PDA

View Full Version : ஒருத்தியின் கனவு



பிச்சி
12-07-2007, 09:25 AM
காற்றோடு இசைந்த
காட்டு மல்லிகையின்
சுகந்தத்தில்
உருகித் திளைத்தாள்
பூவோடு பேசுபவள்.

அவள்
கருமுகிலின் கண்ணீரினை
கண்களில் பொருத்திக் கொள்வாள்
இடியோசையின் இன்பத்தை
காதுகளில் ஒளித்துக் கொள்வாள்
இலையுதிர்வின் வேதனையை
கருவிழியில் அடக்கிக் கொள்வாள்
பூக்களிடும் பெருமூச்சை
நிம்மதியாய் சுவாசிப்பாள்

அன்றொருநாள்
ஒற்றைத்தாமரை பூவெடுத்து
உள்ளத்தில் ஒளியை வைத்து
விழிகளுள் தேனை இட
விண்ணவன் ஒருவன் வந்தான்
தகுதி ஒன்றைத் தந்தான்

நிலவை நிர்மூலமாக்கி
பூக்களின் ஒன்றை
அங்கே பொதித்து வைத்தான்,
அகப்பட்ட இடங்களில்
ஆம்பல்களை அடுக்கிவைத்தான்
பூவொன்றை பெறவைத்து
உச்சி முகர்ந்தான்

அவள்
திளைத்தாள் ; ஊறினாள்.
சொக்கிய புன்னகையை
ஆடியிலே கவனித்தாள்.
எக்காளமிட்ட எரும்புகளை
தன் காலால் உதைத்தாள்

அனைத்தும் கனவாய் கலையவே,
ஒருநாள் பூவாய்
வாடிச்சுருங்கினாள்.
மடல்களின் ஓரம்
மறைத்த மயிர்நரம்புகள்
இளமை இழப்பதைச் சொன்னது.
நிழல் நிஜமாகிறது பலருக்கு
நிஜம் நிழலாகிறது சிலருக்கு.

மனோஜ்
12-07-2007, 09:29 AM
அருமை அருமை
பெண்ணின் பெருமை இந்த கவிதை

அன்றொருநாள்
ஒற்றைத்தாமரை பூவெடுத்து
உள்ளத்தில் ஒளியை வைத்து
விழிகளுள் தேனை இட
விண்ணவன் ஒருவன் வந்தான்
தகுதி ஒன்றைத் தந்தான்
திருமணம் என்பதை அழகாய் பொதிந்து எழுதியது அருமை பிச்சி அவர்களே

ஓவியன்
12-07-2007, 09:29 AM
அனைத்தும் கனவாய் கலையவே,
ஒருநாள் பூவாய்
வாடிச்சுருங்கினாள்.
மடல்களின் ஓரம்
மறைத்த மயிர்நரம்புகள்
இளமை இழப்பதைச் சொன்னது.
நிழல் நிஜமாகிறது பலருக்கு
நிஜம் நிழலாகிறது சிலருக்கு.

அழகான வர்ணனைகளுடன் வந்த பிச்சி ஸ்பெசல் கவிதை!

இரசித்தேன் நிரம்ப இடங்களை!

நிழல் நிஜமாகிறது பலருக்கு
நிஜம் நிழலாகிறது சிலருக்கு

எவ்வளவு உண்மையான வரிகள்!, பாராட்டுக்கள் பிச்சி:aktion033: !.

அமரன்
12-07-2007, 09:30 AM
பிச்சிபிரபா...ஒரு முதிர்கன்னியைப் பற்றிய கவிதை என நினைகின்றேன். பாராட்டுகள்.

பிச்சி
12-07-2007, 09:33 AM
அட. அதுக்குள்ள விமர்சனமா? மனோஜ் அன்ணாக்கும் ஓவியன். அமரன் அண்னாக்கும் நன்றி..

இனியவள்
12-07-2007, 09:34 AM
கவிதை அருமை பிச்சி
வாழ்த்துக்கள்

அமரன்
12-07-2007, 09:36 AM
அட. அதுக்குள்ள விமர்சனமா? மனோஜ் அன்ணாக்கும் ஓவியன். அமரன் அண்னாக்கும் நன்றி..

இப்போ மேலோட்டமாக பார்த்தன் விளைவு. ஆழமாகப் படித்துவிட்டு மீண்டும் வருவேன்.

பிச்சி
12-07-2007, 09:38 AM
இப்போ மேலோட்டமாக பார்த்தன் விளைவு. ஆழமாகப் படித்துவிட்டு மீண்டும் வருவேன்.

கண்டிப்பாக விமர்ச்னாம் போடுங்க அமரன் அண்ணா. காத்திருக்கிறென்

ஓவியன்
12-07-2007, 09:42 AM
இப்போ மேலோட்டமாக பார்த்தன் விளைவு. ஆழமாகப் படித்துவிட்டு மீண்டும் வருவேன்.

நாமளும் வருவோமிலே! :sport-smiley-018:

பிச்சி
12-07-2007, 09:45 AM
நாமளும் வருவோமிலே! :sport-smiley-018:

என் காடுல நல்ல மழை. கண்டிப்பா போடுங்க. தப்பு இருந்தா சொல்லுங்க. திருத்திக்கறேன்.

lolluvathiyar
12-07-2007, 09:46 AM
நிழல் நிஜமாகிறது பலருக்கு
நிஜம் நிழலாகிறது சிலருக்கு.
முத்தான வரிகள்,
நிஜம் புரியாமல் நிழலை துரத்துவதால் நிஜம் சுட்டு விடுகிறது

பிச்சி
12-07-2007, 09:47 AM
கவிதை அருமை பிச்சி
வாழ்த்துக்கள்

ரொம்ப நன்றிங்க இனியவள் அக்கா.

பிச்சி
12-07-2007, 09:49 AM
முத்தான வரிகள்,
நிஜம் புரியாமல் நிழலை துரத்துவதால் நிஜம் சுட்டு விடுகிறது

ஆமாம் வாத்தியார் அண்ணா. சிலச்மாயங்களில் நிஜம் நிழலாகிவிடுகிறது. நன்றி அண்ணா.

அன்புடன்
பிச்சி

ஷீ-நிசி
12-07-2007, 10:11 AM
இந்த கவிதையின் வார்த்தைகள் மிகவும் வசீகரிக்கிறது பிச்சி....
லேட்டஸ்ட் வரவாய் ஆம்பலையும் சேர்த்தாச்சி...

ஒரு கன்னிகை அவளுக்குள் காதல் வருகிறது. அந்த காதலையும் எள்ளி நகையாடுகிறதோ எறும்பு கூட்டங்கள்?!

வாய்த்த கனவுகள் ஈடேறாமலே போகிறது..

இந்த முதிர்கன்னிக்கு....

மடல்களின் ஓரம்
மறைத்த மயிர் நரம்புகள்

மறைத்த மயிர் நரம்புகள் என்பதற்கு பதிலாய்
முளைத்த வெளிர் நரம்புகள் என்றிருந்தால் இன்னும் பொருத்தமாய் இருந்திருக்கும்..

வாழ்த்துக்கள் பிச்சி....

அமரன்
12-07-2007, 01:48 PM
ஆரம்பத்தில் கவிதையை மேலோட்டமாகப் படித்தேன். அப்போது முதிர்கன்னியை பற்றிய கவிதையாக எனக்குத் தோன்றியது. ஆழ்ந்து படிக்கும்போது எனக்குள் பல கருத்துக்கள். பெண்ணைப்பற்றி அழகாக வர்ணித்து கொண்டு வந்து

அன்றொருநாள்
ஒற்றைத்தாமரை பூவெடுத்து
உள்ளத்தில் ஒளியை வைத்து
விழிகளுள் தேனை இட
விண்ணவன் ஒருவன் வந்தான்
தகுதி ஒன்றைத் தந்தான்

என்ற வரிகளில் அவளுக்குக் கல்யாணம் என்கின்ற மாதிரி நினைக்க வைத்தீர்கள். அவளைப்பார்த்து எறும்புகள் எகத்தாலமிட்டன எனும்போது இரு வேறுபட்ட கருத்துகள் தோன்றின. இது நிலைக்குமா என அவை கேட்பதுபோலவும், இதுவும் கனவு என்று அவை எகத்தாளமாக சொல்வதுபோலவும் இருவேறுபட்ட கருத்துகள் தோன்றின.

அனைத்தும் கனவாய் கலையவே,
ஒருநாள் பூவாய்
வாடிச்சுருங்கினாள்.


இந்தவரிகளில் அதிகம் குழம்பினேன். கனவாய் கலைந்தன..எனும்போது வாழ்ந்தவாழ்க்கை கனவுபோலக் கலைந்ததா(அதவாது அவள் கொஞ்சக்காலம் வாழ்ந்து பின்னர் இளவயது விதவை ஆனாளா) என்றும் அல்லது அவள் கண்ட கனவு கலைந்ததா என்றும் குழம்பினேன்.

மடல்களின் ஓரம்
மறைத்த மயிர்நரம்புகள்
இளமை இழப்பதைச் சொன்னது.

இவ்வரிகள் முதிர் கன்னியைப் பற்றித்தான் சொல்கின்றீர்கள் என்பதை உணரவைத்தது..பலதரப்பட்ட கருக்களை உருவாக்க வைத்து இறுதியில் ஒற்றை வரியில் சரியான கருத்தைச் சொல்லி அசர வைத்துவிட்டீர்கள். பாராட்டுக்கள்.

ஷீயின் கருத்துடனும் நான் ஒத்துப்போகின்றேன். மறைக்கும் மயிர் நரம்புகள் எனும் வசனம் முதுமை சரியாக காட்டவில்லை என நினைக்கின்றேன்.

அக்னி
12-07-2007, 05:41 PM
காற்றோடு இசைந்த
காட்டு மல்லிகையின்
சுகந்தத்தில்
உருகித் திளைத்தாள்
பூவோடு பேசுபவள்.

மொட்டவிழும் ஓசை போல்,
பேசுபவள்...
கட்டவிழ்ந்த பருவம் தாண்டி,
பலகாலம் விரைந்திருந்தும்,
மணவாளன் வரும் நேரத்திற்காய்,
காத்திருந்தாள் கொடியாள்..,
அவன் தோள் படர...


அவள்
கருமுகிலின் கண்ணீரினை
கண்களில் பொருத்திக் கொள்வாள்
இடியோசையின் இன்பத்தை
காதுகளில் ஒளித்துக் கொள்வாள்
இலையுதிர்வின் வேதனையை
கருவிழியில் அடக்கிக் கொள்வாள்
பூக்களிடும் பெருமூச்சை
நிம்மதியாய் சுவாசிப்பாள்

தாபத்தின் வடிகாலா... இல்லை சோகத்தின் ஊற்றா...,
வற்றாத விழிகள்... எப்போதும் முகத்தை நனைத்திருக்கும்...
ஈயம் காய்ச்சி ஊற்றும், வசவுகள், கணமும் ஓய்வின்றி
பொத்திய கரங்களின் இடைவெளியூடு செவிப்பறை கிழித்து நிற்கும்...
காலத்தின் ஓட்டத்தில், வயதுகள், விரைந்து போக, வெறித்த பார்வைக்குள்,
வெறுமை மட்டும் ஒளிர்ந்து நிற்கும்...
ஒருநாளில் ஆயுள் கொண்டு மலர்ந்து வாடும் மலர்களுக்கு, ஆயுளுக்கான ஏக்கப் பெருமூச்சு...
அதுவே இவளுக்கும் ஏக்கப் பெருமூச்சு, ஏன் மலராய், தன் ஆயுள் இல்லை என்று...


அன்றொருநாள்
ஒற்றைத்தாமரை பூவெடுத்து
உள்ளத்தில் ஒளியை வைத்து
விழிகளுள் தேனை இட
விண்ணவன் ஒருவன் வந்தான்
தகுதி ஒன்றைத் தந்தான்

காலத்தின் ஓட்டத்தில் ஒருநாள், அவள் விழிகள் ஊற்றை அதிகரித்தது... ஆனால், ஆனந்தக் கண்ணீரால்...
கூந்தலில் மாலை சூடி, நெஞ்சத்தில் மாங்கல்யம் சூடி, தாரமாய் தரமுயர்த்தினான், அவளுக்காய் பிறந்திருந்த மணவாளன்...
அவளும் வாட்டம் நீக்கி, மணவாட்டி ஆயினாள்...


நிலவை நிர்மூலமாக்கி
பூக்களின் ஒன்றை
அங்கே பொதித்து வைத்தான்,
அகப்பட்ட இடங்களில்
ஆம்பல்களை அடுக்கிவைத்தான்
பூவொன்றை பெறவைத்து
உச்சி முகர்ந்தான்

பிறை நெற்றியின், வெறுமை நீக்கி, குங்குமத்தால் ஒளிரவைத்தான்...
காத்திருந்த தேகம் முழுதும் முத்தத்தால், முற்றுகையிட்டான்...
மகத்தான பூரிப்பைக் கொடுத்தாள், மகவுக்குத் தாயானாள்...
மழலையின் வரவு கண்டு, பூரித்தான் மணவாளன்...


