PDA

View Full Version : மறதி!.



ஓவியன்
12-07-2007, 11:53 PM
மறக்க வேண்டும் உன்னை
இன்றே இப்போதே இக்கணமே!.
முடிவுடன் இறங்கினேன்
வீதியில் உத்வேகமாய்!.

அங்கு எங்கோ இருந்த
ஒரு பலசரக்குக் கடையின்
பாதிப் பெயர், என் மனதில்
உன் பெயரைச் சொல்ல!.
மறந்து தான் விட்டேன்.

உன்னை
மறக்க வேண்டும் என்பதையும்!.

அன்புரசிகன்
12-07-2007, 11:59 PM
மறக்க முயல்.
அப்போதுதான் மறக்கமாட்டாய்.
வாழ்த்துக்கள்.

ஓவியன்
13-07-2007, 12:01 AM
மறக்க முயல்.
அப்போதுதான் மறக்கமாட்டாய்.
வாழ்த்துக்கள்.

மறக்க முயன்றால்!
மறந்து தான் போகிறேன்
மறதியையும்!.

நன்றிகள் அன்பு!.

இனியவள்
13-07-2007, 07:47 AM
ஹீ ஹீ ஓவியன்

மறக்க நினைத்தை
மறந்து நினைவை
என்னுள் திணித்து
விட்டு செல்கின்றன
இயற்கையும் சூழலும்

மதி
13-07-2007, 07:51 AM
அட..பல சமயங்கள்ல இப்படி தாங்க..மறக்கணும்ங்கற நினைப்பே மறந்துவிடும்..
ஓவியன்...மறக்காமல் அந்த நினைவை சீக்கிரமே மறக்க வாழ்த்துக்கள்.. ஹிஹி..

அமரன்
13-07-2007, 08:33 AM
வாழ்த்துக்கள் ஓவியன். கடைக்கு அப்பெயரை வைத்து சதி பண்ணிய பாவி யருங்க. ஆரென் அண்ணாவிடம் சொல்லி ஆட்டோ அனுப்பிடுங்க.

அமரன்
13-07-2007, 08:45 AM
மறக்க வேண்டும் உன்னை
இன்றே இப்போதே இக்கணமே!.
முடிவுடன் இறங்கினேன்
வீதியில் உத்வேகமாய்!.

அங்கு எங்கோ இருந்த
ஒரு பலசரக்குக் கடையின்
பாதிப் பெயர், என் மனதில்
உன் பெயரைச் சொல்ல!.
மறந்து தான் விட்டேன்.

உன்னை
மறக்க வேண்டும் என்பதையும்!.

திருட்டுத் தம்மடிக்க...
தனியாகப் போன நீ
அப்பனைக் கணடதும்
ஓடிப் போனாயே.......
உன்னை நம்பி வந்த என்னை
வீதியில் நிறுத்தி விட்டு..
அக்கடையா ஞாபகப்"படுத்தியது"....

இனியவள்
13-07-2007, 09:03 AM
திருட்டுத் தம்மடிக்க...
தனியாகப் போன நீ
அப்பனைக் கணடதும்
ஓடிப் போனாயே.......
உன்னை நம்பி வந்த என்னை
வீதியில் நிறுத்தி விட்டு..
அக்கடையா ஞாபகப்படுத்தியது....

தம்மடித்துக் கொண்டிருந்த
உன்னை நான் பிண்ணி
எடுத்த அந்தக் கடையா
ஞாபகப் படுத்தியது... :sport009:

ஓவியன்
13-07-2007, 03:08 PM
ஹீ ஹீ ஓவியன்

மறக்க நினைத்தை
மறந்து நினைவை
என்னுள் திணித்து
விட்டு செல்கின்றன
இயற்கையும் சூழலும்

உண்மை தான் இனியவள்! − அதென்ன சிரிப்பு ஹீ!,ஹீ என்று?:icon_nono:

ஓவியன்
13-07-2007, 03:10 PM
அட..பல சமயங்கள்ல இப்படி தாங்க..மறக்கணும்ங்கற நினைப்பே மறந்துவிடும்..
ஓவியன்...மறக்காமல் அந்த நினைவை சீக்கிரமே மறக்க வாழ்த்துக்கள்.. ஹிஹி..

ஹீ!,ஹீ!

நன்றிங்க மதி!

ஓவியன்
13-07-2007, 03:12 PM
வாழ்த்துக்கள் ஓவியன். கடைக்கு அப்பெயரை வைத்து சதி பண்ணிய பாவி யருங்க. ஆரென் அண்ணாவிடம் சொல்லி ஆட்டோ அனுப்பிடுங்க.

நன்றி அமர்!

அந்தப் பாதிப் பெயர் உள்ள இடங்களுக்கெல்லாம் ஆட்டோ அனுப்புவதென்றால் இந்த உலகில் உள்ள ஆட்டோக்களே போதாதுங்க:icon_wacko: − அப்படி ஒரு பெயர்!. :D

ஓவியன்
13-07-2007, 03:13 PM
திருட்டுத் தம்மடிக்க...
தனியாகப் போன நீ
அப்பனைக் கணடதும்
ஓடிப் போனாயே.......
உன்னை நம்பி வந்த என்னை
வீதியில் நிறுத்தி விட்டு..
அக்கடையா ஞாபகப்"படுத்தியது"....

:waffen093: :waffen093: :waffen093: :waffen093: :waffen093: :waffen093: :waffen093: :waffen093:

ஓவியன்
13-07-2007, 03:16 PM
தம்மடித்துக் கொண்டிருந்த
உன்னை நான் பின்னி
எடுத்த அந்தக் கடையா
ஞாபகப் படுத்தியது... :sport009:

ஆமா நீங்களுமா?

ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல..................:icon_hmm:

பின்னி எடுக்க
நான் என்ன
பழைய துணியா?
நான் யார் என்பதே
மறந்து விட்டதா
உனக்கு!.

அமரன்
16-07-2007, 09:50 AM
ஆமா நீங்களுமா?

ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல..................:icon_hmm:

பின்னி எடுக்க
நான் என்ன
பழைய துணியா?
நான் யார் என்பதே
மறந்து விட்டதா
உனக்கு!.

துணியா இருந்ததால்
பின்னத்தான் செய்வார்கள்.
எப்படி மறப்பது..
கண்டவன் அல்லவா..

இனியவள்
16-07-2007, 09:57 AM
துணியா இருந்ததால்
பின்னத்தான் செய்வார்கள்.
எப்படி மறப்பது..
கண்டவன் அல்லவா..

ஹீ ஹீ அமர் ஓவியன் பாவம் பிறகு இப்படி ஒரு கவிதை எழுதினதையே மறக்க போறார்;)

துணியாக இருந்தால்
உன்னை கண்ணேனும்
கத்தரி கொண்டு
கத்தரித்திருப்பேன்
இதயமாய் போய்
விட்டாயே − அதனால்
உயிரில் வைத்து பூசிக்கின்றேன்...:spudnikbackflip:

ஷீ-நிசி
16-07-2007, 10:15 AM
மறந்தே போனது படிக்க...
படித்தபின் மறக்கவில்லை....

நல்ல கவி ஓவியன்....

ஓவியன்
16-07-2007, 10:22 AM
மறந்தே போனது படிக்க...
படித்தபின் மறக்கவில்லை....

நல்ல கவி ஓவியன்....

மறக்க நினைத்தேன்
நீர் பின்னூட்டம் இடாததை
மறக்க முடியவில்லை
உம் பின்னூட்டம் பார்த்தபின்........

மிக்க நன்றி ஷீ!

அக்னி
16-07-2007, 10:26 AM
மறதி...
மதி போன்ற ரதி...
மறதியாய் நினைவில்...

அனைத்துக் கவிகளும் தித்திக்கின்றது...
பாராட்டுக்கள்... அனைவருக்குமே...

ஆதவா
17-07-2007, 03:42 AM
மறதியை மறப்பதும் மறதிதான்..

முதல் காதல்... காதலி ஆகியவை என்றுமே மறக்கமுடியாது... உண்மையில் காதலித்திருந்தால்.

அவளை மறப்பதாகச் சொல்லி காதலன் தன்னை மறப்பானேயொழிய மறதி அவள் பெயரில் பாயாது.

இதற்கே இப்படி சொல்கிறீர்களே... கொஞ்சம் பெயர் மாறியிருந்தாலே சிலருக்கு அந்த பெயர் ஞாபகம் வந்திடும்.... அதுதான் காதல்..

ஓவியருக்கு மறதியாக என் வாழ்த்துக்கள். (:D)

ஓவியன்
17-07-2007, 03:49 AM
மறதி...
மதி போன்ற ரதி...
மறதியாய் நினைவில்...

அனைத்துக் கவிகளும் தித்திக்கின்றது...
பாராட்டுக்கள்... அனைவருக்குமே...

ரதியே - உனை
எப்படி நான் மறக்க....!
நினைத்தால் தானே
மறக்க முடியும்.

(ஹீ!,ஹீ! - இப்படியும் சிலர் உள்ளார்களே!)

ஓவியன்
17-07-2007, 03:54 AM
ஓவியருக்கு மறதியாக என் வாழ்த்துக்கள். (:D)

ஹீ!,ஹீ! - நன்றி ஆதவா!.:thumbsup:

aren
17-07-2007, 03:58 AM
அமக்களம் ஓவியன். நன்றாக உள்ளது.

காதலியின்
பாதி பெயரைப் படித்தவுடன்
அனைத்தும் மறந்துபோனது
இதுதான் காதல்!!!

ஓவியன்
17-07-2007, 04:08 AM
அமக்களம் ஓவியன். நன்றாக உள்ளது.

காதலியின்
பாதி பெயரைப் படித்தவுடன்
அனைத்தும் மறந்துபோனது
இதுதான் காதல்!!!

மறக்க முடியவில்லை, அதனால் தான் கவிதையா எழுதிட்டிருக்கன். (ஹீ!,ஹீ!!)

மிக்க நன்றிகள் அண்ணா!.

M.Jagadeesan
22-01-2013, 12:21 AM
மறக்க வேண்டும் உன்னை
இன்றே இப்போதே இக்கணமே!.
முடிவுடன் இறங்கினேன்
வீதியில் உத்வேகமாய்!.

அங்கு எங்கோ இருந்த
ஒரு பலசரக்குக் கடையின்
பாதிப் பெயர், என் மனதில்
உன் பெயரைச் சொல்ல!.
மறந்து தான் விட்டேன்.

உன்னை
மறக்க வேண்டும் என்பதையும்!.





காதலியின் பெயரை மறக்க சரியான வழி, மற்றொரு பெண்ணைக் காதலிப்பதே !