PDA

View Full Version : எங்கிருந்தோ வந்தான்



aren
12-07-2007, 09:56 AM
வீட்டில்
எல்லாம் தடபுடலாக
அனைவரும்
இங்கேயும் அங்கேயும்
ஓடிக்கொண்டு
ஒன்றும் புரியாமல் நான்

மேலே போய்
உடனே உடைமாற்று
உன்னைப் பார்க்க
மாப்பிள்ளை வருகிறார்

பல நாள் கனவுகள்
ராஜகுமாரன் குதிரையில் வருவான்
என்னைத் தூக்கிக்கொண்டு போவான்
என்று பல கனவுகள்

இன்று அது
உண்மையாக நடக்கப்போகிறது
அவன் எப்படியிருப்பான்
அழகானவனா
அறிவுள்ளவனா
பண்பாளனா
பகட்டானவனா
இப்படி பல விஷயங்கள்
மனதில்

வந்தான்
என்னை வாளிப்புடன் பார்த்தான்
கண்களாலேயே அளந்தான்
கேள்விகளால் துளைத்தான்
பிடித்திருக்கிறது என்றான்

என் உச்சி குளிர்ந்தது
ராஜகுமாரன் வந்தான்
என்னை அப்படியே
கொண்டு செல்லப் போகிறான்
என்னுடைய கனவு
ஆரம்பமாகியது

மாமியார் பேசினாள்
பேசிக்கொண்டே போனாள்
இது வேண்டும்
அது வேண்டும்
நிலம் வேண்டும்
வீடு வேண்டும்
கார் வேண்டும்
மிக்ஸி வேண்டும்

என் தந்தையின் கால்கள்
வலுவிழந்துவிட்டது
என் அம்மாவின் கண்களில்
தண்ணீர் வற்றிவிட்டது

தன் பெற்ற மகளைப்
பெற்றுக்கொள்ள
வியாபாராமா
அழகுப்பதுமை
அறிவுக் களஞ்சியம்
பொறுமையின் சிகரம்
இவளுக்கு இந்தக் கதியா

கதறினார் தந்தை
மாமியார் காது கேளாதவர்
போல் இருந்தார்

மாப்பிள்ளையும்
மாமியாரும்
எழுந்தார்கள்
கையை கழுவி விட்டு
சென்றார்கள்

எனக்கு
கனவு அனைத்தும்
காணாமல் போனது
மூளை சிதறுண்டதுபோல்
வலி ஏற்பட்டது
அனைத்தும் கானல்நீரானது

எங்கிருந்தோ வந்தான்
அனைத்தையும்
அழித்துவிட்டுச் சென்றான்
நான் உயிரற்ற
உடலாய்
கீழே சாய்ந்தேன்!!!

அமரன்
12-07-2007, 09:59 AM
அண்ணா எவ்வளவுதான் போராடினாலும் தீராத பிரச்சினையை அருமையாக சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள் அண்ணா.

வாசல்வந்த வசந்தம்
காணாமல் போனது
காணவந்த இல்லாதவனால்.

ஓவியன்
12-07-2007, 10:00 AM
அண்ணா கவி எழுதத் தெரியாது என்று சொல்லி இந்தப் பகுதியில் வந்து விட்டு இப்படி உங்கள் வரிகளால் கலங்கடித்து விட்டீர்களே!.

ஒரு பெண்பார்க்கும் பட(அவ)லத்தை நெஞ்சுருக வரிகளாக்கியமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!.

பிச்சி
12-07-2007, 10:00 AM
கவிதை சூப்பர் ஆரென் அண்ணா. இன்றைய மகளிர் நிலையை ஆணி அடித்தமாதிரி சொல்லீட்டீங்க. சூப்பர்ப்;. ஒவ்வொருமுறையும் கலஐந்து போகும் பெண் பார்க்கவரும் பையன் வீட்டாருக்குத் தெரியுமா நாங்கள் படும் வேதனை?

அன்புரசிகன்
12-07-2007, 10:05 AM
நன்றாக உள்ளது அண்ணா...

தடல் புடலாகவந்து
அடிதடியாக மாறி
இதயம் பிடுங்கும்
அரக்க குமாரனுக்கு
எதுக்கு மீசை
எதற்கு வேஷ்டி...
கைக்குட்டை போதும்

அமரன்
12-07-2007, 10:06 AM
நன்றாக உள்ளது அண்ணா...

தடல் புடலாகவந்து
அடிதடியாக மாறி
இதயம் பிடுங்கும்
அரக்க குமாரனுக்கு
எதுக்கு மீசை
எதற்கு வேஷ்டி...
கைக்குட்டை போதும்

கைக்குட்டை தேவையில்லை
வரண்ட கண்ணுக்கு

சிவா.ஜி
12-07-2007, 10:08 AM
ஈரமுள்ள இதயங்கள்தான் இன்னொரு இதயத்தின் வலியை புரிந்து கொள்ளும். பெண்பார்க்க வரும் போதே இதயத்தை கழற்றிவைத்துவிட்டுவரும் இரக்கமில்லாதவர்களால்தான் நிறைய பெண்களின் கனவுகள் கலைந்து கருகிவிடுகிறது. ராஜகுமாரர்களாய் நினைத்து அவர்களுக்காக ஏங்கும் இளம் உள்ளங்களுக்கு அவர்களே அரக்கர்களாய் மாறிவிடுகிறார்கள். புனிதமான திருமண பந்தத்தை வியாபாரமாக்கும் இவர்களைப் புறக்கனித்து புத்தி புகட்டவேண்டும். சமூக சிந்தனையுள்ள கவிதை அழகான கவிதை. பாராட்டுக்கள் ஆரென்.

aren
12-07-2007, 10:09 AM
இது என்னுடைய முதல் அரங்கேற்றம்.

நன்றிகள் அனைவருக்கும்.

இதை எழுத தூண்டுகோலாக இருந்த ஆதவன் அவர்களுக்கும் ஓவியன் அவர்களுக்கும் என் நன்றிகள்.

நன்றி வணக்கம்
ஆரென்

அன்புரசிகன்
12-07-2007, 10:09 AM
கைக்குட்டை தேவையில்லை
வரண்ட கண்ணுக்கு
கைக்குட்டை தேவை
வறண்ட கண்ணுக்கல்ல.
முகத்திரையாக

கை குட்டு தேவை
அவன் மண்டையை கலக்க :violent-smiley-010:

lolluvathiyar
12-07-2007, 10:20 AM
கவிதை வரிகள் அருமை, பெண்ணின் மனதை விளக்குகிறது.
இன்று காலம் மாறிவிட்டது. பெண் பார்க்க வரும் முன்னரே பெண் வீட்டார்கள் எங்களால் இவ்வளவு தான் போட முடியும், இஸ்டம் இருந்தால் வந்து பாருங்கள் என்று வெட்டு ஒன்னு துண்டு ஒன்னாய் போட்டு விடுகிறார்கள்

ஓவியன்
12-07-2007, 10:23 AM
இது என்னுடைய முதல் அரங்கேற்றம்.

நன்றிகள் அனைவருக்கும்.

இதை எழுத தூண்டுகோலாக இருந்த ஆதவன் அவர்களுக்கும் ஓவியன் அவர்களுக்கும் என் நன்றிகள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஹா!

நான் தூண்டுகோலாக இருந்தேனா!, மிக்க சந்தோசமாக இருக்கிறது கலக்குங்க அண்ணா!.

ஷீ-நிசி
12-07-2007, 10:33 AM
இந்தக் கவிதையை உங்களால் என்றும் மறக்க முடியாது... காரணம் இது உங்கள் முதல் கவிதை (அப்படித்தானே)...

நல்ல சமூக சாடல்..

அடுத்த கவிதையில் வார்தைகளை எதுகை மோனையில் இட முயற்சியுங்கள்..

பழக பழக தானே குழந்தை அம்மா என்று முழுமையாய் சொல்கிறது...

வாழ்த்துக்கள் ஆரென்....

aren
12-07-2007, 10:33 AM
கவிதை வரிகள் அருமை, பெண்ணின் மனதை விளக்குகிறது.
இன்று காலம் மாறிவிட்டது. பெண் பார்க்க வரும் முன்னரே பெண் வீட்டார்கள் எங்களால் இவ்வளவு தான் போட முடியும், இஸ்டம் இருந்தால் வந்து பாருங்கள் என்று வெட்டு ஒன்னு துண்டு ஒன்னாய் போட்டு விடுகிறார்கள்

நீங்கள் சொல்வது சரிதான். சிலர் அதிகம் கேட்பார்கள் என்று தெரிந்தாலும் முதலில் பெண்ணைப் பார்க்கட்டும், பெண்ணை பிடித்துவிட்டால் கொஞ்சம் இறங்கிவருவார்கள் என்று நினைப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள். தலையை அடகு வைத்தாவது இந்த கல்யாணத்தை எப்படியாவது நடத்திவிடவேண்டும் என்றும் பலர் நினைக்கிறார்கள்.

சில சமயங்களில் இது நடக்காமல் போய்விடுகிறது.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
12-07-2007, 10:34 AM
ஹா!

நான் தூண்டுகோலாக இருந்தேனா!, மிக்க சந்தோசமாக இருக்கிறது கலக்குங்க அண்ணா!.

நீங்கதானே அடிக்கமாட்டோம் வாங்க என்று சொன்னீர்கள். அதான்.

aren
12-07-2007, 10:35 AM
இந்தக் கவிதையை உங்களால் என்றும் மறக்க முடியாது... காரணம் இது உங்கள் முதல் கவிதை (அப்படித்தானே)...

நல்ல சமூக சாடல்..

அடுத்த கவிதையில் வார்தைகளை எதுகை மோனையில் இட முயற்சியுங்கள்..

பழக பழக தானே குழந்தை அம்மா என்று முழுமையாய் சொல்கிறது...

வாழ்த்துக்கள் ஆரென்....


நன்றி ஷீ−நிசி.

இந்த எதுகை மோனை பிரச்சனையால்தான் நான் இந்த பக்கமே தலைவைக்காமல் இருந்தேன்.

அடுத்த தடவை முயற்சிக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஷீ-நிசி
12-07-2007, 10:38 AM
கண்களாலேயே அளந்தான்
கேள்விகளால் துளைத்தான்

ஒன்னுமில்லேங்க.. நீங்க உங்க முதல் கவிதையிலேயே உபயோகிச்சிருக்கீங்க....பார்த்தீங்களா.. இத அங்கங்க முயற்சித்து தூவுனீங்கனா. அட்டகாசம்தான் அப்புறம்...

மதி
12-07-2007, 10:44 AM
அட்டகாசமான கவிதை ஆரென்..
கன்னியரின் கண்ணீரை எடுத்துரைத்துள்ளீர்..
நன்று..

பென்ஸ்
12-07-2007, 10:46 AM
ஆரென்....

நீங்களா.... ????

அப்போ இத்தனை நாளும் எங்களை ஏமாற்றி கொண்டு இருந்தீர்களா...
ஒரு சமூக சிந்தனையை சரியாக வடித்து அதை வார்தைகளில் விளையாடி இருக்கிறிர்களே....

உங்களை வாழ்த்தும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை...
அந்த வயதும் இல்லை...

ஆனால் இவ்வளவு நல்ல கவிதை கொடுத்த உங்களுக்கு நன்றி சொல்லலாம்தானே நான்....

mania
12-07-2007, 10:55 AM
அபாரம் அமர்க்களம் அட்டகாசம் ஆரென்....:aktion033: :aktion033: எல்லோருமா சேர்ந்து என்னை மட்டும் தனியா ஓரம் கட்டிடுவீங்க போலிருக்கே...???? பாராட்டுக்கள் ஆரென்....
அன்புடன்
மணியா (நன்றி பென்ஸ்.)

பென்ஸ்
12-07-2007, 11:02 AM
அபாரம் அமர்க்களம் அட்டகாசம் ஆரென்....:aktion033: :aktion033: எல்லோருமா சேர்ந்து என்னை மட்டும் தனியா ஓரம் கட்டிடுவீங்க போலிருக்கே...???? பாராட்டுக்கள் ஆரென்....
அன்புடன்
மணியா (நன்றி பென்ஸ்.)

அதேப்படி தலை ....
உங்க பின்னாலதானே நாங்க இருக்கிறோம்....
நீங்க ஓரம் சென்றால், கூடவே நாங்களும்....

ஷீ-நிசி
12-07-2007, 11:08 AM
அபாரம் அமர்க்களம் அட்டகாசம் ஆரென்....:aktion033: :aktion033: எல்லோருமா சேர்ந்து என்னை மட்டும் தனியா ஓரம் கட்டிடுவீங்க போலிருக்கே...???? பாராட்டுக்கள் ஆரென்....
அன்புடன்
மணியா (நன்றி பென்ஸ்.)


