PDA

View Full Version : கனவு



இனியவள்
12-07-2007, 08:37 AM
என்னை ஏதோ செய்து விட்டாள்
நெஞ்சைப் பூப்போல் கொய்து விட்டாள்
என்று எனது தொலைபேசி இசைக்கத்
தொடங்க எனது தூக்கம் கலைந்தது......

இசையை ரசித்தபடியே நேரத்தைக்
கண்ணுற்றேன் அதிகாலை மூன்று மணி
விமான நிலையம் செல்வதற்கு ஆயத்தமாகிக்
கொண்டேன் கனவுகள் நிஜமாகப் போவதை
நினைத்து உள்ளம் ஆனந்தக் கூச்சல் போட்டது

அம்மா பெயரை உச்சரிக்கும் போதே
உடல் புல்லரித்தது....

இறக்கை கட்டிப் பறக்கும் மனதை
அடக்கிக் கொண்டு அதிகாலை
நேரக்காற்று என்னை உற்சாகமூட்ட
வாகனத்தில் ஏறிக்கொண்டேன்....

குப்பை கூலங்களால் நிறைக்கப்பட்டு
அலங்கோலமாக இவ்வளவு நாட்களும்
காட்சியளித்துக் கொண்டிருந்த வீதிகள்
இன்று மேகங்கள் செங்கம்பலமாய் மாறி
வீதிகளில் விரித்துக் காட்சியளித்தது எனது
கண்களுக்கு.....

சூரியன் தனது கதிர்களை விரித்து
அனைவருக்கும் காட்சியளிக்க வந்த
கோலம் எனதன்னை வருகைக்காய்
வானவேடிக்கை காட்டுவதைப் போல்
காட்சியளித்தது....

காதலியை காதலன் தழுவுவது போல்
தென்றல் இலைகளைத் தழுவ ஆனந்தக்
கூச்சல் போட்ட இலைகளின் சத்தம் ஒர்
அழகிய இன்னிசையைப் படைத்து என்
காதுகளுக்கு விருந்து படைத்துக் கொண்டிருந்தது......

விமான நிலையம் நெருங்க நெருங்க
கடவுளைக் கண்ட பக்தன் போல்
எனதுள்ளம் பூரிப்படைந்தது.....

வாகனத்தை மறித்து எனது சிறு வயதுக்
கனவு நிறைவேறப் போகும் நேரத்தை
விரயப் படுத்திய பொலிஸ்காரன் மனம்
அக்கினித் தீயை வீசிகொண்டிருந்தது
அதையறியாத அவன் எனது அடையாள
அட்டையை வாங்கி பறிசோதித்து கோமத(நலமா)
என கேட்க சூழ்நிலையால் வாய் பொய்
புன்னகை உதிர்த்தது....

ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாய் கடக்க
நான் இருந்த இடத்தை நோக்கி என்
அன்னை என்னும் தெய்வம் வந்து
கொண்டிருந்தது......

பறவை இறக்கை விரிப்பது போல்
என் கரங்களை விரித்து அம்மா
என்றழைத்துக் கொண்டு ஒடினேன்.....

என்னை ஏதோ செய்து விட்டாள்
நெஞ்சைப் பூப்போல் கொய்து விட்டாள்
என்று என் தொலைபேசி மீண்டும் அலறி
என்னை வெறுப்பேற்றி என்னை சுய
நினைவுக்கு கொண்டு வந்தது அலறிய
இசையை நிறுத்தி கண்ட இக் கனவு
இன்னும் சிறிது நேரத்தில் நிஜமாகப்
போவதை எண்ணி மனம் குளிர்ந்து
குளியலறை நோக்கி விரைந்தேன்...

மாதவர்
12-07-2007, 10:07 AM
கனவு மெய்படுமா?

அமரன்
12-07-2007, 10:11 AM
இனியவள் கவிதை அழகு..

மாதவரே...அவர் போவது விமான நிலையத்துக்கு...? சந்தேகம்தான்...

அன்புரசிகன்
12-07-2007, 10:20 AM
கண்ட இக் கனவு
இன்னும் சிறிது நேரத்தில் நிஜமாகப்
போவதை எண்ணி மனம் குளிர்ந்து
குளியலறை நோக்கி விரைந்தேன்...

இது எதனால்? :icon_hmm:

இனியவள்
12-07-2007, 01:26 PM
கனவு மெய்படுமா?

கனவு என்றாவது ஒர்
நாள் மெய்ப்படும்
காலம் வெகு தொலைவில்
இல்லை மாதவரே
கனவுகள் பலிக்க*
இன்பங்கள் பொங்க*
என்றும் நல் நாளே
வாழ்வில்

இனியவள்
12-07-2007, 01:28 PM
இனியவள் கவிதை அழகு..

மாதவரே...அவர் போவது விமான நிலையத்துக்கு...? சந்தேகம்தான்...

நன்றி அமர்

ஹீ ஹீ ஆமாம் விமான நிலையத்துக்கு போற நிறையப் பேர் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கினம் இங்கை :D:D:D

இனியவள்
12-07-2007, 01:29 PM
இது எதனால்? :icon_hmm:

எது எதனால் அன்பு

தெளிவா கொஞ்சம் சொல்லுங்கோ

அமரன்
12-07-2007, 01:30 PM
எது எதனால் அன்பு
தெளிவா கொஞ்சம் சொல்லுங்கோ

பலர் இரகசியமாக அழுவது குளியல் அறையில் அல்லவா...அதை வைத்துக் கேட்டிருப்பாரோ...

இனியவள்
12-07-2007, 01:35 PM
பலர் இரகசியமாக அழுவது குளியல் அறையில் அல்லவா...அதை வைத்துக் கேட்டிருப்பாரோ...

ஹீ ஹீ அமர் இப்படி உண்மை எல்லாம் சொல்ல கூடாது :music-smiley-010: :music-smiley-010:

ஓவியன்
12-07-2007, 08:38 PM
இனியவள் உங்கள் கனவு மெய்ப்பட என் வாழ்த்துக்களும் துணை நிற்கட்டும்!.

வரிகளை நன்றாக கையாண்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்!.

இனியவள்
13-07-2007, 08:12 AM
இனியவள் உங்கள் கனவு மெய்ப்பட என் வாழ்த்துக்களும் துணை நிற்கட்டும்!.

வரிகளை நன்றாக கையாண்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்!.

நன்றி ஓவியன்