PDA

View Full Version : என் மகன் வளர்ந்த கதை



தங்கவேல்
13-07-2007, 12:53 AM
காதல் திருமணம். வீட்டை விட்டு என்னுடன் வந்து விட்டார் மனைவி. தாலி கட்டி பின்னர் காவல்துறையில் தஞ்சம் அடைந்து, சுற்றத்தாரின் புறக்கணிப்பெல்லாம் முடிந்து, ஒரு வழியாக எனது உறவினர் வீட்டில் விட்டு விட்டு தொழிலை கவனிப்பதற்காக சென்று விட்டேன்.

மூன்று மாதம். வயிற்றில் என் மகன். புது இடம். புது உறவுகள். சாப்பாடே புதுசு. பொன்னி அரிசி சாப்பிட்டு, மின் விசிறி கீழே உறங்கிய மனைவிக்கு, சி ஆர் என்ற கொட்டை அரிசி சாப்பாடு. நித்தம் வாந்தி. விடிகாலை பொழுது. கர்ப்பினி பெண்ணுக்கு பசி எடுக்குமாம். என்னவளுக்கும் பசி. ஆனால் உறவினர் வீட்டிலோ பத்து மணிக்கு தான் சாப்பாடு கிடைக்கும். வெளியில் சொல்லவும் பயம். மார்கழி மாதம் அது. என் மனைவி தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் ஒரு சிவன் கோவில். அதில் மார்கழி மாதம் வந்தால் தினமும் விடிகாலையில் பஜனை செய்வார்கள். தேவாரம், திருவாசகம், வள்ளலார் பாடல்கள் பாடுவார்கள். பஜனை முடிந்ததும் குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் சுண்டல் தருவார்கள்.

விடிகாலையில் என் மனைவிக்கு பசி வந்து விடுமாம். அவள் தங்கியிருந்த உறவினர் வீட்டில் இருந்த ஒரு பையன் தினமும் கோவிலுக்கு சென்று வரும் போது பொங்கலை வாங்கி வந்து தருவானாம். அவன் வரும் வரை பசியோடு பாட்டு எப்போ முடியும் என்று பாட்டை கேட்டபடியே காத்து இருப்பாளாம். அந்த பொங்கலை சாப்பிட்டு என் மனைவி பசி ஆறுவாளாம்.

திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்பார்கள். என் விசயத்தில் அதுதான் நடந்தது. கர்ப்ப காலத்தில் என் மனைவிக்கு சாப்பாடு கொடுத்தது தெய்வம். பசி அறிந்து உதவி செய்தது தெய்வம்.

ஆகவே நண்பர்களே தெய்வத்திடம் வேண்டுங்கள். நமக்கு வேண்டியதை தரும் கற்பக விருட்சம் அது. எப்படியாவது யார்மூலமாவது உதவி செய்ய அனுப்பிவிடும். தொலைபேசி இல்லா காவல்காரர் அவர். சேவைக்கு கட்டணம் வசூலிக்காதவர் அவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவர் அவர். எண்ணற்ற பேண்டு வித் கற்றையை உடையவர். எத்தனை கோடி பேர் வேண்டுமென்றாலும் ஒரே நேரத்தில் ஆக்சஸ் செய்யலாம் அவரின் உள்ளத்தை. அவரின் உள்ளத்தில் உமது அழைப்பை பதிவு செய்தால், ஓடோடி வருவார் உதவி செய்ய. அதற்கு தேவை உமது உள்ளத்தை அவரின் உள்ளத்தோடு இணைக்க வைக்கவேண்டியது மட்டும் தான். இதற்கு மாத வாடகை தேவையில்லை. இலவசம் அவனை அழைப்பதற்கு. அவுட்கோயிங்கும் இலவசம். இன்கமிங்கும் இலவசம். முக்கியமாக ஹேன்ட் செட் அது கலராகவோ அல்லது பிளாக்காவோ இருக்க தேவையே இல்லை.

அவர் நமக்கு ஒரு உகந்த ஒரு தோழன். அவரிடம் ரகசியத்தை சொன்னால் அது தான் ரகசியம். சாவி இல்லாத பெட்டகம் வைத்து இருக்கின்றார். நம்மை தவிர வேறு எவரும் அந்த ரகசிய பெட்டகத்தை திறக்க முடியாது.
அழையுங்கள் ஓடோடி வருவார். நாம் எப்போது அழைப்போம் என்று காத்து இருக்கிறார் அவர்...

நண்பர்கள் தங்களது தெய்வீக அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம். அந்த தெய்வீக மழையில் நனைய காத்து இருக்கிறோம்.

அன்புடன் தங்கம்

aren
13-07-2007, 02:13 AM
நல்ல பதிவு தங்கவேல் அவர்களே.

நம்பினோர் கைவிடப்படார் என்று சொல்வார்களே, அதன் அர்த்தம் இதுதானா?

நன்றி வணக்கம்
ஆரென்

mania
13-07-2007, 04:37 AM
மிகவும் உண்மையான செய்தி தங்கவேல்.நன்றி
அன்புடன்
மணியா..;)

தங்கவேல்
13-07-2007, 06:46 AM
இதுவரை எனக்கு தெய்வம் தான் சாப்பாடு போடுகிறது நண்பர்கள் வழியாக.

அமரன்
13-07-2007, 07:28 AM
தங்கவேல்! திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பார்கள். அதை அழகாகச் எடுத்தியம்புகின்றது உக்கள் அனுபவப் பகிர்வு. பகிர்வுக்கு நன்றி தங்கவேல்.

ஓவியா
14-07-2007, 02:29 AM
அருமையான* பதிவு.

எனக்கு எப்பொழுதுமே தெய்வம்தான் துணை.

ஒரு சுவையான* ச*ம்ப*வ*ம்.
ஒரு முறை க*ட*வுளுட*ன் ச*ண்டை போட்டுவிட்டு 4 மாத*ம் கோவிலுக்கு போக*வில்லை, இப்ப* நினைத்தாலும் ஒரே வெட்க*மாக* இருக்கும், எவ்வ*ல*வு சின்ன*புள்ளையாட்டம் ந*டந்துகிட்டேன் என்று சொல்லி சிரிப்பேன்.

namsec
14-07-2007, 03:57 AM
காலத்திற்க்கு ஏற்றார் போல் கடவுளின் மகிமையை விளக்கியுள்ளீர். தெய்வ நம்பிக்கை இன்றியமையாத ஒன்று என்று விளக்கியமைக்கு நன்றி

aren
14-07-2007, 03:59 AM
காலத்திற்க்கு ஏற்றார் போல் கடவுளின் மகிமையை விளக்கியுள்ளீர். தெய்வ நம்பிக்கை இன்றியமையாத ஒன்று என்று விளக்கியமைக்கு நன்றி

இந்த மாதிரி சில உண்மையாக நடந்த விஷயங்களைப் படிக்கும்பொழுது கடவுள் இன்னும் இருக்கிறார் என்றே மக்களுக்கு தோன்றும்.

நல்ல பதிவு தங்கவேல் அவர்களே.

நன்றி வணக்கம்
ஆரென்

மீனாகுமார்
14-07-2007, 11:25 AM
அனுபவித்தவர்களுக்குத்தான் அந்த கஷ்டத்தின் வலி தெரியும். இது உண்மையான கஷ்டமான அனுபவம்தான்.

இறைவனின் துணையின்றி ஓர் அணுவும் அசையாது. எல்லாம் அவன் செயல். எல்லாம் நன்மைக்கே... நம்மை அவனிடம் முழுமையாக ஒப்படைத்து விட்டால் நம்மை அவனை வழிநடத்துவான்...

உங்கள் வாழ்வில் இனி எப்போதும் மங்களம் பொங்கட்டும்...

ஓவியன்
14-07-2007, 12:48 PM
திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்பார்கள். என் விசயத்தில் அதுதான் நடந்தது. கர்ப்ப காலத்தில் என் மனைவிக்கு சாப்பாடு கொடுத்தது தெய்வம். பசி அறிந்து உதவி செய்தது தெய்வம்.

என்னை உருக்கிவிட்டீர்கள் இந்த பதிவினால் நண்பரே!

எவ்வளவு உண்மையான வசனங்கள் − நம்பிக்கைதானே வாழ்க்கை!.

அன்புரசிகன்
14-07-2007, 01:36 PM
கண்கள் பனிக்கும் கதையிது. ஆண்டவன் நம்மை எப்போதும் கைவிடமாட்டான். நாம் பார்க்கும் உருவங்களில் நம் இறைவனைக்காணலாம்.

Gobalan
14-07-2007, 05:01 PM
ஆண்டவன் கூட்ட அழைப்புக்கு வந்தே தீருவான். கடவுளின் மேல் நம்பிக்கை வைத்தால் − நமக்கு வேண்டியதை உள்மனத்திலிருந்து வேண்டினால் நிச்சியம் கிட்டும். அன்புரசிகன் சொல்லீருப்பதுபோல் ஆண்டவன் நம்மை எப்போதும் கைவிடமாட்டான்.

தங்கவேல், உங்களின் உண்மை கதை கடவுளின் மேல் நம்பிக்கையை வளர்க்கும் விதமாக இருக்கிறது. நன்றி.

விகடன்
27-07-2007, 02:51 PM
வரவேற்க வேண்டிய ஒரு பதிவு தங்கவேல்.
கடவுளை ந*ம்பினோர் கைவிடப்படார்

மனோஜ்
27-07-2007, 03:28 PM
கடவுள் நம்பிகை என்றும் நம்மை காக்கும் என்பது மாற்ற முடியாத சரித்திரம் அருமை நண்பரே