PDA

View Full Version : நேசமும் சுவாசமும்



மாதவர்
11-07-2007, 07:02 PM
நீயோ என்னை நேசித்தாய்
நானோ உன்னை சுவாசித்தேன்
அதனால்தான் அடிக்கடி
எனக்கு
மூச்சு திணறல் ஏற்படுதோ!!!

இனியவள்
11-07-2007, 07:07 PM
நீயோ என்னை நேசித்தாய்
நானோ உன்னை சுவாசித்தேன்
அதனால்தான் அடிக்கடி
எனக்கு
மூச்சு திணறல் ஏற்படுதோ!!!

ஜலதோஷமா இருக்க போகுது மாதவர் ஹீ ஹீ

கவி நன்று வாழ்த்துக்கள்

சுவாசிக்கும் காற்று
கூட நீயாக இருப்பதால்
வெளிவிடும் காற்றைக்
கூட விட மறுக்கின்றேன்

மாதவர்
11-07-2007, 07:10 PM
அற்புதமான பதில் இனியவள் அவர்களே!!!

அக்னி
11-07-2007, 07:11 PM
வித்தியாசமாக இரு பார்வைகளை எனக்குத் தருகிறது...

நேசத்தின் அதிகரிப்பில்,
அதிகமாய் சுவாசித்து
வந்தது ஒரு மூச்சுத்திணறல்...

நேசத்தின் பிரிவில்,
சுவாசிக்க முடியாமல்,
வந்தது அடுத்ததாய் ஒரு மூச்சுத்திணறல்...

தொடருங்கள் மாதவரே... பாராட்டுக்கள்...

இனியவள்
11-07-2007, 07:13 PM
அட அக்னி இப்படியும் ஒரு மூச்சுத் திணறல் இருக்கா
வித்தியாசமான சிந்தனை அக்னி வாழ்த்துக்கள்

மாதவர்
11-07-2007, 07:16 PM
ம்ம்ம் எனக்கு வருவது பெருமூச்சு தான்
சுவாசத்திற்கு
இத்த்னை வாசமா?

இனியவள்
11-07-2007, 07:17 PM
ம்ம்ம் எனக்கு வருவது பெருமூச்சு தான்
சுவாசத்திற்கு
இத்த்னை வாசமா?

பெருமூச்சு விடக்
கூட என்னால்
முடியவில்லை என்
மூச்சுக் காற்று
பட்டு பூப் போன்ற
உடல் வலிக்கும்
என்பதால்

மாதவர்
11-07-2007, 07:20 PM
கொடிது
கொடிது
இந்த சுவாசம் கொடிதா?

இனியவள்
11-07-2007, 07:22 PM
கொடிது
கொடிது
இந்த சுவாசம் கொடிதா?

சுவாசம் அது என் நேசம்
வாசம் அது உன் கேசம்
நேசம் வைப்பது பாவம்
என்றாலும் சுவாசிப்பதும்
பாவமே

ஹீ ஹீ

அமரன்
11-07-2007, 08:27 PM
மாதவா...மன்றத்துக்குக் கிடைத்த இன்னொரு சிறந்த கவிஞர் நீங்கள் பாராட்டுக்கள். இது போன்று இன்னும் பல கவிதைகளை எதிர்பார்கின்றேன்..நன்றி.

அமரன்
11-07-2007, 09:07 PM
கொடிது
கொடிது
இந்த சுவாசம் கொடிதா?

இல்லை மாதவா..

கொடிது கொடிது..
கொடிய கொடியின்..
சகவாசம் கொடிது...

இனியவள்
11-07-2007, 09:09 PM
இல்லை மாதவா..

கொடிது கொடிது..
கொடிய கொடியின்..
சகவாசம் கொடிது...

ஆஹா அமர் ஆமாம்

சுவாசத்தைக் கூட
நிறுத்தி விடக்
கூடியது தவறான
சகவாசம்

அமரன்
11-07-2007, 09:14 PM
ஆஹா அமர் ஆமாம்

சுவாசத்தைக் கூட
நிறுத்தி விடக்
கூடியது தவறான
சகவாசம்


பாராட்டுக்கள் இனியவள்.

சகவாசம் தவறாயின்
சுக வாசம் தவறும்....
சுவாசமும் தவறலாம்..

நான் சொல்வது சரியா..

இனியவள்
11-07-2007, 09:18 PM
பாராட்டுக்கள் இனியவள்.

சகவாசம் தவறாயின்
சுக வாசம் தவறும்....
சுவாசமும் தவறலாம்..

நான் சொல்வது சரியா..

ம்ம் ஆமாம் அமர் நீங்கள் சொல்வது சரி

நன்றி அமர்

பிச்சி
12-07-2007, 06:16 AM
எப்படித்தான் யோசிக்கிறீங்களோ? கவிதை சூப்பர் மாதவர் அண்ணா. இளமையா இருக்கிறது.

அமரன்
12-07-2007, 09:42 AM
நேசத்தின் அதிகரிப்பில்,
அதிகமாய் சுவாசித்து
வந்தது ஒரு மூச்சுத்திணறல்...


அக்னி அதிகம் சுவாசித்தால் மூச்சுத்திணறல் வருமா தெரியவில்லை. அடுத்த கவிதை சூப்பர்.

களங்கமில்லாக் கருவி
இல்லாத உனக்கு
மூச்சுத்திணறல் சாத்தியமே..

ஓவியன்
13-07-2007, 12:23 AM
நீயோ என்னை நேசித்தாய்
நானோ உன்னை சுவாசித்தேன்
அதனால்தான் அடிக்கடி
எனக்கு
மூச்சு திணறல் ஏற்படுதோ!!!

சுவாசிக்க முடிந்த
நேசித்த காதலை!
வாசிக்க மட்டும்
ஏனோ முடியவில்லை!.


அழகாக இருந்தன வரிகள் மாதவரே − பாராட்டுக்கள்!. :aktion033:

அமரன்
13-07-2007, 08:48 AM
சுவாசிக்க முடிந்த
நேசித்த காதலை!
வாசிக்க மட்டும்
ஏனோ முடியவில்லை!.


உன் கண்களில் விழுந்த தூசி அவள் என்கிறீரோ.....:ohmy: :ohmy: