PDA

View Full Version : நீ...!



வசீகரன்
12-07-2007, 05:40 AM
எதற்காகவோ விழும் மழைத்துளியை விழுங்கி,
முத்தாய் துப்பி விடுகிறது சிப்பி !

வளம் தர வரும் கால்வாய் நீரை வாங்கிக்கூட, வேண்டாத முட்புதர் தருகிறாள் நிலமகள் !!

நீ என் சிப்பியா? நிலமா?

பிச்சி
12-07-2007, 06:14 AM
ஒன்றுக்குகீழ ஒன்று எழுதினீங்கனா கவிதையா ஜொலிக்கும். ஆனா நீங்க சொல்ல வரது எனக்குப் புரியலை.

அமரன்
12-07-2007, 09:47 AM
வசீ...நிலமகள் முட்களை மட்டும் தரவில்லை. பூக்கும் செடிகள் பலவும் தருகின்றாள். எது தேவை என்பதை நாம்தான் தீர்மானிகின்றோம்.
பிச்சி சொன்னதுபோல் ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதியிருந்தால் கவிதை இன்னும் சிறப்பாக அமைந்திருக்க்ம். பாராட்டுகள் வசீகரன்..

இனியவள்
12-07-2007, 05:10 PM
மேகங்கள் கொட்டும்
மழைத் துளியாய்
உரமாகக் கொண்டு
நிலமகள் பூந்தோட்டம்
ஆக்குகின்றாள் வெறிச்சோடி
கிடக்கும் நிலங்களை..

என் கண்களில் இருந்து
கொட்டும் கண்ணீரை
உரமாய்க் கொண்டு
என் வாழ்வை பசுமை
ஆக்குகின்றாய்.....

நீயும் பூமாதேவியும்
ஒன்று தான் அன்பே
கழிவுகளை தன்னுள் புதைத்து
பசுமைகளைத் தரும்
பூமகள் போல் என் வேதனைகளை
நீ உள்வாங்கி எனக்கு சந்தோஷங்களை
அல்லவா அள்ளி வழங்குகின்றாய்.....


கவி நன்று வசி வாழ்த்துக்கள்

மாதவர்
12-07-2007, 06:44 PM
அட நீ தானா அது!!!

ஓவியன்
13-07-2007, 12:19 AM
வசி வரிகள் கொஞ்சம் குழப்புகிறது!, கொஞ்சம் செதுக்குங்களேன் இன்னமும் அழகு பெறும்!.

ஓவியன்
13-07-2007, 12:20 AM
மேகங்கள் கொட்டும்
மழைத் துளியாய்
உரமாகக் கொண்டு
நிலமகள் பூந்தோட்டம்
ஆக்குகின்றாள் வெறிச்சோடி
கிடக்கும் நிலங்களை..

என் கண்களில் இருந்து
கொட்டும் கண்ணீரை
உரமாய்க் கொண்டு
என் வாழ்வை பசுமை
ஆக்குகின்றாய்.....

நீயும் பூமாதேவியும்
ஒன்று தான் அன்பே
கழிவுகளை தன்னுள் புதைத்து
பசுமைகளைத் தரும்
பூமகள் போல் என் வேதனைகளை
நீ உள்வாங்கி எனக்கு சந்தோஷங்களை
அல்லவா அள்ளி வழங்குகின்றாய்.....


அருமை இனியவள்!, :aktion033: :aktion033: :aktion033: