PDA

View Full Version : தூக்கம் தொலைத்த இரவு

மதி
12-07-2007, 10:41 AM
கண்மூடிக் கிடக்கிறேன்
திரையில் குழப்பமான பிம்பங்கள்
மனிதர்கள் வருவதும் போவதுமாய்
தெளிவில்லாத வண்ணங்கள்
நேற்று அவன் கூறியது
இன்னும் மனதினில் ஒலிக்கிறது
கண் திறந்துவிட்டேன்
மங்கலான வெளிச்சத்தில்
நிம்மதியான உறக்கத்தில்
அவன்
பல கண்மூடலுக்கும் விழித்தலுக்கும் பின்
எழுப்பிவிட்டேன் அவனை...
டேய் மணி ஆறாச்சு..எழுப்பிவிட சொன்னாயே
தூக்கம் கலைந்தான் அவன்
தூக்கம் தொலைத்த என் குரலில்.
(இத படிச்சிட்டு ஏதும் விளக்கம் கேட்டுதாதீங்க...)

ஷீ-நிசி
12-07-2007, 10:54 AM
படுக்கும்முன்பாய் பக்கத்து நண்பன்... டேய் காலையில் என்ன எழுப்பிடுடானு சொல்லிட்டு படுத்துட்டான்...

அவன் சொன்ன சொல் மனதினில் பதிந்து தூக்கத்தில் கூட அவனை எழுப்பிவிடுவதாய் கூட கனவுகள் வந்து. அவ்வபோது எழுந்து மணிபார்த்து, உறக்கத்தை நடுநடுவே இழந்து எப்படியோ ஆறு மணிக்கு சரியாக அவனை எழுப்பிவிட்டான்...

இவன் நிம்மதியாக தூக்கம் கலைத்து எழுந்தான்..
அவன் தூக்கம் தொலைத்து மறுபடியும் படுக்கையில் விழுந்தான்...

ஆஹா.. சின்னதொரு நிகழ்வு.. அதை அழகாக சொல்லியுள்ளீர்கள் மதி.. வாழ்த்துக்கள்.....

(விளக்கம் சரிதானா?!)

பென்ஸ்
12-07-2007, 10:55 AM
இத படிச்சிட்டு ஏதும் விளக்கம் கேட்டுதாதீங்க

விளக்கம் கேக்கலையே...

சரி சொல்லு என்னாசு...???

மதி
12-07-2007, 10:57 AM
படுக்கும்முன்பாய் பக்கத்து நண்பன்... டேய் காலையில் என்ன எழுப்பிடுடானு சொல்லிட்டு படுத்துட்டான்...

அவன் சொன்ன சொல் மனதினில் பதிந்து தூக்கத்தில் கூட அவனை எழுப்பிவிடுவதாய் கூட கனவுகள் வந்து. அவ்வபோது எழுந்து மணிபார்த்து, உறக்கத்தை நடுநடுவே இழந்து எப்படியோ ஆறு மணிக்கு சரியாக அவனை எழுப்பிவிட்டான்...

இவன் நிம்மதியாக தூக்கம் கலைத்து எழுந்தான்..
அவன் தூக்கம் தொலைத்து மறுபடியும் படுக்கையில் விழுந்தான்...

ஆஹா.. சின்னதொரு நிகழ்வு.. அதை அழகாக சொல்லியுள்ளீர்கள் மதி.. வாழ்த்துக்கள்.....

(விளக்கம் சரிதானா?!)

அதே அதே...
என்ன அவனை எழுப்பிவிட்டது மூணு மணிக்கு, தூக்க கலக்கத்தில் தெருவிளக்கு வெளிச்சத்தை காட்டி விடிஞ்சுடுச்சுன்னேன்..அப்புறம் இன்னிக்கு காலையிலே ஒரே கலாட்டா தான்..

பென்ஸ்
12-07-2007, 10:59 AM
(விளக்கம் சரிதானா?!)

கவிதைக்கான விளக்கம் சரிதான்.... நீங்க தப்பா சொல்லுவிங்களா...
ஆனால் உறக்கம் தொலைத்தற்க்கான விளக்கம் புரியலை.....

ஷீ-நிசி
12-07-2007, 11:11 AM
கவிதைக்கான விளக்கம் சரிதான்.... நீங்க தப்பா சொல்லுவிங்களா...
ஆனால் உறக்கம் தொலைத்தற்க்கான விளக்கம் புரியலை.....

இதுக்கு அவரு விளக்கம் கொடுத்தே ஆகனும்... :)

அமரன்
12-07-2007, 12:02 PM
மதி அண்ணா நகைச்சுவையான கவிதை போல் இருந்தாலும் பென்ஸண்ணா கேட்டத் கேள்வி என்னை குழப்பி விட்டது...விளக்கம் ப்ளீஸ். கேட்கவேண்டாம் என்றால்தான் கெட்பேன்.

மதி
12-07-2007, 12:13 PM
மதி அண்ணா நகைச்சுவையான கவிதை போல் இருந்தாலும் பென்ஸண்ணா கேட்டத் கேள்வி என்னை குழப்பி விட்டது...விளக்கம் ப்ளீஸ். கேட்கவேண்டாம் என்றால்தான் கெட்பேன்.
தூக்கம் தொலைக்க முக்கிய காரணம்... நேற்று காலை ஏழு மணிக்கே அலுவலகம் புறப்பட்டு வந்துவிட்டேன். யாரையும் எழுப்பி விடவில்லை. வீட்டில் எல்லோரும் தூங்கி எழ 9, 10 ஆயிற்றாம். அதான் அவன், "ஏண்டா எழுப்பி விடலை.. எனக்கு நேரமாயிடுச்சு பாத்தியா"ன்னான். இன்னிக்கு முக்கியமான க்ளையண்ட் மீட்டிங் இருக்கு.. காலையில எட்டு மணிக்கே அலுவலகத்தில் இருக்கணும்ன்னான்.. மறக்காம எழுப்பி விடுடான்னு கோரிக்கை வேற.. என்ன தான் அலாரம் வச்சிருந்தாலும் கடமை உணர்ச்சி காரணமா சரியா தூங்கல...
போதுமா விளக்கம்... :thumbsup:

அமரன்
12-07-2007, 12:19 PM

போதுங்கண்ணா.....:icon_b: :icon_b:

பென்ஸ்
12-07-2007, 12:32 PM
தூக்கம் தொலைக்க முக்கிய காரணம்... நேற்று காலை ஏழு மணிக்கே அலுவலகம் புறப்பட்டு வந்துவிட்டேன். யாரையும் எழுப்பி விடவில்லை. வீட்டில் எல்லோரும் தூங்கி எழ 9, 10 ஆயிற்றாம். அதான் அவன், "ஏண்டா எழுப்பி விடலை.. எனக்கு நேரமாயிடுச்சு பாத்தியா"ன்னான். இன்னிக்கு முக்கியமான க்ளையண்ட் மீட்டிங் இருக்கு.. காலையில எட்டு மணிக்கே அலுவலகத்தில் இருக்கணும்ன்னான்.. மறக்காம எழுப்பி விடுடான்னு கோரிக்கை வேற.. என்ன தான் அலாரம் வச்சிருந்தாலும் கடமை உணர்ச்சி காரணமா சரியா தூங்கல...
போதுமா விளக்கம்... :thumbsup:

மதி: பொய் சொல்ல போறேன்.. பொய் சொல்ல போறேன்
பென்ஸ்: அதுதான் கவிதை எழுதியாச்சே..!!!... ஓ.. விளக்கத்தை சொல்லுறிங்களா???:D

அமரன்
12-07-2007, 12:38 PM
மதி: பொய் சொல்ல போறேன்.. பொய் சொல்ல போறேன்
பென்ஸ்: அதுதான் கவிதை எழுதியாச்சே..!!!... ஓ.. விளக்கத்தை சொல்லுறிங்களா???:D

:huh: :huh: :huh: :huh:

மதி
12-07-2007, 12:39 PM
மதி: பொய் சொல்ல போறேன்.. பொய் சொல்ல போறேன்
பென்ஸ்: அதுதான் கவிதை எழுதியாச்சே..!!!... ஓ.. விளக்கத்தை சொல்லுறிங்களா???:D
இதுக்கு தான் நெசமே சொல்றதில்லை.. இப்போ சொன்னா கூட நம்ப மாட்டேங்கறாங்க..