பல கவிதைகளுக்கு வார்த்தையே உங்ககிட்டருந்து கத்துக்கிறதுதானே...தல...:cool-smiley-016:

அமரன்
12-07-2007, 11:56 AM
பல கவிதைகளுக்கு வார்த்தையே உங்ககிட்டருந்து கத்துக்கிறதுதானே...தல...:cool-smiley-016:

இவ்வளவு லேட்டாகச் சொல்றீங்களே ஷீ..முதல்லயே சொல்லி இருந்தால் நானும் கத்துக்கிட்டிருப்பேனில்ல..

leomohan
12-07-2007, 12:30 PM
எங்கிருந்தோ வந்தான்
அனைத்தையும்
அழித்துவிட்டு சென்றான்
நான் உயிரற்ற
உடலாய்
கீழே சாய்ந்தேன்!!!

அருமையான கவிதை. இப்போது reject ஆகுபவர்களில் ஆண்கள் அதிகமாகிவிட்டனர் நண்பரே.

பென்ஸ்
12-07-2007, 12:38 PM
எங்கிருந்தோ வந்தான்
அனைத்தையும்
அழித்துவிட்டு சென்றான்
நான் உயிரற்ற
உடலாய்
கீழே சாய்ந்தேன்!!!

அருமையான கவிதை. இப்போது reject ஆகுபவர்களில் ஆண்கள் அதிகமாகிவிட்டனர் நண்பரே.

மோகன்....
சரியாக சொன்னீர்கள்,.....
ஆனா.. எல்லாம் ஒரு காரணத்துகாய் தான் இருக்கு...
தன் காதலை சொல்ல தைரியமில்லைனா.. அப்பா பார்த்த மாப்பிளை வேண்டாம்
த*ன் முந்தைய* காத*ல*னை விட* ந*ல்லா பைய*னா இல்லைனா... அப்பா பார்த்த* மாப்பிளை வேண்டாம்.
பை ஓட்ட தெரியலைனா.. அப்பா பார்த்த மாப்பிளை வேண்டாம் (நம்ப முடியலையா... இது ஒரு ரீசனாம்)

அட உங்கள திருத்தவே முடியாதப்பா......

மதி
12-07-2007, 12:45 PM
எங்கிருந்தோ வந்தான்
அனைத்தையும்
அழித்துவிட்டு சென்றான்
நான் உயிரற்ற
உடலாய்
கீழே சாய்ந்தேன்!!!

அருமையான கவிதை. இப்போது reject ஆகுபவர்களில் ஆண்கள் அதிகமாகிவிட்டனர் நண்பரே.


மோகன்....
சரியாக சொன்னீர்கள்,.....

பை ஓட்ட தெரியலைனா.. அப்பா பார்த்த மாப்பிளை வேண்டாம் (நம்ப முடியலையா... இது ஒரு நீசனாம்)

அட உங்கள திருத்தவே முடியாதப்பா......

நீங்க தான் பைக், கார் எல்லாத்தையும் ஓட்டுவீங்களே..அப்புறம் ஏன்..??:icon_dance: :icon_hmm:

பென்ஸ்
12-07-2007, 12:57 PM
நீங்க தான் பைக், கார் எல்லாத்தையும் ஓட்டுவீங்களே..அப்புறம் ஏன்..??:icon_dance: :icon_hmm:

செவ்வாய் போரம் வருவேதானே... சொல்லுறேன்....

மதி
12-07-2007, 01:05 PM
செவ்வாய் போரம் வருவேதானே... சொல்லுறேன்....
யாருங்க* அங்க*...
பென்ஸ்...ந*ல்ல*வ*ர்..வ*ல்ல*வ*ர்... :D :D

இனியவள்
12-07-2007, 01:06 PM
வாழ்த்துக்கள் ஆரென் கவிதை நல்லா இருக்கு

இதயம்
12-07-2007, 01:21 PM
கல்யாணக்கனவில் உயிரற்ற சடலமாய் இருந்தவள் பெண் பார்க்க வரும் ஒரு ஆணின் வருகையால் உயிர் பெறுகிறாள். அதற்குள் தனக்குள் அவள் மாடமாளிகை கட்டி, அதில் இராஜகுமாரனை உள் இருத்தி கற்பனையில் அவனோடு வாழப்போகும் அந்த நிமிஷத்தில் அவர்கள் சொல்லும் சம்மதமில்லை என்ற ஒற்றைச்சொல், அவள் கட்டிய அந்த மாளிகையை செங்கல், செங்கல்லாக பெயர்தெடுத்து, அவளிடமிருந்து இராஜகுமாரனை அவளிடமிருந்து பிரித்தெடுத்து, அந்த அதிர்ச்சியில் அவள் உயிரும் பிரிந்து முன்னிருந்த அதே சடல நிலைக்கு போகும் ஒரு பெண்ணின் பரிதாப நிலையை இந்த கவிதையை விட வேறு எப்படி இத்தனை தெளிவாக சொல்லமுடியும்.?

இந்த உயிர் வருதலும், பிரிதலுமாக ஒவ்வொரு பெண்ணும் ஆண்களால் தினம் தினம் செத்துப்பிழைப்பது நடைமுறையில் நடக்கும் விஷயமே. வரதட்சிணை என்ற கொடிய அரக்கன் தன் நீண்ட கரம் நீட்டி எப்போது நம்மை தழுவ தொடங்கினானோ, அன்று முதல் பெண்களின் கனவுகள் உயிரோடு புதைக்கப்பட்டு விட்டன. பெரும்பாலான பெண்கள் விரும்பிய கணவனை அடைவதை விட, கிடைத்த கணவனை ஏற்பது தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பணம் என்னும் பாதாளத்துக்குள் விழும் ஆண் மணமானதிற்கு பின் மனைவி தனக்கு பொருத்தமில்லை, விசுவாசமாய் இல்லை, அன்பு இல்லை, காதல் இல்லை கண்ணீர் வடிக்கிறான். அற்ப பணத்திற்கு அடிமையாகாமல் இருந்திருந்தால் இருவரின் வாழ்க்கையும் சொர்க்கமாகியிருக்கும். பெண்களை பெருமைப்படுத்துவதாக சொல்லும் பம்மாத்துக்காரர்கள் வரதட்சிணை என்ற தீமை பெண் குலத்தையே வஞ்சிப்பதை ஏற்பார்களா..? தன் வினை தன்னைச்சுடும் என்பார்கள். அது போல வரதட்சிணைக்காக பெண்ணை மணமுடிப்பவர்கள் மணமானதிற்கு பின் விதைத்த வினையை அறுக்கிறார்கள். என்ன சொல்லி என்ன பயன்..? காலம் கடந்து விட்டது..!!

பெண் குலத்திற்கு எதிரான குரலை தன் முதல் கவிதை மூலம் முத்தாக அளித்த ஆரென் அவர்களுக்கு என சத்தான பாராட்டுக்கள்.!

அறிஞர்
12-07-2007, 02:01 PM
ஆரெனின் கவிதையா.. வாவ் கலக்கல்...

இந்த கவிஞர் அதிகம் வெளிப்படாமல் எங்கு மறைந்து இருந்தார்.....

இப்படியாய் பலரை.. உயிரற்றவர்களாக்கிய.. பல இராஜகுமாரர்கள் இன்னும் இங்கு நடமாடுகிறார்கள்...

aren
12-07-2007, 04:07 PM
ஒன்னுமில்லேங்க.. நீங்க உங்க முதல் கவிதையிலேயே உபயோகிச்சிருக்கீங்க....பார்த்தீங்களா.. இத அங்கங்க முயற்சித்து தூவுனீங்கனா. அட்டகாசம்தான் அப்புறம்...

ஏதோ ஒன்று இரண்டு தானாகவே வந்து விழுந்திருக்கிறது. முயற்சிக்கிறேன் அடுத்த முறை எழுதும்பொழுது.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
12-07-2007, 04:08 PM
அட்டகாசமான கவிதை ஆரென்..
கன்னியரின் கண்ணீரை எடுத்துரைத்துள்ளீர்..
நன்று..

நன்றி மதி.

aren
12-07-2007, 04:11 PM
ஆரென்....

நீங்களா.... ????

அப்போ இத்தனை நாளும் எங்களை ஏமாற்றி கொண்டு இருந்தீர்களா...
ஒரு சமூக சிந்தனையை சரியாக வடித்து அதை வார்தைகளில் விளையாடி இருக்கிறிர்களே....

உங்களை வாழ்த்தும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை...
அந்த வயதும் இல்லை...

ஆனால் இவ்வளவு நல்ல கவிதை கொடுத்த உங்களுக்கு நன்றி சொல்லலாம்தானே நான்....


நான் யாரையும் ஏமாற்றவில்லை நண்பரே. எல்லாம் நம் மக்கள் கொடுத்த தைரியம்தான்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
12-07-2007, 04:17 PM
அபாரம் அமர்க்களம் அட்டகாசம் ஆரென்....:aktion033: :aktion033: எல்லோருமா சேர்ந்து என்னை மட்டும் தனியா ஓரம் கட்டிடுவீங்க போலிருக்கே...???? பாராட்டுக்கள் ஆரென்....
அன்புடன்
மணியா (நன்றி பென்ஸ்.)

என்ன ஆச்சு தலை. உங்களை யார் விட்டார்கள் தலை. நம்ம ஆதவன், ஷீ−நிசி, இளசு, பூ மற்றும் பல ஜாம்பவான்கள் நம் தளத்தில் இருக்கும்பொழுது ஏன் கவலை.

என்னை எழுத வைத்த மாதிரி, உங்களையும் எழுத வைத்துவிட்டால் ஆயிற்று.

நன்றி வணக்கம்
ஆரென்

அக்னி
12-07-2007, 04:27 PM
சீதனம்..!
பெண் அடிமைத்தளையின் முக்கியமுதுகெலும்பு,
இதன் பிடியில் சிக்கிக் கருகுவது இளம் பெண்கள் என்றால்,
சீதனம் தேடும் ஆண்கள், கையாலாகாத்தனத்தின், அவமானத்தின் சின்னம்...
ஆனால், கொடுமையிலும் கொடுமை..,
பெண்ணுக்குப் பெண்ணே எதிரியாய் இருப்பது...
தனது நிலை மாமியார் என்ற அந்தஸ்தைப் பெறும்போது,
புத்தி கீழ்நிலையடைந்து, மனம் கல்லாகி, மகனைப் பேரம் பேசும்,
இழிநிலை...

ஆரென் அவர்களின் கவிதை, சமுதாய அவலமொன்றான, மணக்கொடையை, எளிமையாக, ஆனால், பலமாக விளாசி நிற்கின்றது...

முதல் கவிதை, முத்தாய்ப்பாய், இருக்கிறது...
தொடரும் கவிதைகள், முடிவிலியாய் இருக்க வாழ்த்துகின்றேன்...

ஓவியன்
12-07-2007, 06:32 PM
என்ன ஆச்சு தலை. உங்களை யார் விட்டார்கள் தலை. நம்ம ஆதவன், ஷீ−நிசி, இளசு, பூ மற்றும் பல ஜாம்பவான்கள் நம் தளத்தில் இருக்கும்பொழுது ஏன் கவலை.

என்னை எழுத வைத்த மாதிரி, உங்களையும் எழுத வைத்துவிட்டால் ஆயிற்று.

நன்றி வணக்கம்
ஆரென்

அண்ணா!

உங்கள் இருவரதும் வார்த்தையாடல்களில் உள்ள சிலேடைத் தனங்கள் உண்மையிலேயே நல்லா இருக்கு! − ரொம்பவே இரசித்தேன். :sport-smiley-018:

aren
13-07-2007, 04:49 AM
ஆரென் அவர்களின் கவிதை, சமுதாய அவலமொன்றான, மணக்கொடையை, எளிமையாக, ஆனால், பலமாக விளாசி நிற்கின்றது...

முதல் கவிதை, முத்தாய்ப்பாய், இருக்கிறது...
தொடரும் கவிதைகள், முடிவிலியாய் இருக்க வாழ்த்துகின்றேன்...

நன்றி அக்னி. ஏதோ தோன்றியதை எழுதிவிட்டேன். அவ்வளவுதான்.

இனிமேலாவது கொஞ்சம் யோசித்து எழுதவேண்டும். பார்க்கலாம் எப்படி போகிறது என்று.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
13-07-2007, 04:50 AM
அண்ணா!

உங்கள் இருவரதும் வார்த்தையாடல்களில் உள்ள சிலேடைத் தனங்கள் உண்மையிலேயே நல்லா இருக்கு! − ரொம்பவே இரசித்தேன். :sport-smiley-018:


தலையோட என்னை ஒப்பிடுகிறீர்களா? அது ரொம்ப தப்பு. தலை எங்களுடைய குரு. அவர்கிட்டேயிருந்துதான் எல்லாவற்றையும் நாம் கற்றுக் கொள்கிறோம்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஓவியன்
13-07-2007, 02:33 PM
தலையோட என்னை ஒப்பிடுகிறீர்களா? அது ரொம்ப தப்பு. தலை எங்களுடைய குரு. அவர்கிட்டேயிருந்துதான் எல்லாவற்றையும் நாம் கற்றுக் கொள்கிறோம்.

நன்றி வணக்கம்
ஆரென்

தவறென்றால் மன்னித்து விடுங்கள் அண்ணா!

நான் புதியவனாகையால் மணியா அண்ணாவுடன் இன்னமும் அவ்வளவு பழக்கமில்லை அதனால் வந்த வினை இது!.

இனிக் கவனமாக இருப்பேன்!.

அமரன்
13-07-2007, 02:41 PM
தவறென்றால் மன்னித்து விடுங்கள் அண்ணா!

நான் புதியவனாகையால் மணியா அண்ணாவுடன் இன்னமும் அவ்வளவு பழக்கமில்லை அதனால் வந்த வினை இது!.

இனிக் கவனமாக இருப்பேன்!.

ஓவியன் இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6796) போங்கள்..தலையைப் பற்றி ஓரளவு அறியலாம்..

இளசு
14-07-2007, 12:15 PM
அன்பின் ஆரென்..

அசத்திவிட்டீர்கள்..

அருமையான கவிதை!

எளிய நடையில்.. தெளிவான கருத்து சொன்ன இனிய கவிதை!

என் கட்டிப்பிடி பாராட்டுகள்!

முதல் கவிதையா.... ஆதவா, ஓவியன் ஊக்கத்திலா... அருமை..!!!

இங்கே சங்ககாலப்பாடல் என் நினைவாடலில்..

தடாகத்தாமரை.. அருகிலேயே தவளை!
தாவிக்குதித்து தண்டிழுத்து இதழ் ஏறி
தாமரைக்கு நெருக்கம் என்று விம்மும் தவளை!

வண்டுகள் வந்தன.. மலருள் இறங்கின..
தேனை அருந்தின..
மலரின் மற்றொரு பரிமாணம்
மற்றதகற்கு உணர்த்தின..


உங்களை ஐந்தாண்டுகளாய் அறிவேன் நான்..
மன்றம் − தடாகம்..
தாமரையாய் நீங்கள்..
வண்டுகளாய் ஆதவா,ஓவியன்..
தேனாய் உங்கள் கவிதை..

மூவரையும் வாழ்த்திக்கத்தும்
தவளை − இளசு!

ஆதவா
14-07-2007, 03:38 PM
கவிதைகளுக்குண்டான முழு அர்த்தங்களும் அதனால் ஏற்படும் பாராட்டுச் சுகங்களும் தமிழ்மன்றம் அன்றி வேறெந்த ஊடகத்திலும் நான் கண்டதில்லை. நண்பர்களோடு நண்பர்களாக பின்னிப் பிணைந்து ஊக்கத்திலும் ஆக்கத்திலும் குறைவின்றி,
தவழும் குழந்தையை நடக்க, ஓட, பாட, ஆட வைத்து அறிவொளி ஏற்றி,

எனக்கும் தெரியாது என்று இனி யாரும் சொல்லமுடியாது..... அன்பின் ஆரென் அண்ணா மயூர் போன்றவர்கள் இதற்கு சாட்சி. என் பெயரை இழுத்தமைக்கு நான் நன்றி சொல்லவா? முத்தமிடவா?

-------------------------------

தெளிவான நீரில் எத்தனைக் கல்லைப் போட்டாலும் அடியில் புழுதியில்லையெனில் நீர் கலங்காது... நீங்கள் புழுதியற்ற நீரில் கவிதை வரைந்திருக்கிறீர்கள்.. அத்தனை தெளிவு..

பெண் பார்க்கிறவர்கள் என்பது மாடுபிடிப்பது என்று என் வீட்டில் அடிக்கடி சொல்வதுண்டு. அதிலும் மாட்டுக் காரனுக்கு பணமுண்டு. இங்கே பொண்ணூம் கொடுத்து, பணமும் கொடுத்து........... பெண்களை தயவு செய்து துன்புறுத்தாதீர்கள்....

என் தந்தையின் கால்கள்
வலுவிழந்துவிட்டது
என் அம்மாவின் கண்களில்
தண்ணீர் வற்றிவிட்டது

தந்தையானவன் தட்சணை கேட்டிருந்தால் உணர்ந்திருப்பானோ தன் கால்வலியின் காரணத்தை?

இருவகை உவமைகளும் அருமை ஆரென் அண்ணா. பெரும்பாலும் இந்த தட்சனை விஷயம் மாப்பிள்ளையின் அம்மாவாலே பிரச்சனை ஆகிறது. மாப்பிள்ளையானவன் கோழையாக இருக்கிறான். அந்த விஷயம் கவிதையில் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது..

அதோடு, மாமியார் என்ற வார்த்தை தேவையற்றது என்று நினைக்கிறேன். மணம் ஆகியிருந்தால் தான் மாமியார்.. இல்லையென்றால் மாப்பிள்ளையானவனின் அம்மா தானே? விளக்கம் வேண்டும் சபையோரே!

எங்கிருந்தோ வந்தான்
அனைத்தையும்
அழித்துவிட்டுச் சென்றான்
நான் உயிரற்ற
உடலாய்
கீழே சாய்ந்தேன்!!!


இங்கே தான் நிற்கிறீர்கள்... அருமை ஆரென் அண்ணா. இத்தனை நாளாக ஏமாற்றியிருக்கிறீர்கள். அது ஒன்றையாவது குறை என்று சொல்லிவிடுகிறேன். கவிச்சமரில் உங்கள் கவிதைகள் சில கண்டேன். படிக்கவில்லை... இப்போது படிக்காததன் விளைவுகள் தெரிகிறது..... முதல் கவிதையில் சமூகம்.... முத்தாய்ப்பாய்....

aren
14-07-2007, 05:17 PM
நன்றி இளசு அவர்களே. நீங்கள் வந்து இதைப் படித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு. அதற்கு அழகான விமர்சனமும் எழுதிவிட்டீர்கள்.

எனக்குத் தெரிந்து:

மன்றம் − தடாகம்..
தாமரையாய் நீங்கள்..
வண்டுகளாய் ஆதவா,ஓவியன்..
தேனாய் உங்கள் விமர்சனம்..

மூவரையும் வாழ்த்திக்கத்தும்
தவளை − ஆரென்!

இதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
14-07-2007, 05:25 PM
ஆதவன் அவர்களே, உங்கள் விமர்சனம் கண்டு மனம் மகிழ்ந்தது. என்னுடைய ஆசான் நீங்கள். நீங்கள் கொடுத்த தைரியத்தில்தான் நான் எழுதினேன். எனக்கு இன்னும் உவமை எது, எதுகை மோனை எப்படி எழுதுவது என்றெல்லாம் தெரியாது. நீங்கள் கொடுத்த தைரியத்தில் எழுதினேன். அவ்வளவே.

இது வரை இருந்த பயம் உங்கள் மூலமும் ஓவியன் மூலமும் போய்விட்டது. இனிமேல் எனக்குத் தெரிந்ததை கிருக்கலாம் என்றிருக்கிறேன். நீங்கள்தான் தவறை சுட்டிக்காட்டி என்னை சரியான வழியில் எடுத்துச்செல்ல வேண்டும்.

என்னைவிட அழகாக தமிழ் எழுதக்கூடிய தலை மணியா அவர்களும், அறிஞர் அவர்களும் இன்னும் கவிதை எழுதவில்லை. அவர்களையும் இங்கே கொண்டுவந்துவிடுங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஆதவா
17-07-2007, 04:04 AM
ஆரென் அண்ணா... ஆசான் என்பதெல்லாம் எனக்கு அதிகம் என்று நினைக்கிறேன். கவிதை எல்லாருள்ளும் இருக்கிறது. அதை உசுப்பிவிட்டேன் என்றால் அது பொருந்தும் என்று நினைக்கிறேன்.. இன்னும் யாரெல்லாம் தெரியாது என்று சொல்கிறார்களோ அத்தனை பேரையும் எழுத வைக்கலாம். அத்தனை பேருள்ளும் கவிதை ஒளிந்துகொண்டிருக்கிறது.

எங்கேனும் தவறாக எனக்குப் பட்டால் அதை சொல்லிவிடுகிறேன்... அதே தவறு சிலருக்கு சரியென்று தோன்றலாம்... காரணம் நான் பழுத்த கவிஞனல்லவே... நானும் உங்களைப் போல சாதாரண கவிஞன்... அவ்வளவே...

(உண்மையிலேயே எனக்கு மிகுந்த மனமகிழ்ச்சி அண்ணா... பின்னே? கவிதை எழுதத் தெரியாது என்று சொல்லிக் கொண்டிருந்தவர் இன்று கவிச்சமரில் கலக்குகிறாரே??? )