அவள்
திளைத்தாள் ; ஊறினாள்.
சொக்கிய புன்னகையை
ஆடியிலே கவனித்தாள்.
எக்காளமிட்ட எரும்புகளை
தன் காலால் உதைத்தாள்

துணைவனின் அன்பில் தித்திப்பாய் வாழ்க்கை...
மழலையின் மென்மையில், சுகங்களோ கோடி...
தன் முகத்தை நிரந்தரமாய் அலங்கரித்த (புன்)நகையின் ஜொலிப்பை,
கண்ணாடியில் பார்த்துப் பார்த்துக் கண் கூசினாள்...
அவள் குடும்பம் என்ற சோலையின் (கா), பரிணமிப்பில், உதைக்கப்பட்டார்கள் எறும்புகளாய்..,
அவளை நிந்தித்து, புறம் சொன்னவரெல்லாம்...


அனைத்தும் கனவாய் கலையவே,
ஒருநாள் பூவாய்
வாடிச்சுருங்கினாள்.
மடல்களின் ஓரம்
மறைத்த மயிர்நரம்புகள்
இளமை இழப்பதைச் சொன்னது.
நிழல் நிஜமாகிறது பலருக்கு
நிஜம் நிழலாகிறது சிலருக்கு.

விடிந்ததும் தொடர்ந்தது வேதனை...
கண்டது கனவானது அவளின் சோதனை...
முதுமை சிரித்தது வெள்ளையாய் காதோரம்...
இளமை தொலைவதன் அறிகுறியாய்...
சிலரின் வாழ்வில் பருவத்தில் மழை பொழிந்தாலும்,
பலரின் வாழ்வில் பருவத்தில் மழை பொய்த்தும் போகின்றது...
காரணம் இல்லாமலே, வாழ்வில் வடிகட்டப்பட்டு, குப்பை சேரும், மாணிக்கங்களாயும் சில பேதைகள்...

அருமைக் கவிதைக்கு பாராட்டுக்கள் பிச்சி...

பிச்சி
25-07-2007, 12:22 PM
அடேயப்பா. இவ்வ்ளோபெரிய விமர்சனமா ரொம்ப நல்லா இருக்குங்க அகனி, அமரன் அண்ணா. என்னோட கவிதைகள்லேயே பெரிய விமர்சனம் பண்ணீயதே இந்த விமர்ச்னம் தான்.

நன்றி
அன்புடன்
பிச்சி

சூரியன்
25-07-2007, 01:03 PM
வாழ்த்துக்கள் பிச்சி.அருமையான வரிகள்.

sekaran_here
25-07-2007, 01:09 PM
அருமை பாராட்டுக்கள்

பிச்சி
10-08-2007, 10:04 AM
நன்றி சேகரன் ஹியர் மற்றும் சூரியன் அவர்களுக்கு..

இளசு
10-08-2007, 07:48 PM
அக்னியின் விமர்சனம் தாண்டி என்ன எழுத?!

பாராட்டுகள் பிச்சிக்கும், அக்னிக்கும்..

பிச்சி, உங்களுக்கு வாய்த்த சொல்வரம் எனக்கும் வருமா?
கொஞ்சம் பெருமை ..கொஞ்சம் பொறாமை கலந்த வாழ்த்துகள்!

kalaianpan
11-08-2007, 07:58 AM
ஒருநாள் பூவாய்
வாடிச்சுருங்கினாள்.
மடல்களின் ஓரம்
மறைத்த மயிர்நரம்புகள்
இளமை இழப்பதைச் சொன்னது.
நிழல் நிஜமாகிறது பலருக்கு
நிஜம் நிழலாகிறது சிலருக்கு.

ஒரு நாள் நிச்சயம்.......

பிச்சி
13-08-2007, 12:45 PM
நன்றி இளசு அண்னா. உங்களைப் போன்ற பெரியவர்களை விடவா நான் பெருமைபட்டவள்?

பிச்சி
13-08-2007, 12:46 PM
ஒரு நாள் நிச்சயம்.......

நன்றி கலையன்பன் அவர்களே

இலக்கியன்
13-08-2007, 02:18 PM
உள்ளதை தொட்டன உங்கள் வரிகள் பாராட்டுக்கள்

பிச்சி
25-08-2007, 05:16 AM
உள்ளதை தொட்டன உங்கள் வரிகள் பாராட்டுக்கள்

மிகவும் நன்றின்க்க இலக்கியன் அவர்கலே