PDA

View Full Version : அன்பு,,,,,

வசீகரன்
12-07-2007, 07:37 AM
பேகன் போல மயிலுக்கு
போர்வை தர வேண்டாம்..

பாரி போல முல்லைக்கு
தேர் தர வேண்டாம்

சிபி போல புறாவுக்கு
சதை தர வேண்டாம்..

நெஞ்சில் ஈரம் மட்டும் வார்ப்போம்

அதில் பாசம் கொஞ்சம் விதைப்போம்

அன்பு கொண்ட உள்ளத்தை விட

அகிலத்தில் உயர்ந்தது
வேறென்ன??? அன்பு,,,,,

இனியவள்
12-07-2007, 07:45 AM
உலகை ஆளும்
ஒற்றைச் சொல்
அன்பு

கவிதை நன்று வாழ்த்துக்கள் வசி....

சிவா.ஜி
12-07-2007, 07:51 AM
இன்று கிடைப்பதற்கரியதாய் ஆகிவிட்ட அற்புதமானது அன்பு. அது மட்டும் எல்லோருக்கும் எல்லோரித்திலிருந்தும் கிடைத்துவிட்டால் உலகமே பசுஞ்சோலையாகிவிடும். அப்படி ஒருநாளை நாம் காணவேண்டும். உங்களைப்போன்ற கவிஞர்கள்தான் அதை உருவாக்கவேண்டும். பாராட்டுக்கள் வசீகரன்.

அமரன்
12-07-2007, 09:20 AM
வசீகரன் நீங்கள் உதாரணமாகச் சொன்னவர்கள் மன்னர்கள் என நினைகின்றேன். (பேகன் பற்றித்தெரியாது). நீங்கள் சொன்னவற்றில் பாரியின் கதையைச் சொல்லி அன்பாக இருக்கவேண்டும் என்று எனது உறவினர் ஒருவரின் மகளுக்குச் சொன்னேன். அப்பெண் இறுதியில் என்ன சொன்னாள் தெரியுமா"முல்லைக்கு ஒரு தடியை எடுத்துக் கொடுத்துவிட்டு வருவதை விட்டு விட்டு தேரைக் கொடுத்துவிட்டு வந்தது முட்டாள்தனமானது. இதன் படி நடக்கமுடியாது" என்றார். அப்படி இருக்கிறது இன்றைய சமுதாயம். அச்சிறுமிக்கு அன்பு பற்றி யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை என நினைத்தேன். அப்படிப் பலர் உள்ளனர். இப்படியான கவிதைகள் மூலமாவது அவர்களுக்கு அன்பு என்றால் என்ன என்பது தெளிவாக வேண்டும். பாராட்டுகள் வசீ.

ஓவியன்
12-07-2007, 11:11 PM
பாரியின் கதையைச் சொல்லி அன்பாக இருக்கவேண்டும் என்று எனது உறவினர் ஒருவரின் மகளுக்குச் சொன்னேன். அப்பெண் இறுதியில் என்ன சொன்னாள் தெரியுமா"முல்லைக்கு ஒரு தடியை எடுத்துக் கொடுத்துவிட்டு வருவதை விட்டு விட்டு தேரைக் கொடுத்துவிட்டு வந்தது முட்டாள்தனமானது. இதன் படி நடக்கமுடியாது" என்றார். அப்படி இருக்கிறது இன்றைய சமுதாயம். அச்சிறுமிக்கு அன்பு பற்றி யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை என நினைத்தேன். அப்படிப் பலர் உள்ளனர். இப்படியான கவிதைகள் மூலமாவது அவர்களுக்கு அன்பு என்றால் என்ன என்பது தெளிவாக வேண்டும். பாராட்டுகள் வசீ.

அது தப்பில்லை அமரன்!, காலத்தின் மாற்றம் அது!. காலத்தோடு நாம் மாறி வாழ வேண்டியது தான். ஆனால் சமூதாய விழுமியங்களையும் எங்கள் பாரம்பரியத்தையும் தொலைத்து விடக் கூடாது! அத்துடன் யாருக்கும் யாருக்காகவு விட்டுக் கொடுக்கவும் கூடாது.
அது தான் முக்கியம்!.

வசீ உங்கள் வரிகள் அழகாக அர்த்தம் பொதிந்து நிற்கின்றன வாழ்த்துக்கள்!.

M.Jagadeesan
22-01-2013, 12:42 AM
வசீகரன் நீங்கள் உதாரணமாகச் சொன்னவர்கள் மன்னர்கள் என நினைகின்றேன். (பேகன் பற்றித்தெரியாது). நீங்கள் சொன்னவற்றில் பாரியின் கதையைச் சொல்லி அன்பாக இருக்கவேண்டும் என்று எனது உறவினர் ஒருவரின் மகளுக்குச் சொன்னேன். அப்பெண் இறுதியில் என்ன சொன்னாள் தெரியுமா"முல்லைக்கு ஒரு தடியை எடுத்துக் கொடுத்துவிட்டு வருவதை விட்டு விட்டு தேரைக் கொடுத்துவிட்டு வந்தது முட்டாள்தனமானது. இதன் படி நடக்கமுடியாது" என்றார். அப்படி இருக்கிறது இன்றைய சமுதாயம். அச்சிறுமிக்கு அன்பு பற்றி யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை என நினைத்தேன். அப்படிப் பலர் உள்ளனர். இப்படியான கவிதைகள் மூலமாவது அவர்களுக்கு அன்பு என்றால் என்ன என்பது தெளிவாக வேண்டும். பாராட்டுகள் வசீ.

முல்லைக்கொடி படர, ஒரு தடியை நட்டால் , அது அறிவு சார்ந்த கொடை ; தேரை ஈந்தால் , அது அறிவை மறைத்த கொடை . இதை இலக்கியங்கள் , " கொடைமடம் " என்று பேசும்.