இனியவள்
12-07-2007, 01:11 PM
இதுக்கு தான் நெசமே சொல்றதில்லை.. இப்போ சொன்னா கூட நம்ப மாட்டேங்கறாங்க..

கவிதை நன்று மதி அண்ணா...

ஹீ ஹீ பேசாமல் பொய் சொல்லுங்க உண்மை என்று நம்பிடுவினம் :icon_wink1:

மதி
12-07-2007, 01:16 PM
கவிதை நன்று மதி அண்ணா...

ஹீ ஹீ பேசாமல் பொய் சொல்லுங்க உண்மை என்று நம்பிடுவினம் :icon_wink1:
ந*ன்றி இனிய*வ*ள்...

சிவா.ஜி
12-07-2007, 01:28 PM
வழக்கமான ஒரு நிகழ்வு ஆனால் அழகான வார்த்தைகளில் அட்டகாசமான கவிதை. எல்லோருக்கும் நேர்வதுதான் ஆனால் எத்தனை பேரால் இத்தனை அழகாய் விவரிக்கமுடியும். மிக்க பாராட்டுக்கள் மதி.

மதி
12-07-2007, 01:33 PM
வழக்கமான ஒரு நிகழ்வு ஆனால் அழகான வார்த்தைகளில் அட்டகாசமான கவிதை. எல்லோருக்கும் நேர்வதுதான் ஆனால் எத்தனை பேரால் இத்தனை அழகாய் விவரிக்கமுடியும். மிக்க பாராட்டுக்கள் மதி.
மிக்க நன்றி சிவா

ஓவியன்
12-07-2007, 08:17 PM
ஹீ!

சிரித்தே விட்டேன் மதி அண்ணா!

எல்லோரது வாழ்விலும் அடிக்கடி நடக்க்கும் ஒரு விடயம் தான், அதனை கவியாக்கிய விதம் அருமையாக இருக்கு!.

அக்னி
13-07-2007, 11:33 AM
ஒரு சிறிய சம்பவத்தைக் கவியாக்கியது ரசிப்பு... பாராட்டுக்கள்...
ஆனால்,
அதிகாலை 03:00 மணிக்கு எழுப்பிவிடுவது ஆகலும் ஓவர்...
ஒரு நன்மை...
உங்களை இனி அலாரமாக்க மாட்டார்கள்...

மதி
13-07-2007, 01:03 PM
ஒரு சிறிய சம்பவத்தைக் கவியாக்கியது ரசிப்பு... பாராட்டுக்கள்...
ஆனால்,
அதிகாலை 03:00 மணிக்கு எழுப்பிவிடுவது ஆகலும் ஓவர்...
ஒரு நன்மை...
உங்களை இனி அலாரமாக்க மாட்டார்கள்...
அதுவும் நல்லதுக்கு தான்..
பாராட்டுக்கு நன்றி அக்னி..!

ஆதவா
14-07-2007, 03:57 PM
அடடே! மதியண்ணே! என்னாச்சுண்ணே உமக்கு?..

சிறு நிகழ்வை கவிதையாக்குதல் பெரும் வேலை.. அதற்குத்தான் நான் முயன்று தோற்றுக் கொண்டிருக்கிறேன்.

கவிதைக்குண்டான விளக்கத்தை பென்ஸ் எழுதுவார் என்று நினைத்தேன்.. அவர் வழக்கம்போல மழுப்பிவிட்டர்... ம்ம்ம்ம்....

வாழ்த்துக்கள் மதி..

மதி
16-07-2007, 04:22 AM
அடடே! மதியண்ணே! என்னாச்சுண்ணே உமக்கு?..

வாழ்த்துக்கள் மதி..
அதான் என*க்கும் தெரிய*ல*..!

ஓவியன்
16-07-2007, 04:28 AM
அதான் என*க்கும் தெரிய*ல*..!

பரவாயில்லை!

நல்ல டாக்டர் ஒருவருக்குப் புருஞ்சிருக்கும் − முயற்சிகலாமே!! :sport-smiley-018: