PDA

View Full Version : மூடப்பட்ட ரிலையன்ஸ் ப்ரெஷ்



saguni
12-07-2007, 08:32 AM
பல்வேறு மக்களின் எதிர்பார்ப்புடனும் சில்லரை வணிகர்களின் எதிர்ப்புடனும் துவங்கப்பட்ட ரிலையன்ஸ் ப்ரெஷ் காய்கறி அங்காடி கேரளத்தில் கம்யூனிஸ்ட்களின் எதிர்ப்பால அடித்து நொறுக்கப்பட்டுள்ளது இதன் காரணத்தால் கேரள அரசாங்கம் தான் அளித்த அனுமதியை திரும்பபெற்று உடனே கடைகளை அடைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனம் இனிமேல் சில்லரை வர்த்தகத்தில் கேரளத்தில் நுழைய இயலாது என்பது உறுதியாகியுள்ளது.

சக்திவேல்
12-07-2007, 03:14 PM
சில்லரை வணிகம் என்பது அதிக முதல் தேவைப்படாத ஒன்று. அதை யாரும் ஆரம்பிக்கலாம், அதற்கான வழிமுறைகள் எளிது. எனவேதான் நம் நாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் இதை நம்பி இருக்கின்றனர். ரிலையன்ஸ் போன்ற தொழில் முதலைகளுக்குதான், சாதாரன மக்கள் செய்ய முடியாத ஆயிரக்கனக்கான தொழில்கள் இருக்கின்றனவே அதை செய்யலாமே அதைவிட்டு ஏன் சில்லரை வணிகர்கள் வயிற்றில் அடிக்கவேன்டும்? பாதிக்கப்படுவர்கள் ஒருசிலர் என்றால் பரவா இல்லை, மாறாக லட்சக்கணக்கானோர் எனும்போது அரசாங்கம் இதை எப்படி அனுமதிக்கின்றது? பாதிக்கப்படும் லட்சக்கனக்கானோர் வேறு எந்த தொழிலில் ஈடுபடுவர்? அரசாங்கம் அவர்களுக்கு மாற்றுத்தொழில் ஏற்பாடு செய்து கொடுக்குமா?.

aren
13-07-2007, 05:44 AM
சில்லறை வணிகத்தில் ரிலையன்ஸ் புகுந்திருப்பது ஒரு நல்ல விஷயமே. இதனால் மக்களுக்கு குறைந்த விலையில் எல்லாம் கிடைக்கும். இதனால் சில சிறு வியாபாரிகள் கஷ்டப்படுவார்கள் என்பது உண்மையே. ஆனால் மொத்த நண்மையை கணக்கில்கொண்டு பார்க்கும்பொழுது இதை நாம் வரவேற்கத்தான் வேண்டும்.

ரிலையன்ஸ் ப்ரெஷ் ஒரு மிகப்பெரிய நிறுவனமாக உலகலவில் பேசப்படும் என்பதே உண்மை. அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பது நிதர்சனமான உண்மை.

நன்றி வணக்கம்
ஆரென்

சக்திவேல்
13-07-2007, 10:23 AM
இது மக்களின் வசதி மட்டும் சம்மந்தப்பட்டது அல்ல. நாட்டின் வனிக பரவல், அதன் மூலம் நடக்கும் பணப்பரிமாற்றத்தின் பரப்பளவு, நேரடி மற்றும் மறைமுக சார்பு கொன்டுள்ளோரின் எண்ணிக்கை அளவு இவை அந்தும் சம்மந்தப்பட்டது ஆகும்.

ரிலையன்ஸ் ஈடுபட்டுள்ள தொலைபேசி, பாலியெஸ்டர் இழை மற்றும் ஆடை தயாரிப்பு, மற்றும் பெட்ரோலியம் சார்ந்த மிகப்பெரிய அளவினாலான தொழில் இல்லை இது. சாதாரானமான மக்களும் எளிதில் ஆரம்பிக்கக்கூடிய சில்லரை வணிகத்தில் இறங்கி மக்களோடு போட்டிபோடுவது ரிலையன்ஸுக்கு அழகு அல்ல. மற்ற நாடுகளைப்போல இந்தியாவில் வேலைவாய்ப்போ, கல்வி வாய்ப்போ உயர்ந்த அளவில் இல்லை, அப்படிப்பட்டவர்களுக்கு இத்தகய வணிகம்தான் வாழ்வின் ஆதாரம்.

இதில் சம்மத்தபட்ட அனைவரும் தொழில் இழக்க நேர்ந்து, வேலையில்லாமல் அவர்களால் வரும் தொல்லைகளை ஒப்பிட்டால் ரிலையன்ஸ் இதில் நுழையாமல் இருப்பதே மேல்.

தமிழ்
13-07-2007, 10:30 AM
தமிழ்நாட்டில் இந்த நிலமை வரவேண்டுமென நான் நினைக்கவில்லை..
இது நுகர்வோருக்கு பாதிப்பில்லதவரை..

namsec
13-07-2007, 02:05 PM
நான் சென்று சில பொருள்கள் வாங்கியுல்ளேன் நல்ல சேவை தொடர்ந்து இருக்க வேண்டும் இதுதான் என் விருப்பம்

saguni
13-07-2007, 05:57 PM
நாம்செக் அவர்களே! ரிலையன்ஸ் மிகப்பெரிய நிறுவனம் என்பதும் மக்களின் நன்மதிப்பை பெற்றது என்பதும் உண்மைதான் ஆனால் ஆரம்பத்தில் குறைந்தவிலைக்கு விற்க ஆரம்பித்து பின்னர் வியாபாரம் சூடு பிடித்தவுடன் அதை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு கொள்ளை லாபம் சம்பாதிக்கக்கூடிய தொழில்தான் சில்லறை வர்த்தகம். வாங்குவோர் வர்த்தகத்தை விற்போர் வர்த்தகமாய் ரிலையன்ஸ் மாற்றப்போவதை விரைவில் பார்க்கத்தான் போகிறீர்கள்.

aren
13-07-2007, 06:39 PM
இந்தியா ஒரு முன்னேறிய நாடாக ஆகவேண்டுமானால் இந்த மாதிரியான கட்டுப்பாடுகள் அனைத்தும் அறுத்தெறியப்படவேண்டும். அப்பொழுதுதான் நல்ல முதலீடுகள் அனைத்து தொழில்களிலும் வந்து அந்த தொழில்கள் முன்னேறி நம் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் என்று உறுதியாக நம்புகிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

அறிஞர்
13-07-2007, 08:00 PM
தரமான, விலை குறைந்த பொருட்கள் மக்களை சேர்வது நல்லது..

மாதவர்
13-07-2007, 08:05 PM
இங்கு நுகர்வோரை பற்றி யாருக்கும் கவலை இல்லை.
ஒரு வியாபாரிக்காக இன்னொரு வியாபரி நசுக்கப்படுகிறான் என்ற பிரம்மை பொறுக்கி திங்கும் சிலர் அதுவும் கிடைக்காதே என்ற நல்ல எண்ணத்தில் போராடுகின்றனர்

சக்திவேல்
13-07-2007, 08:44 PM
இந்தியா ஒரு முன்னேறிய நாடாக ஆகவேண்டுமானால் இந்த மாதிரியான கட்டுப்பாடுகள் அனைத்தும் அறுத்தெறியப்படவேண்டும்.

இந்தியா முன்னேறிய பிறகுதான் இத்தகைய பகாசுர குழுமங்களுக்கு அனுமதி கொடுக்கலாம். ஏனென்றால் முன்னேறிய இந்தியாவில், அனைவருக்கும் வேலை கிடைக்கும், சில்லரை வனிகத்தில் யாரும் ஆர்வம் காட்டமாட்டர்கள். இன்று அமெரிக்காவிலோ, ஜப்பானிலோ, இங்கிலாந்திலோ பெட்டிக்கடைகள் கிடையாது. அதன் காரனத்தை நீங்களே அறிவீர்கள். நம்நாட்டில் வீட்டுக்கு வீடு, தெருவெங்கும், வீதியெங்கும், ரோடுநெடுகிலும் கடைகள் கடைகள் கடைகள்.
அப்படி ச்றிய முதலீடுகளில் நடத்தும் வணிகர்கள் ரிலையன்ஸிடம் மோதமுடியாது.
தேவைகளும், அளிப்பும், தரமும், விலையும் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி தானே ஒரு சமநிலையை எட்டி பிடிக்கும் இது பொருளாதார-விதி. இதுக்கு ரிலையன்ஸ், வால்மார்ட் தேவையில்லை.

அரிப்புக்கு கொள்ளிக்கட்டையை எடுத்து சொறியும் கதைதான் இது.

சக்திவேல்
13-07-2007, 09:01 PM
இங்கு நுகர்வோரை பற்றி யாருக்கும் கவலை இல்லை.ஒரு வியாபாரிக்காக இன்னொரு வியாபரி நசுக்கப்படுகிறான் என்ற பிரம்மை பொறுக்கி திங்கும் சிலர் அதுவும் கிடைக்காதே என்ற நல்ல எண்ணத்தில் போராடுகின்றனர்

நுகர்வோர்கள் அவர்களுக்கு தேவையான தரம் மற்றும் விலை கொன்ட பொருட்க்களநேடிப்போய் வாங்குகின்றார்கள். கிலோ வெங்காயம் 5 ரூபாயிலும் கிடைக்கிறது 40 ரூபாயிலும் கிடைக்கிறது. தற்ப்போது உள்ள சில்லரை வனிகத்தில் நுகர்வோர்கள் எமாற்றப்படுவது இல்லை ஏனென்றால், வணிகம் பரந்து கிடக்கின்றது ஓரிடம் இல்லையென்றால் வேறிடம்.

ஆனால் ஒரே இடத்தில் ஏகபோகமாக இருக்கும் பட்சத்தில் நுகர்வோருக்கு அப்பதான் தலைவலி ஆரம்பிக்கும்.

namsec
20-07-2007, 07:06 AM
பெரும் வணிக நிறுவனங்கள் கேரளாவின் சில்லறை வியாபாரத்தில் இடம் பெறுவதற்கு கேரளா வணிகர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
வால்மார்ட், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் அத்தியாவசிய பொருட்களின் சில்லறை விற்பனையில் ஆர்வம் காட்டி வருகின்றன. முக்கிய நகரங்களில் தங்களுக்கென வணிக நிறுவனங்களை அமைத்து வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டம் நடைபெறுகிறது. இந்த நிறுவனங்களின் வருகைகள் அதிகமான அளவில் வேலை இழப்பு ஏற்படும் எனவும், இது மாநிலத்தின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் அமைந்துவிடும் எனவும் வியாபாரி, விவசாயிகள் சங்கங்கள் அச்சம் தெரிவித்துள்ளன
20லட்சம் பேர் இதில் நேரடியாகவும் 60 லட்சம் மக்கள் மறைமுகமாகவும் இதனால் பாதிப்படையும் நிலை ஏற்படும் எனவும், இதனை தடுக்க மாநிலம் தழுவிய போராட்டமும் தேவைஏற்படுமாயின் ஆயுதம் ஏந்தி போராடவும் தயங்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.


நன்றி தினமலர்