PDA

View Full Version : நிஜம் வலிக்கின்றது

இனியவள்
12-07-2007, 03:02 PM
உயிரைக் கேடயமாக்கி
கண்ணைக் காக்கும் இமை
போல் இரவு பகலாய் என்னை
அரவணைத்தாய் காற்றுக் கூட
என்னைத் தீண்டாமல்....

ஊமையானாய் வார்த்தைகளை
மெளனமாக்கி எனக்காக
கண்ணிமைகளை சாமரமாக்கி
எனக்கு வியர்க்காது வீசினாய்....

வெயில் என்னைத் தீண்டா
வண்னம் கரங்களைக்
குடையாக்கினாய்....

இருக்கையாக்கினாய் உன்
கால்களை எனக்கு
உன்னை எனக்கு உயிராக்கினாய்

நிலம் போல் தாங்கினாய்
நிலவு போல் குளிர்வித்தாய்
வைரம் போல் ஜொலிக்க
வைத்தாய்....
ஆக்கினாய் வாழ்வை பசுமையாய்

எனக்காக எனக்காக எல்லாமே
எனக்காக நான் சிரித்தால் நீயும்
சிரித்தாய் அழுதால் நீயும் அழுதாய்
நான் துடித்தால் நீயும் துடித்தாய்
என் கண்ணில் தூசு விழுந்தால்
உன் கண்கள் கண்ணீர் வடித்தது

என் செயலே உன் செயலாய்
என் உருவமே உன் உருவமாய்
எனக்காக எல்லாம் செய்தாய்
ஆனால் செய்யாமல் விட்டு
விட்டாயே என்னை திருமணம்....

உன் நினைவை வாழ்வாக்கி
கனவை துணையாக்கி விட்டு
கரம் மாறி கைப்பிடித்து சென்று
விட்டாயே....

அன்றைய நினைவு தேனாய்
இனிக்கின்றது
இன்றைய நிஜம் அனலாய்
சுடுகின்றதே......

ஓவியன்
12-07-2007, 07:18 PM
உயிரைக் கேடயமாக்கி
கண்ணைக் காக்கும் இமை
போல் இரவு பகலாய் என்னை
அரவணைத்தாய் காற்றுக் கூட
என்னைத் தீண்டாமல்....
உண்மைதான் காதலிக்கும் போது காற்று கூட தன் காதலியைத் தீண்டக் கூடாது என்று நினைப்பான் எந்த சராசரிக் காதலுனும்!.

ஊமையானாய் வார்த்தைகளை
மெளனமாக்கி எனக்காக
கண்ணிமைகளை சாமரமாக்கி
எனக்கு வியர்க்காது வீசினாய்....
காதலின் வார்த்தைகளே மெளனம் தானே..........
காதலில் மெளனத்தால் பேசிச் சாதிப்பதை எனத மொழியின் எந்த வார்த்தைகளாலும் பேசிச் சாதிக்க இயலாது!.

வெயில் என்னைத் தீண்டா
வண்னம் கரங்களைக்
குடையாக்கினாய்....
அப்போது மழையின் போது?............:sport-smiley-018:

இருக்கையாக்கினாய் உன்
கால்களை எனக்கு
உன்னை எனக்கு உயிராக்கினாய்
இரு கையாக்கினாய் உன் கால்களை - சிலேடையாகவும் உள்ளது, நேரடியாகவும் நன்றாகவே உள்ளது!.

நிலம் போல் தாங்கினாய்
நிலவு போல் குளிர்வித்தாய்
வைரம் போல் ஜொலிக்க
வைத்தாய்....
ஆக்கினாய் வாழ்வை பசுமையாய்
வைரம் போல் ஜோலிக்க வைக்கும் காதல், பலருக்கு வாய்ப்பதில்லை.

வாழ்வைப் பசுமையாக்கும் காதல் வாழ்வைப் பாலையாக்கவும் வல்லது!.

எனக்காக எனக்காக எல்லாமே
எனக்காக நான் சிரித்தால் நீயும்
சிரித்தாய் அழுதால் நீயும் அழுதாய்
நான் துடித்தால் நீயும் துடித்தாய்
என் கண்ணில் தூசு விழுந்தால்
உன் கண்கள் கண்ணீர் வடித்தது
''என் கண்ணில் நீர் வடிந்தால் கண்ணம்மா
உன் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி"

என்ற மகாகவியின் வரிகள் ஞாபகத்திற்கு வந்தன வாழ்த்துக்கள்!.

என் செயலே உன் செயலாய்
என் உருவமே உன் உருவமாய்
எனக்காக எல்லாம் செய்தாய்
ஆனால் செய்யாமல் விட்டு
விட்டாயே என்னை திருமணம்....
கலங்க வைத்த வரிகள்.............

காலம் தான் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும்!.

உன் நினைவை வாழ்வாக்கி
கனவை துணையாக்கி விட்டு
கரம் மாறி கைப்பிடித்து சென்று
விட்டாயே....
காதலிக்க ஒரு கரம்
கைப்பற்ற ஒரு கரம்!

கண்டிக்கப்படவேண்டியவன் இந்தக் காதலன்!

இதற்கும் காலமே பதில் சொல்லும்!.

அன்றைய நினைவு தேனாய்
இனிக்கின்றது
இன்றைய நிஜம் அனலாய்
சுடுகின்றதே......

நினைவுகள் இனிக்கும்
நிஜங்கள் சுடும்!
இரண்டும் வாழ்வைப் புடம் போடும்!

வாழ்ந்து காட்டச் சொல்லும் ஒரு வெறியோடு..................
வாழவைக்கும் இவ்வாறான கவிகளோடு.....................

மீண்டும் நெஞ்சத்தைத் தொடும் ஒரு காதல் கவிதை இனியவள்!

கவிக்காதல் தேவதையின் பூரண அனுக்கிரகம் பெற்றவர் நீங்கள் − வாழ்த்துக்கள்!.

இனியவள்
13-07-2007, 08:08 AM

நன்றி ஓவியன் அருமையான ஒரு பின்னூட்டம்

வாழ்த்துகளுக்கு நன்றி தோழரே

leomohan
13-07-2007, 09:26 AM
அருமையான கவிதை. நிஜம் சுடுகிறது.

ஷீ-நிசி
13-07-2007, 10:01 AM
தேனான நினைவுகளை ரசிக்காமல் வீணான நினைவுகளை ஏன் ருசிக்க விரும்புகிறாய் பெண்ணே!

அக்னி
13-07-2007, 12:09 PM
மன்னிக்க விரைவில் பதிவேறும்...

அமரன்
13-07-2007, 01:02 PM
ம்...என்ன சொல்லலாம்....சிந்தித்தேன்...சிந்தித்தேன்...வந்ததெல்லாம்...ஓவியன் சொல்லி விட்டாரே....
வாழ்த்துக்கள் இனியவள்...

அரசன்
13-07-2007, 01:05 PM
வைரங்கள் ஜொலிக்கின்றன உங்கள் வைர வரிகளில்! வாழ்த்துக்கள் இனி.

ஓவியன்
13-07-2007, 03:25 PM
மன்னிக்க விரைவில் பதிவேறும்...

முடியாது − உமக்கு மன்னிப்பே தர முடியாது!, அப்படி இனியவள் சொல்லப் போகிறா....... :sport-smiley-018:

இனியவள்
13-07-2007, 06:00 PM
அருமையான கவிதை. நிஜம் சுடுகிறது.

நன்றி லியோமோகன்

வைரங்கள் ஜொலிக்கின்றன உங்கள் வைர வரிகளில்! வாழ்த்துக்கள் இனி.

நன்றி மூர்த்தி

இனியவள்
13-07-2007, 06:05 PM
தேனான நினைவுகளை ரசிக்காமல் வீணான நினைவுகளை ஏன் ருசிக்க விரும்புகிறாய் பெண்ணே!

இயற்கையில் நன்மைகள்
இருப்பது போல் சில
தீமைகளையும் உள்ளடக்கி
இருக்கும் அது போலவே
நினைவுகளில் இனிமையோடு
சில கசப்புக்களையும் கலந்திருக்கும்

இயற்கை சில தீமைகளால்
அழிவு ஏற்படுத்தினாலும்
நாம் வெறுப்பதில்லை
அது போலவே நினைவுகள்
சில வலிகளைத் தந்தாலும்
அதை நாம் அகற்றுவதில்லையே
எமது மனதினிலிருந்து

இனியவள்
13-07-2007, 06:09 PM
ம்...என்ன சொல்லலாம்....சிந்தித்தேன்...சிந்தித்தேன்...வந்ததெல்லாம்...ஓவியன் சொல்லி விட்டாரே....
வாழ்த்துக்கள் இனியவள்...

நன்றி அமர்

நீங்கள் சிந்த்தித்தை
ஓவியன் சொல்லி
விட என்ன சொல்வது
என்று தெரியாமல்
திரு திருவென முழிச்சீர்கள்
என்று ஒரு பட்சி சொல்லியது :music-smiley-010:
உண்மையா அமர் ஹீ ஹீ

இனியவள்
13-07-2007, 06:11 PM
மன்னிக்க விரைவில் பதிவேறும்...

எதிர் பார்த்து கொண்டிருக்கின்றேன் உங்கள் பதிவை

முடியாது − உமக்கு மன்னிப்பே தர முடியாது!, அப்படி இனியவள் சொல்லப் போகிறா....... :sport-smiley-018:

ஓவியன் இப்படி எல்லாம் பயம் முறுத்தவேண்டாம் பிறகு அக்னி ஆவியா
ஆகிடப்போறார் ஹீ ஹீ:icon_cool1:

அக்னி
13-07-2007, 06:24 PM
உயிரைக் கேடயமாக்கி
கண்ணைக் காக்கும் இமை
போல் இரவு பகலாய் என்னை
அரவணைத்தாய் காற்றுக் கூட
என்னைத் தீண்டாமல்....
உன்னைத் தீண்ட காற்றையும் விடமாட்டேன்...
காற்றின் தேவையை, என்னிடமிருந்து எடுத்துக்கொள்...
முத்தத்தால்...
இங்கு காற்றிற்குக் கடிவாளம்....

ஊமையானாய் வார்த்தைகளை
மெளனமாக்கி எனக்காக
கண்ணிமைகளை சாமரமாக்கி
எனக்கு வியர்க்காது வீசினாய்....
அதிகம் விசிறினால், உன் மென் தேகம்,
என் தேகம் விட்டுப் பறந்திடுமோ
என்று, மெதுவாக இமை அசைக்கின்றேன்...
அந்த நொடிப்பொழுதில், உன் விம்பம் எனக்குள் நிறைந்திருந்தாலும்,
நிஜம் மறைந்து போகும் குறையை நிரப்பமுடியுமா..?
இங்கு காற்றை உருவாக்கும் மென் சாமரம்...

வெயில் என்னைத் தீண்டா
வண்னம் கரங்களைக்
குடையாக்கினாய்....
ஆம் உன் கூந்தலின் கருமையே மிக அதிகம்,
சூரியனின் கதிர் பட்டுத்தான் கறுக்க வேண்டியதில்லையே...
அதனால் அவற்றிற்கும் தடை...
இருந்தும், என் விரலிடுக்கில், புகுந்து உன் முகம் தடவும்,
சூரியனைச் சுட்டெரிக்க, என் முகத்தில் சிவக்கும் இரு சூரியன்கள்...

இருக்கையாக்கினாய் உன்
கால்களை எனக்கு
உன்னை எனக்கு உயிராக்கினாய்
உன் இதயத்தின் தொட்டிலில் நான்...
என் மடியின் தாங்குதலில் நீ...
என்னை நீ சுமக்க, உன்னை நான் சுமக்க
இன்பமான சுமையில்... அழுந்திப்போனோம்...

நிலம் போல் தாங்கினாய்
நிலவு போல் குளிர்வித்தாய்
வைரம் போல் ஜொலிக்க
வைத்தாய்....
ஆக்கினாய் வாழ்வை பசுமையாய்
காதலின் குளிர்மை, உன் தளிர் மேனியை வருத்துமோ என்று,
உன்னை அணைத்துத் தாங்கி, என் உடல் சூட்டால் சிறு கதகதப்பு...

எனக்காக எனக்காக எல்லாமே
எனக்காக நான் சிரித்தால் நீயும்
சிரித்தாய் அழுதால் நீயும் அழுதாய்
நான் துடித்தால் நீயும் துடித்தாய்
என் கண்ணில் தூசு விழுந்தால்
உன் கண்கள் கண்ணீர் வடித்தது
உயிரின் அசைவுதானே உடலில் தெறிக்கிறது...
நீயே உயிரானால், எனது உறுப்புகளும் உன்னைத்தானே, பிரதிபலிக்கும்...

என் செயலே உன் செயலாய்
என் உருவமே உன் உருவமாய்
எனக்காக எல்லாம் செய்தாய்
ஆனால் செய்யாமல் விட்டு
விட்டாயே என்னை திருமணம்....

உன் நினைவை வாழ்வாக்கி
கனவை துணையாக்கி விட்டு
கரம் மாறி கைப்பிடித்து சென்று
விட்டாயே....

அன்றைய நினைவு தேனாய்
இனிக்கின்றது
இன்றைய நிஜம் அனலாய்
சுடுகின்றதே......
காதலாய் வந்தது, முறிவாய்ப் போனதேன்...
உன் நினைவு என்னுள்... என் நினைவு உன்னுள்...
இருந்தும்...
மணம் என்ற ஒன்றால் உடைந்த இரு மனங்கள்...
எதிர்பார்க்காத முடிவு...
சில்லென்ற குளிரே..., சுள்ளெனக் குத்தும் வலி...
அனலிடைப் புழுவாய் எத்தனை மனங்கள்...?
காதலித்தால், கைப்பிடியுங்கள்...
ஓருயிரை கண்ணீர் உகுக்க வைத்துவிட்டு நீ மட்டும் சல்லாபித்து வாழ எப்படி உன்னால் முடிகிறது?
ஆயிரம் காரணங்கள் கூறினாலும், சுவாசம் நிற்கும் வரை நிற்காது காதல் நினைவுகள்...

பாராட்டுக்கள் இனியவளே...

அக்னி
13-07-2007, 06:26 PM
முடியாது − உமக்கு மன்னிப்பே தர முடியாது!, அப்படி இனியவள் சொல்லப் போகிறா....... :sport-smiley-018:
வச்சிட்டோமில்ல... குளுகுளுன்னு... தப்பிட்டோமில்ல... :grin:

aren
13-07-2007, 06:27 PM
காதலித்துவிட்டு கல்யாணம் செய்யாமல் ஓடிய ஆடவர் அனைவருக்கும் இது ஒரு சாட்டையடி. கவிதை அருமை இளையவள் அவர்களே. உங்களுக்கு எப்படித்தான் இப்படி வார்த்தைகள் வந்து விழுகிறதோ தெரியவில்லை. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஓவியன்
13-07-2007, 06:28 PM
ம்...என்ன சொல்லலாம்....சிந்தித்தேன்...சிந்தித்தேன்...வந்ததெல்லாம்...ஓவியன் சொல்லி விட்டாரே....வாழ்த்துக்கள் இனியவள்...

உண்மையாகவா? :grin:

இரண்டு பேருக்கும் ஒரே அனுபவங்கள் இருக்கு போல.............:grin:

ஓவியன்
13-07-2007, 06:31 PM
வச்சிட்டோமில்ல... குளுகுளுன்னு... தப்பிட்டோமில்ல... :grin:

ஆமாம் இரசித்தேன் நண்பா உம் விமர்சனத்தை − எனது விமர்சனம் இருந்த இடம் இல்லாமல் ஓடி விட்டது.

பாராட்டுக்கள் அக்னி!.

அக்னி
13-07-2007, 06:32 PM
ஆமாம் இரசித்தேன் நண்பா உம் விமர்சனத்தை − எனது விமர்சனம் இருந்த இடம் இல்லாமல் ஓடி விட்டது.

பாராட்டுக்கள் அக்னி!.

சொல்லாதீர்கள் வெளியே...
அதுதான் அத்திவாரம்...

aren
13-07-2007, 06:32 PM
ஆமாம் இரசித்தேன் நண்பா உம் விமர்சனத்தை − எனது விமர்சனம் இருந்த இடம் இல்லாமல் ஓடி விட்டது.

பாராட்டுக்கள் அக்னி!.

ஓடிப்போயிடுச்சா!! போய் பிடித்துக்கொண்டு வாருங்கள்.

ஓவியன்
13-07-2007, 06:32 PM
ஓவியன் இப்படி எல்லாம் பயம் முறுத்தவேண்டாம் பிறகு அக்னி ஆவியா
ஆகிடப்போறார் ஹீ ஹீ:icon_cool1:

இப்ப எதோ மனிதனாக இருக்கிற மாதிரி இல்லே கதைக்கிறியள்?

ஹீ!,ஹீ!! :grin:

aren
13-07-2007, 06:33 PM
இப்ப எதோ மனிதனாக இருக்கிற மாதிரி இல்லே கதைக்கிறியள்?

ஹீ!,ஹீ!! :grin:

அப்போ கதவைத் தட்டி தண்ணீர் கேட்டது யாரு!!

அக்னி
13-07-2007, 07:56 PM
எதிர் பார்த்து கொண்டிருக்கின்றேன் உங்கள் பதிவை
ஓவியன் இப்படி எல்லாம் பயம் முறுத்தவேண்டாம் பிறகு அக்னி ஆவியா
ஆகிடப்போறார் ஹீ ஹீ:icon_cool1:
அதுதான் வந்து போட்டிட்டோமில்ல...:music-smiley-012:

அப்போ கதவைத் தட்டி தண்ணீர் கேட்டது யாரு!!
அதுவா... அது பெண்ணாக்கும்....

இனியவள்
14-07-2007, 08:18 AM
நன்றி அக்னி

இப்படி ஒரு பின்னூட்டத்தை எதிர் பார்க்கவில்லை
அருமையாக இருந்தது :aktion033:

வாழ்த்துக்கள் :)

இனியவள்
14-07-2007, 08:20 AM
காதலித்துவிட்டு கல்யாணம் செய்யாமல் ஓடிய ஆடவர் அனைவருக்கும் இது ஒரு சாட்டையடி. கவிதை அருமை இளையவள் அவர்களே. உங்களுக்கு எப்படித்தான் இப்படி வார்த்தைகள் வந்து விழுகிறதோ தெரியவில்லை. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

நன்றி ஆரேன் அண்ணா

நீங்களும் சும்ம ஜமாய்க்கீறீங்கள் கவிதையில சும்மா அதிருதில்லோ வாழ்த்துக்கள் அண்ணா..

வார்த்தைகள் எல்லாம் எழுதும் போது அதுவா வருது அண்ணா கொட்டாவி மாதிரி :music-smiley-016:

சிவா.ஜி
14-07-2007, 08:25 AM
நீண்ட கவிதை, மனதை தீண்டும் கவிதை. எடுத்துக்கொண்ட கருவுக்கு ஏதுவான வார்த்தைகள். வலியை வெளிப்படுத்தும் உணர்வுகளை எப்படி வார்த்தைகளாலேயே கொண்டுவருகிறீர்கள்..? அசத்திட்டீங்க இனியவள்..பாராட்டுக்கள்.

அமரன்
14-07-2007, 08:25 AM
உண்மையாகவா? :grin:

இரண்டு பேருக்கும் ஒரே அனுபவங்கள் இருக்கு போல.............:grin:

ஆமா..ஆமா.....கற்பூர மூளை உமக்கு..

இனியவள்
14-07-2007, 08:32 AM
நீண்ட கவிதை, மனதை தீண்டும் கவிதை. எடுத்துக்கொண்ட கருவுக்கு ஏதுவான வார்த்தைகள். வலியை வெளிப்படுத்தும் உணர்வுகளை எப்படி வார்த்தைகளாலேயே கொண்டுவருகிறீர்கள்..? அசத்திட்டீங்க இனியவள்..பாராட்டுக்கள்.

நன்றி சிவா.ஜி பாராட்டுக்கு

இனியவள்
14-07-2007, 08:33 AM
ஆமா..ஆமா.....கற்பூர மூளை உமக்கு..

ஓவியனுடைய கற்பூர மூளையை கொண்டு போய் கோயில்ல ஏத்திடுவம் கற்பூரம் இல்லையாம் கோயில்ல

அமரன்
14-07-2007, 08:47 AM
ஓவியனுடைய கற்பூர மூளையை கொண்டு போய் கோயில்ல ஏத்திடுவம் கற்பூரம் இல்லையாம் கோயில்ல

கோயிலில் கற்பூரமா..
வேண்டாம் இனியவள்.மனதில் பல விடயங்கள் தோன்றுகின்றது. காரமான வசனங்களை பதித்து என்னை சிக்கலில் மாட்ட வைக்காதீர்.

இனியவள்
14-07-2007, 09:11 AM
கோயிலில் கற்பூரமா..
வேண்டாம் இனியவள்.மனதில் பல விடயங்கள் தோன்றுகின்றது. காரமான வசனங்களை பதித்து என்னை சிக்கலில் மாட்ட வைக்காதீர்.

:icon_wacko: நான் ஏதோ விளையாட்ட சொல்ல போய் விபரிதமா போயிடும் போல இருக்கே:icon_wacko: