட காலமெடுத்து மாறியது...
தந்தை மரணித்த வேளை, கண்களில் நீர் பெருக வீட்டை சுற்றிச் சுற்றி வந்தது...
தந்தையின் உடல், வீட்டை விட்டு சென்றதுமே, காணாமல் எங்கோ போனது...
அதன், நினைவாக, அதற்கிட்ட பெயரே, அடுத்ததாக வந்த நாய்க்குட்டிக்கு சூட்டப்பட்டது...

செல்லப் பிராணிகளின் நினைவை மீட்க வைத்த ஆரெனுக்கு நன்றி!

ஓவியன்
14-07-2007, 07:28 PM
அண்ணா!

என் வீட்டுக்கு கொண்டு சென்று விட்டன உங்கள் வரிகள்.........

வீட்டிலே ஒருவர் இருக்கிறார் அவர் பெயர் ஜிம்மி டாஸ்கண்ட் இனத்தைச் சார்ந்தவர். ஒவ்வொரு நாளும் அம்மா கையாலே தான் உண்ணவேண்டும் என்று அடம் பிடிப்பார்.

யாராவது பேசினால் கோபித்து உண்ணா விரதமிருப்பார், பேசியவரே சென்று சமாதானப் படுத்தினால் மாத்திரமே உண்ணா விரதம் துறப்பார்.

வீட்டிலே ஒவ்வொருவரது குணவியல்புகளுக்கு ஏற்ப நடப்பதிலே சமர்த்தர். அவரை விட்டு விட்டு வெளியே போகக் கூடாது என்று அடம் பிடிப்பார்...........

இப்படி நிறைய............

நான் பல முறை சிந்திப்பதுண்டு ஜிம்மிக்கும் எங்களுக்கும் ஏதோ ஒரு பூர்வ ஜென்ம உறவு இருக்கலாமோ என்று.....................

என் ஜிம்மியை நினைக்க வைத்தமைக்கு நன்றிகள் அண்ணா!.

ஓவியன்
14-07-2007, 07:31 PM
எங்கள் வீட்டின் காவலன்...
எனது தந்தைக்கோ, அதீத பிரியம்...
அதன் வயிற்றில் பெரியதொரு காயம்... வந்தசமயம்...
காயத்தினின்றும் சீழ் வடியும், துர்நாற்றம் வீசும்...
கால்நடை மருத்துவரும் கைகழுவிவிட்டார்...
தந்தை தினமும் அதன் காயத்தை சுத்தமாக்கி, மருந்திட்டார்...
நீண்ட காலமெடுத்து மாறியது...
தந்தை மரணித்த வேளை, கண்களில் நீர் பெருக வீட்டை சுற்றிச் சுற்றி வந்தது...
தந்தையின் உடல், வீட்டை விட்டு சென்றதுமே, காணாமல் எங்கோ போனது...!

கலங்க வைத்தது அக்னி!

உங்களது காவலனின் கதை − அன்பை மட்டுமே தெரிந்த ஜீவன்கள் அவை.

அக்னி
14-07-2007, 07:40 PM
உண்மைதான் ஓவியன்...
அன்று எனக்கு பெரிதாகவும் தெரியவில்லை, கவலையாகவும் இருக்கவில்லை...
நாய் என்று ஒதுக்கிவிட்டேன் போலும்...
அல்லது தந்தையின் மறைவு மறைத்துவிட்டதாயும் இருக்கலாம்...
ஆனால்,
ஆரென் அவர்களின் கவிதை கண்டதும் மனதில் தானாகவே நிழலாடியது...
உடனே பதிந்துவிட்டேன்...
அதனால், அன்று செலுத்த தவறிய மரியாதையை.., இன்று பதிவாய் செலுத்திவிட்ட உணர்வு...

ஓவியன்
15-07-2007, 02:34 PM
அதனால், அன்று செலுத்த தவறிய மரியாதையை.., இன்று பதிவாய் செலுத்திவிட்ட உணர்வு...

உண்மைதான் அக்னி!

அதற்கு வாய்ப்பளித்து ஆரென் அண்ணாவுக்கு நன்றிகள் சொல்லுவோம்!.:nature-smiley-002:

இளசு
15-07-2007, 03:23 PM
இதைப்படிக்கும்போது இருவகைக் கண்ணீர்:


ஆரெனின் அடுத்த மகளை எண்ணி பரவசக்கண்ணீர்..
அக்னி தந்தையின் பெறா மகனை எண்ணி இரக்கக்கண்ணீர்..

இங்கே பாரதியின் கவலைக்கண்ணீர்:

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5510

aren
15-07-2007, 03:54 PM
நன்றி இளசு அவர்களே
நன்றி அக்னி அவர்களே
நன்றி ஓவியன் அவர்களே.

ஜாக்கி இப்பொழுதும் என் அருகில் உட்கார்ந்துகொண்டு இருக்கிறது.

நன்றி வணக்கம்
ஆரென்

மனோஜ்
15-07-2007, 03:58 PM
அருமையான உங்கள் ஜாக்கிக்கு ஒரு சாலம் செல்லிவிடுங்கள் அண்ணா
அதன் அன்பு உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு பின்னி பினைந்தள்ளது என்பது கவிதையில் அழகாக விங்கியது அருமை அண்ணா

ஓவியன்
14-02-2008, 01:37 AM
சிங்கையில் கால் வைத்து ஆரென் அண்ணாவுடன் அவர் வீட்டினுள் நுளைந்ததும் என்னை வாலாட்டி ஹாய் சொல்லி வரவேற்றார் இந்த ஜாக்கி...!! :)

அந்தக் கணத்திலிருந்து என் மனதை பறித்துக் கொண்டார் தன் நடத்தைகளால் இந்த ஜாக்கி....

ஆரென் அண்ணாவின் கவிதை வரிகள் அனைத்தும் உண்மை, பொதுவாக அந்த வகை நாய்களுக்கு வாலை நறுக்கி காதினை கிளிப் பண்ணுவார்களாம். ஆனால் அப்படிச் செய்யாமல் அன்பாக வைத்திருக்கின்றனர் ஆரென் அண்ணா குடும்பத்தினர்...!! :icon_b: